Kulachirai Nayanar

punna yaththaru kan^dharpoy n^Ikkavum ,

thennar n^Adu thirun^IRu pORRavum ,

mannu kAziyar vaLLalAr ponnadi ,

chenni chErththi makizn^dha chiRappinAr

கத்தும் கடலும் அதனில் முத்தும் மூத்த முத்தமிழும் சந்தனமும் செந்தண்மையும் உடைய பாண்டி நாடு என்று பழம்பெரும் புலவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட பாண்டிய நாட்டில் அமைந்துள்ள திருத்தலம் மணமேற்குடி! இத்திருநகரில், சிவனடி போற்றும் தவசீலர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் உயர் குடியில் பிறந்த குலச்சிறையார் என்பவரும் ஒருவராவார். இளமை முதற்கொண்டே முக்கண்ணரின் பாத கமலங்களில் தம் சித்தத்தை செலுத்தி, சிவனடியார் களுக்குத் திருத்தொண்டு புரிவதில் திண்மையையும், உண்மையையும் உடையவராய் விளங்கினார். தொண்டர்களின் திருவடி‌ய‌ே பேரின்ப வீடு பேற்றிற்குப் பாதை காட்டும் நன்னெறி என்ப‌தனை உணர்ந்தார். தம்மை வந்தடையும் அடியார்கள் எக்குலத்தவராயினும் வேற்றுமை பாராது, சிவமாகவே கருதி வழிபட்டு வந்தார். உயிரை வளர்த்துப் பக்தியைப் பெருக்கும் சமய ஞானமே சகல நலங்களுக்கும் ஆணிவேர் போல் விளங்குகிறது. அத்தகைய சமயஞானமற்ற வாழ்வு அஸ்திவாரமில்லா கட்டிடம் போலாகும் என்ற சமயக் கொள்கையின் சிறப்பினை நன்கு கற்றுத் தெளிந்திருந்த வித்தகர் குலச்சிறையார். இவர் மதுரையை ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராய்ப் பணியாற்றி வந்தார்.

இத்தொண்டர் அமைச்சராகப் பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப பல வழிகளில் முயன்றார்கள். குலச்சிறையாரும் சைவ மதக் கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார். அத்தோடு சமணக் கொள்கைகளை மண் மூடுவதற்கு உறுதுணையாகவும் இருந்தார். பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு உண்மைத் தொண்டராகி பணியாற்றினார் குலச்சிறையார். குலச்சிறை நாயனார் திருஞான சம்பந்தரை மதுரைக்கு எழுந்தருள செய்து, சைவ மதத்தின் கொள்கையை உலகறியச் செய்தார். குலச்சிறையாரை சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஒட்டக்கூத்தரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பதிகங்களில் பாராட்டியுள்ளார்கள். இவ்வாறு சிவநாமத்தைச் சித்தத்தில் பதிய வைத்து சைவ நெறியை உலகமெல்லாம் பரப்பிட வாழ்ந்து காட்டிய குலச்சிறையார் இறுதியில் எம்பெருமானின் தூய மலர்ப் பாதகமலங்களைப் பற்றி வாழும் பேரின்பத்தைப் பெற்றார்.

IN ENGLISH

Kulachirai Nayanar was born in Manamyerkudi, one of the flourished lands under the regime of Pandya kings.  The Pandya King Nedumaran was impressed at the remarkable qualities of Kulachirai Nayanar and appointed him as a minister in his assembly. Kulachirai Nayanar was an ardent devotee of Lord Sundareshwarar & Goddess Meenakshi of Madurai.  He believed in the self-less service to Lord and service to his devotees as an important mission in his life.  He received the devotees of Lord with great honor and respect, prostrated before them without any hesitation and served them genuinely.  He understood the ultimate fact that service to His devotees is equivalent to service to Lord.  His riches were not a hindrance to his mission; in fact he treated his material possessions were belonged to Lords of Lord and his devotees.  Kulachirai Nayanar’s firm devotion to Lord and on the whole his humble nature persuaded Thiru Gnana Sambandhar.  Later, Thiru Gnana Sambandhar sung priaisng the remarkable qualities of Kulachirai Nayanar in one of his compositions.

During this period of time believers of Jainism multiplied expansively on this land.  Soon King Nedumara also turned out a follower of Jainism, but Kulachirai Nayar was remained firm in his belief of Lord Shiva and Shaiva Siddhantha.  The Jains were created a huge commotion amongst the shivaites and their principle.  Kulachirai Nayanar was  patiently waited for an opportunity to reinstate the Shaiva Siddhantha once again in the minds of King Nedumaran and the people of his Kingdom.

Kulachirai Nayanar along with Mangayarkarasiyar, the queen of Pandya King Nedumaran made all attempts towards bringing back the glories of Shaiva Siddhantha and restoration of belief in Lord Shiva once again in the Pandya Kingdom.  They collectively prayed to Thiru Gnana Sambandhar to guide them in their objective to bring back the Shaiva Siddhantha and reinstate the strong belief in King Nedumaran and the people in his Kingdom.  Kulachirai Nayanar succeded in his mission of restoration of age old belief in Shaiva Siddhantha in Pandya Kingdom with the generous support of Thiru Gnana Sambandhar and Mangayar karasiyar. Thus, he raised the glorious status of a King into Nindraseer Nedumara Nayanar – a zealous devotee of Lord Shiva. Later, Thiru Gnana Sambandhar praised the noble mission of Kulachirai Nayanar in a few glorious verses in one of his compositions known as ‘Mangayarkarasi’ Thirupathikam.

Karaikkal Ammaiyar

varumivaL n^ammaip pENum ammaikAN umaiyE maRRip ,

perumaichEr vadivam vENdip peRRanaL enRu pinRai ,

aruguvan^ dhaNaiya n^Okki ammaiyE ennuny chemmai ,

orumozi ulakam ellAm uyyavE aruLich cheydhAr

காரைக்கால் வளம் பெருகும் சோழ நாட்டிலே உள்ள ஒரு திருநகரம். அந்நகரிலே சிறந்து விளங்கிய அறநெறி தவறாத வணிகர் குடியில் தனதத்தனார் என்னும் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவ்வணிகருக்கு திருமகளைப் போன்ற பேரெழில் கொண்ட புனிதவதி என்னும் ஒரு மகள் இருந்தாள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் புனிதவதியார் மழலை மொழி பேசும்போதே சிவனடியாரிடம் அளவு கடந்த அன்புடையவராய் இருந்தாள். புனிதவதியாரின் பிஞ்சு மனத்திலே அரவணிந்த அண்ணலின் அருள் தோற்றம் பக்திப் பெருக்கோடு பதிந்து விட்டது. புனிதவதி காணுவதெல்லாம் கண்ணுதலார் தோற்ற பொலிவையே! திருவாய் மலர்ந்து செப்புவது அனைத்தும் செஞ்சடையான் திருநாமமே! இளமை முதற்கொண்டே பரமனின் பாதங்களி‌ல் பற்றுடையவளாய் வளர்ந்து வந்த புனிதவதி மங்கைப் பருவம் எய்தினாள். மங்கைப் பருவம் கொண்ட அம்மையாரை நாகப்பட்டிணத்தில் வசித்து வந்த பரமதத்தன் என்ற வணிக குல மகனுககுத் திருமணம் செய்து வைத்தார் தனதத்தனார். திருமணம் முடிந்த பிறகு தனதத்தனுக்குத் தன் மகளை நாகைக்கு அனுப்ப மனம் ஒப்பவில்லை. புனிதவதி தனது ஒரே மகள் ஆகையால் அவளைப் பிரிய மனம் இல்லாமல் வருந்தினார். தனதத்தன் மகளையும், மருமகளையும் காரைக்காலில் தனியாக ஒரு இல்லத்தில் வாழ வைத்தார். காரைக்காலிலே தனிக்குடித்தனம் வைக்கப்பட்ட இவ்வில்லறச் செல்வர் மøனயறத்தை மாண்புற மேற்கொண்‌டனர். அவர்கள் இல்லற‌ெமென்னும் நல்லறமதை இனிதே நடத்தி வந்தனர். அத்தோடு கூட பரமதத்தன் வணிகத் தொழிலைப் பண்போடும் நேர்மையோடும் நடத்தி வந்தான். புனிதவதி இறைவனிடம் கொண்டுள்ள பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. எந்நேரமும் சிவனடியார் திருநாமத்தைப் போற்றி வழிபடுவதிலேயே இருந்தாள். ஒருநாள் பரமதத்தன் கடையில் இருக்கும்பொழுது, அன்புடைய ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். பரமதத்தன் அம் மாங்கினிகளை ஆள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதி அந்த இரண்டு மாங்கனிகளையும் வாங்கி வைத்துக் கொண்‌டாள்.

புனிதவதி பிற்பகல் உணவிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள். அதுசமயம் வாயிற்புறமிருந்து சிவாய நம என்று குரல் கேட்டது. புனிதவதி, வாயிற் பக்கம் விரைந்து வந்தாள் சிவன் அடியார் நிற்பதைக் கண்டாள்; அன்போடு அவரை வரவேற்றாள். அடியார் உணவில் மிக்க வேட்டையுடைவராய் இருந்தார், பசியால் வாடும் அடியார் முகத்தோற்றத்தைக் கண்டு மனம் வாடிய புனிதவதி சற்றும் தாமதியாமல் அடியார் பசியைப் போக்க எண்ணினாள். விரைவில் சாப்பாடும் செய்தாள். புனிதவதி அடியார் திருப்பாதம் விளக்க நீர் அளித்து அமர ஆசனமும் இட்டாள். தொண்டரும் திருவமுது செய்ய அமர்ந்தார். இலையில் பக்குவமாகச் சமைத்த சோற்றை மட்டும் பறிமாறி மாம்பழங்களில் ஒன்றை கறியமுதிற்குப் பதிலாக இட்டாள். பசியால் தள்ளாடி வந்த தொண்டருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் திருவமுதை வயிறார உண்டு, புனிதவதியை வாயார வாழ்த்திப் பசியாறிச் சென்றார். அடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லம் வழக்கம்போல் பரமதத்தன் நண்பகல் உணவிற்காக வீட்டிற்கு வந்து சேரந்தான். கை கால் கழுவி சுத்தம் செய்து கொண்டு அமுது உண்ண அமர்ந்தான். புனிதவதி முறையோடு அமுது படைத்தாள். பிறகு கணவருக்கு மீதி இருந்த மாங்கனியையும் அரிந்து பரிகலத்தில் போட்டாள். பரமதத்தன் மதுரம் வாய்ந்த அம்மாங்கனியை உண்டவுடன் அதன் இனிமை கண்டு மற்றொன்றையும் உண்ணக் கருதி அதையும் இலையில் இடுக என்று பணித்தான், கணவனின் கட்டளை கேட்டு, புனிதவதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ஒரு வினாடியில் உளம் தடுமாறிப் போனாள். இருப்பினும் கனியெடுத்து வருபவள் போல் உள்ளே சென்றாள். பாவம் ! என்ன செய்வாள் ? அகத்துள் மாம்பழம் இருந்தால்தானே !  செய்வதறியாது மனங்கலங்கனாள். இறுதியில் வழியொன்றும் தோன்றாது, அரனாரை வேண்டினாள். அப்போது இறைவனின் திருவருளால் அதி மதுரக்கனி ஒன்று அம்மையாரின் கைகளில் வந்து தங்கியது. தனக்காக திருவருள் புரிந்த அரனாரை மனதில் தியானித்தபடியே மாங்கனியைக் கொண்டு வந்து கணவன் இலையில் பறிமாறினாள். அதனையுண்ட பரமதத்தன் முன் உண்ட கனியை விட இக்கனி தனிச்சுவையுடன் இருக்கக் கண்டு புனிதவதி ! இக்கனி, அமுதத்தைப் போன்ற சுவையுடையதாக இருக்கிறதே. தேவர்களுக்கும் , மூவர்களுக்கும் கிட்டாத கனிபோல் அல்லவோ தோன்றுகிறது இஃது ஏது உனக்கு? என்று  கேட்டான். இறைவனின் சோதனைக்கு அடியவர்கள் ஆளாவது போல் கணவனின் சோதனைக்குப் புனிதவதி ஆளாயினாள்.

இறைவன் அருள் பெற்று இக்கனியைப் பெற்றேன் என்று செப்புவதற்குத் திறனற்ற நிலையில் புனிதவதி, உண்மையை எப்படி உணர்த்துவது ? என்பதையும் புரிந்துகொள்ள முடியாமல் மனம் வாடினாள். ஆயினும் கணவனிடம் உண்மையை மறைப்பது கற்புடைய பெண்டிர்களுக்கு முறையல்ல என்பதையும் எண்ணி்ப் பார்த்தாள். இறுதியில் இறைவனுடைய செஞ்சேவடிகளைச் சிந்தையில் எண்ணியவளாய் கணவரிடம், இம்மதுர மாங்கனி இறைவன் திருவருளால் கிடைத்தது என்று கூறினாள். பரமதத்தன் வியப்புற்றான். புனிதவதி அடியார் வந்தது முதல் சற்றுமுன் தனக்கு மாங்கனி கிடைத்ததுவர‌ை நடந்த அத்தனை நிகழ்சிகளையும் ஒன்றுவிடாமல் விளக்கினாள். புனிதவதி மொழிந்தவற்றைச் சற்றும் நம்பாத நிலையில் அங்ஙனமாயின் இதுபோல் இன்னும் ஓர் சுவையான மாங்கனியைப் பெற்றுத் தருக என்று பணித்தான் பரமதத்தன். புனிதவதி மீண்டும் உள்ளே செனறாள். பெருமானை தியானித்தாள். இறைவன் ! நீவிர், மற்றும் ஒரு மாங்கனியை அளித்து அருளி எம்மை ஆதரிக்காவிடில் என்னுரை பொய்யாகும் என்று பிரார்த்தித்தாள். இம்முறையும் மற்றொரு மாங்கனியை அளித்து அருள்புரிந்தார் எம்பெருமான். புனிதவதி மகிழ்ச்சியோடு மாங்கனியைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள். வியப்பு மேலிட, மாங்கனியைப் பரமதத்தன் வாங்கினான். அக்கனி உடனே மாயமாக அனர் கையிலிருந்து மறைந்தது. அதைப் பார்த்ததும், பரமதத்தன் பயந்து நடுநடுங்கினான். தன் மனைவி புனிதவதி மனிதப் பிறவி அல்ல, தெய்வீகத தன்மை பொருந்தியவள் என்பதை உணர்ந்தான். சிந்தை மயங்கி செயலிழந்தான் பரமதத்தன். அக்கணம் முதல் தன் மனைவியைத் தாரமாக எண்ணவில்லை; தொழுவதற்குரியவளாய் மனதில் விரித்தான் பரமதத்தன் ! இறைவன் திருவருளைப் பெற்ற நீ தொழுதற்குரிய‌வளே! உன்னுடன் சேர்ந்து வாழ எனக்குத் தகுதி கிடையாது தனித்து வாழ்வதுதான் முற்றிலும் முறை என்றான். கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதி வருந்தினாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இதனால் பரமதத்தனும் புனிதவதியும் வாழ்க்கையில் வேறுபடுத்தப்பட்டனர். புனிதவதி, உலகப் பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையைச் சிறுகக் சிறுக பெற்றாள். தெய்வ சிந்தனையிலே அழுந்தினாள். அக்காலத்தில் வணிகர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருளீட்டி வருவது வழக்கம். பரமதத்தன் தன் உறவினர்களிடம, தானும் வெளியூர் சென்று பொருள் சேர்க்கப் போவதாகக் கூறினான். அவர்களும் அவனது மு‌யற்சிக்கு முழு ஆதரவு கொடுத்தனர். ஒருநாள் வாணிபத்திற்குரிய பொருளோடு மனைவியிடமும், மாமனிடமும் விடைபெற்றுப் புறப்பட்டான். கடல் தேவதையை வழிபட்டு கப்பலேறிச் சென்றான். வெளியூர் சென்ற பரமதத்தன் வாணிபத் தறையில் தனக்குள்ள தனித் திறமையால் ஓரிரு வாரத்துள் நிரம்பச் செல்வம் ‌சேர்த்துக் கொண்டு, பாண்டிய நாடு திரும்பினான். அவன் காரைக்காலுக்குச் செல்ல விரும்பாததால் பாண்டிய நாட்டிலுள்ள வேறு ஒரு பட்டனத்தில் தனது வாணிபத்தைத் ‌தொடங்கினான். அயல் நாட்டிலிருந்து தான் கொண்டுவந்த அளவற்ற பொருள்களை எல்லாம் அந்நகரிலேயே விற்றுப் பெருஞ்‌ செல்வந்தனான். பரமதத்தனின் செல்வச் சிறப்பையும், அழகின் மேம்பாட்டையும் உணர்ந்த அவ்வூரிலுள்ள வணிகன் ஒருவன் தனது புதல்வியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.

இரண்டாவது மனை‌வியோடு இன்பமாக வாழும்நாளில், அவன் மனைவி கருவுற்று ஒரு பெண மகவைப் பெற்றெடுத்தாள். அப்பெண்ணுக்கு பரமதத்தன் தான் மனத்தால் வழிபடும் புனிதவதியின் நாமத்தையே சூட்டி மகிழ்ந்தான், இவ்வாறு பரமதத்தனின் இல்லறவழி அமைய அவனுடைய முதல் மனைவியின் வாழ்க்கையோ அறவழி நின்றது. இறைவனை வழிபடுவதும், அடியார்களை வழிபடுவதுமாக புனிவதி வாழ்ந்து வந்தாள். பரமதத்தன் பண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, எப்படியோ சுற்றத்தார்கள் மூலம் புனிதவதிக்குத் தெரியவந்தது. சுற்றத்தார்கள் புனிதவதியை எப்படியும் பரமதத்தனோடு சேர்ப்பது என்று உறுதிகொண்டனர். ஒருநாள் மனையறம் புரிந்து வரும் மடந்தை புனிதவதியை சுற்றத்‌‌தார், இரத்தினம் இழைத்த அழகிய சிவிகையில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டனர். ஊர்கள் பல கடந்து காடுகள் மேடுகள் பல தாண்டி ஆறுகள் பல கடந்து ஒருவாறு பாண்டி நாட்டை அடைந்து பரமதத்தன் வாழும் நகருள் நுழைந்தனர். அந்நகரில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு சோலை அருகே தங்கினர். புனிதவதி வந்திருக்குமு் செய்தியைப் பரமதத்தனுக்கு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். சற்றும் எதிர்பாராமல் தன் முதல் மனைவி இப்படி வந்ததும் பரமதத்தன் அஞ்சினான். ஒருவாறு மனதைத் திடப்படுத்தி கொண்டு, அவர்கள் என்னிடம் வரும் முன்பு அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் செல்வேன் என்று கருத்தி்ல் கொண்டான். இரண்டாவது மனைவியுடனும், குழந்தைய புனிதவதியுடனும் புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டான் பரமதத்தன். புனிதவதி தங்கியிருக்கும் இடத்தை அடைந்த பரமதத்தன், விரைந்து சென்‌று மனைவி மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தான். அடி‌யேன் உமது திருவருளால் இனிது வாழ்கிறேன் இச்சிறு குழந்தைக்கு அம்மையாரின் திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும் என்று கூறினான். கணவனின் செயல் கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள். பரமதத்தனின் செயல்கண்டு திகைத்துப்போன சுற்றத்தார் அவனிடம், மனைவியின் காலடியில் விழக் காரணம் ‌என்னவென்று கேட்டனர். பெரியோர்களே! இவர் என் மனைவியாக இருக்கலாம். இன்று இவர்கள் மானிடப் பிறவியே அல்லர். அம்மையார் எல்லோராலும் தொழுதற்குரியவர். அதனால்தான் நான் தாள் பணிந்தேன். நீங்களும் பணிந்து போற்றுங்கள் என்றான். பரமதத்தன் மொழிந்‌ததைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். கணவனின் முடிவு புனிதவதியின் மனத்தில் பெரும் வேதனையைக் கொடுத்தது. அழகுத் திருமகளாய்  இளம் குன்றாத வடிவழகுப் பெண்ணாய்க் காட்சி அளித்த அம்மையார், அழகையும் இளமையையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும்தான் அழகோடும் இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மை இயல்பினை உணர்ந்திருந்த புனிதவதி அக்கணமே இறைவனிடம், எம்பெருமானே ! அம்ப‌லவாணரே! என் கணவருக்காக இதுவரையில் தாங்கி நின்ற இந்த வனப்புமிகு ‌எழில் உடம்பு எனக்குத் தேவையில்லை. இவ்வடிவமைக்குப் பேய் வடிடு தந்து அருளுதல் வேண்டும என்று வேண்டியவாறு பரமனைத் துதித்தாள்.

இறைவன் புனிதவதி வேண்டி நின்றதுபோல் அவளுக்குப் பேய் வடிவைக் கொடுத்து அருளினார். புனிதவதியின் வனப்பு மிகுந்த தசைகள் மாயமாக மறைந்தன. எலும்பு போல் காட்சியளித்தாள். விண்ணவரும் மண்ணவரும் வியக்கும் பேய் வடிவைப் புனிதவதி பெற்றாள். பெண்ணாக நின்றவள் பேயாக மாறினாள். வணக்கத்திற்குரியவள் ஆனாள். அங்கு கூடி நின்ற சுற்றத்தார்களும், உறவினர்களும் அம்மையாரை வணங்கியவாறு  அங்கு நிற்பதற்கே அஞ்சினர். அம்மையார் பேய் உருக்கொண்டதோடு நல்ல தமிழ் புலமையும் பெற்றார். அருட்கவியுமாக மாறினார். இறைவனின் அருளிலே பெற்ற பாப்பாடும் திறத்தால் அம்மையார் அருளிலே திவந்தாதியும், திரு இரட்டை மணிமாலை என்னும் திருப்பிரபந்தத்தையும் பாடினார். புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்று அனைவராலும் அழைக்கலாயினார்!  அல்லும் பகலும் சிவநாமச்சிந்தையுடன் வாழ்ந்து வந்த அம்மையார், திருக்கயி‌லை சென்று பரமனைத் தரிசிக்க எண்ணினார். அம்மையார் சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தார். கயிலை மலையை அடைந்தார். திருக்கயிலை மலையை, பாதத்தினால் மிதித்து நடந்து செல்வதற்கு அஞ்சிய அம்மையார், தலையால் நடந்து மகிழ்ச்சி‌ மேலிட கயிலை மலைமீதேறிச் சென்றார். புனிதவதி அம்மையார் மலைக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்டு, பிரட்டியார் பரமனிடம், ஐயனே!  தலையினால் வருகின்ற என்புருவம் படைத்த உடம்பின் அன்பை என்னவென்பது என்று சொன்னாள். உமையாளின் மொழி கேட்டு இறைவன், தேவி! இவ்வென்புடம்ப நம்மை வழிபடும் அம்மை. இந்த என் புருவத்தை நம்மிடமிருந்து வேண்டுமென்றுதான் பெற்றார் என்று திருவாய் மலர்ந்தார். காரைக்கால் அம்மையார் அருகில் வருவதை விழி மலர்ந்த வள்ளலார் அன்பு மேலிட, அம்மையே என்றார். அம்மையாரும அப்பா என்றார். இறைவன் திருவடித் தா‌மரைகளில் வீழ்ந்து வணங்கினார். அம்மையே ! உனக்கு ‌யாது வரம் வேண்டும் என்று ஐயன் திருவாய் மலர்ந்தார், அம்மையார் பக்திப் பெருக்கோடு, ஐயனே ! அன்பருக்கு மெய்யனே ! எனக்கு என்றும் இறவாத இன்ப அன்பு வேண்டும். மானிடப் பிறவி எடுத்து உலகப்பற்று, பாசத்தில் சிக்கி உழலாமல் இருக்க அருள்புரிய வேண்டும். ஒருக்கால் உலகில் பிறவி எடுத்துவிட நேர்ந்தால் ஐயனை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும். அத்தோடு இறைவா! ஐயன் ஆனந்தத் தாண்டவம் ஆடும்போது நான் திருவடிக்கீழ் இருந்து ஆனந்தமாகப் பாடிக்களித்து மகிழந்து பேரின்பம் கெõள்ளத் திருவருள் புரிய வேண்டும் என்று வணங்கி நின்றார். தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில் நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுகளித்துப் பாடி மகிழ்வாயாக ! என்று இறைவன் அருள் செய்தார். அம்மையார் மீண்டும் தலையாலேயே நடந்து திருவாலங்காட்டை அடைந்தார். திருவாலங்காட்டை அடைந்த அம்‌மையார், ஆனந்தக் கூத்தின் திருக்கோல நடனம் கண்டு, கொங்கை திரங்கி என அடி எடுத்து மூத்த திருப்பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். தாண்டவ மூர்த்தியின் நர்த்தனத்தின் சக்தியிலே அம்மையார் அருள் பெற்று எட்டியிலவம் எனத் தொடங்கும் திருப்பதிகத்தையும் பாடினார். இவ்வாறு திருப்பதிகங்கள் பல பாடி மகிழ்ந்த காரைக்கால் அம்மையார் திருசடையான் சேவடி நிழலிலே என்றென்றும் பாடிப் பரவசமடையும் பிறவாய் பெரு வாழ்வைப் பெற்றார்கள்.

IN ENGLISH

Karaikkal Ammaiyar was born  in the town of Karaikkal to a rich merchant, Karaikkal Ammaiyar was originally named Punithavathi. Punithavathi was devoted to Lord Shiva right from her childhood. When she came of age, her father got her married to another merchant by name Paramadattan from Nagapattinam. But as she was his only child, her father did not want her to stay away. Hence he built a house near his place for his daughter and son-in-law and made them live close by.

Punithavathi and Paramadattan started their life in Karaikkal. One day when Paramadattan was at work, a visitor brought him two mangoes. He sent the mangoes home. Punithavathiyar was alone at home. A devotee of Lord Shiva came for food. Punithavathiyar offered him lunch and also one of the mangoes her husband had sent.

Later, when Paramadattan came home for lunch, he asked for a mango and ate it. He found the mango very sweet and wanted to eat the other mango too. Worried that Paramadattan may be angry if she said she had given it away, Punithavathi went inside and prayed to Lord Shiva. Miraculously, she got a mango in her hand and took it to her husband. Paramadattan found this mango extremely tasty and asked his wife about it. Punithavathi came out with the truth that the Lord had given it to her. Unable to believe this, Paramadattan asked Punithavathi to request the Lord for one more mango. She did this promptly and gave him the third mango (the second miraculous one). The mango vanished from Paramadattan’s hand.

Now Paramadattan understood that his wife was no ordinary woman and decided that he could not continue to live with her. He said he was going out of town on business and sailed out of the country. He came back and settled down in a town in Pandyanadu. He also married again and had a daughter. He named his daughter Punithavathi out of respect for his first wife.

Coming to know that Paramadattan was living in another town nearby, Punithavathi’s relatives took her to him. When they met, Paramadattan fell at Punithavathiyar’s feet along with his family members. The relatives were surprised to see the husband falling at his wife’s feet. Paramadattan then narrated the story of the mangoes to the relatives. Understanding that her husband would never live with her any more, Punithavathi wanted to give up her youth. She prayed to the Lord to change her form to a skeletal ghost. Her prayer was answered and she immediately transformed into a ghost. She proceeded to Kailasam in that form. Reaching Kailasam, she did not want to walk on her feet and hence started walking on her head. Goddess Parvathi enquired Lord Shiva about the ghost form walking upside down towards them. The Lord said, it was his “Mother” who was on her way to meet him. Punithavathiyar became Karaikkal Ammaiyar as the Lord himself called her His mother. She reached the Lord and fell at his feet, calling Him her father. She conveyed her wish to see His cosmic dance and the Lord asked her to reside in Thiruvalangaadu and see his dance there forever. Karaikkal Ammaiyar reached Thiruvalangaadu and once there, she could see only the Lord everywhere and hence continued to walk on her head. Here she sang the Lord’s praise and attained mukti.

Chandeshwara Nayanar

திருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டிலே, மண்ணியாற்றின் தென்கரையிலே சோழர்களுக்குத் தலைநகரமாக விளங்கி வந்தது. பண்ணிற்கு மெல் இசையும், பாலிற்கு நல்ல இன்சுவையும், கண்ணிற்குப் பயன் ‌பெருகும் ஒளியும், கருத்திற்குப் பயன் பெறும் திருவைந்தெழுந்தும், விண்ணிற்கு மழையும், வேதத்திற்குச் சைவமும் பயனாவன போல் மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமைமிக்கது திருச்சேய்ஞ்ஞலூர். சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பெரும் சிறப்பினைப் பெற்றிருந்தது இத்திருத்தலம் !முன்னொரு காலத்தில் அமரர்களுக்குத் தொல்லை கொடுத்த சூரபதுமன் முதலிய அசுரர்களை வென்று அமரர்களின் அல்லலை நீக்கியப் முருகப்பெருமான் அமரர்களும், பூதகணங்களும் பின்தொடர மண்ணியாற்றின் கரையை அடைந்து, எழில் மிகும் திருநகரம் ஒன்றை நிர்மாணித்தார். அந்நகரில் கந்தவேள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடும் செய்தார். இக்காரணம் பற்றி‌யே இந்நகரம் திருச்‌‌சேய்ஞ்ஞலூர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. இப்படிப்பட்ட இந்த நகரில் அந்தணர்கள் மிகுந்து இருந்தார்கள். அந்தணருள் ஒருவர்தான் எச்சத்தன் என்பவர். அவர் மனைவியின் பெயர் பவித்திரை. அவர்களுக்கு புத்திரராகப் பிறந்தவர்தான் விசாரசருமன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த விசாரசர்மன், ஐந்து வயது பிராயத்தை அடைந்தார். முற்பிறப்பில் வேதாகமங்களில் பெற்றிருந்த நல்லுணர்ச்சியின் தொடர்பினால் இப்பிறப்பிலும் வேதாகமங்களின் உட்பொருள்களில் மிகுந்த  ஈடுபாடு இவருக்கு உண்டானது. அரும்பில் நிறைந்துள்ள மணம், மலரும் தருணம் வெளிப்படுவது போல், கல்வி பயில ஆரம்பித்தபோதே இவரது சிவாகம உணர்ச்சி பெரிதும் விளங்கலாயிற்று. அவர் சிந்‌தையில் எந்நேரமும், பரமனின் பொற்பாதத்தின் நினைவே தான் இருந்தது. முக்கண்ணனின் மலர்ப்பாதங்களின் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் இச்சிறு பிராயத்திலேயே, பேரின்ப வீட்டைப் பெற்ற பெருமிதம் பூண்டார் அந்த அந்தணர் குலக்கொழுந்து!

விசாரசருமருக்கு ஏழாண்டுகள் நிரம்பின. பெற்றோர்கள். அப்பருவத்தில் அவருக்கு உபநயனம் செய்து மகிழ்ந்தனர். குல ஒழுக்கப்படி வேதம் ஓதுவித்தனர். அவரோ ஆசான் வியக்கும் வண்ணம் தேர்ச்சி பெற்று விளங்கினார். ஒரு நாள் விசாரசர்மன் வேதம் ஓதும் அந்தணச் சிறுவர்களுடன் மண்ணியாற்றின் கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார். அவ்வழியே ஓர் சிறுவன் பசுக்களை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பசு ஒன்று அச்சிறுவனைக் கொம்பினால் முட்டியது. சிறுவனுக்குக் கோபம் வந்தது. பசுவைக் கோலினால் பலமாகப் பன்முறை அடித்தான். இக்காட்சியைக் கண்ட, விசாரகுமார் திடுக்கிட்டார். அவர் மனம் இளகியது. அவரால் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சிறுவனிடம் விரைந்து சென்றார். அவன் பசுவை மேலும் அடிக்காதவாறு தடுத்தார். அத்தோடு அப்பாலகனுக்கு பசுவின் மகிமையைப் பற்றிக் கூறலானார். ஐயையோ ! எவ்வளவு பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாய் ? உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் ஆவினங்கள் ‌சிறந்த மேன்மையும், பெருமையையும் உடையனவல்லவா ? அரனார் பொன்மேனியிலும், அடியார்கள் திருமேனியிலும் ஒளிவிடும் தூய வெண்ணீறு ஆவினிடமிருந்துதானே நமக்குக் கிடைக்கிறது. எம்பெருமான் திருமுடியில் அபிஷேகம் செய்யத்தக்க பஞ்ச கவ்யத்தை அளிக்கும் உரிமையும் அருமையும் ஆவினத்தைச் சேர்ந்ததல்லவா ? எம்பெருமான் உமாதேவியாருடன் எழுந்தருள் இடபத்தின் திருக்குலத்தைச் சேர்ந்த காமதேனு என்று ஆவினத்தை அழைப்பார்களே ! பருகுவதற்கரிய பால், தயிர், வெண்ணெய், மோர் முதலியவற்றை மனிதர்களுக்கு அளிப்பது ஆவினம் தானே ! பசுக்களின் அங்கங்களில் தேவர்களும், தேவதேவாதியர்களும், முனிவர்களும் வாழ்கின்றனரே ! இத்தகைய தெய்வத்தன்மை மிகும் ஆவினங்களுக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் பாதுகாப்போடு மேய்ப்பதல்லவா நம் கடமை, ஆவினங்களைக் காப்பது ஆண்டவனுக்கு அருந் தொண்டாற்றுவது போலல்லவா ? இனிமேல் இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிடு. இவ்வாறு விசாரசருமர் ‌மொழிந்‌ததை கேட்டு அச்சிறுவன் தான் செய்த தவற்றை உணர்ந்து பயந்தான். அவன் விசாரசருமரை வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான்.

விசாரசருமர் பசுக்களை மேய்க்கப் போகும் விஷயத்தை மறையவர்களிடம் சொல்லி அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அனுதினமும் விசாரசருமர் கோலும், கயிறும் ஏந்திக்கொண்டு, ஆவினங்களோடு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்படுவார். பசுக்களை நல்ல பசுமையான புற்கள் உள்ள இடத்தில் மேய விடுவார். நல்ல நீர் உள்ள இடத்தில் நீர் அருந்தச் செய்வார். பசுக்கள் மேய முடியா‌த இடத்தில் கல்லையும், முள்ளையும் பொருட்படுத்தாமல் அவரே, புற்களைச் சுத்தபடுத்தி அவைகளுக்கு ஊட்டுவார். பெற்றோர்கள் தான் பெற்ற செல்வங்களைக் காப்பதுபோல் கோகுலங்களைக் காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார் விசாரசருமர். ஐந்தறிவு படைத்த அந்த ஜீவன்கள் இவரது அன்பிற்குக் கட்டுப்பட்டு அச்சம் என்பதே இல்லாமல் இவருடன் பழகின. நல்ல வெயில் வந்துவிட்டால் மட்டும் மரநிழலில் சற்று நேரம் நிம்மதியாகப் படுத்து இளைப்பாற்றுவார் விசாரசருமர் ! மாலை நேரம் வந்ததும் வேண்டிய அளவு விறகு, சமிதை சேமித்துக் கட்டாகக் கட்டி வைத்துக் கொண்டு ஆநிரைகளுடன் வீட்டிற்குப் புறப்படுவார். இவர் ஆநிரைகளை அன்புடனும், ஆதரவுடனும், பொறுப்புடனும், பெருமகிழ்ச்சியுடனும் மேய்த்து வந்தார். விசாரசருமரின் பராமரிப்பில் பசுக்கள் முன்னிருந்ததைவிட நல்ல வளத்தோடும், புஷ்டியோடும் இருந்தன. அது மட்டுமின்றி முன்னைவிட அதிகமாகப் பாலையும் சுரந்தன. அதுமட்டுமல்ல, ஆநிரைகளான அவைகள் விசாரசருமரை அடிக்கடி சென்று உராய்வதும் நாவால் நக்கிக் கொடுப்பதுமாக இருந்தன. புல் மேயும் இடத்தில் விசாரசருமர் வெயிலில் நின்று கொண்டிருந்தால் இவைகள் கூட்டமாகச் சென்று நின்று அவருக்கு உட்காருவதற்கான நிழலைத் தரும். சில சமயங்களில் கன்றைக் கண்ட தாய் பசு, பால் சுரப்பது போல் விசாரசருமரைப் பார்த்ததும் ஆவினங்கள் பால் பொழியும். தனது அரு‌கே வந்து பசுக்கள் பால் பொழிவதைக் கண்ட விசாரசருமர் அப்பாலை வீணாக்காமல் பரமன் இறைவழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் என்ன? என்று எண்‌ணலானார். அத்தி மரத்தடியில் குளிர்தரும் நிழலைக் கண்டார். ஆண்டவனுக்கு அநத இடத்திலேயே கோயில் ஒன்றை அமைக்கச் சித்தம் கொண்டார். மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து நல்ல மணல் எடுத்து வந்து லிங்கம் ஒன்றை வடித்தார்.

மண்ணாலே மதிற்சுவர்ளோடு கூடிய சிறு கோயிலைக் கட்டினார். கோபுரமும் அமைத்தார்.  மணமிகுந்த நறுமலர்ச் செடி‌களையும், கொடிகளையும் அழகிற்காகக் கொண்டு வந்து வைத்தார். அக்கோயிலையும் சிவலிங்கத்தையும் பார்த்து ஆனந்தக் கூத்தாடினார். அவர் உடம்பிலே பக்தி வெள்ளம் பெருகியது. அவர் சிந்தை மகிழ்ந்தார். அடுத்தாற்போல் பரமனுக்கு பூஜையும், அபிஷேகமும் செய்ய வேண்டுமென்று எண்ணினார். அர்ச்சனைக்காக மலர்களைப் பறித்துக்கொண்டு வந்தார். அபிஷேகம் செய்வதற்காகப் பாலைப் புதிய பாண்டங்களில் ‌சேமித்தார். வேதம் ஓதி அபிஷேகம் செய்தார். மலர்களால் சிவலிங்கத்தை அன்போடு அர்ச்சனை செய்தார். சேய்ஞ்ஞலூர் அரனாரை முருகன் வழிபட்டாற்‌பால் மண்ணியாற்றங்கரை லிங்கத்தை இன்று விசாரசருமர் வழிபட்டார். இந்த வழிபாடு தினந்தோறும் தவறாமல் நடந்து வந்தது. இவர் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் பாலும் அர்ச்சனை செய்யும் மலரும் சேய்ஞ்ஞலூர் பரமனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. அரனார் அந்தணச் சிறுவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டார். பெரிய திருக்‌கோயிலிலே எழுந்தளருளியிருந்த எம்பெருமான் மண்ணியாற்றங்கரையிலுள்ள இச்சிறு மண்கோயிலிலும் எழுந்தருளினார். இறைவன் வழிபாட்டிற்கு பால் சுரக்கும்  ஆநிரைகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட சற்றும் குறைவின்றி முன்னைவிட அதிகமாகவே பாலைப் பொழிந்தன. ஒருநாள் விசாரசருமர் வழக்கம்‌போல் பாலைக் குடம் குடமாக லிஙகத்தின் மீது அபிஷேகம் செய்வதும் மலர்களைக் கொட்டி அர்ச்சனை செய்வதுமாக இருந்தார். இவரது ஒவ்வொரு செயலையும் நெடுநேரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அறிவிலியொருவன், வேகமாக இவரிடம் வந்து என்ன காரியம் செய்கிறாய் ? உன்னை நம்பி மாடு மேய்க்க அனுப்பினால் நீ மாட்டின் பாலை எல்லாம் வீணாக்குகிறாயே. இது அடுக்குமா என்று கேட்டான். அவன் வார்த்த‌கைள் இவரது காதுகளிலே விழவே இல்லை. எப்படி விழும் ? இவர்தான் ஐம்புலன்களையும் அடக்கி அருந்தவசியைப்போல் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறாரே ! விசாரசருமர் மவுனம் சாதிப்பது கண்டு ஆத்திரம் அடைந்த அவன் அக்கணமே ஊருக்குள் சென்று தான் மண்ணியாற்றின் கரையி‌லே கண்ட காட்சியைப் பற்றி அனைவரிடமும் கூறினான். அனைவருக்கும் சினம் பொங்கியது. எச்சத்தனிடம் சென்றனர். விஷயத்தை விளக்கி மகனைக் கண்டிக்குமாறு கூறினர். எச்சத்தன் கடு்ம் கோபம் கொண்டான். மகனைக் கண்டிப்பதாகச் சொல்லி அவர்களை அனுப்பிவைத்தான் மகனின் செயலை மறைந்திருந்து காண்பது என்‌ற தீர்மானத்திற்கு வந்தான் எச்சத்தன். மறுநாள் காலை விசாரகுமார் வழக்கம்‌போல் ஆவினங்களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்பட்டார். எச்சத்தன் மகன் அறி‌யாதவாறு பின்னால் தொடர்ந்து சென்றார். மண்ணியாற்றின் கரையை அ‌டைந்த எச்சத்தன் அங்குள்ள ஒரு குரா மரத்தில் மீது ஏறி மறைவாக அமர்ந்து கொண்டான். விசாரசருமர் வழக்கம்போல் மண்ணியாற்றில் நீராடி நமசிவாய மந்திரம் ஜபித்து திருவெண்ணீறு பூசி மலரைக் கொய்துகொண்டு பச்சிலைகளையும் பறித்துக் கொண்டு வந்தார்.

மண்ணால் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். குடம், குடமாகப் பாலைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டார். வழிபாட்டைத் தொடங்கினார். விசாரகுமார் பக்தியில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். உல‌கம‌ே அவரது கண்களுக்கு மறைந்தது. ஜோதி உள்ளம் அன்பினால் ‌பொங்கித் ததும்பி நின்றது. பாற்குடங்களில் பால் நுரையோடு பொங்கி வழிந்து இருப்பதுபோல் ! விசாரசருமர், ஆவாகனம் முதலிய வழிபாட்டு முறையை வகையோடு செய்யத் தொடங்கினார். பசுவின் பாலை ‌எடுத்துக் திருமஞ்சனம் ஆட்டத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைப் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தனுக்குக் கோபம் எல்லை மீறியது. உலக மாயையிலே மூடிக்கொண்டிருந்த அவனுக்கு அகக்கண்களும் மூடிக்கிடந்தன. பிள்ளையின் பக்திப் பண்பினை அறிய முடியாத எச்சதத்தன் ஆத்திரத்தால் அறிவிழந்தான். சினத்தால் பொங்கி எழுந்தான். மரத்திலிருந்து குச்சியை ஒடித்து எடுத்துக்‌ கொண்டான். தலைக்கேறிய மமதையால் மரத்தினின்றும் வேகமாக இறங்கினான். கோலால் மகனின் முதுகில் ஓங்கி ஓங்கிப் பல தடவைகள் அடித்தான் எச்சத்தன் ! விசாரசருமருக்கு அடிபட்டும் எவ்வித உணர்வும் ஏற்படவில்லை. பூஜையிலேயே தம்மை மறந்து இருந்தார். எச்சத்தன் அடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் வாயினின்றும் வசைச் சொற்கள் பல வரம்பு மீறி வெளிவந்தன. இவையெல்லாம் விசாரசருமர் காதுகளில் விழுந்தால்தானே! விசாரசருமர் தந்தையின் இடையூறுளைச் சற்றும் உணராத நிலையில், பூசையைத் தொடர்ந்து செய்து தள்ளினான். எச்சத்தனுக்கு மகனின் செயல் மேலும் ‌‌கோபத்தை உண்டுபண்ணியது. பால் நிரப்பி வைத்திருந்த திருமஞ்சனப் பாற்குடங்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அதுவரை பூஜையில் மெய்மறந்திருந்த பக்தர், திருமஞ்சனக் குடப் பாலைக் கொட்டிக் கவிழ்த்தது கண்டு கோபம் கொண்டார். வழிபாட்டிற்குக் குத்தகமாக இத்த‌கைய நெறி தவறிய செயலைக் ‌செய்தது தந்தைதான் என்பதை உணர்ந்தும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டித்தார். அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளி தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சத்தன் கால்கள் துண்டுபட்டு நிலத்தில் விழுந்தன. எச்சத்தன் உயிரை இழந்தான். இதுவரை நடந்தவற்றைப் பற்றி ஒன்றுமே தம் புலன்களுக்குப் புரி‌யாத நிலையில் இருந்த விசாரசருமர் மீண்டும் சிவ வழிபாட்டில் ஈடுபடலானார். அவ்வமயம் வானவெளியில் பேரொளி பிறந்தது. ஒளி நடுவே, ஒளிப்பிழம்பாக இறைவன் உமாதேவியுடன் விடையின் மேல் எழுந்தருளினார். பக்தியால் உலகை மறந்திருந்த விசாரசருமர் பேரொளிப் பிழம்பாக காட்சியளித்த பரமனைப் பார்த்ததும் பேருவகை கொண்டார். கரம்கூப்பி நிலந்தனில் விழுந்து வணங்கி எழுந்தார். வானத்தினின்றும் வையகத்துக்கு எழுந்தருளிய பரமசிவனும், பார்வதியும் விசாரசருமர் வாரி அணைத்து, உச்சிமோந்து மகிந்தனர். இறைவன் அன்பு மேலிட அவரைத் தழுவி மகனே! எம்மீது பூண்டுள்ள அன்பின் மிகுதியால் பெற்றவன் என்றும் பாராமல் மழுவால் வீழ்த்திய உன் எல்லையில்லா பக்திக்கு யாம் கட்டுப்பட்டோம். உனக்குத் தந்தையும் நானே, தாயும்நானே ! என்று திருவாய் மலர்ந்தார். விசாரசருமரின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அம்மையப்பரின் அரவணைப்பிலே அந்தணர் குல மைந்தார் சிவப் பழமானார். எம்பெருமான் விசாரசருமருக்கு அருள் செய்தார். நம் அடியார்களுக்கெல்லாம் தலைவனாகிவிட்டாய் நீ ! நாம் சூடுவனவும், உடுப்பனவும், உண்ணும் பரிகலமும் உனக்கே உரிமையாகும்படிச் செய்தோம். உனக்கு சண்டீசபதம் வழங்கினோம் என்று அருளினார் பெருமான் ! இறைவன் தம் திருமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்தார். அன்புச் சிறுவனின் கழுத்தில் தம் திருக்கைகளாலேயே அணிவித்தார். சண்டிசபதம் என்பது ஒரு பதவி. எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேல், சூரியன் ஆகிய இவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. சண்டீசபத பதவியில் உள்ளவர்கள் அந்தந்த மூர்த்திகளை, வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் பயனை அளித்து அருள் புரிவார்கள். சிவ சண்டீசபதத்தில் இருப்பவர் தொனிச் சண்டர் எனத் திருநாமம் பெறுவர். உருத்திரருடைய கோபாம்சத்தில் தோன்றியவரே சண்டேசுரர். (சண்டம்-கோபம்) எச்சத்தன் தான் செய்த அபசாரத்துக்குரிய தண்டனையைத் தன் மகன் கையாலேயே பெற்று, பின்னர் அவனால் பாவம் நீங்கி, சிவலோக பிராப்திøய அடைந்தான். விசாரசருமர் மகேசுவரனிடம் திருவருள் அணைப்பிலே என்றும் அவரது மைந்தராய் தோன்றிப் பிறவாப் புகழ் பெற்று இறைவனது திருவருட்தாளினை அடைந்தார்.

IN ENGLISH

Vichara Srumanar was born to Echcha Thathan in Thirucheynyalur, a famous village in Kumbhakonam known for preservation of Vedas and expansion of Vedic Cultures.  He was born in the lineage of Sage Kashyapa.  As glorious as his inheritance, Vichara Srumanar was mounted with abundance of knowledge in Veda, Sastras and Agamas at a young age.  His parents performed sacred thread ceremony to their child at the age of seven.  Immediately after, he was sent to learn Veda Sastras under the supervision of learned scholars.   Vichara Srumanar himself was a master of all the Knowledge & Wisdom realized the presence of God in every living being.  Soon his fervor towards Lord turned into untainted love.

Once, Vichara Srumanar found a cowherd ill treating a cow and beating heavily.  His heart went out crying for the poor creature.  He could not tolerate this for long, immediately move towards the cowherd and ordered him to stop his mean behavior. His mind went on thinking about the preciousness of the cow as one of the superior creature belongs to the family of Bull – the celestial vehicle of Lord or Lords and an inescapable companion of Lord, which provides five holy substances such as Milk, Curd, Ghee, Butter and Holy Ashes in abundance.  Vichara Srumanar ordered the cowherd to leave the custody of the cattle at once and he took up the work of cowherd wholeheartedly.

Vichara Srumanar took good care of the cattle, he protected them from dangers, he strides them out to lush green places for graze, he affectionately fed them with the grass and finally march them towards cool and shadowy places to relax.   He utilized leisure hours to worship Lord, he raised a platform and erected a Phallus (Linga) out of sand and started to worship Lord.  He utilized the flowers and leaves available on the river banks for worship.  His plain gesture of worshipping Lord with utmost faith and devotion grew into inseparable bond towards Him.

Vichara Srumanar took good care of the cattle and in return they provided him with large quantity of milk that he shared equally amongst the owners.  The owners were delighted at the self-less service of Vichara Srumanar, although he found abundance of milk remained idle that he blissfully utilized to perform sacred bath to Lord.  In this way Vichara Srumanar continued his service to cattle and worship of Lord concurrently.

One day, Vichara Srumanar was performing his daily rituals after his everyday practice.  A villager was keenly watching Vichara Srumanar without his notice.   Vichara Srumanar erected a Phallus, offered flowers and performed sacred bath to Lord with the milk and continued in a state of meditation.  The villager was shocked to see the thoughtless act of Vichara Srumanar, he failed to see the devotion in Vichara Srumanar and thought as inconsiderate.  He immediately reported the careless act of Vichara Srumanar and thereby dissipating the milk on the mud.  All the villagers assembled forced Vichara Srumanar’s father to take an immediate action to resolve this serious issue.

As usual Vichara Srumanar continued his practice of worship of Lord.  His father eagerly observed the performance of his young boy.  As any other day, he constructed a phallus out of sand, offered flowers and leaves; he poured milk over the Linga and continued to worship.  His father was in a rage spanked him, but Vichara Srumanar did not feel the pain as he was in deep meditation.   It mounted the anger of his father; he pounced on him and knocked down the pots of milk kept for sacred bath of Lord.  It brought Vichara Srumanar wide awake from his meditation; he frantically took a dried wood piece and threw it angrily on his father.  At the will of Lord the wooden piece turned into an axe and severed his father’s leg.  He fell on the ground in a thud and died instantly.  Vichara Srumanar continued his meditation in a state of bliss.

The Lord of Lords delighted at the devotion of the young child appeared before him with his consort, accompanied by the sages chanting Vedic hymns, singing and praising the glories of Lord.  Vichara Srumanar hurriedly rose from the seat and prostrated the celestial couple.  Lord Shiva affectionately hugged Vichara Srumanar   for his absolute faith and devotion, his unyielding act against his father for the great sin (Shiva Aparadham) he had committed.  Instantaneously, Vichara Srumanar’s appearance turned into immortal with the brilliance of thousand Adityas, resemblance of Lord with three eyes, crescent crown, Axe and bull as celestial vehicle.  Lord proclaimed that Vichara Srumanar will be worshipped as Chandesa Nayanar/Chandeswarar and would be honored with the offerings and Bhog of Lord.  Lord Shiva blessed Chandeswara’s father with Salvation also attained the Abode of Lord Shiva.

Lord Chandeshwara is one of the most praised twenty five forms of Lord Shiva.   Most temples of Lord Shiva enshrine Lord Chandikeshwara/Chandeshwara and worshipped along with Lord Ganesha, Lord Muruga, Soma Skandhar & Goddess Parvati.   It is believed that before leaving the temple one should pay obeisance to Lord Chandeshwara and get his blessings to accept any Bhog from the temple.

Kannappa Nayanar

chArvarum thavaNkaL cheydhu munivarum amarar thAmum

kArvarai adavi chErndhum kANudhaR kariyAr thammai

Arvamun peruka ArA anpiniR kaNdu koNdE

nErpeRa nOkki ninRAr nILiruL nINga ninRAr

உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது. இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் புரியும் இவ்வேடர் குலத்திற்குத் தலைவனாக இருந்தவன்தான் நாகன். இவனது மனைவி தத்தை என்பவள். வாள் வலிமையும், தோள் வலிமையும் ஒருங்கே பெற்ற நாகன், குற்றம் புரிவதையே தொழிலாகக் கொண்டவன். அம்மறக்குடி மங்கையும் கணவனைப் போலவே வீரமும், வலிமையும் கொண்டு, பெண் சிங்கம் போலிருந்தாள். இருவரும் பல்வகைச் சிறப்புக்களோடும் வாழ்ந்து வந்தனரே தவிர, அவர்களுக்கு மன நிம்மதியில்லை. நாகனுக்கும், தத்தைக்கும் திருமணமாகிப் பல காலமாகியும் மக்கட்பேறு இல்லை. அதற்காக இருவரும் பக்தர்கள் குறை தீர்க்கும் எல்லாம்வல்ல முருகக் கடவுளைப் பல வழிகளில் அனுதினமும் வழிபட்டு வந்தனர். இவர்களது இடையறாத பக்திக்கு சுந்தரக் கடவுளும் கருணைக் காட்டினார். குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரவேள், நாகனுக்கும், தத்தைக்கும் குழந்தைச் செல்வத்தை அருளினார். முருகப் பெருமானின் திருவருளால் மறவர்குடி மங்காது விளங்க, தத்தை ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்து மகிழ்ந்தாள். பிறக்கும்போதே குழந்தையைக் கைகளில் தூக்கமுடியாத அளவிற்குத் திண்ணமாய் இருந்ததால் அவர்கள் அக்குழந்தைக்கு திண்ணன் என்று சிறப்புப் பெயர் வைத்தனர். வேடர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆரவாரித்தனர். புலிக்குட்டிபோல் வீரத்தோடு பிறந்த திண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரலானான். வேடர் குல முறைமைக்கு ஏற்ப உரிய பருவத்தில் திண்ணன் வில் வித்தையை முறையோடு பயின்று, உரிய காலத்தில் வல்லவனாக விளங்கினான்.பிரபஞ்சம் திண்ணனைப் பதினாறு பிராயம் நிரம்பப் பெற்ற வாலிபனாக்கியது. முதுமையை அடைந்த நாகன், தலைமைப் பதவிக்குத் தன் மகனை மாற்ற எண்ணி அதனை வேடர்களிடம் தெரிவத்தான். அவர்களும் நாகனின் விருப்பப்படியே திண்ணனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள இசைந்தனர். திண்ணனாரும் வேடர்களுக்கு ஈடு இணையற்ற வீரத்தலைவர் ஆனார்.

உள்ளமும், உடலும் பூரித்துப்போன நாகன், தேவதைகளுக்குப் பூசை செய்யும் தேவராட்டியை வரவழைத்து குல வழக்கத்திற்கு ஏற்பத் தேவதைகளுக்குப் பூஜை செய்யுமாறு கட்டளையிட்டான். தேவராட்டி வழிபாடு செய்து, திண்ணன் தந்தையினும் மேம்பட்டவனாய் விளங்குவான் என்று ஆசி கூறினாள். ஒருநாள் குல வழக்கப்படி வேட்டைக்குப் புறப்பட எண்ணினார் திண்ணனார். இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்களோடு வேட்டைக்குப் புறப்பட்டார். மேகம் போல் வேடர் கூட்டம் சூழ, திண்ணனார் வேட்டையாடக் காட்டிற்குள் புகுந்தார். குகைவிட்டுக் கிளம்பும் கொடும் புலியைப்போல் திண்ணனார் வேட்டையாடத் தொடங்கினார். பறவைகளும், கொம்புகளும் பெரு முழக்கமிட்டன. வேடர்களால் வாயால் சீழ்க்கையடித்தனர். கைகளைத் தட்டி ஓசை எழுப்பினர். வேடர்களின் ஆர்ப்பாட்டத்தில் காடே அதிர்ந்தது சிங்கங்கள் கர்ஜித்து வந்து, வேடர்களின் குத்தீட்டிகளுக்குப் பலியாயின. பாய்ந்து வந்து புலிகள் அம்பினால் தாக்கப்பட்டு உயிர் நீத்தன. துள்ளித் துள்ளி வந்த மான்கள் பல மடிந்து வீழ்ந்தன. மற்றும் பல வனவிலங்குகளும் வேடர்களின் கணைகளுக்குப் பலியாயின. இந்தச் சமயத்தில் திடுக்கிடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. வலையை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய பெரிய பன்றி ஒன்று வேட்டை நாய்களிடமிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டதோடல்லாமல் வேடர்கள் கணைகளுக்கும் தப்பி அதி வேகமாக ஓடத் தொடங்கியது. வேடர்கள் பன்றியைத் துரத்திக் கொண்டு ஓடினர். பன்றி சிக்கவில்லை. அனைவரும் களைப்பு மேலிடப் பின்தங்கினர். ஆனால் திண்ணனார் மட்டும் உறுதியோடு பன்றியைப் பின்தொடர்ந்து கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் காட்டு முயல்போல் பாய்ந்தோடியவாறு பன்றியைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். திண்ணனின் மெய்க்காவலர்களாகிய நாணன், காடன் என்ற இருவர் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். எல்லோரையும் ஏமாற்றிவிட்டுக் காற்றினும் கடுகப் பாய்ந்தோடிய பன்றியைப் பிடித்தார். உடைவாளால் வெட்டி, அதனைத் துண்டு துண்டாக்கினார் திண்ணனார். திண்ணனாரின் பின்னால் ஓடிவந்த நாணனும், காடனும் திண்ணனார் இருக்குமிடத்தை அடைந்து, தலைவரது ஆற்றலைக் கண்டு வியந்தனர். திண்ணனாரின் வீரத்திற்குத் தலைவணங்கிய அவ்விருவரும், அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினர். அம் மூவருக்கும் நேரம் அதிகமானதாலும் ஓடிவந்த களைப்பினாலும் பசி மேலிட்டது.

மூவரும் பன்றியை நெருப்பில் சுட்டு தின்று, தண்ணீர் அருந்திச் செல்ல தீர்மானித்தனர். ஆனால் திண்ணனாருக்குத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற ஐயம் எழவே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்கு முன், பல தடவை வேட்டைக்கு வந்து பழக்கப்பட்ட நாணன், திண்ணனிடம், சற்று தொலைவில் உள்ள தேக்குமரத் தோப்பினைக் கடந்து சென்றால் குன்றுகளின் அருகாமையில் பொன்முகலி என்னும் ஆறு ஓடுகிறது. என்று விளக்கினார். நாணனின் பேச்சைக் கேட்டு பூரித்துப்போன திண்ணனார், அப்படியா ! நாம் அனைவரும் அங்கேயே போவோம்.  இந்த பன்றியையும் தூக்கிச் செல்வோம் என்று சொல்லி முன்னால் புறப்பட, நாணனும் காடனும் பன்றியைத் தூக்கிக் கொண்டு திண்ணனாரை வழிநடத்திச் சென்றனர். செல்லும் வழியே திண்ணனார் காளத்தி மலையைக் கண்டார். திண்ணனார் ஒரு வினாடி அப்படியே அசைவற்று நின்றார். காளத்தி மலையைப் பார்க்க பார்க்க அவருக்கு மெய் சிலிர்த்தது. எதனாலோ, அவர் உடம்பில் புதுச் சக்தி பிறந்தது. மலை மீது ஒளிப்பிழம்பு தெரிவது போன்ற பிரமை அவரைப் பற்றிச் சற்று நேரம் மெய்மறக்கச் செய்தது. குன்றின் அழகையே பார்த்துக் கொண்டிருந்த திண்ணனார் செவிகளில் மட்டும் விழும்படியாக, மலைமீது ஐந்த தேவ துந்துபிகள் கடல் ஒலிபோல் முழக்கம் செய்தன. அந்த ஒலியைக் கேட்கும் பேறு பெறாத நாணன் செவிகளில், தேனீக்கள் தேனடையைச் சூழ்ந்து கொண்டும் எழுப்பும் ஓசைதான் ஒலித்தது. திருமலையில் திருவுள்ளம் பதிந்து போன திண்ணனார், நாணா ! அக்குன்றுக்குச் செல்வோமா ? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டார். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சி ஒன்று திண்ணனாரைத் தடுத்தாட்கொண்டது. ஓ, போகலாமே ! அம்மலையிலே நல்ல காட்சிகள் பலவற்றைக் காணலாம், அத்தோடு அம்மலையிலுள்ள குடுமித்தேவர் கோவிலுக்குச் சென்று, அவரையும் கும்பிட்டு வராலம் என்று நாணன் கூறினான். அவன் மொழிந்தது கேட்டு திண்ணனார் களிப்படைந்தார் அவர் உடம்பில் பேரின்பச் சக்தி பிறந்தது. திண்ணனாருக்குச் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. மலையைப் பார்க்கப் பார்க்க உலக பாõரம் குறைவது போன்ற ஒரு புத்துணர்வு திண்ணனாருக்கு ஏற்பட்டது. குடுமித்தேவரைக் காணவேண்டும் என்ற ஆசை பள்ளத்தில் பாய்ந்த வெள்ளம்போல் அவர் உள்ளத்தில் புகுந்து ஓடியது.

குடுமித் தேவரைக் கும்பிட வேண்டுமென்ற எண்ணம், அவரை மேலும் விரைந்து செல்லத் தூண்டியது. நடந்து சென்று கொண்டிருந்த திண்ணனார், ஆசை மேலிட, ஆவல் உந்திட, ஓட ஆரம்பித்தார். நாணனும் காடனும் கூடவே விரைந்தனர். சற்று நேரத்தில் மூவரும் பொன் முகலி ஆற்றின் கரையை அடைந்தனர்.திண்ணனார், காடனை நோக்கி, காடா ! நீ, தீ மூட்டி, இப்பன்றியைச் சுட்டுச் சாப்பிடுவதற்குப் பக்குவமாகச் செய்து வை. அதற்குள் நானும், நாணனும் மலைக்குப் போய் வருகிறோம் என்று கூறினார். திண்ணனாரும், நாணனும் வேக வேகமாக பொன்முகலி ஆற்றைக் கடந்து மகிழ்ச்சியுடன் திருக்காளத்தி மலைச்சாரலை அடைந்தனர்.பகலெல்லாம் பாரிலே பவனி வந்த பகலவன் கடமையை முடித்த களிப்பிலே, களைப்பு நீங்கக் கடல் வாயிலை அடைந்து கொண்டிருக்கும் நேரம் !மாலைக் கதிரவனின் மஞ்சள் வெயில் திருக்காளத்தி மலையைப் பொன்மயமாக்கியது. நாணன், திண்ணனாருக்குப் பாதை காட்டும் பொருட்டு முன்னால் நடந்து சென்றான். திண்ணனார் அவனைப் பின் தொடர்ந்தார். மலையின் மீது படிகளைக் கடந்து செல்லும் நேரம் உலகத் தத்துவங்கள் என்னும் படிகளைக் கடப்பது போன்ற ஒருவித மன உணர்வு பூண்டார் திண்ணனார். வேணிநாதரின் முடி மேலிருக்கும் வெண்ணிலாவின் தன்மைபோல் திண்ணனார் நெஞ்சம் குளிர்ந்தது. ஒவ்வோர் படி மீதும் அடி எடுத்து வைக்கும் போதும், அவரது உள்ளத்தில் எதனாலோ பக்தி வளர்ந்தது. முருகனைப் போற்றும் திண்ணனார், சிவத்தை சாரும் சிவயோகி போலானார். திண்ணனார், முற்பிறப்பில் செய்த தவத்தின் பெருக்கம் அவரது உள்ளத்தில் அன்பைப் பெருக்கியது. ஆண்டவன் மீது ஆராக காதலைப் பொங்கி எழச் செய்தது. காளத்தி மலையின் உச்சியில் முழுங்கும் பஞ்சதேவதுந்துபிகளின் ஒலியைக் கேட்க கேட்க ஆசை பொங்கி வழிந்தது. உள்ளம் ஏதோ ஒரு சொல்ல முடியாத விருப்பத்தை அடைந்தாற்போல் தோன்ற மெய் சிலிர்த்தது. மலை மீதேறிய திண்ணனார் அங்கு எழுந்தருளியிருக்கும் குடுமித் தேவரைக் கண்டார். அவரது வடிவெல்லார் புளகம் பொங்கியது. அருள் வழிகளில் ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் பாய்ந்தது.

திண்ணனார் முகத்திலே புதிய பிரகாசம் ஒன்று ஏற்பட்டது. எம்பெருமானின் கருணை கூர்ந்த அருட்திருநோக்கம் அவர் மீது பட்டது. திண்ணனார் ஒப்பற்ற அன்பு வடிவமாய்த் திகழ்ப் புதுப்பிறவி எடுத்தாற்போல் ஆனார். ஞாயிறு தோன்ற நலியும் இருள்போல திண்ணனார் நெஞ்சத்தில் தோன்றிய அருள், அஞ்ஞானத்தை அறவே நீக்கியது. ஞானத்தை ஊட்டியது. சிவகொழுந்தை அப்படியே பார்த்துக் கொண்டேயிருந்தார். அன்பினாலும் பேருவகையினாலும் ஈர்க்கப்பெற்ற திண்ணனார் ஆசை பொங்கி மேலிட அருள் வடிவமான அம்மையப்பரைக் கட்டித் தழுவினார். முத்தமாரி பொழிந்தார். பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். விழி இரண்டும் அருவி போல் ஆனந்த நீரைச் சிந்தின. திண்ணனார் மதுவுண்ட வண்டுபோல் ஆனார் அவரது மொழி குழறியது. உடல் குளிர்ந்தது. உள்ளம் பேருவகை எய்தியது. திண்ணனார் அன்பே உருவானார். அகில உலகத்தையும் மறந்து சிலைபோலானார். சற்று நேரத்தில் மீண்டும் நினைவு பெற்றார். இந்த ஏழைக்கு இவர் அகப்பட்டார். இப்பிறப்பில் நான் பெற்ற பேற்றை வேறு எவருமே பெற்றிருக்க முடியாது என்று உணர்ச்சி பொங்கக் கூறிய திண்ணனார், எல்லையில்லா ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். இறைவனைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, நெற்றி சிவக்க நிலத்தில் வீழ்ந்து சிவலிங்கத்தை வணங்கினார். திண்ணனாரின் மனத்திலே திடீரென்று ஒரு கலக்கம் குடிபுகுந்தது. அவரது பிஞ்சு மனத்திலே ஒரு கேள்வி பிறந்தது. கரடியும், வேங்கையும், கடும்புலியும், வாழும் இக்கொடிய கானகத்தில் குடுமித் தேவர், துணை எதுவுமின்றித் தனித்து இருக்கிறாரே ! வனவிலங்குகள் வந்து என் எம்பிரானுக்கு ஏதாகிலும் துன்பத்தைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது ? என்னால் அக்கொடுமையைக் கண்டுகொண்டு எப்படிப் பொறுமையாக இருக்க முடியும் ? இப்படி தமக்குள் எண்ணிப் பார்த்த திண்ணனார், தாங்க முடியாத வேதனையால் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டார், அவரது கையில் இருந்த வில், தானாக நழுவி நிலத்தில் வீழந்தது. அப்பொழுது திண்ணனார் இறைவனின் திருமேனியில் பச்சிலையும், நீரும் இருப்பதைப்பார்த்து, என் ஐயனை இப்படியெல்லாம் செய்தவர் யாராக இருக்கலாம் என்று தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். உண்மையை அறிய விரும்பிய திண்ணனார் இதே கேள்வியை நாணனிடம் கேட்டார். நாணன் திண்ணனாரை நோக்கி தலைவா ! இதெல்லாம் யாருடைய வேலை என்பதை நான் நன்றாக அறிவேன் முன்னொரு முறை, நான் உங்கள் தந்தையுடன் இக்கோவிலுக்கு வந்திருந்தேன். அது சமயம் பார்ப்பனர் ஒருவர் இக்குடுமித் தேவருக்குப் பச்சிலையிட்டு நீரை வார்த்துச் செல்வதைக் கண்டேன். இன்றும் அவர்தான் இவ்வாறு செய்திருத்தல் வேண்டும் என்றான்.

நாணன் கூறியதைக் கேட்டு திண்ணனார் இவ்வாறு செய்வதுதான் குடுமித் தேவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய செய்கைகள் ஆகும் என்பதை உணர்ந்தார். தாமும் அவற்றைக் கடைப்பிடித்து அவ்வழி செல்ல முடிவுகட்டினார். ஏன் நாணா !அப்படி என்றால், நாம் அன்போடு எதைச் செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார் போலிருக்கிறதே ! என்று ஒன்றுமறியாப் பாலகனைப் போல் கேட்டார். திடீரென்று திண்ணனாருக்குத் தாம் இறைவனைப் பட்டினி போட்டு விட்டோமோ ? என்ற ஐயமும் எழுந்தது. உண்மையிலேயே இறைவன் பசியுடன் தான் இருப்பார் என்ற முடிவிற்கும் வந்தார் திண்ணனார். குடுமித் தேவரே ! என் இறைவனே ! நீர் இங்கு தனியாக அல்லவா இருக்கிறீர் ? உமக்குப் பன்றி இறைச்சியும், குளிர்ந்த தண்ணீரும் கொடுப்பவர் யார் ? என்று புலம்பத் தொடங்கிவிட்டார். உடனே விரைந்து சென்று, இறைவனுக்கு இறைச்சியும், தண்ணீரும் கொண்டு வரும் நோக்கோடு முன்னால் இரண்டடி எடுத்து வைத்தார். சட்டென்று எதையோ மனதில் எண்ணியவாறு ஓடிவந்து இறைவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, இந்த இடத்தை விட்டுப் பிரிந்து நான் எங்குமே போகமாட்டேன். ஒரு அடி கூட நான் நகர மாட்டேன். என் ஐயனைப் பிரிந்துருக்கவே முடியாது என்று கூறியவாறு இறைவனை விடாது அணைத்தடியே இருந்தார். அந்த இடத்தை விட்டுப் போகவே அப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. அப்படியே சென்றாலும் சற்று அடி எடுத்து வைப்பார். மீண்டும் வருவார். சிவலிங்கத் திருமேனியைத் தழுவுவார். உச்சிமோந்து நிற்பார். பேரன்போடு திரும்பிப் பார்த்து நிற்பார். மீண்டும் ஓடிச்சென்று இறைவனைக் கட்டித் தழுவிக் கொள்வார். இறைவனைக் கட்டித் தழுவி, குழந்தைப் போல் கொஞ்சிக் குழைவார். தாய்ப் பசுவை விட்டுப் பிரிய முடியாமல் துடிக்கும் கன்று போல், திண்ணனார் குடுமித்தேவரை விட்டுப் பிரிய முடியாமல் மனம் வாடினார். பிறை சூடிய பெருமானை நினைத்து, புலம்பிப் புலம்பி கலங்கி நின்ற திண்ணனார், பித்தனாகவே மாறிவிட்டார். இறுதியில் எப்படியோ மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இறைவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வழி நடந்தார். திண்ணனாரின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டே இருந்த நாணன், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ ? என்று மனதில் எண்ணியவாறே திண்ணனாரைப் பின் தொடர்ந்து சென்றான். திண்ணனார் பற்றற்ற பரம ஞானியைப் போல் நடந்து கொண்டிருந்தார். அவரது கால்கள்தான் நடந்து கொண்டிருந்தனவே தவிர, அவரது எண்ணமெல்லாம் காளத்திமலைக் கோயில் மீதுதான் இருந்தது.

பொன் முகலி ஆற்றைக் கடந்து, காடன் எதிரில் வந்து நின்றதுகூட அவரது உணர்வுக்கு அப்பாற்பட்ட செயலாகவே இருந்தது. அந்த அளவிற்கு அம்பலத்தரசரின் அருள் கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தார் திண்ணனார். திண்ணனாரைப் பார்த்த காடன், அன்போடு தலைவரை எதிரில் வந்து தொழுதான்.நாணன் அவனிடம், குடுமித்தேவரை நம் தலைவர் உடும்புப் பிடியாக அல்லவா பிடித்துக்கொண்டு விட்டார் ! இப்போது இங்கு வந்திருப்பது கூட வீட்டிற்கு போவதற்காக அல்ல; குடுமித்தேவருக்குப் பன்றி இறைச்சியைப் பக்குவப்படுத்திக் கொண்டு போவதற்காகத்தான். தெய்வ மயக்கம் தலைக்கேறிக் குடுமித்தேவரோடு ஐக்கியமாகிவிட்டார் என்று கூறினான். நாணன் மொழிந்ததைக் கேட்டு காடன் நிலை குலைந்தான். நமக்கெல்லாம் தலைவராக இருக்கும் இவர் எதனால் இப்படி மாறிவிட்டார் ? என்று தனக்குள் வேதனையோடு கேட்டுக் கொண்டான். நாணனும், காடனும், திண்ணனாரிடம் நாட்டிற்குப் புறப்படலாம் என்று பல தடவைகள் கேட்டனர் ! திண்ணனார் மவுனமாகவே இருந்தார்.இறைவனின் அருள் வெள்ளத்திலே மூழ்கிய திண்ணனார் இவர்களது கூற்றையெல்லாம் சற்றும் செவி சாய்த்துக் கேட்காது இறைச்சியைப் பக்குவப்படுத்து வதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அம்பினால் பன்றியைக் கிழித்து இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டினார். அவற்றைக் நெருக்கமாக அம்பிலே கோர்த்து, நெருப்பில் நன்றாகக் காய்ச்சித் தக்கபடி பக்குவமாகச் சமைத்தார்.அவற்றை வாயில் இட்டுச் சுவைத்துப் பார்த்தார். வாய்க்குச் சுவையாக இருந்த நல்ல இறைச்சித் துண்டுகளை எல்லாம் தேக்கிலையால் செய்த தொன்னையிலே எடுத்துக் கொண்டார்.திண்ணனாரின் இச்செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த காடனுக்கும், நாணனுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. நாகனையும், தேவராட்டியையும் அழைத்து வந்து தக்க முடிவு காணலாம் என்ற எண்ணத்தோடு, திண்ணனாரிடம் கூடக் கூறலாம் புறப்பட்டனர். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இறைவன் அன்பு மயக்கத்தில் ஐம்புலனையம் ஒருமைப்படுத்தித் தம்மை மறநந்திருந்த திண்ணனார், இவர்கள் பேசியதையும் கவனிக்கவில்லை; இவர்கள் சென்றதையும் கவனிக்கவில்லை. திண்ணனார் தொன்னையில் பன்றி இறைச்சியை நிரப்பிக் கொண்டார். இறைவனை நீராட்டுவதற்காக பொன் முகலி நீரை வாயில் நிறைய முகந்து கொண்டார். பூசிப்பதற்குத் தேவையான நறுமலர்களைக் கால்களினால் பறித்து வந்து தலைமீது ஏந்திக் கொண்டார். ஒரு கையிலே வில், மற்றொரு கையிலே ஆற்றுநீர், தலையிலே மலர்கள், இதயத்திலே இறைவனைப் பற்றிய சிந்தை ! இப்படியாக, சிவ வழிபாட்டிற்குப் புறப்பட்ட திண்ணனார், காளத்தி மலையை நோக்கி வேகமாக ஓடினார். சிவலிங்கப் பெருமானின் திருச்சன்னிதானத்தை அடைந்தார்.

முதல் வேலையாக அரசார் திருமேனியிலிருக்கும் மலர்களையும், பச்சை இலைகளையும் செருப்புக் காலால் அகற்றினார். வாயிலிருந்த பொன் முகலி ஆற்று நீரை ஆண்டவன் மீது உமிழ்ந்தார். இதயத்திலுள்ள எல்லையில்லா அன்பை அரனார் மீது சொரிவதுபோல தலைமீது சுமந்து வந்து நறுமலர்களை இறைவன் மீது பொழிந்தார். கையில் கொண்டு வந்திருந்த ஊன் நிறைந்த தொன்னையை தெய்வத்தின் திருமுன் பயபக்தியோடு வைத்தார், தேவரும், பூதகணங்களும் முனிவரும் போற்றி வணங்கும் மறைமுதல்வன், முன்னால் வைத்த இறைச்சியை, திருவமுதூட்டச் சித்தம் கொண்டார் திண்ணனார்.ஐயனே ! இந்த இறைச்சியை அம்பிலே கோர்த்து, நன்றாக நெருப்பிலிட்டுப் பக்குவமாகச் சமைத்துள்ளேன். அதிலும் நானே நாவால் சுவைத்துப் பார்த்துச் வையுள்ள இறைச்சியை மட்டும் தங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எம்பெருமானே ! இந்த ஏழையின் ஆசையைப் பூர்த்திசெய்யத் திருவமுது செய்து அருளவேண்டும் என்று மொழிந்தவாறே, ஊனை இறைவனுக்கு அன்போடு ஊட்டத் தொடங்கினார் திண்ணனார். உலகமெங்கும் கங்குல் அரசன் தனது ஆட்சியைத் தொடங்கினான். திண்ணனாருக்குப் பயம் ஏற்பட்டது. ஏற்பட்ட பயமோ தம்மைப்பற்றி அல்ல ! தமது அன்பு அணைப்பிலே அழுந்தி நிற்கும் இறைவனைப் பற்றித்தான்.இரவில் வனவிலங்குகள் வந்து இறைவனைத் துனன்புறுத்தக்கூடுமோ? என்ற பயத்தால் கலங்கிய திண்ணனார், செவ்விய அன்பு தாங்கிய திருக்கையில் வில்லைத் தாங்கிக் காளத்தியப்பரின் அருகினிலேயே அசையாமல் இரவெல்லாம் கண் இமைக்காமல் நேசமுறக் காவல் காத்து நின்றார். மூங்கில்கள் சொரியும் முத்துக்களின் ஒளியாலும், பாம்புகள் உமிழ்ந்த சிவந்த மாணிக்கக் கற்களின் பேரொளியினாலும் ஒளி வீசும் சோதி மரங்களின் விளக்கத்தாலும், குரங்குகள் பொதும்பில் அவைகட்கு விளக்காக வைத்த மணிவிளக்குகளின் ஒளியினாலும், ஐம்புலன்களை அடக்கிய முனிவர்கள்பால் எழும் அரிய பெரிய ஜோதி மயத்தாலும் எங்கும் ஒளிச்சுடர் படர்ந்த வண்ணமாகவே இருந்தன. இருள் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்த்தன. வேள்விச் சாலைகளில் அந்தணர்களின் வேதபாராயணம் ஒலித்தன. ஆலயங்களில் காலை முரசம் முழங்கின. செங்கதிரோன் குணதிசை எழுந்து தனது விரிக்கதிர்களைப் பாரிலே பரப்பினான். அவனது செம்மையான கதிர்கள் திண்ணனார் மீது பட்டன. உறங்காமல் காவம் புரிகின்ற பக்திச் செம்மல் இறைவனைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி கொண்டார். அப்பொழுது அவரது மனதில் இறைவனுக்குத் திரும்பவும் பசி எடுக்குமே! அதற்குள் விரைந்து சென்று இறைச்சியைக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினார். வேகமாகப் புறப்பட்டார்.

திண்ணனார் திருக்கோயிலை விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கம்போல் பூசை செய்யும் சிவகோசரியார் என்னும் அந்தணர் வழிபாடு செய்வதற்காக மலரும் நீரும் நறுமணப் புகைப்பொருளும் எடுத்து வந்தார். உள்ளே வந்த அந்தணர் இறைவன் திருமுன்னால் இறைச்சியும் எலும்பும் சிதறிக் கிடப்பதைக் கண்டு பதறினார். ஐயையோ ! இத்தகைய இழிவுச் செயல்களைச் செய்தவர் எவரோ ? என்று நிலத்தில் வீழ்ந்து அலறினார். செய்வதறியாது திகைத்தார். கலங்கினார். வேடர்குலத்தவர்தான் இத்தகைய கொடிய பாதகச் செயல்களைச் செய்திருக்க வேண்டும் ! என்று மனதில் எண்ணியவாறு அந்த இடத்தைச் சுத்தம் செய்தார். பொன் முகலிக்குச் சென்று நீராடித் திரும்பி வந்தார் அந்தணர். என்றும் போல் வேதம் ஓதி சைவாகம முறைப்படி இறைவனை நீராட்டினார். மலரிட்டு நறுமணப் புகை காட்டி வழிபட்டார். மனவேதனையோடு தமது வீட்டிற்குத் திரும்பினார். காளத்திமலையை விட்டுப் புறப்பட்ட திண்ணனார். அரனாருக்குப் பலவகை விலங்குகள் மாமிசத்தைச் சமைத்து அமுதூட்ட எண்ணினார். அதற்காக மான், பன்றி, காட்டுமான் முதலியவற்றை வேட்டையாடினார் திண்ணனார். அதன்பிறகு, முந்தைய நாள் போல், அவற்றை அம்பிற் கோர்த்து தீயிலிட்டு வதக்கி எடுத்தார். சுவைத்துப் பார்த்துக் தொன்னை நிறையச் சேர்த்துக் கொண்டார். தேன் அடைகளை பிழிந்து ஊனை கலந்தார். தலையில், மலரையும், வாயில் நீரையும் எடுத்துக் கொண்டு காளத்தியப்பரின் பசியைப் போக்கப் புறப்பட்டார் திண்ணனார். ஆலயத்தை அடைந்த திண்ணனார் இறைவன் முன்னால், பச்சிலையும், தண்ணீரும் இருப்பது கண்டு திகைத்தார். முன்போலவே அவற்றைச் செருப்பு கால்களால் சுத்தம் செய்தார். வாயில் இருந்த தண்ணீரை உமிழ்ந்து இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். தலையிலிருந்து மலரை உதிர்த்து அர்ச்சனை புரிந்தார். அன்போடு அமுதூட்டி உளம் மகிழ்ந்தார். இப்படியாக தினமும் திண்ணனாரும், சிவகோசரியாரும் மாறி மாறி சிவபூஜை செய்து வரலாயினர்.திண்ணனாரின் ஊன் அமுதும் அன்பும் கலந்த பூசையும், சிவகோசரியாரின் சிவாகமமுறை வழிபாடும் நாள்தோறும் இடைவிடாமல் நடந்த வண்ணமாகவே இருந்தன. இதற்குள், நாணனும், காடனும் ஊருக்குத் திரும்பி நாகனிடம், திண்ணனாரின் நிலையைப் பற்றி விளக்கிக் கூறினர். நாகன் அரவம் தீண்வினாற்போல் துடித்தான். மகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று அஞ்சி நடுங்கினான். நாகன் தேவராட்டியையும், தத்தையயும் அழைத்துக் கொண்டு, திண்ணனாரைப் பார்க்கக் காளத்தி மலைக்கு புறப்பட்டான். திண்ணனார் குடுமித்தேவரை அணைந்த வண்ணம் இருந்தார். அப்பொழுது அங்கு வந்த நாகனும், தத்தையும் திண்ணனாரிடம், பல வழிகளில் பேசிப் பார்த்தார்கள். பழகிப் பார்த்தார்கள். அவரைப் பிடித்திருக்கும் சாமிப் பைத்தியம் மட்டும் விட்ட பாடில்லை என்பதை உணர்ந்து வருந்தினார்கள். தேவராட்டிøயும் முயற்சித்துத் தோல்வியுற்றாள். நாகனும் தத்தையும் மனம் வருந்தினர். மகனைத் தன்னோடு அழைத்துச் செல்வது என்பது இயலாத காரியம் என்பதைத் திடமாகக் கொண்டனர். இறைவனது கருணைக் கயிற்றிலே கட்டுண்ட திண்ணனார் இவர்கள் முன்னால் வெறும் ஜடமாகவே காணப்பட்டார். அவர்கள் திண்ணனாரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று வருத்தத்துடன் வந்த வழியே திரும்பினார்கள். குடுமித்தேவருக்கு வேடர் வழிபாடும், வேதியர் வழிபாடும் நான்கு நாட்களாகக் கலந்து கலந்து நிகழலாயின. ஐந்தாம் நாள் வந்தது. அன்றும் வழக்கம்போல், திண்ணனார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் வந்த சிவகோசரியார் இறைவன் முன்னால் தினமும் காலை தான் வரும்பொழுதெல்லாம் இறைச்சி சிதறிக் கிடப்பதை எண்ணி மனம் தாளாமல் இறைவனிடம் இறைஞ்சினார்.

எம்பிரானே ! தம்பிரானே ! திருக்காளத்தி அப்பனே ! அபச்சாரம். தினம் தவறாது எலும்பையும் இறைச்சியையும் உமது திருமுன்னால் வாரி இறைத்து மாசுபடுத்துவது இன்னாரென்று யான் அறியேனே !தேவரீர் ! திருஉள்ளம் கனிந்து இத்தகைய கொடுமையை இனியும் நேராத வண்ணம் எம்மைக் காத்தருள வேண்டும் என்று பரமனிடம் பிரார்த்தித்தபடியே வழிபாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அன்றிரவு அவரது கனவில் செஞ்சுடர் வண்ணர் எழுந்தருளினார்.இச்செயலை யாரோ வேடுவன் வேண்டுமென்றே, என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகச் செய்கிறான் என்று மட்டும் எண்ணிவிடாதே. அவனது வடிவமெல்லாம் எப்பொழுதும் நம் பக்கம் அன்பு செலுத்தும் தன்மையானதே.அவனுடைய அறிவும் உணர்வும் நம்மை அறியும் அறிவே ! அவனுடைய செயல் ஒவ்வொன்றும் நமக்கு இனிமை பயக்கக்கூடியதாகும். அவனது செருப்புக் கால்கள் என் மீது தேய்த்துச் சுத்தப்படுத்தும் போது எனக்கு மழலைகளின் சேவடிகள் தடவிச் செல்வது போன்ற இன்பப் பெருக்கை ஏற்படுத்துகிறது. கங்கை, காவிரி முதலிய தூய நதிகளின் நீரைவிடத் தூய்மையான அவன் தனது வாயினின்றும் உமிழ்கின்ற திருமஞ்சன நீர். அவனது முடியிலிருந்து உதிர்ந்து விழும் நறுமலர்கள், அவன் எம்மீது கொண்டுள்ள உயிருக்கு உயிரான அன்பு மலர்ந்து, நம்மீது நழுவி விழுவதைப் போலாகும், அம்மலர்களுக்குத் தேவதேவாதியர்கள் இடும் பாரிஜாத மலர்கள் கூட ஒவ்வா. அவன் ஊட்டும் இறைச்சி மறைவிதிப்படி அளிக்கும் அவிர்பாகத்தைவிடச் சிறந்ததாகும். வேத முனிவர்கள் ஓதும் தோத்திர நாமங்களை விட, அவன் அகம் குளிர அன்புருகிக் கூறும் மொழிகளே மிகமிக நல்லவை; எனக்கு இன்பம் தரத்தக்கவை. அவனது இத்தகைய உயர்ந்த அன்புச் செயலை உனக்குக் காட்டுகிறேன். இதற்காகக் கலங்காதே என்று திருவாய் மலர்ந்தார் எம்பெருமான் ! சிவகோசரியார் கனவு கலைந்து திடீரென்று விழித்தெழுந்தார். எம்பெருமானைப் போற்றி நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதன் பின்னர் உறக்கம் எப்படி வரும் ! கனவில் கண்ட பெருமானின் திருக்கோலத்தை எண்ணியபடியே விடியும்வரை விழித்திருந்தார். அன்று ஆறாம் நாள் ! வழக்கம்போல் திண்ணனார் வேட்டைக்குப் புறப்பட்டார். அந்தச் சமயத்தில் அந்தணர் மன நிறைவோடு திருக்கோயிலுக்கு வந்தார். வழக்கப்படி வேதாகம வழிபாடுகளைச் செய்தார். அதன் பிறகு இறைவன் கனவில் எழுந்தருளி மொழிந்ததற்கு ஏற்பச் சிவலிங்கத்தின் பின்புறமாக ஓரிடத்தில் மறைந்து கொண்டார். வழக்கம்போல், தொன்னையில் இறைச்சியும், தலையில் நறுமலரும், வாயில் பொன்முகலி ஆற்றுத் தெளிந்த நீரும் எடுத்துக் கொண்டு திண்ணனார் திருச்சன்னிதிக்குள் வந்தார். திண்ணனாரின் பக்தியை உலகோர்க்கு உணர்த்தவும்,  இறைவன் மீது கொண்டுள்ள அன்பை சிவகோசரியாருக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் வேண்டி குடுமித் தேவர், அந்த ஆனந்தமலை மீது ஓர் அற்புத விளையாடலைத் தொடங்கினார். எம்பெருமான், தமது சிவலிங்கத் திருமேனியில் வலக்கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைப் போல் காட்டினார்.

சிவபெருமானுடைய திருவிழிகளிலிருந்து குருதி கொட்டுவது கண்டு மதிமயங்கிய திண்ணனார் செயலிழந்தார். வாயிலிருந்த பொன்முகலியாற்று நீர் கீழே விழுந்து சிதறியது. வில்லும் கீழே நழுவின. குடுமியில் சுமந்து வந்த நறுமலர்கள் சோர்ந்தன. அருள் மிகுதியால் நிலை தளர்ந்த திண்ணனர் பதைபதைத்துக் கீழே விழுந்தார். அவரது உள்ளமும், உடலும் நடுங்கியது. நடுக்கத்தால் உடல் வியர்த்தது. அவர் கண்ணீர் வடித்தார் ! கதறினார் ! திடுக்கிட்டு எழுந்தார். எம்பெருமானின் குருதி வழியும் திருக்கண்ணை தமது கையால் துடைத்தார். குருதி மட்டும் நின்றபாடில்லை. செய்வதறியாது, செயல் மறந்து நிலத்தில் வீழ்ந்தார். மீண்டும்  எழுந்தார்.எம்பெருமானுக்கு இத்தகைய கொடிய துன்பத்தை செய்தது யார்? காட்டு விலங்குகளானாலும் சரி, மாறாக வேடர்கள் ஆனாலும் சரி, என் ஐயனுக்கு இப்படியொரு துன்பத்தைக் கொடுத்ததை மட்டும் என்னால் பொறுக்கவே முடியாது. இப்பொழுது பழி வாங்கி வருகிறேன் என்று கர்ஜித்த திண்ணனார் கோபத்துடன் எழுந்தார். வில்லும் அம்பும் எடுத்தார். வில்லில் நாணேற்றி குன்றின் சாரலில் அங்குமிங்குமாக நெடுந்தூரம் தேடித் தேடி அலைந்தார். தேடிய இடங்களிலெல்லாம் விலங்குகளையோ வேடர்களையோ காணாது வேதனையோடு திரும்பி வந்தார்.எம்பெருமானின் இரத்தம் சிந்தும் விழிகளைப்ப பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தார். குடுமித்தேவரை இறுகக் கட்டித் தழுவினார். அன்பும் அருளும் இணைந்தன. பக்தியும், சக்தியும் கலந்தன.வேடர்கள் மூலிகைகளைக் கொண்டு புண்களை ஆற்றுவது திண்ணனார் நினைவிற்கு வந்தது. உடனே காளத்தி மலை அடிவாரத்திற்குச் சென்று தமக்குத் தெரிந்த சில பச்சிலை மூலிகைகளைப் பறித்து வந்தார். அப்பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து சாற்றை இறைவன் திருவிழிகளில் பிழிந்தார். அப்படியும் பெருகி வந்த இரத்தம் மட்டும் சற்றுகூட நிற்கவே இல்லை.அந்த சமயத்தில், ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற ஆன்றோர்களின் சித்தாந்த மொழி அவரது சிந்தைக்கு எட்டியது.எம்பெருமானுடைய விழிக்கு நேர்ந்த விபத்தைத் தீர்ப்பதற்கு, தம்முடைய விழிகளில் ஒன்றைத் தோண்டி எடுப்பது இரத்தம் சிந்தும் இறைவனின் திருவிழிகளில் வைப்பது என்ற கருத்தினைக் கொண்டார் திண்ணனார். சற்றும் தாமதிக்காமல் கூரிய அம்பினால் தமது வலக்கண்னைத் தோண்டி எடுத்தார். காளத்தி அப்பனின் ரத்தம் வழியும் வலக்கண்ணில் அப்பினார் திண்ணனார். அக்கண்ணில் இருந்து ரத்தம் வழிவது நின்றது. திண்ணனாரின் கண்களிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அவர் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. வேதனையைப்பற்றி சற்றுகூட எண்ணிக் கதறவில்லை. தாம் தக்க சிந்தனையோடு செய்த செயல் பரமனின் கண்களைக் குணப்படுத்திவிட்டதே என்ற களிப்பில் மலையை ஒத்த தமது தோள்களைத் தட்டிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். திண்ணனாரின் தெளிந்த பேரன்பின் பெருக்கினை மேலும் சோதிக்க தொடங்கிய சிவனார். தமது இடக்கண்ணிலிருந்தும் ரத்தம் வழியுமாறு செய்தார்.

ஆனந்தக் கூத்தாடிக் களித்து நின்ற திண்ணனார் இறைவனின் இடக்கண்ணிலிருந்து ரத்தம் பெருகி வருவது கண்டு, அப்படியே அசைவற்று நின்றார். கண்ணுக்குக் கைகண்ட மருந்தைக் கண்ட பின்னர் திண்ணனார் எதற்காக கண்ட கண்ட மூலிகைகளையும் பச்சிலைகளையும் தேடி அலையப் போகிறார் ! அக் கண்ணிலிருந்து வரும் இரத்தத்தையும் தடுத்து நிறுத்த அப்பொழுது தமது மறுகண்ணையும் அம்பினால் தோண்டி எடுத்து அப்புவது என்ற முடிவிற்கு வந்தார். மறுகண்ணையும் எடுத்துவிட்டால், இறைவனது கண் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமே என்று நினைத்து தமது காலை, இறைவனின் குருதி கொட்டும் இடக் கண்ணருகே பலமாக ஊன்றிக் கொண்டார்.அம்பை எடுத்தார். அம்பு எடுத்த அன்பர், காளத்தியப்பரை அன்பின் பெருக்கிலே ஒருமுறை பார்த்தார். இந்தக் கண்ணையும் பறித்து இறைவனுக்கு வைத்து விட்டால் பிறகு இறைவனைக் கண்ணால் பார்க்கவே முடியாதே – அன்பு வடிவமான இறைவனின் அருள் முகத்தைக் காணவே முடியாதே ? என்று எண்ணினாரோ என்னவோ, இறைவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.பார்த்துப் பார்த்து மனம் உருகினார்.இனிமேல் என்றும், எப்பொழுதும், ஞானக்கண்களால் இறைவனைக் கண்டுகளிக்கப் போகும் திண்ணனார். தமது ஊனக் கண்களைப் பற்றி கவலைப்படவில்லை. அம்பை எடுத்தார். இடக்கண்ணில் ஊன்றி கண்ணைத் தோண்டப் போனார். இதற்கு மேல் காளத்தியப்பர். தமது அன்புத் தொண்டனைத் துன்புறுத்த விரும்பவில்லை. அருள் வள்ளலார், திண்ணனாரின் அன்பிற்கு அடிமையானார். அன்பர்களைக் காக்கும் அம்பத்தரசன் – கருணைக் கடலான சந்திரக்காலாதரன் – வேதமுதல்வன் திண்ணனாரைத் தடுத்தாட் கொண்டார். எம்பெருமான் தமது திருக்கையால் திண்ணனாரின் கரத்தைப் பற்றினார்.நிற்க கண்ணப்ப ! நிற்க கண்ணப்ப ! அன்புருவே நிற்க ! என்று தமது அமுத வாக்கால் திருவாய் மலர்ந்து அருளினார் எம்பெருமான்.தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். ஆலயம் எங்கும் புத்தொளி பிறந்தது. வேதம் முழங்கியது. திண்ணனார் இறைவனின் அருளிலே அன்பு வடிவமாய், பேரின்பப் பெருக்கெடுத்து நின்று கொண்டிருந்தார்.இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவகோசரியார் திண்ணனாரின் பக்திக்கு தலை வணங்கினார். இறைவன் திருவருளினாலே திண்ணனார், இழந்த கண்ணைப் பெற்றார். கண் பெற்றதோடு கண்ணப்பர் என்ற திருநாமத்தையும் பெற்றார்.கண்ணப்பரின் உண்மையான பக்தியையும், இறைவனின் திருவருளையும் என்ணிப் பார்த்தார் அந்தணர். ஆயுள் எல்லாம் அரனாரை வழிபட்டேன்; என்னால் அவரது அருளைப்பெற முடியவில்லை. ஆறுநாள் பூஜையிலே ஆண்டவனின் அருகிலேயே இருக்கும் இன்பப் பேற்றினைப் பெற்றார் திண்ணனார். அதற்குக் காரணம் வெறும் பூஜை மட்டுமல்ல ! உண்மையான அன்புதான். அன்வே சிவமானார். அன்பில்லாத வழிபாட்டால் ஒரு காரியமும் நடக்காது. இறைவனின் அருளைப் பெறவும் முடியாது.இம்மையில் யாம் முக்தி பெற, இனிமேல் காளத்தியப்பரோடு கண்ணப்பரையும் சேர்த்து வழிபடுவதே சிறந்தது ! என்று உறுதிபூண்டார் வேதியர். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அருந்தவத்தோர்க்கும் கிட்டாத பரம்பொருளாகிய எம்பெருமான் திருவாய் மலர்ந்து, ஒப்புயர்வற்ற கண்ணப்பா ! நீ எமது வலப்பக்கத்திலே எப்பொழுதும் நிற்பாயாக  ! என்று திருவருள் புரிந்தார்.திண்ணனார் கண்ணப்பர் ஆனார். கண்ணப்பர் பரமனுக்குக் கண்கொடுத்து பக்திக்குக் கண்ணாக விளங்கினார்.

IN ENGLISH

The land green with the forests and hills having the best that mother nature offers was the kingdom called pothappi Nadu . In that kingdom was the village called uduppoor , surrounded by beautiful rainfalls. The rocks of that hilltown smelt with the rotton smell from the bodies of the dead animals put for drying along with the anchored nets used for hunting. Along with the noise of “Kill it ! stone it! stab them !” that the hunting folks generate, one can hear the pleasant sound of dancing deer’s and jumping waterfalls. Along with the cow-herds that those hunters robbed from others one can see the herds of elephant that challenge the roaring of the thunder. For those hunters who never gave place for fear or mercy in their hearts, a courageous supremo by name nagan was there. His discipline was crime ; hobby was to kill ; profession to hunt ; valorous in the archery ; well suited for the job he got from his ancestors, but should have done some excellent penance in his previous births for getting associated with a man of marvellous love . His wife, who too came in the family of powerful archers, always seen with the nails of tigers and skin of snakes as ornaments, was called thaththai .

They didn’t have a child for a long time. Everybody else washed off their hands saying there is no chance of getting an offspring for them. When everything else fails man thinks of God. His existence is reminded to him then only. Even an atheist may believe in God when there is no other go. Out of the desire for a kid nagan prayed the son of the God who dances in the cemeteries – Lord muruga , the form of His grace. Out of the grace of that six faced Lord muruga, thaththai conceived the kid who is always referred with great respect by the devotees. When the child was born, with the tears of joy flooding away the rain that poured, nagan took his son like a huge mountain holding up a dark cloud. He celebrated the occasion with thanks giving sacrifices of animals to Lord muruga, and the entire town was full of joy. That marvellous kid was so powerful that even his father felt him heavy to hold up. So he named the kid thinnan ( meaning “strong”), amid the roar of the hunting folks.

He grew with the array of ornaments made out of animal bodies decorating his young and strong chest and waist, playing by catching the wild pigs, snakes and wild dogs, with the parents immersed in the sweet of his evolving speech. When he grew up to the age of learning archery, his father found an auspicious day for his first course in archery and made a big announcement through his hunters in all the directions. The hunters from many areas came along with the gems, leather, ivory, honey, favourite flesh varieties, fruits and roots to offer to their young boss. With the festivities and sacrifices going on thinnan took the bow that brought the meat food for the Almighty who feeds this entire universe. nagan arranged for a heavy feast of, of course, meat. On the seventh day of the festival when the Sun was shining in the middle of the sky, the lion of that forest was given the bow and arrow. He learnt that art, which was his profession too, beyond doubts and inefficiency. Like the crescent that grows he reached his sixteenth age.

By then nagan grew old and found it difficult to take up the tremendous task of leading the hunting. With the herds of elephants, deer’s and tigers increasing the hunters came to their king and told him that they were delaying the hunting that was due for the month. He told them that as he has become old he will send his son with them. They had the feeling of happiness mixed with sorrow and told him that they were missing a nice leader like him but were happy to be working under a mighty young man – his son. nagan called the lady who tells the astrological important information to propitiate the forest deities as thiaaan was to go for his first hunt. Then he went to thinnan to tell him that as he became too old to go for hunting he should take over that position to lead the hunters providing them with prosperity.

He started with the fellow hunters in the morning when even Sun hadn’t come up to see the day, with the bow and arrows and valour like that of arjuna . With the sound of the chord in his bow tremouring the animals in all the directions they penetrated into the deep forest with different dreadful arms. With the spies saying the clue on the haunts of the wild animals the hunters rounded up that area to block their escape, and thinnan along with some of his valorous men went deep into the forest. The hunters made heaps of wild animals killed. There came a wild pig, which broke the nets and pits of the hunters with the vengence and leaped away like an arrow escaping the piercing arrows of the hunters. Only three people were able to chase it to the end, they were thiaaan and nanan and kadan , who followed him like his shadow. That pig still escaped their missiles and went far  away from their hunting place to the bottom of the hill of the God, who was dipped there in the worship of three creatures – a spider, a snake and an elephant – that was the sri kalahasti hill. The pig stopped under a tree. The king of the forest thinnan leaped forward, killed it with the dagger he had. They three realised that they had come too far away from their men. thinnan asked kadan to cook that pagger he had. They three realised that they had come too far away from their men. thinnan asked kadan to cook that pig to subdue their hunger while nanan told there is a river called ponmukali on the other side of the forest and hill. nanan and thinnan set out to bring water. As they crossed through the forest thinnan saw the hill of the Lord on the Bull. Kindled by an unexplainable emotion he went towards the hill. nanan told thinnan that on the top of the hill will be the abode of kudumiththEvar (Lord shiva), they can go an’ pray there. thinnanar put his first step towards the Lord who gives Himself for love.

The culmination of the austerities he did in the previous births came to thinnanar as surplus of interest on shiva. He proceded with the exponential growth in the affection towards the Lord, unaffected ever. His pure love and nanan lead him over the hill. Even before he could see the Stealer of heart, He stole away his source of birth, the relation to his profession and birth.

He saw Him; He drank through his eyes that wonderful sight it flowed over his heart He lost all the controls over him; He fled to the Lord over that flow of love, embraced Him, and kissed Him. The happiness manifested through every pinch of his body. It fell as falls from his eyes. Felt very anxious, “Oh my Lord! In this dense forest with a whole of wild animals moving around there is nobody to guard you here !! Oh! You are alone! bad! Bad!!”. Notable even to realise his bow falling down that man of un measurable love asked nanan, “Who would have done this offering to the Lord with the green leaves and flowers?”. nanan said, “Once when I came with your father for hunting, we saw a priest bathing Him and ornating with flowers. I think he should have done that today too “. thinnanar understood the worship that that God of kalahasti likes, to be this. He worried, “Oh! My Lord is alone! There is nobody to feed him with meat and flesh! How can I leave Him alone? What can I do? I must get him good flesh to eat!!”.

He will start to get some meat, but will rush back to Him. Again will go, but run back to Him again. Like the cow that doesn’t leave the calf away, he stood in front of Him unable to take his sight away. He would say, “My Lord ! I will get you the best meat to eat”, but immediately will worry, “How can I go when you are alone here? But I am not able to stand here too when you are hungry.” Finally consoled him and went with determination to bring the required things for the Lord who requires actually nothing. With all the lust for other things burnt and only the love for the Lord who burnt the lust remaining, he went into the blooming garden on the bank of the river ponmukali. kadan came to them then to tell that the pig is roasted and ready, they all can have their food. nanan conveyed him that thinnanar after seeing the Lord was no longer feeling as the leader of the hunters but rather feels as the slave of that Lord. kadan was shocked to hear this. thinnanar without bothering about anything else, took the best portions of the pig’s body in an arrow, cooked it well, tasted them by having them in his mouth to pick out the best ones and collected such tasted flesh in a bowl of leaf.

His companions decided, “He has gone crazy! After tasting the best flesh portions he took it out! He is heavily hungry for sure, but doesn’t speak even. He doesn’t give them to us also! We will bring nagan (his father), and others to find out what to do” and left the place. Unperturbed, he took the flesh in his hands, water from the river in his mouth to anoint the Lord, beautiful wild flowers inserted in his hair to offer to the Lord. He rushed to the top thinking that the Lord will be too hungry by then. On the head of that Lord who appeared on His own, he removed the flowers with his footwear, bathed Him with the holy water he had in his mouth! He ornated the Lord with the flowers he had in his head, saluted Him, and offered the taste tested food he had brought for the God. He was not satisfied. He wanted to bring a lot more for the Lord to eat. Worshipping this great unimaginable devotion with folded hands Sun went down that day. That fearless man feared that some animals may come and hurt kalahsti Lord in the night. So he stood alert right next to Him with his bow and arrow. Let his name be remembered always who stood as the guard to the God who guards the whole universe all the times. He left from there prostrating the Lord the next morning when the Sun was just to rise to hunt the food for Him .

As he left for hunting, there came the sage by name shivakochariyar , who worship that Healing Herb on the hill in the way that is said in holy scriptures. He was shocked at the sight of strewn bones and flesh in front of the Lord. He screamed, “it should be the act of those dreadful hunters”, he concluded. He cleaned the altar carefully, took bath in the river and came back fast. As the unholy materials entered there he consecrated His abode continued his puja performing the anointing, flower worship, light worship and chanting of His fame. After prostrating many times that peerless param he returned back to his hermit.

Our adorable hunter till the Sun comes up in the sky kept hunting for deers, wild pigs and other animals. After that he cooked the hunted flesh in the fire he created with the wood from the forest. To provide the maximum tasty food to the Lord he tasted the cooked meat to select the exotic pieces. Like the ghee that is given to the tongues of flame in the sacrificial rites that reaches the devas, the food he tasted was enjoyed much by the Lord. The hunter poured honey to the food he selected, to make it tastier. He took the materials for worship like the previous day, went with the wealth of great love, and worshipped the Wonder who never incarnates, as he did the previous day removing the flowers offered in the sage’s worship, fed the Lord with the deer flesh. He forgot sleeping in the night, guarding Him was his prime concern! Goes for hunting during the day time to feed Him!! When he goes for hunting the sage comes for worship, who is wounded by the presence of unholy things in the altar, removes them, consecrates and performs the prayer. This continued for many days. Meanwhile nanan and kadan brought his father and others, but none of their efforts were fruitful to get back thinnanar. When one is in deep love for the luminous feet of the Listless God, what force in the world can separate them? Isn’t it brave to go for bliss instead of spiky happiness and miseries?

While our nayanar worshiped the Lord of gods in the way he knew, the sage shivakochariyar was so desperate to find a solution to this problem. He prayed to the Lord to show and remove the person who had been doing the misdeed. To explain the true love of nayanar, the Nameless praised by thousands of sacred names appeared in the dream of the sage and told him, “Don’t think that he is a miscreant. His form is full of my love, his mind minds me only and his deeds are the delightful for me. The water he spits on me is more sacred than ganga, the flowers he offers taking from his head are holier than that are offered by devas. It is all because of His love. You can see the excellence of his devotion tomorrow, if you hide and see”. With the feelings of fear mixed wonder the sage was awake for the rest of the night, as the Sun rose in the east he bathed in ponmukali worshipped the Lordk Alahasti Ishwarar , and hid behind.

On that seventh day morning of his worship of the Lord, as usual thinnanar brought the unusual materials of worship with unprecedented love. The nayanar who was rushing feeling that he had been already late, saw some bad signs on the way. He ran even faster fearing what happened to his fruit like God. To show shivakochariyar the affection of nayanar, the Lord was having one eye bleeding out of His three. With the bow and food falling apart, stricken in gloom, petrified in the shock thinnanar saw that bleeding. Tensed he ran to Him, tried to stop the bleeding, but it didn’t. He fierce fully started to find out which miscreant did this sin. He couldn’t trace anybody or any animals throughout that area. He came with a broken heart, cried holding His feet. He set out to search and brings the herbs to heal the wound of that Healer. He went as a wind to wrap the entire forest and squeezed the saps of the medicines. No effect! If it was a real wound it should have got cured, but the Consoler conceived something to be shown!

When he was worrying about his inability to find any solution, he remembered an old saying “flesh for flesh”. He immediately plucks one of his eye with the sharp arrow to paste it on His. He jumped from the ground to the sky, appreciated himself for the brave deed when it stopped the bleeding from His eyes. Is he trying to define an upper limit for devotion? While the rich and the Rishis come to Him asking for something, how is this person able to pluck his eye in a moment and give it to the Lord and dance? He might have come in the tradition of killing animals, but by his deeds he is far above the sacred people in the heaven. But the Lovely Lord desired to show the limitlessness of devotion. As the bleeding stopped in His right eye, it started from His left. After being in the shock for a moment nayanar told to him, “Now I know the medicine. I have one more eye. That should cure this” (!!). But when he was about to pluck the eyes he realised the difficulty of placing the eye in position once he took off the other eye too. So he held his hard but hail able foot on His eye as a mark, and raised the arrow to take his other eye off. No words are sufficient to explain this. If it is said “He is sysnonymous with bhakti “, who knows whether that is sufficient? The Lord Himself was not able to bear this great action, not just appeared, but came holding his hands to stop from plucking the other eye, shouting, “Oh halt kannappa!, Halt kannappa!!, halt kannappa!!!”. The sage of great wisdom saw the great love of the devotee and the grace he got for that. The Lord accepted the flesh as a fruit only due to the presence of such a sacrificial love. Can there be anything more covetable, after the Omniscient blessing him immediately, “Oh! Incomparable! Stay to my right.”. Let the devotion that is kannappa nayanar stay in the mind.

Manakkanycharar Nayanar

aruLcheydha mozikELA adaRchurikai thanaiuruvip

porulcheydhAm enappeRREn enakkoNdu pUN^kodithan

iruLcheydha karuN^kUn^dhal adiyil arin^ dhedhirn^inRa

maruLcheydha piRappaRuppAr malarkkaraththi nidain^Itta

கஞ்சாறு என்னும் நகரம் சோழ நாட்டிலுள்ளது.கொம்புத் தேனின் சாறும், கரும்பின் சாறும் நிறைந்து இருந்தமையால் இத்தலத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது.இத்தகைய வளமிகு பதியிலே, மானக்கஞ்சாறர் என்னும் சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரை மானகாந்தன் என்றும் அழைப்பர். இவரது மனைவியாரின் பெயர் கல்யாண சுந்தரி என்பதாகும்.அரசர்க்குச் சேனாதிபதியாக இருந்துவரும் வேளாண்மரபிலே அவதரித்த இவரிடம் சிவபக்தி நிறைந்திருந்தது. சிவனடியார்களை வழிபடுவதையே தம் வாழ்வின் முழுப்பயன் என்று எண்ணிய இத்தொண்டர் முக்காலமும் சிவனடியார்களைப் பற்றிய சிந்தனையிலே வாழ்ந்து வந்தார்.இறைவனின் திருவடிக் கமலத்திற்கு மனத்திலே திருக்கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். இவரிடம் வேண்டிய அளவிற்குச் செல்வ வளமும், சொல்வளமும், நிலவளமும் நிறைந்திருந்தன.எல்லாப் பேறுகளையும் பெற்றும் மக்கட்பேறு ஒன்று மட்டும் இல்லாமல் போனது மானக்கஞ்சாறருக்கும் அவர் மனைவியாருக்கும் அளவு கடந்த வேதனையைக் கொடுத்தது. இருவரும் எந்நேரமும் இறைவனின் திருவருளையே எண்ணி மழலைச் செல்வத்தை தந்தருள வேண்டி நின்றனர். பல விரதங்களை மேற்கொண்டனர். எம்பெருமானின் திருவருளால் மானக்கஞ்சாறர் மனைவியாருக்குப் பெண் குழந்தையொன்று பிறந்தது. காலம் வளர்ந்தது. அந்த பசுங்கொடியும் வளர்ந்தது. கொடிப் படரப் பந்தல் என்பது போல் பெண் வாழ மணப்பந்தல்தானே முக்கியம் ? மானக் கஞ்சாறர் தம் மகளைப் பருவம் வந்ததும் தக்க இடத்தில் மணம் முடித்து மகிழ வேண்டும் என்று விரும்பினார். சிவபெருமானிடத்து அன்புடையவராகி ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர் மானக்கஞ்சாறருடைய மகளின் அழகையும், அறிவையும், அவர்கள் குலப் பெருமையையும் கேள்வியுற்று முதியவர்களை அனுப்பித் தமக்கு அப்பெண்ணை மணம் பேசுமாறு செய்தார். முதியோர்கள் மானக்கஞ்சாறரைச் சந்தித்துத் திருமணப் பேச்சு நடத்தினர். மானக் கஞ்சாறர் முழுமனதுடன் தமது மகளை கலிகாமருக்கு மணமுடிக்கப் பூரணமாக ஒப்புக் கொண்டார்.

ஆண் வீட்டாரும் பெண் வீட்டாரும் கலந்து ஆலோசித்து விரைவிலேயே திருமணத்திற்கு நந்நாளும் குறித்தனர். மணமகள் மாளிகையிலேயே திருமணத்தை நடத்துவதாகத் தீர்மானம் செய்யப்பட்டது.திருமணத்திற்கு முதல் நாள் கலிக்காம நாயனார் உறவினர்களுடன் புடைசூழ வெண்புரவிமீது அமர்ந்து மணமுரசுகள் முழுங்கப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். இவர் கஞ்சாறுருக்கு சமீபத்தில் ஓரிடத்தில் வந்து தங்கினார். திருமண நாளன்று எம்பெருமான் அந்தணர் கோலம் அணிந்து மானக்கஞ்சாறர் மனைக்கு எழுந்தருளினார்.கங்கை அணிந்த திருச்சடையிலே உருத்திராட்ச மாலையை சுற்றியிருந்தார். குண்டலம் இரண்டும் காதுகளிலே ஒளிர, திருத்தாழ்வடம் திருமார்பிலே பிரகாசிக்க பட்டிகையும், கருநிறம் பொருந்திய மயிர்வடப் பூணூலும், திருநீற்றுப் பையும், தோளிலே அணிந்திருக்க, நெற்றியும், திருமேனியும், திருநீற்றினைப் பெற்றிருக்க அரனார் அந்தணர் கோலத்திற்கு ஏற்பத் தம் வடிவத்தை கொண்டிருந்தார். இத்தகைய சூரியகோடிப் பிரகாசத்தோடு எம்பெருமான் மானக் கஞ்சாறர் மனையை அடைந்தார். சிவனடியார் தம் மனை நோக்கி மகளின் மணநாள் அன்று எழுந்தருள்வது கண்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் அடியார். அவர் தம் பொற்பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தார். தேவரீர் ! எழுந்தருள இங்கு யாம் என்ன தவம் செய்தோமோ ? என்று முகமன் கூறினார். வலம் வந்து வணங்கினார் மானக் கஞ்சாறர். தோரணம் தொங்கும் பந்தலிலே மங்கள இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதுகண்டு அரனார் ஒன்றுமறியாதவர் போல, இங்கு ஏதாவது மங்கள காரியம் இன்று நடக்க இருக்கிறதோ ? என்று கேட்டார். ஆம், ஐயனே ! இந்த அடியேனின் மகளுக்குத் திருமணம் என்று கூறி மீண்டும் அடியாரை வணங்கிய திருத்தொண்டர் அகத்துள் சென்று திருமணக் கோலத்திலிருக்கும் தம் மகளை அழைத்து வந்தார்.மணப்பெண்ணும் மாத் தவசியின் காலில் விழுந்து வணங்கினாள். மங்களம் உண்டாகட்டும் என்று மணப்பெண்ணை மனங்குளிர வாழ்த்தினார் பெருமான் ! சிவனாரின் அருட்கண்கள் மணப்பெண்ணின் சுருளேறிய நெடுங்கூந்தலை நோக்கின. கார் போல் கறுத்து நாற்றுப்போல் அடர்ந்து ஆலம் விழுதுபோல் நீண்டிருந்த கூந்தலைப் பார்த்த பரமன், இவளுடைய கூந்தல் கிடைத்தால் எம்முடைய பஞ்சவடிக்கு உதவும்போல் இருக்கிறதே என்றார்,

பஞ்சவடி என்பது தவசிகள் மார்பில் அணியும் பொருட்டு முடியினால் அகலமாக பின்னப்பட்டிருக்கும் பூணூலில் ஒரு வகை. (பஞ்சம் – விரிவு; வரி – வடம்).இவ்வாறு விமலர் தம் விருப்பத்தைத் திருவாய் மலர்ந்து மொழிந்ததுதான் தாமதம், மானக்கஞ்சாறர் சற்றும் சினம் கொள்ளவில்லை. சந்தோஷம் மிகக் கொண்டார். அகத்துள் சென்றார். கத்தியொன்றை எடுத்து வந்தார். தாம் செய்யப்போவது அமங்கலமான செயல் என்று கூட எண்ணினாரில்லை. அடியாரின் விருப்பத்தையே பெரும் பேறாகச் சிந்தையில் எண்ணியிருந்த நாயனார் தம் மகளின் பூமலர் கொத்தணிந்திருந்த அழகிய நெடுங் கருங்கூந்தலை நொடிப் பொழுதில் அடியோடு அரிந்தார். அதனைத் தவசியின் திருக்கரத்தில் வைப்பதற்காக நிமிர்ந்து பார்த்தபோது அங்கே தவசியைக் காணோம். வானத்திலே பேரொளி திகழ பரமன் உமையாளுடன் அவ்வடியார்க்கு ஆனந்தக் காட்சி அளித்தார். அடியாரும் மனைவியும் மகளும் நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அப்பொழுது விண்வழியே அசரீரி வாக்கு ஒலித்தது. அடியார் மீது நீவிர் காட்டும் பக்தியை உலகறியச் செய்தோம் அத்தோடு, எப்பொழுதும் எம் அருகிலேயே இருக்கும் சிவலோக பிராப்தியையும் அளித்தோம் என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தார். நாயனார், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரித்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார். தந்தையும், மகளும், சிவநாமத்தைச் செப்பியவாறு நிலத்தில் வீழ்ந்து பணிந்து எழுந்தனர். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோர் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். இத்தருணத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க கலிக்காமரும் திருமண இல்லத்தை வந்தடைந்தார். பெண் வீட்டார் முறையோடு மணமகனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இறைவன் அருள்செய்த திரு நிகழ்ச்சியை அங்குள்ளோர் மூலம் கூறக் கேட்க கலிக்காமர் பெருமகிழ்ச்சி பொங்கினார். தாம் முற்பிறப்பில் மாதவம் செய்ததால் தான் இப்பிறப்பில் இறைவனுக்குக் கூந்தலைக் கொடுத்த அறமகள் தமக்கு மனைவியாக வருகிறாள் என்று மனதிலே எண்ணிப் பெருமிதம் பூண்டார் கலிக்காமர். கூபமுகூர்த்த வேளையில் மானக்கஞ்சாறரின் மகளுக்கும், கலிக்காமருக்கும், மங்கலம் பொங்கும் மனையிலே இறைவன் திருவருளோடு திருமணம் சிறப்பாக நடந்தது. தேவ துந்துபிகள் இன்னிசை நாதம் எழுப்ப, விண்ணவர் மலர்மாரி பொழிந்தனர். மானக்கஞ்சாறரும் அவரது மனைவியாரும், மண்ணுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இறைவனுக்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து சிவலோகப் பதவியை எய்தினார்.

Manakkanycharar was born in that town and was the chief of the king’s armed forces. His arms were mostly folded in saluting the Lord who dances with swinging eight arms and His devotees, who have the character of not depending on anybody other than the Lord Himself. He was the chief, but was humble. He had a lot of wealth, but was simple. He had a lot of men to serve him, but he served the devotees obediently. His orders led the entire army, but he was waiting all the times for the devotees’ orders.

He prayed to the graceful feet – that always resided in his heart, which were difficult for brahma and vishnu to be seen – for being blessed with an offspring, which he didn’t have for a long time in his married life. By His grace he got a beautiful girl child who later added to his fame by her great deeds. He brought up that child, the boon of his austerities, in a grand way that the entire town admired at. She grew up with making the maids to run behind in the well decorated house to feed her the sweet rice rich with milk and honey. Of course she was fed with the unsaturating sweet of the love for shiva by her loving father. He took care of all her needs and never allowed her to feel for affection. Thus she grew up as the goddess of wealth, with beautiful ornaments decorating her always. As she approached the age of getting married, the elders in the family of one other wonderful devotee whose love for Him was so great that he could not digest the Lord going as a messanger for a devotee sundharar. Eyarkona kalikkama nayanar was that groom. In fact it should be said that Manakkanycharar did not get one boon from the Lord, but two – the boon of getting a marvelous devotee like Eyarkon kalikkamar as the groom for his daughter.

Both the families were happy about this wedding and they found a suitable day for the marriage of those two roses. Eyarkon kalikkamar arrived in the town for wedding like the sun that rises in the east. Amidst the sounds of drums and other music instruments played in the marriage function that challenged the sound of the thunder there arrived the Lord of peculiar forms in the form of a yogi. He had ear ring ball that swings in the air, holy thread decorating the chest, a cover holding the holy ash that burns the source (of sufferings) into ashes. With His body shining like the flame with holy ash smeared on it, He entered the house of the devotee with the feet that even yogis struggle to know and once seen they see nothing else.

As soon as he saw the shiva yogi Manakkanycharar  fell down to His feet. He was more than happy. It was a boon for him that a shiva yogi graced the occasion. For the giver of boons it was an occasion to show to the world the excellent characters of His devotees. After getting His blessings Manakkanycharar  brought his clouds like wide beautiful haired daughter to get the blessing of the sage. The God who obscures the illusion from the hearts of devotees told in the form in which he had obscured that the beautiful hair of his daughter will be useful for Him as panychavadi. He took that statement as on order, as a boon; took his dagger cut off the dark pretty hair of his daughter in a moment and presented to the sage. (In the tradition cutting the hair of young females is not considered as a good sign. But for out nayanar  the wish of the devotee is of utmost importance even though it was the time of his daughter’s wedding.

He acted as accepting it and disappeared to show the devotee His form. He appeared on the holy Bull of justice with the mother of the universe to His left on the Bull amidst the rain of flowers that the devas offered. Nayanar prostrated, cried out of the joy of seeing His graceful appearance, raised the Lord with the best words of literature. The Lord said that It was a deed to exhibit his love for God to the entire world and blessed His slave of uncorrupted love. Eyarkon arrived then and came to know the great deed of Manakkanycharar. His heart was filled with the emotions of salutations to Manakkanycharar. Blessed were those eyes which saw the marriage of Eyarkon with that girl who got her pretty hair back by the grace of the God who removes the pains of one who salutes. Later Manakkanycharar got the place under the stable feet of the Lord. Let the readiness of Manakkanycharar Nayanar to sacrifice for the devotees even at the time of his loving daughters marriage stay in the mind.

Enadinatha Nayanar

kaivA Ludanpalakai n^Ikkak karudhiyadhu ,

cheyyAr n^irAyudharaik konRAr enun^thImai ,

eydhAmai vENdum ivarkken Rirumpalakai ,

n^eyvA Ludan adarththu n^ErvArpOl n^inRAr

எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் பக்தியில் சற்றும் குறையாதவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே, திருநீறு அணிந்தவர் யாவரேயாயினும், அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார். பகைவர் மேனியில் திருவெண்ணீற்றின் ஒளியைக் கண்டுவிட்டால் போதும், உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும்படியான நல்லொழுக்கத்தில் தலைசிறந்து விளங்கினார். இப்பெரியார் சோழ மன்னர் படையில் ஒரு காலத்தில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். இப்பெரியார் வாட் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும், வாட் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் இவரிடம், வாட் பயிற்சி பெற மாணவர்கள் நிறைய வந்து சேர்ந்த வண்ணமாகவே இருந்தனர். வாட் பயிற்சி மூலம் கிடைத்த வருவாயை யெல்லாம் சிவனடியார்களுக்கே செலவு செய்தார். இறைவன் படைப்பில், கருணை உள்ளம் கொண்ட வெள்ளை மனம் படைத்தவர்களுக்கும் பகைவர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். பாரெல்லாம் பால் பொழியும் தண் நிலவையும் கிரகணம் வந்து விழுங்குவதுபோல், ஏனாதிநாதரையும், பகைவன் ஒருவன் சூழ்ச்சியால் வெல்லத்தான் கருதினான். அவ்வூரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். இவனும் வாட் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான்.

தொழில் நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிக மிகக் குறைந்தவன். அதனால், அதிசூரனிடம் ஆரம்பகாலத்தில் அறியாமல் வந்து சேர்ந்த ஒருசில மாணாக்கர்கள் கூட விவரம் தெரிந்ததும் விலகத் தொடங்கினர். இதனால் ஏனாதிநாதரிடம், ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று விளங்க, அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது. முத்துச்சிற்பி முன்னால், வெத்துச்சிப்பி மதிப்பிழந்து தூக்கி எறியப்படுவது போல், ஏனாதிநாதர் முன்னால் எல்லாவகையிலும் மதிப்பிழந்து போனான் அதிசூரன் ! அதிசூரன், ஏனாதிநாதரிடம் அழுக்காறு கொண்டு பகைமை பாராட்டினான். அழுக்காறு, அவா, சினம், இன் சொல் ஆகிய தீய  குணங்களை கொண்டிருந்த அதிசூரன், அன்பு, அடக்கம், பக்தி, பொறுமை, இன்சொல் ஆகிய உயர் குணங்களைக் கொண்ட ஏனாதிநாதரை எதிர்த்துப் போர் புரிந்து அவருடைய தொழில் உரிமையைக் கைப்பற்ற சங்கல்பம் பூண்டான். ஒருநாள், தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு, நாயனாரின் வீட்டை வந்தடைந்தான். சிங்கத்தின் குகை முன்னால் சிறு நரி ஊளையிடுவது போல், வீரம் படைத்த ஏனாதிநாதர் முன்னால் கோழை மனம் கொண்ட அதிசூரன் போர்பரணி எழுப்பினான். ஏனாதிநாதரே ! ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் எதற்கு ? அதிலும் இரண்டு ஆசிரியர்கள்தான் எதற்கு ? இவ்வூரில் வாட் பயிற்சி ஆசானாக இருப்பதற்குரிய தகுதியும், திறமையும் யாருக்கு உண்டு என்பதை ஊரறியச் செய்ய, நாம் உரிமைப் போர் புரிவோம். துணிவிருந்தால் போர் செய்ய வருக என்று ஊளையிட்டான். அதிசூரனின் சவாலைக் கேட்டு ஏனாதிநாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார்.

உனக்கு இம்முறையே தக்கது என்று தோன்றினால் அவ்வாறே போர் புரிவோம். நானும் அதற்கு இசைகிறேன் என்றார். இருவர் பக்கமும் படைவீரர்கள் சேர்ந்தனர். நகரின் வெளியிடத்தில் இருவர் படைகளும் போர் செய்வதற்கு வந்து குவிந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது ! போரும் ஆரம்பமானது ! அணிவகுத்து நின்ற இருதிறத்து வில்வீரர்களும், வாள் வீரர்களும், பயங்கரமாக் தத்தம் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போர் புரிந்தனர். வாள் பிடித்த கைகளும், வேல் பிடித்த கைகளும், வில் பிடித்த கைகளும் அறுபட்டு விழுந்தன. சிரசுகள் துண்டிக்கப்பட்டு உருண்டன. வீரர்கள் மார்பகங்களை வேல்கள் துளைத்துச் சென்றன. வீரிகழல்கள் அறுபட்டு ரத்தத்தில் தோய்ந்தன. தாள்களும், தோள்களும் புண்பட்டன. இரத்தம் சிந்தின. வெளி வந்த குடல்களில் உடல்கள் பின்னிப்பிணைந்தன. அதிசூரன் படை வன்மையாக முறியடிக்கப்பட்டது. போரில் தலைப்பட்ட பகைவர் யாவரும் கொலை செய்யப்பட்டனர். போர்க்களத்தில் போர் புரிந்து மடியாதோர், ஞான உணர்வு வந்தபோது, இதயத்திலுள்ள பற்று, பாசங்கள் மறைவது போல் போர்க்களத்தை விட்டு ஓடினர். ஏனாதிநாதர் வீரத்திற்கு முன்னால் நிற்க முடியாது புறமுதுகு காட்டி ஓடினான் அதிசூரன். வெற்றிவாகை சூடித் திரும்பினார் ஏனாதிநாதர். நாட்கள் பல கடந்தன. அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி வளர்ந்து கொண்டே இருந்தது ! அதிசூரன் நேர் பாதையில் நாயனாரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் கொல்லக் கருதினான். அதற்காக வேண்டி மற்றொரு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அதிசூரன், ஏவலாளன் ஒருவனை ஏனாதிநாதரிடம் அனுப்பினான். தன்னோடு வேறோரிடத்திலே தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்பினான். அவனது அந்த முடிவிற்கும் ஏனாதிநாதர் சம்மதித்தார். அதன் பிறகு அதிசூரன் சண்டை போடுவதற்கான நான் குறித்து நேரம் கணித்து இடத்தைத் தேர்ந்தெடுத்து ஏனாதிநாதருக்குச் சேதியும் சொல்லி அனுப்பினான். அதற்கும் அவர் சம்மதித்தார்.

குறித்த நாளும் வந்தது ! அதிசூரன் வஞ்சனையால் வெல்லத்தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும், உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும், உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும், கேடயத்தாலும் மறைத்துக் கொண்டான். போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதிநாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அதிசூரன் கேடயத்தால் , தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான்.  இருவரும் போர் புரியத் தொடங்கினர். புலியைப் போல் பாய்ந்து சண்டை செய்தார் ஏனாதிநாதர். பூனைபோல் பதுங்கி, பதுங்கி, அவரது வாள் வீச்சிற்கு ஒதுங்கி, ஒதுங்கிச் சண்டை செய்தான் அதிசூரன். ஏனாதிநாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். அதிசூரனின் உயிர் ஒவ்வொரு கணமும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. ஏனாதிநாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள், அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில், அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும்,கேடயத்தையும் விலக்கினான். வெண்ணீறு அணிந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்துத் திருக்கிட்டார் நாயனார். அவர் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. அவரது வாளின் கூர்மை திருவெண்ணீற்றுக்கு முன்னால் மழுங்கிப் போனது. ஆ! கெட்டேன் ! பகைவன் என்று போரிட வந்தேனே ! சிவத்தொண்டராக அல்லவா தெரிகிறார். இத்தனை நாளாக ஒருபொழுதும் இவருடைய நெற்றியில் காணாத திருவெண்ணீற்றின் பொலிவினை இன்று காண்கிறேனே ! இவர் சிவத்தொண்டரே தான்.  இவரோடு, இனியும் போரிடுவது தகாத செயல் ஆகும். உண்மையை உணராமல் எவ்வளவு பெரும் பாவம் செய்ய இருந்தேன் ! என் பிழையை எம்பெருமான் தான் பொறுத்தருள வேண்டும். இனிமேல் நான் இவருடைய உள்ளக் குறிப்பின் வழியே நிற்பேன் என்று திருவுள்ளங்கொண்ட ஏனாதிநாத நாயனார், தம் கையிலிருந்த வாளையும், கேடயத்தையும் கீழே போட எண்ணினார்.

அத்தருணத்தில் , நாயனாருக்கு வேறொரு எண்ணமும் பிறந்தது. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவது இவ்வடியாரை அவமதிப்பது போலாகும். நிராயுத பாணியயைக் கொன்றார் என்ற இழிவுப் பெயர் இவருக்கு வந்துவிடும் ! அத்தகைய அபகீர்த்தி இவருக்கு ஏற்படாவண்ணம் இறுதிவரை நான் ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பதுபோல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும், கேடயத்தையும் தாங்கி, எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். பின்னர் சொல்லவும், வேண்டுமோ ? அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும், தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். ஏனாதிநாதர் ஆவி பிரிந்தது. அதிசூரனும் ஓடி ஒளிந்தான். ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது ! எம்பெருமான் உடையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதிநாத நாயனாரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் வீழ்ந்து, இறைவனை வணங்கி நின்றார். பகைவனது வாளால் உலகப்பற்று பாசம், பந்தம் ஆகிய எல்லாத் தெடர்புகளையும் அறுத்துக்கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான், நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெரு வாழ்வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தார். திருவெண்ணீறு அருள்மயமானது. எம்பெருமானின் திருமேனியால் எந்நேரமும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் திருநீறு அணிவதால் மனிதர்க்கு அமர வாழ்வு கிட்டும். உய்யும் வழிக்கு உயர்ந்த மார்க்கம் பிறக்கும். இத்தகைய திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்திருந்த நாயனார், திருவெண்ணீற்றுக்கும், வெண்ணீறு அணிந்த அன்பர்க்கும் காட்டிவந்த பேரன்பைத்தான் என்னென்பது ?

IN ENGLISH

Enathinathar was a Saivite saint from the Nadar caste who is considered to be one of the 63 Nayanmars. Thiru Enathinatha Nayanar lived in Eyinanur, one of the cities in the Kingdom of Chola.  Eyinanur is situated on the south-east of Kumbakonam, at the river banks of Arisol.   Enathinathar was an ardent devotee of Lord Shiva and he firmly believed in serving the devotees of Lord Shiva.  He visualized Lord in the smeared ash marks on the body of his devotees. The sacred marks of holy ashes are capable to remove all the impurities, desires, worldly bondages, illusion etc.. in one’s life and provide ultimate wisdom about the eternal truth – Salvation (Moksha) and  relieves from the cycles of birth and death.Enathinathar was a good swordsman.  He sincerely served the royal family and earned fair income.  Enathinathar enthusiastically spent all that income he had earned to serve the devotees of Lord.  His unconditional devotion to Lord and serving the devotees of Him brought fame amongst the villagers.  There was a fellow Athisuran, who was also engaged in the same profession of Enathinathar lived in the same village.  He was not skilled in his profession, as his name indicates.  Athisuran was jealous at the reputation of Enathinathar and wanted to bring down his good-will amongst the villagers.  He plotted a plan against Enathinathar.Athisuran arrived with a group of relatives and challenged Enathinathar to fight with him.

He desired to disgrace Enathinathar and wanted to prove to the villagers that Naynar was not fit for their admiration.  Enathinathar accepted his challenge and arrived with the villagers to the forest, where they have already decided as War field.  Athisuran and Enathinathar started to fight against each other.  In the fight many of the innocents lost their lives, finally Athisuran ran out of the field with the fear of life. Athisuran fumed with the jealous and humiliation on his failure at the war field.  He planned another unscrupulous method to defeat Enathinathar. Athisuran sent a message to Enathinathar and invited for an open fight with him, at one condition that both of them would fight each other without any assistance from both the sides.  Enathinathar readily accepted the challenge and patiently waited for Athisuran.  Athisuran arrived at the spot tactfully covered his face under the veil.  The fight began; Enathinathar pounced at Athisuran like a lion.  Athisuran removed his veil; Enathinathar was shocked at the appearance of Athisuran.  His whole body was smeared with holy ashes.  Enathinathar paused, withdrawn from the fight stood motionless holding the sword at his hand.  Enathinathar did not want to commit any sin by killing Athisuran – A devotee of Lord with the smeared mark of holy ashes.  He continued to say motionless with the swords on because he wanted to save Athisuran from the sin of killing of an unarmed warrior in the war field.  Athisuran aptly utilized the moment to accomplish his selfish motive; he swooped over Enathinathar and killed him instantly.The most compassionate Lord was most pleased at the self-less devotion of Enathinathar and blessed him with Salvation.In the Tamil month Purattasi – Uthradam is widely celebrated as Guru Puja Day to commemorate the above incident

Nesa Nayanar

AN^gavar manaththin cheykai aranadip pOdhuk kAkki ,

ON^giya vAkkin cheykai uyarn^dha any chezuththuk kAkkith ,

thAN^gukaith thozilin cheykai thambirAn adiyArk kAkap ,

pAN^gudai udaiyum kILum pazudhilkO vaNamum n^eyvAr

காம்பீலி என்னும் பழம்பெரும் பதியில், காளர் மரபில் நேச நாயனார் என்பவர் அவதரித்தார். நேச நாயனார் ஈசரிடத்தும் அவர்தம் நேசரிடத்தும் அளவிலாப் பாசமுடையவராய் வாழ்ந்து வந்தார். இவர் மனம் முக்காலமும் முக்கண்ணனின் மென்மலர்த் தாளினை நினைக்க – வாக்கு திருவைந்தெழுத்து மந்திரத்தைச் சொல்ல – காயம் திருசடைபிரானுக்குத் திருப்பணிகள் பல செய்தன. நேச நாயனார் நெய்தல் தொழிலைச் செய்து வந்தார். சிவனடியார்களுக்கு வேண்டிய ஆடைகளும் கீளும் கோவணமும் நெய்து வழங்கும் பணியைத் தட்டாது செய்து வந்தார். நேச நாயனார் சிவனடியார்களுக்காகவே வாழ்ந்தார். உயர்ந்த பேரின்பப் பெருவாழ்வு பெற்று பரமனின் மென்மலர்த்தாள் நீழலை அடைந்தார்.

IN ENGLISH

This saint was the native of Kampili. He was a weaver. He was highly devoted to the Lord and His Bhaktas. His mind was well fixed on the lotus feet of the Lord. His lips always uttered the Panchakshara Mantra. His hands were ever busy in the service of His Bhaktas. These three virtues gained the Lord’s grace for him.

Here is another instance of the glory of the Name of God. We have already seen the glory of the Lord’s Name (Vide page 51) while studying the life of Sirapulli Nayanar. Constant repetition of the Mantra enables you to remember Him always, throughout the day and even during sleep! The technique is this: as soon as you wake up in the morning, sit down for half an hour and mentally repeat the Mantra. And keep up the current during your work, too, by withdrawing yourself for a few moments every hour and mentally visualising the presence of the Lord in you and mentally repeating the Mantra. If you are established in this practice, very soon you will find that even when you are talking or are engaged in other activities—nay, even during sleep, the mind goes on repeating the Mantra. You will get God-realisation. In addition to this glorious Japa Yoga, Nesa Nayanar also practised the Yoga of Synthesis. He thought of God, he lived for God, he worked for God, he was highly devoted to God and loved Him.

Shiva Bhujanga Prayata Stotram

க்றுபாஸாகராயாஶுகாவ்யப்ரதாய

ப்ரணம்ராகிலாபீஷ்டஸன்தாயகாய |
யதீன்த்ரைருபாஸ்யாங்க்ரிபாதோருஹாய
ப்ரபோதப்ரதாத்ரே னமஃ ஶங்கராய ||1||

சிதானன்தரூபாய சின்முத்ரிகோத்ய-
த்கராயேஶபர்யாயரூபாய துப்யம் |
முதா கீயமானாய வேதோத்தமாங்கைஃ
ஶ்ரிதானன்ததாத்ரே னமஃ ஶங்கராய ||2||

ஜடாஜூடமத்யே புரா யா ஸுராணாம்
துனீ ஸாத்ய கர்மன்திரூபஸ்ய ஶம்போஃ
கலே மல்லிகாமாலிகாவ்யாஜதஸ்தே
விபாதீதி மன்யே குரோ கிம் ததைவ ||3||

னகேன்துப்ரபாதூதனம்ராலிஹார்தா-
ன்தகாரவ்ரஜாயாப்ஜமன்தஸ்மிதாய |
மஹாமோஹபாதோனிதேர்பாடபாய
ப்ரஶான்தாய குர்மோ னமஃ ஶங்கராய ||4||

ப்ரணம்ரான்தரங்காப்ஜபோதப்ரதாத்ரே
திவாராத்ரமவ்யாஹதோஸ்ராய காமம் |
க்ஷபேஶாய சித்ராய லக்ஷ்ம க்ஷயாப்யாம்
விஹீனாய குர்மோ னமஃ ஶங்கராய ||5||

ப்ரணம்ராஸ்யபாதோஜமோதப்ரதாத்ரே
ஸதான்தஸ்தமஸ்தோமஸம்ஹாரகர்த்ரே |
ரஜன்யா மபீத்தப்ரகாஶாய குர்மோ
ஹ்யபூர்வாய பூஷ்ணே னமஃ ஶங்கராய ||6||

னதானாம் ஹ்றுதப்ஜானி புல்லானி ஶீக்ரம்
கரோம்யாஶு யோகப்ரதானேன னூனம் |
ப்ரபோதாய சேத்தம் ஸரோஜானி தத்ஸே
ப்ரபுல்லானி கிம் போ குரோ ப்ரூஹி மஹ்யம் ||7||

ப்ரபாதூதசன்த்ராயுதாயாகிலேஷ்ட-
ப்ரதாயானதானாம் ஸமூஹாய ஶீக்ரம்|
ப்ரதீபாய னம்ரௌகதுஃகாகபங்க்தே-
ர்முதா ஸர்வதா ஸ்யான்னமஃ ஶங்கராய ||8||

வினிஷ்காஸிதானீஶ தத்த்வாவபோதா –
ன்னதானாம் மனோப்யோ ஹ்யனன்யாஶ்ரயாணி |
ரஜாம்ஸி ப்ரபன்னானி பாதாம்புஜாதம்
குரோ ரக்தவஸ்த்ராபதேஶாத்பிபர்ஷி ||9||

மதேர்வேதஶீர்ஷாத்வஸம்ப்ராபகாயா-
னதானாம் ஜனானாம் க்றுபார்த்ரைஃ கடாக்ஷைஃ |
ததேஃ பாபப்றுன்தஸ்ய ஶீக்ரம் னிஹன்த்ரே
ஸ்மிதாஸ்யாய குர்மோ னமஃ ஶங்கராய ||10||

ஸுபர்வோக்திகன்தேன ஹீனாய தூர்ணம்
புரா தோடகாயாகிலஜ்ஞானதாத்ரே|
ப்ரவாலீயகர்வாபஹாரஸ்ய கர்த்ரே
பதாப்ஜம்ரதிம்னா னமஃ ஶங்கராய ||11||

பவாம்போதிமக்னான்ஜனான்துஃகயுக்தான்
ஜவாதுத்திதீர்ஷுர்பவானித்யஹோ‌உஹம் |
விதித்வா ஹி தே கீர்திமன்யாத்றுஶாம்போ
ஸுகம் னிர்விஶங்கஃ ஸ்வபிம்யஸ்தயத்னஃ ||12||

||இதி ஶ்ரீஶங்கராசார்ய புஜங்கப்ரயாதஸ்தோத்ரம்||

Shiva Bhujanga Prayata Stotram in English

kRupaasaagaraayaaSukaavyapradaaya
praNamraakhilaabheeShTasandaayakaaya |
yateendrairupaasyaanghripaathOruhaaya
prabOdhapradaatrE namaH Sankaraaya ||1||

cidaanandaroopaaya cinmudrikOdya-
tkaraayESaparyaayaroopaaya tubhyam |
mudaa geeyamaanaaya vEdOttamaangaiH
SritaanandadaatrE namaH Sankaraaya ||2||

jaTaajooTamadhyE puraa yaa suraaNaaM
dhunee saadya karmandiroopasya SambhOH
galE mallikaamaalikaavyaajatastE
vibhaateeti manyE gurO kiM tathaiva ||3||

nakhEnduprabhaadhootanamraalihaardaa-
ndhakaaravrajaayaabjamandasmitaaya |
mahaamOhapaathOnidhErbaaDabaaya
praSaantaaya kurmO namaH Sankaraaya ||4||

praNamraantarangaabjabOdhapradaatrE
divaaraatramavyaahatOsraaya kaamam |
kShapESaaya citraaya lakShma kShayaabhyaaM
viheenaaya kurmO namaH Sankaraaya ||5||

praNamraasyapaathOjamOdapradaatrE
sadaantastamastOmasaMhaarakartrE |
rajanyaa mapeeddhaprakaaSaaya kurmO
hyapoorvaaya pooShNE namaH Sankaraaya ||6||

nataanaaM hRudabjaani phullaani SeeghraM
karOmyaaSu yOgapradaanEna noonam |
prabOdhaaya cEtthaM sarOjaani dhatsE
praphullaani kiM bhO gurO broohi mahyam ||7||

prabhaadhootacandraayutaayaakhilEShTa-
pradaayaanataanaaM samoohaaya Seeghram|
prateepaaya namraughaduHkhaaghapanktE-
rmudaa sarvadaa syaannamaH Sankaraaya ||8||

viniShkaasitaaneeSa tattvaavabOdhaa –
nnataanaaM manObhyO hyananyaaSrayaaNi |
rajaaMsi prapannaani paadaambujaataM
gurO raktavastraapadESaadbibharShi ||9||

matErvEdaSeerShaadhvasampraapakaayaa-
nataanaaM janaanaaM kRupaardraiH kaTaakShaiH |
tatEH paapabRundasya SeeghraM nihantrE
smitaasyaaya kurmO namaH Sankaraaya ||10||

suparvOktigandhEna heenaaya toorNaM
puraa tOTakaayaakhilagnyaanadaatrE|
pravaaleeyagarvaapahaarasya kartrE
padaabjamradimnaa namaH Sankaraaya ||11||

bhavaambhOdhimagnaanjanaanduHkhayuktaan
javaaduddidheerShurbhavaanityahOham |
viditvaa hi tE keertimanyaadRuSaambhO
sukhaM nirviSankaH svapimyastayatnaH ||12||

||iti SreeSankaraacaarya bhujangaprayaatastOtram||

Iyarpagai Nayanar

cheyvadhaR kariya cheykai cheydhan^aR RoNdar pOka

maithikaz kaNdan eNtOL maRaiyavan makizn^dhu n^Okkip

poytharum uLLam illAn pArkkilan pOnAn enRu

meytharu chin^dhaiyArai mILavum azaikka luRRAn

எம்பெருமான் பல்வேறு திருவுருவங்களைத் தாங்கி, பல்வேறு சமயங்களுக்கு அருள் பாலிப்பது போல் சோழவள நாட்டிலே பாய்ந்து ஓடும் காவிரியாறும் பற்பல கிளைகளாகப் பிரிந்து பற்பல இடங்களுக்குப் பெருவளத்தை கொடுக்கிறது. இவ்வாறு பரந்து விரிந்து ஓடும் காவிரியாற்றில் ஒரு கிளை கடலோடு கலக்கிறது. அந்த இடம் தான் காவிரி சங்கமம் எனப்படும் பூம்புகார் பெருநகரம்.

இப்பெரு நகரத்தை தலைநகராகக் கொண்டு, அநபாய சோழனது குலத்தில் தோன்றிய மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அக்கொற்றவனின் கொடி நிழலிலே சுபிட்சமாக மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாறு வாழ்ந்து வந்தவர்களுள், வணிக குலத்தைச் சேர்ந்தோர் பலர் இருந்தனர். அவ்வணிகர் குலத்தில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பற்றற்ற பரமஞானி ! தனது என்று உலகோர் பற்று கொள்ளும் பாச உணர்ச்சிகளுக்கு இவ்வடியார் பகையாயிருந்தார். அதனால் இவரை இயற்பகையார் என்று அனைவரும் அழைக்கலாயினர். இது காரணம் பற்றியே இவரது இயற்பெயர் இன்னதென்பது அறிய முடியாது போனது ! இயற்பகையார் என்ற பெயரே நிரந்தரமானது.

இயற்பகையார் இறைவனிடம் ஈடில்லா பக்தி கொண்டிருந்தார். இயற்பகையாரும், அவர் தம் மனைவியாரும் இல்லறம் எனும் நல்லறத்தை இனிது நடத்தி வந்தனர். அடியாரைப் பேணுவதையே, தலைசிறந்த அறமாகக் கருதி, இயற்பகையார் சீரோடும், சிறப்போடும், நிறைவோடும் வாழ்ந்து வந்தார். தெய்வம் தொழாது கொழுநனையே தொழுதெழுவாள் என்ற குறளுக்கேற்ப வாழ்ந்து வந்த அவரது மனைவியும், இயற்பகையாரோடு சேர்ந்து கொண்டு திருநீரணிந்த மெய்புடை அன்பர்களுக்கு பாதபூசை செய்யத் தவறுவதே இல்லை. வெள்ளி மாமலையை வீடெனக் கொண்ட தேவர்களின் தேவன் இவர்கள் பெருமையை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளங் கொண்டார்.

அந்தணர் வேடம் தாங்கி, இயற்பகையார் இல்லத்திற்கு எழுந்தருளினார் எம்பெருமான் ! இயற்பகையார், அடியாரை வணங்கி வரவேற்று, ஆசனத்தில் அமரச் செய்தார். மனைவீ நீர் வார்க்க பாதங்களைத் தூய நீராட்டினார்; நறுமலர் தூவினார். அன்பர்க்கு அன்பரே ! இந்த ஏழையின் குடிசைக்கு தாங்கள் இன்று எழுந்தருளியிருப்பது அடியேன் செய்த பேறுதான் என்று பணிவோடு பகர்ந்தார் இயற்பகையார். உமது பக்திக்கு யாம் புளகாங்கிதம் அடைந்தோம். எம்போன்ற சிவனடியார்கள் யாசிப்பதை எல்லாம் இல்லை எனாது அள்ளிக்கொடுக்கும் பண்பினர் நீவிர் என்று கேள்விப் பட்டோம். யாம் விருப்பும் ஒன்றை உம்மிடமிருந்து பெற்றுப் போகலாம் என்றுதான் வந்தோம்.இந்த அடிமையின் கடமையே அதுதானே ! இந்த ஏழை, ஐயன் எதைக் கேட்பினும் மறுக்காமல் கொடுப்பேன் என்பது உறுதி.

அடியாராக வந்த முக்கண்ணன் முகம் மலர புன்னகை புரிந்தார். இயற்பகையாரை ஒரு முறை பார்த்துவிட்டு, அவர் அருகே நின்ற அவரது மனைவியாரையும் நோக்கிப் பின்னர் இயற்பகையாரிடம்,

கேட்டால் மறுக்க மாட்டீரே ? என்று திரும்பவும் கேட்டார்.

அணுத்துணையும் ஐயம் வேண்டாம் ஐயனே ! ஆணையிடுங்கள் அடியேன் செய்து முடிக்கிறேன் !

உம்மைப் பற்றித்தான் நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேனே ! சொன்ன சொல் தவறாதவர் நீர் என்பது !

அடியார்களைப் பல வழிகளில் சோதிக்கப் புறப்பட்ட அருட்பெருஞ்சோதி, உம் மனைவியை அழைத்துப் போகவே யான் வந்தேன் என்றார். பரமன் மொழிந்ததைக் கேட்டு, இயற்பகையார் சற்றும் திகைப்படையவில்லை. மறுத்து ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. அதற்கு மாறாக, முன்னிலும் மகிழ்ச்சி பொங்க கரம் கூப்பியவாறே,

ஐயனே ! என்னிடம் உள்ள பொருளையே கேட்டீர்கள். உண்மையிலேயே தங்கள் அருளுக்கும் ஆசிக்கும் இந்த எளியோன் அடிமை என்றார்.

இயற்பகையார், சிவனடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தி நிலையைத்தான் என்னென்பது? மனைவியைக் கொடுக்கலாமா ? கொடுத்தால் என்ன நேருமோ ? என்ற அச்சம் அவர் தம் நெஞ்சத்தைக் கொஞ்சமும் தீண்டவில்லை. நல்ல உறக்கத்தில் இருப்பவன், கையில் இருக்கும் எத்தகைய விலை உயர்ந்த பொருளையும் நழுவ விடுவதுபோல், இயற்பகையார் தன்னை மறந்த பக்தி நிலையில் மனைவி என்பதையும் மறந்து அடியார்க்கு அளித்த ஆற்றலைத்தான் என்னவென்பது ! பக்தி என்றால் இதுவன்றோ பக்தி ! இயற்பகையாரின் மனைவியார், கணவரின் விருப்பப்படி அம்மையப்பரின் திருவடியை வணங்கி நின்றாள்.

அடுத்தது யாம் யாது செய்தல் வேண்டும் ? என்று இயற்பகையார் கேட்டார்.

உனது மனைவியை அழைத்துச் செல்வதால் உன் சுற்றத்தார் என் மீது வெறுப்பு கொள்ளலாம். அதனால் இம் மங்கையோடு இவ்வூர் எல்லையை கடக்கும் மட்டும் என்னுடம் துணையாக வருதல் வேண்டும் எனக் கேட்டார் எம்பெருமான்.

அப்படியே ஆகட்டும், பெரியவரே ! இப்பணி எனக்கு கிட்டியதுதான் எத்துணைச் சிறப்புடையது என்று விடை பகர்ந்தார்.

வேகமாக உள்ளே சென்றார் நாயனார். போர்க்கோலம் பூண்டு வாளும், கேடயுமும் ஏந்தி வெளியே வந்தவர், மாதொரு பாகனையும் தமது மனைவியையும் முன்னே போகச் செய்து, அவர்களுக்குத் தக்க துணையாகப் பின்னே வீர நடைபோட்டுப் புறப்பட்டார். இச்செய்தியைக் கேட்டு ஊரார் வெகுண்டனர். வில், வாள், வேல், சரிகை, முதலிய படைக்கருவிகளைத் தூக்கிக்கொண்டு ஆர்த்து எழுந்தனர்.

வணிக குலத்திற்கே மாசு கற்பித்து விட்டாரே இயற்பகையார் என்று பொருமினர்; தூற்றினர்; ஊர்ப் பெரியவர்கள். அஞ்சவில்லை இயற்பகையார் வெஞ்சினம் கூறினார். அவர்கள் கொதித்து எழுந்தனர். இவர்களிடையே போர் மூண்டது. இயற்பகையாரின் வீரம் விளையாடியது. எதிரிகளின் பலம் சிதறியது – சிதைந்தது சின்னபின்னமானது ! திசைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். இயற்பகையார் அனைவரையும் வென்றார்.

உய்ந்தேன் என்று அடியாரை வணங்கி அஞ்சாமல் முன்போல் அடி எடுத்து வைப்பீர்களாக என்று கேட்டுக்கொண்டார். பிறகு மூவரும் அவ்வூரின் எல்லையில் அமைந்துள்ள சாய்க்காட் என்னும் இடத்தை எவ்வித ஆபத்துமின்றி அடைந்தனர். அவ்விடத்திற்கு வந்ததும் யோகியார்,இனிமேல் நீ திரும்பலாம் என்று இயற்பகையாருக்குக் கட்டளையிட்டார்.வணிகர் குலமகனும் யோகியாரின் மலரடிகளில் வீழந்து வணங்கி அருள் பெற்று வந்த வழியே திரும்பினார். செய்தற்கரிய அரும் பெரும் தியாகத்தைச் செய்து திரும்பும் தொண்டரது செவிகளில் விழுமாறு, இயற்பகையாரே ! ஓலம் ! ஈண்டும் நீ வருவாய் ஓலம் ஓலம் என்று யோகியார் கூவி அழைத்தார். அடியாரின் ஓலக்குரலைக் கேட்டு இயற்பகையார் வந்தேன் அடியேன் ! மீண்டும் தங்களைத் துன்புறுத்த வருவோரை இவ்வாளால் தடுப்பேன் என்று உரக்கக் கூறியபடியே சிவனார் குரல் கொடுத்த திசை நோக்கி விரைந்தார். அப்பொழுது வேதியர் வடிவில் வந்த மறையவர் மறைந்தார் ! தமது மனைவி மட்டும் நிற்பதைக் கண்டார் ! நாயனார் யோகியாரைக் காணாமல் திகைத்தார் ! அப்பொழுது வானத்து வீதியிலே ஞானத்து வேத முதல்வோன், உமையாளுடன் விடையின் மேல், அற்புதமான அருட்பöருஞ் சோதியாகத் திருத்தொண்டருக்குக் காட்சி கொடுத்தார்.

கண்டதும் சிவத்தொண்டர் நிலத்தில் வீழ்ந்தார். எழுந்தார். கரம் குவித்துச் சிரம் தாழ்த்தி வணங்கினார். அவர் தம் அருங்குண மனைவியாரும் கணவரோடு சேர்ந்து வணங்கினார்கள். எம்பெருமான் அவர்களைத் திருநோக்கம் செய்து, அன்பனே ! உன் எல்லையற்ற அன்பின் திறத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தோம். பாரே வியக்கும் வண்ணம் பரமனிம் பெரும் பக்தி பூண்ட தொண்டனே ! நீயும் உன் கற்புடைச் செல்வியும் பூவுலகில் பன்னெடுங் காலம் வாழ்ந்து பின்னர் நம்பால் வந்து அணைவீர்களாக என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். இயற்பகையார்  மனைவியுடன் இல்லத்திற்குத் திரும்பினார். எம்பெருமானின் அற்புத திருவிளையாடலைப் பற்றி உணர்ந்த ஊர் மக்கள் இயற்பகையாரின் பக்திக்கு அடிபணிந்தார்கள். இயற்பகையார் எல்லோராலும் தொழுதற்குரிய மகான் ஆவார். இயற்பகையார் மனைவியுடன் பல்லாண்டு காலம் இன்புற்று வாழ்ந்தார்.

IN ENGLISH

“Charity, free from the mean utterance ‘I have none’ is found only among men of good birth.” says the Holy Kural (Thirukkural).

Among such noble souls Iyarpagai ranked high. Charity was ingrained in him. It was his practice to invite Siva bhaktas to his house, worship them with faith and devotion and give them all they wanted. He had taken a vow never to say ‘no’ to what a Siva bhakta wanted.

Iyarpagai was a native of Kaveripoompattinam. He was a Vaishya by caste. To him Siva bhaktas were the living manifestations of God Siva.

God Siva was so pleased with His devotee that He wanted to reveal the Nayanar’s true greatness to the world. So, the Lord, in the disguise of a Brahmin, with sacred ashes smeared all over his body, came to Iyarpagai’s house.

Iyarpagai welcomed the Brahmin with great joy, as the very sight of the holy man thrilled the Nayanar.

The Brahmin said, “Oh noble soul, you are far famed for your charitable nature. Learning that none returns empty-handed from your house, I have come to you for a gift. I shall disclose it to you, if you promise to give what I want.”

The Nayanar agreed readily saying, “…provided I have it with me.”

The Brahmin at once revealed what he wanted, “It is the gift of your wife.”

Iyarpagai had no difficulty at all in granting this! The supreme devotee of the Lord that he was, he did not stop to doubt the credentials of the Brahmin who, though he appeared to be a Siva bhakta, had such an undesirable desire — such is the unquestioning nature of devotion. Nor would Nayanar hesitate to fulfill the bhakta’s wish, on the plea that it involved unrighteousness — for Nayanar, worship of the guest (Guest is God) was a greater Law than all the moral codes.

Iyarpagai went inside the house and informed his wife of all that had happened. She was shocked at first, but quickly regained her composure. To a chaste wife, the husband is God, and whatever he commands is Law and Dharma. She readily agreed to follow the Brahmin-guest as his wife. Nayanar came out with his wife and asked the Brahmin to accept the gift.

The Brahmin, however, feared the wrath of the wife’s relatives and asked Iyarpagai to accompany them till they were safely out of the town and out of danger. Iyarpagai agreed to do so and armed himself to protect the Brahmin. They then proceeded to go.

In the meantime the relatives of Iyarpagai’s wife came to know of the whole story and were furious. They followed the Nayanar and party and threatened the Brahmin with death, unless he abandoned his impious desire.

The Brahmin pretended to be scared. Iyarpagai’s wife, however, assured him that Nayanar was capable of defeating them all. Nayanar was ready to fight them. The relatives endeavored to convince Nayanar of the unrighteousness of the whole thing, and, when they found that they could not, they preferred to die at his hands, than submit to the shame.

Iyarpagai Nayanar at once pounced upon them and chopped off their heads. All of them died and Nayanar, happy at the thought, that through the grace of Lord Siva, he had succeeded in keeping his vow of worshipping His devotee, proceeded further with the Brahmin and the wife. When they reached the temple of Thiruchaikadu, the Brahmin asked Nayanar to leave them and return. Nayanar prostrated to the Brahmin and turned his steps homeward.

As he had hardly proceeded a few yards on his homeward journey, the Brahmin again called Iyarpagai aloud. Thinking that there might have been another attack on the party, Nayanar hastened to where the Brahmin was — but, to his amazement, found that the Brahmin had disappeared and that his wife was standing alone there. He searched here and there for the Brahmin, and was worried when he could not be found. Lo and behold, Lord Siva and Mother Parvathi appeared in the sky and blessed Iyarpagai Nayanar and his wife, “Oh noble souls, I am immensely pleased with your devotion to my bhaktas. Both of you will very soon reach my abode.”

With these words, the Lord disappeared. Iyarpagai and his wife reached God Siva’s abode and rejoiced there. Nayanar’s relatives who died at his hands also attained the lotus feet of the Lord.

Thus, had the Lord proved the nature of supreme devotion, which does not question. And, the Lord also revealed the truth that such unquestioning devotion does not result in the violation of Dharma. All glory to the Lord and His devotees.

Somasira Nayanar

eththanmaiya rAyinum Ichanuk kanbar enRAl ,

aththanmaiyar thAmn^ammai yALbavar enRu koLvAr ,

chiththan^theLi yachchivan anychezuth thOdhum vAymai ,

n^iththan^n^iya mam enap pORRum n^eRiyil n^inRAr

சோழ நாட்டிலுள்ள திருவம்பர் என்னும் தலத்தில் தூய அந்தணர் மரபிலே பிறந்தவர் தான் மாற நாயனார் என்பவர். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவரது திருமேனியிலே எந்நேரமும் திருவெண்ணீறு துலங்கும். நாவிலே நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். பாதங்கள் சிவ ஆலயங்களை எந்நேரமும் வலம் வரும். இவ்வாறு நலம் தரும் நாயகனை நாளெல்லாம் போற்றிப் பணிந்தார் அடிகளார்.

இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த வேள்விகள் பலவற்றிலும் சோம வேள்விதான் மிக மிகச் சிறந்தது. எண்ணற்ற சோம வேள்விகளைச் செய்தமையால்தான்  இவருக்குச் சோமாசி மாறர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். ஒருமுறை திருவாரூரை அடைந்து தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார்.

அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியாரோடு திருவாரூருக்கு எழுந்தருளியிருந்தார். அவர்களைக் கண்டதும் நாயனாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! சோமாசி மாற நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இவருக்கு சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்பும் அருளும் கிடைத்தது. இவ்வாறு சிவதொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த சோமாசி மாற நாயனார் திருவைந்தெழுத்து மகிமையால் விடையில் எழுந்தருளும் சடைமுடிப் பெருமானின் திருவருளைப் பெற்று வாழும் அருந்தவப் பேற்றினைப் பெற்றார்

IN ENGLISH

Somasira Nayanar was a Brahmin by caste. He lived in Tiruvambur. He was a great devotee of the Lord and served His Bhaktas, irrespective of their caste. He did Yagas and worshipped the Lord, without expecting any reward. He went to Tiruvarur and lived with Sundaramurthi Nayanar to whom he had totally surrendered himself. Thus he got His grace.
Here is a simple life of saintliness. On the face of it there does not seem to be anything spectacular about this Nayanar. But, we have to bear in mind the conditions that prevailed in South India in the Nayanar’s days. It was almost impossible for a Brahmin in those days to mix with people of other castes, however devoted they might be to God. For a Brahmin to serve them was unthinkably difficult. It required very great will power, determination and devotion to God and His Bhaktas.
Again, in those days no one would even think of performing a Yaga without expectation of a reward. Yagas were performed only with a specific selfish desire. That Nayanar performed them selflessly and desirelessly, shows that he had already reached a high stage of Jnana or spiritual insight. He was a true Jnani and Karma Yogi.
Over and above all these, he was highly devoted to the Guru, Sundaramurthi Nayanar. What cannot Guru Bhakti achieve? And, yet, foolish and arrogant man speaks lightly of it and ridicules Guru Bhakti!