புலிப்பாணி சித்தர்

புலிப்பாணி சித்தர்

புலிப்பாணி சித்தர் போகரது தலையாய சீடராவார். இவர் பூர்வீகம் சீன தேசம். போகர் பழனியில் மூலிகை முருகனை உருவாக்கிய படலத்தில் இவரது பங்கு முக்கியமானது. குருவுக்கு தேவையான மூலிகைகளை சேகரித்தலும் மற்றைய பணிவிடைகளையும் செய்த நம்பிக்கைக்குரிய சீடர் என்று போகரது காயகல்ப பரிசோதனையில் நாம் கண்டோம் அங்ஙணம்,குருவுக்கு பணிவிடை செய்யும்போது அவர் குளிர்ந்த நீரைக் கொண்டு புலிகளை வசியம் செய்து அதன் மேல் ஏறி மலை ஏறி இறங்கியுள்ளார்.இதுவே அவர்“புலிப்பாணி” பெயர்க் காரணம். இவர் ஒரு அதீத சிவ பக்தர். போகரின் நிர்விகல்ப சமாதி ஏற்பாட்டின் போது,மூலிகை முருகனுக்கு அடியில் குகை போன்ற சமாதி அமைப்பை உருவாக்கியும்,போகர் சமாதி நிலையை எய்தவுடன் குருவின் ஆணைப்படி அந்த குகையை பெரிய பாறை கொண்டு மூடியவரும்,குரு போகரை இறுதியாக தரிசித்தவரும் இவரே! போகரது (LAO TZU) சீன படைப்பான“டாவோ”(TAOISM) மதத்தின் முக்கிய நூல்களான ” டாவோ சிங் மற்றும் டெ சிங்” (TAO CHING & TE CHING) ஆகியவற்றில் இவரது (Yu)பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் சோதிடம்,வான சாத்திரம்,கணிதம்,சித்த மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார் சீன வேதிப் பொருள்கள்,சீனக் களிமண் பாண்டங்கள்,சீன மருத்துவம் ஆகியன இவர்கள் மூலமே இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது என செய்திகள் கூறுகிறது. இவரது படைப்புகளான புலிப்பாணி ஜாலம்325,புலிப்பாணி வைத்தியம் 500 ஆகியன இன்றும் நமது சித்த மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்பதில் ஐயமில்லை! அதற்கு பிரதிஉபகாரமாய் தங்களுடைய மருந்துகளுக்கு புலிப்பாணியின் பெயர் சூட்டி அவரைப் பெருமைப் படுத்துவது வரவேற்க்கத்தக்கது! புலிப்பாணியின் பொறுப்பில் மூலிகை முருகனுக்கு அபிசேகங்களும்,ஆராதனைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. புலிப்பாணியார் மறைவுக்குப் பின்,அவரது சந்ததியினரின் குடும்பக் கோவிலாகவே பராமரிக்கப்பட்ட மலைக் கோவில்,மதுரை திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வலுக்கட்டாயமாக பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டாதாகவும்,அதற்க்கு இழப்பீடாக சில நியாயமற்ற உரிமைகள் வழங்கப்பட்டதாகவும் சில சர்ச்சைகள் இருந்து வந்தன. புனிதரது சமாதி இன்றும் பழனி மலையின் வட கிழக்கு திசையில் அவரது சந்தததியினரால் (பழனி ஆதீனம் திருமிகு புலிப்பாணி பத்திர சுவாமிகள்)பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பழனியில் அருவமாய் புலிப்பாணி சித்தர் உலவுவதாகவும்,வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளுவதாகவும் நம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர்.ஆதலால் செவ்வாய் தோசத்தைப் போக்கி,நிலத் தகராறு,சொத்துத் தகராறு,திருமணச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் இவருக்கு நிகர் இவரே! இவரை வில்வம் மற்றும் சாமந்தி கொண்டு அர்ச்சிக்க வேண்டிய உகந்த நாள் செவ்வாய்க் கிழமை! ஓம் புலிப்பாணி சித்தரே போற்றி! நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படுத்தி சென்றார். அவரது அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்ட புலிப்பாணி அவரது சீடரானார். அவரிடம் சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுக் கொண்டார். பின்னர் இருவரும் பாரதத்துக்கு வந்து சேர்ந்தனர்.போகர் பழநியில் தங்கிய போது புலிப்பாணியும் உடன் தங்கினார். ஒருமுறை போகர் சித்தர் தாகத்துடன் ஒரு காட்டில் தவித்த போது, புலிப்பாணி தன் புலியின்மீது ஏறிச் சென்றார். தண்ணீரை பாணி என்றும் வேற்றுமொழியில் சொல்வதுண்டு. புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று இருமொ ழிகளையும் இணைத்து அவருக்கு பெயர் வந்ததாகவும், அவர் சீனாவில் பிறந்தவர் என்பதால் அவரது நிஜப்பெயர் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.புலிப்பாணி புலியில் ஏறி தண்ணீர் கொண்டு வந்ததை நிரூபிக்கும் பாடல் ஒன்றை போகரே எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்! ஆழ்ந்தவே காலங்கி கடாட்சத்தாலே அப்பனே வேங்கை தனில்  ஏறிக்கொண்டு தாழ்ந்திடவே ஜலம் திரவ்விப்புனிதவானும் சாங்கமுடன் தாரணியில் சுற்றி வந்தோன் என்ற பாடல் புலிப்பாணியையே குறிப்பதாகச் சொல்கிறார்கள். முருகன் சிலை செய்ய மூலிகைகளைக் கொண்டு வரச்சொல்வதின் நோக்கத்தை புலிப்பாணி புரிந்து கொண்டார். எவ்வளவு அருமையான யோசனை! என் குருநாதருக்கு தான் இந்த மக்கள் மீது எவ்வளவு கரிசனம் இருக்கிறது! ஆனால், குருநாதர் குறிப்பிடும் ஒன்பது வகை மூலிகைகளும் விஷத்தன்மை கொண்டவை ஆயிற்றே! விஷ மூலிகைகள் எப்படி மனிதனைக் குணப்படுத்தும்! மாறாக,அவை ஆளையல்லவா கொன்று விடும், என்ற சந்தேகமும் இருந்தது.தன் சந்தேகத்தை மிகுந்த பணிவுடன் கேட்டார் புலிப்பாணி. மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை மனதுக்குள் பாராட்டிய போக சித்தர்,புலிப்பாணி! கவலை கொள்ளாதே. நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் பவ பாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும். இந்த மருந்தை நேரடியாகச் சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நவபாஷாணத்தை சிலையாக வடித்து, அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்கு பதிலாக மருத்துவத்தன்மை பெறும், மேலும், நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே போதும், மனிதன் புத்துணர்வு பெறுவான். இதோ! இந்த பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில்  மக்கள் வணங்கும் வகையில் பிரதிஷ்டை செய்வேன். அவன் அருளால் உலகம் செழிக்கும். எக்காலமும் வற்றாத மக்கள் வெள்ளம் இந்தக் கோயிலுக்கு வரும். பழநி முருகனின் ஆணையோடு தான் இந்தச் சிலையைச் செய்கிறேன். எனவே மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது, என்றார். புலிப்பாணி சித்தர் மகிழ்ச்சியடைந்தார். குருநாதர் சொன்னது போலவே புலியில் ஏறிச்சென்று ஒன்பது வகை மூலிகைகளையும் கொண்டு வந்து கொடுத்தார். பழநிக்குச் செல்பவர்கள், போகரை மட்டுமின்றி புலிப்பாணி சித்தரையும் நிச்சயமாக மனதில் நினைக்க வேண்டும். போகர், இவ்வூர் முருகன் சிலையைச் செய்யக் காரணமாக இருந்தவர் இவரே! போகர் நினைத்தபடி நவபாஷாண சிலை உருவாயிற்று. ஒருநாள் புலிப்பாணியை அழைத்த போகர்,புலிப்பாணி! நான் சீனதேசம் செல்கிறேன். இனி இங்கு எப்போது வருவேன் எனத்தெரியாது. நீயே இந்த முருகன் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், என சொன்னார். புலிப்பாணியும் அவரது கட்டளையை ஏற்று, சிலையின் காவலர் ஆனார்.ஒருமுறை. சீனதேசத்தில் இருந்து வந்த சிலர், உன் குருநாதர் போகர், பெண்ணின்பத்தில் சிக்கி, தவ வலிமையை இழந்து விட்டார், என்றனர். அதிர்ச்சிய டைந்த புலிப்பாணி தவ சிரேஷ்டராகிய தன் குருவைக் காப் பாற்ற சீனா சென்றார். அவரை அங்கிருந்து பழநிக்கு அழைத்து வந்து, மீண்டும் தவ வலிமை பெறுவதற்குரிய வழிகளைச் செய்தார். போகருக்கே ஞானம் வழங்கிய பெருமை புலிப்பாணிக்கு உண்டு. சில நாட்களில் போகர் இறந்து விடவே, அவரது சமாதிக்கு பூஜை செய்யும் பணியை அவர் கவனித்தார். சமாதிக்கு பூஜை செய்பவர், முருகனின் பாதுகாவலராக இருக்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, எங்கள் குருவுக்கு குரு முருகப்பெருமான்,எனக்கு குரு போகர் சித்தர். நான் அவரது சமாதியையே பூஜிப்பதையே பெருமையாகக் கருதுகிறேன், என அவர்களிடம் தன் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளில் பலரை மூலிகை வைத்தியம் மூலம் காப்பாற்றிய பெருமை உண்டு. நோயுற்றவர்கள் புலிப்பாணி சித்தரை மனதார நினைத்தால், அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம். புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டதாக தகவல் உள்ளது.”ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே  அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு  தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும்  சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்”. – போகர் – போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார். போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது. போகர் சமாதியடைய முன்னர் இவரை அழைத்து தமக்குப் பின் தண்டாயுதபாணி கோவில்ப் பூசை , புனஸ்காரங்களை இவரே செய்யவேண்டும் என்று பணித்ததாகவும் சொல்லப் படுகிறது.
போகரும் புலிப்பாணி பரம்பரையும்! போகர் சித்தர் ஆகாய மார்கமாக பயணம் செய்யும் போது பழனியை கண்டு, இந்த இடம் தான் நம்  பூஜைக்கு ஏற்ற இடம் என தீர்மானித்து தரை இறங்கினார். அங்கே அவர் கண்ட காட்சி அவரது எண்ணத்தை உறுதி செய்தது. அவர் கண்டது, ஒரு வெள்ளை காகம், சிவப்பு நிற கொக்கு,  வெள்ளை, சிவப்பு நிறத்தில் இரண்டு குன்றுகள். வெள்ளை குன்று சிவகிரி என்றும், சிவப்பு குன்று சக்திகிரி என்றும் அவர் உணர்ந்தார். அவர் பழனியை வந்தடைந்த காலம் என்பது த்வாபர யுகத்தின் முடிவும், கலி யுகத்தின்  தொடக்கமும். அங்கு வந்து சேர்ந்த உடனேயே ஒரு குன்றின் மேல் தன் கமண்டலத்தையும், கைத்தடியையும் வைத்து, இறைவனாக பாவித்து தினமும் பூசை செய்து வரலானார். பின்னர்  பலரிடமிருந்தும் வந்த உத்தரவால், ஒரு நவபாஷாண சிலை செய்து அதற்கு தண்டாயுத (முன்  சொன்ன கைத்தடியின் பெயர்) பாணி (கமண்டலத்துக்குள் இருக்கும் நீர்) என்று பெயர்  வைத்து நித்ய பூஜை செய்து வரலானார். அந்த நவபாஷாண சிலைக்காக ஒன்பது வித விஷங்களை  உருவாக்கினார். அவை , வீரம், பூரம், ரசம், கந்தகம், மோமசலை, கௌரி, PHOSPHORUS,  துருசு, வெள்ளை பாஷாணம் என்பவை. கலியுகம் பிறந்த பின் 205 ஆண்டுகள் அந்த சிலைக்கு போகர் பூசை செய்து வந்தார்.  அதற்கு பின் சிவலிங்க தேவ உடையார் உடையார் என்பவர் போகரிடம் சிஷ்யராக வந்து சேர்ந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் மைசூரை சேர்ந்தவர். உடையார் அவர்களை நித்ய  பூஜைக்கு நன்றாக தயார் படுத்திய பின், பூஜை செய்யும் பணியை அவரிடம் சேர்பித்துவிட்டு, போகர் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்தார். போகர் சமாதி ஆனா  பின்னரும், உடையார் பலமுறை போகரை சந்தித்து பூசை சம்பந்தமான விஷயங்களில் கலந்தாலோசித்து வரலானார். நைனாதி முதலியார் என்பவர் சிறிது காலத்திற்குப்பின் உடையாரிடம் சிஷ்யராக வந்து  சேர்ந்தார். முதலியாரின் பக்தியில் மனம் மகிழ்ந்த உடையார், அவரை அழைத்து கொண்டு  போகரிடம் சென்று”முதலியார் நல்ல திறைமை உடையவர். அவருக்கே இனி பூஜை செய்யும் பணியை  கொடுத்துவிடலாம் என்று” பரிந்துரை செய்தார். போகர் சற்று நேர அமைதிக்கு பின் “முதலில், இவர் உலகை ஒரு முறை சுற்றி வரட்டும்.  அதற்கு பின் பூஜை செய்யும் உரிமையை கொடுக்கும் தீர்மானத்தை எடுக்கலாம்” என்றார். இதை கேட்ட உடையார் அதிர்ந்து போனார். போகரிடமிருந்து நித்ய பூஜை முறைகளை ஏற்று வாங்கி நிறைய வருடங்கள் ஓடிவிட்டது.  போதும். நாமும் போகரிடம் உத்தரவு கேட்டு சமாதி ஆகிவிடலாம் என்று ஆசை பட்ட  உடையாருக்கு, “அவரை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால், அதற்கு முன் அவர் இந்த உலகை ஒருமுறை சுற்றி வந்து என் முன் வெற்றிகரமாக நிற்க வேண்டும். அப்படி ஆனால் அவருக்கு  பூஜை செய்யும் உரிமையை கொடுக்கிறேன்” என்று போகர் சொன்னபோது உண்மையிலேயே உடையார்  ஆடி போய் விட்டார். “இவரால் முடியுமா? அப்படியும் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து  இவர் முடிப்பதற்குள் எத்தனை வருடங்கள் ஆகிவிடும். அதுவரை காத்திருக்க வேண்டுமே”, என்றெல்லாம் அவர் மனதில் எண்ணங்கள் ஓடியது. முதலியார் பேச தொடங்கினார். இந்த உலகை கால் நடையாக சென்று சுற்றி வர என்னால் முடியாது. வேண்டுமானால் ஒரு

புலியின் மீதமர்ந்து முடிக்க முயற்சி செய்கிறேன் என்றார். போகரும் அதற்கு சம்மதிக்கவே, முதலியாரும் காட்டுக்குள் சென்று ஒரு புலியை  வசப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து,விடை பெற்றார். காலங்கள் ஓடியது. சென்றவரை காணவில்லை. உடையாருக்கு மனதில் கவலை ஏறியது. எதிர்பார்க்காமல் ஒரு நாள், உடையார்  ஒரு வேளை பூசை முடித்து தீபாராதனை காண்பிக்கவே, அங்கு புலிமேல் அமர்ந்தபடி,  முதலியார் வந்து சேர்ந்தார். இதை கண்ட உடையாரின் மனம் சொல்லொண்ணா இன்பத்தில் ஆழ்ந்தது. பூசை முடித்த கையுடன், அவரை அழைத்து சென்று போகர் முன் நிறுத்தினார். அவரை கண்ட  போகர், “சரி, வெற்றிகரமாக உலகை சுற்றி வந்து விட்டாய். இருப்பினும், ஒரு சில  நாட்கள் வரை உடையாரே பூசை செய்யட்டும். அதுவரை, பூசையில் உடையாருக்கு உதவி செய்து  இரு” என்று கட்டளை இட்டார். மேலும் “புலியில் சென்று இந்த உலகை சுற்றி வந்ததால் நீ  இன்று முதல் “புலிப்பாணி” என்று அழைக்க படுவாய்” என்று கட்டளை இட்டார். பூஜை நன்றாக நடப்பதை கண்ட போகர்,புலிப்பாணியின் பெருமையை உடையாருக்கு உணர்த்த பல வித சோதனைகள் நடத்தினார். அதில் ஒன்று “ஷண்முக நதி வரை சென்று அபிஷேகத்துக்கு நீர்  கொண்டு வா” என்று உத்தரவிட்டார். நதி கரை வரை சென்ற புலிப்பாணி, கையில் ஒரு  பாத்திரமும் இல்லாததால், தன் தபோபலத்தால், அந்த நதியின் நீரை எடுத்து ஒரு  பாத்திரமாக மாற்றி, அதனுள் நீரை ஊற்றி, அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார். அதிலிருந்து அவர் “புலிப்பாணி பாத்திர சுவாமிகள்” என்று அனைவராலும் அழைக்க பட்டார்.  தினமும் ஆறு முறை ஷண்முக நதிக்கு சென்று நீரை பாத்திரமாக்கி, அதில் நீரை ஊற்றி, மலை  மேல் இருக்கும் முருகனுக்கு அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார். எல்லாம் நல்ல படியாக நடப்பதை கண்ட போகர், உடையாருக்கு சமாதியாகும் பாக்கியத்தை கொடுத்தார். பின்னர் புலிப்பாணியை அழைத்து, “பூஜை முறைகள் தொடர்ந்தது தலை முறை தலை  முறையாக நடக்கவேண்டும். அதற்கு நீ தான் வழி அமைக்க வேண்டும்” என்றார். 205 வருடங்கள் புலிப்பாணி பூஜைகளை தொடர்ந்து செய்து வந்தாயிற்று. போகரின் இந்த  உத்தரவுக்கு,புலிப்பாணி கீழ் வருமாறு பதிலளித்தார். இன்றுவரை 205வருடங்கள் ஆகிவிட்டது. அடியேனுக்கு, குடும்ப வாழ்க்கையில் சற்றும்

விருப்பம் இல்லை என்றார். தலை முறையாக பூஜை நடக்க வேண்டும் என்றால், ஒரு ஆண் மகவு வேண்டும். குடும்ப

வாழ்க்கையில் இருந்து கொண்டு சன்யாச வாழ்க்கையும் வாழலாம். ஆண் மகன் பிறந்த 16 வது

வருடம், பூஜை விஷயங்களை அவனிடம் சேர்பித்துவிட்டு, நீ சமாதி ஆகலாம் என்றார். குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு புலிப்பாணியும் குடும்ப வாழ்க்கை தொடங்கினார். ஒரு வருடத்தில் அவருக்கு ஆண் மகன் உருவானான். அவனுக்கு “காரண புலிப்பாணி” என்று  பெயர் இட்டு வளர்த்து வரலானார்! காரண புலிப்பாணி தனது பதினாறாவது வயதில் பூஜை செய்யும் உரிமையை ஏற்றுகொள்ள, புலிப்பாணி பரம்பரை பூசை செய்யும் உரிமை உருவாயிற்று. புலிப்பாணியும் சமாதியில்  அமர்ந்தார். காரண புலிப்பாணி1100 ஆண்டுகள் பூசை செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் பிறக்க,, அந்த மகனுக்கு குமார சுவாமி புலிப்பாணி என்று பெயரிட்டனர். குமார சுவாமி  புலிப்பாணி, காரண புலிப்பாணி இடமிருந்து பூசை செய்யும் உரிமையை வாங்கிக்கொள்ள,  புலிப்பாணி தலைமுறை வளர்ந்தது. இவர்1000 ஆண்டுகள் இருந்து பூசை செய்து வர,  அவருக்கு அடுத்த வாரிசாக, வேல் ஈஸ்வர புலிப்பாணி என்பவர் வந்தார். பின்னர் இந்த புலிப்பாணி தலைமுறை கீழ்கண்டவாறு வளர்ந்தது. வேல் ஈச்வர புலிப்பாணி , ஆறுமுக புலிப்பாணி ,ஹரிக்ருஷ்ண புலிப்பாணி , பழனியப்ப  புலிப்பாணி. பழனியப்ப புலிப்பாணி தலை முறை வந்ததும், இரண்டு மகன்கள் உருவாயினர். அவர்களை,  பாலகுருநாதர் புலிப்பாணி, போகநாதர் புலிப்பாணி என்று அழைத்து வந்தனர். விதிப்படி,  பூஜை முறைகள் மூத்த மகனுக்குத்தான். பால குருநாதர் புலிப்பாணி திருமணம் செய்து கொள்ளததினாலும், 22 வயதில் மரணமடைந்ததினாலும்,பூஜை செய்யும் உரிமை இரண்டாவது மகன்,  போகநாதர் புலிப்பாணி இடம் சேர்ந்தது. போகநாதர் புலிப்பாணி தன் மகன் பழனியப்ப  புலிப்பாணி இடம் பூஜை விஷயங்களை சேர்க்க, அது அடுத்த தலைமுறையில் சிவானந்த புலிப்பாணி இடம் சேர்ந்தது. இவர் தான் இன்று அந்த ஆஸ்ரமத்தில் தலைவராக இருந்து  கொண்டு பூஜை முறைகளை நடத்தி வருகிறார். பழனியப்ப புலிப்பாணி ஒரு நாள் ஆஸ்ரமத்தின் பின் பக்கம் கட்டிட வேலைக்காக குழித்த  போது அங்கே ஒரு குகையில் ஒரு சித்தர் தவம் செய்வதை கண்டார். சித்தரின்  தலையிலிருந்து நீண்டு வளர்ந்த முடியானது மரத்தின் வேர் போல மண்ணுக்குள் மிகுந்த  ஆழத்தில் ஊடுருவி செல்வதை கண்டார். அந்த சித்தர் பத்மாசனத்தில், கைகளை மார்புக்கு  குறுகலாக வைத்த படி இருக்க, அவர் கை, கால் விரல்களில் நகம் இதுவரை அவர் கண்டிராத  அளவுக்கு நீளமாக அவர் தோள்களை சுற்றி வளர்ந்திருந்தது. அவரது தவத்தை கலைத்துவிடுகிற  அளவுக்கு நாம் ஏதேனும் செய்து விட்டோமோ என்று நினைத்த அவர், அப்படியே தொடங்கிய வேலையை விட்டுவிட்டு, உடனேயே அந்த இடத்தில் சமாதி கட்டினார். அது தான் இன்றும் நாம்  சென்றால் பார்க்கும் மிக பெரிய லிங்கம் உள்ள, சமாதி. பழனி அந்த காலத்தில் மதுரை நாயக்க மன்னரின் ஆட்ச்சியில் இருந்ததால்,மன்னரே,  ஆஸ்ரமம், பழனி முருகருக்கு பூசை செய்யும் முறை இவைகளின் பேரில் உள்ள உரிமையை  புலிப்பாணி தலைமுறைக்கு மட்டும் தான் என்று பிரகடனம் செய்து,செப்பு தகட்டில்  பதித்து கொடுத்தார். மேலும், பூசை முறைகளுக்கு யார் எந்த விதத்தில் உதவினாலும் அவர்கள் காசியில்/கங்கை  கரையில் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்த பலனை அடைவர் என்றும், இதற்கு (பூஜைக்கு) ஏதேனும் விதத்தில் தடங்கல் செய்பவர்கள், கங்கை கரையில் “காராம் பசுவை” கொன்ற  குற்றத்திற்கு உள்ளாவார்கள் என்று பிரகடனம் செய்தார். பழனி என்பது யோகிகளால்,நவக்ரகங்களில், செவ்வாய்க்கு பரிஹார ஸ்தலமாக கருதப்படுகிறது. தங்கள் தவத்தை/அதன் நிலையை உயர்த்திக்கொள்ள பழனியை யோகிகள் சிறந்த  இடமாக கருதுகின்றனர்

குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்      இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு: ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார். பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது. போகர்,சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே,இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது. இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்: புலிப்பாணி வைத்தியம் – 500புலிப்பாணி சோதிடம் – 300 புலிப்பாணி ஜாலம் – 325புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200 புலிப்பாணி பூஜாவிதி – 50 புலிப்பாணி சண்முக பூசை – 30 புலிப்பாணி சிமிழ் வித்தை– 25 புலிப்பாணி சூத்திர ஞானம் – 12 புலிப்பாணி சூத்திரம் – 9ஆகியவை. தியானச் செய்யுள்: மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே மயில் வாகனனை வணங்கியவரே எம் கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம். புலிப்பாணி சித்தர் பூசை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்ச்சம் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல், புலிப்பாணி சித்தரின் படத்தினை வைத்து, அப்படத்தின் முன்பு, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகச் சொல்ல வேண்டும். பிறகு பின்வரும் 16 போற்றிகளை வில்வம் அல்லது சாமந்திப் பூ அல்லது அரளிப் பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி! 2. தண்டபாணிப் பிரியரே போற்றி! 3.ஞானவரம் கொடுப்பவரே போற்றி! 4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி! 5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி! 6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி! 7.யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி! 8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி! 9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி! 10. தெய்வயானையின் புதல்வரே போற்றி! 11. சூலாயுதம் உடையவரே போற்றி! 13.மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி! 14.ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி! 15. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி! 16. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, மூல மந்திரமான, “ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக, கமலா ஆரஞ்சைக் கொட்டைகள் நீக்கி உரித்து சுளையாய் வைக்க வேண்டும். அல்லது தக்காளியை விதைகள் எடுத்து விட்டு உப்பு தூவி வைக்க வேண்டும், தயிர் சாதத்தை உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து படைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனைகளை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும். புலிப்பாணி சித்தர் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோசம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை குலையும், விவசாயம் பாதிக்கும். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும். 1. நிலத்தகராறு,சொத்துத் தகராறு, வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும்.2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். 3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு தடைகள் நீங்கி வியாபாரம் பெருகும். 4.கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட், செங்கல்,சிமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும். 5. செவ்வாய் தோசத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால்,திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். 6.இவருக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, ரோஜா, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். 7. பழனி தண்டபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தமான நோய்கள் அகலும். 8.அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும். 9. இவருக்கு பிடித்தமான செவ்வாய்க் கிழமையில், அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.
புலிப்பாணி ஜால வித்தைகள். போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல்தான் புலிப்பாணி ஜாலம்325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதனை இனி வரும் பதிவுகளில் காண்போம். நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்… “பாடினேன் அக்கினியு மில்லாமற் றான் பண்பான அன்னமது சமைக்கக் கேளு ஆடினேன் கானகத்தில் வேண துண்டு அடைவாக சதுர கள்ளி பாற் கரந்து சாடி நீ பாண்டத்தி லரிசி போட்டு சரியாக பால்தன்னை சுருக்காய் வாரு நாடிப்பார் சோறதுவும் வெந்திருக்கும் நலமாக ஜாலம்போல் லாடிப் பாரே”  -புலிப்பாணி ஜாலம் 325 – ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் காட்டிலிருந்து கறந்தெடுத்து வந்த சதுரக் கள்ளியின் பாலை விட்டு கால் நாழிகை மூடி வைதிருந்து திறந்து பார்க்க சாதம் நன்றாக வெந்திருக்கும்.. ஆனால் அந்த சாதத்தை யாரும் புசித்தலாகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான….. “பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன் பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீ காரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கி கடிதாக வாயில் போட்டு மென்று துப்பி சாரப்பா அவை தனிலே பந்தத்தை சுற்றி சரியாக கொளுத்தி அவையோருக்கு காட்டி நேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்று நிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே”  கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்ந்து விட்டு மக்கள் கூடிய அவையில் போய் நின்று, பந்தத்தைக் கொளுத்தி அவையோருக்குக் காட்டி “எக்ஷினி நீ என்பக்கம் வந்து நில்லடி”என்று சொல்லி பந்தத்தை வாய்க்குள் வைத்து மூடி திறந்து காட்டலாம் ஒன்றும் ஆகாது. புலிப்பாணி ஜாலம்325 நூலில் 141 வது பாடலான….. “உண்ணவே இன்னுமொரு ஜாலங் கேளு இங்குரைப்பேன் விண்ணோரும் வெருண்டு நிக்க என்னவே இரங்கழிச்சில் விதை வாங்கி அதை குழித்தைலம் வாங்கிக் கொண்டு துன்னவே தைலமதை கையிற் தேய்த்து துலக்கமாதாம் தென்னைமரம் தன்னை நோக்கி கன்னவே மரத்தடியில் கைதால் குத்த கங்குமற்று காயதுவும் விழுகும் பாரே” உலகத்தோர் வியக்கும் ஜாலம் சொல்கிறேன் கேள்! , இரங்கழிச்சில் விதையை எடுத்துக் அதில் குழித்தைலம் செய்து, அத் தைலத்தை கொஞ்சமாய் எடுத்து, கையில் தேய்த்துக் கொண்டு காய்கள் காய்த்திருக்கும் தென்னை மரத்தில் ஒரு குத்து குத்த ஒருகாய் மரத்திலிருந்து விழுமாம். புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 163வது பாடலான….. “எமனுட அக்கினியை மதியா வித்தை இயம்புகிறேன் எல்லோரும் ஆச்சரிக்க நாமனவே சனகனிட புதரு தன்னில் நலமாக பூத்திருக்கும் காளான் தன்னை சொமனவே கொண்டுவந்து புது பாண்டத்தில் சுருக்குடனே போட்டு நீ கதிரில் வைக்க ஆமனவே தைலமாதா உருகும் பாரே அதையெடுத்து பூசி தீயில் குதி”  எல்லோரும் ஆச்சர்ய பட தக்கவிதமாக நெருப்பு சுடாமளிருக்கும் வித்தையைக் கூறுகிறேன் கேள், சங்கன் செடியின் புதர்களில் பூத்திருக்கும் காளானைக் கொண்டுவந்து புது மண் பாண்டத்தில் போட்டு சூரிய ஒளியில் வைக்க உருகி வரும் அதை உடம்பில் பூசிக் கொண்டு எவ்வளவு தீயில் வேண்டுமானாலும் குதிக்கலாம் சுடாது என்கிறார் புலிப்பாணி சித்தர். மணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்… புலிப்பாணி ஜாலம் 325 நூலில்273 வது பாடலான….. “பாடினேன் இன்னுமொரு ஜால வித்தை பண்பான பேர்விளங்க சொல்வேன் கேளு நாடியே நத்தை சூரி வேரைக் கண்டு நவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டு கூடியே கூச்சமென திருந்திடாமல் குணமான கண்ணதனில் மணலைப் போட்டு ஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்க அன்பான கண்ணும் அருகாது பாரே” நத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் மென்று தாடையில் அதக்கிக் கொண்டு, இரு கண்ணிலும் மணலைப் போட்டுக் கொண்டு கையால் தேய்த்தால் கண்களுக்கு எதுவும் ஆகாது என்கிறார் புலிப்பாணி சித்தர். இத்துடன், இந்த நூலில் நத்தை வேரைக் கொண்டு செய்யும் வேறு சில ஜாலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர பச்சை பாம்பு ஜாலம்,மாடன் மந்திரம், இந்திர ஜாலம், எக்ஷனி ஜாலம்,வாத்தியஜாலம் போன்ற சில ஜால முறைகளையும், சில யந்திர ஜாலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இவைகளைப் பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

 

புலிப்பாணி ஜோதிடம் .

 

புலிப்பாணி ஜோதிடம்  சித்தர்களில் பலர் மக்களின் நலன்களை கருதியும், தங்களின் சீடர்களின் துயரங்களைப் போக்கிடும் வகையில் சோதிட ஆய்வுகளின் தெளிவுகளை நூலாக்கி தந்திருக்கின்றனர்.இவை எல்லாமே வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர். இத்தகைய நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின்”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இந்த நூலில் பல அரிய விபரங்களை விளக்கியுள்ளார். இதிலிருந்து ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். வான் மண்டலத்தில் நீள் வட்ட பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்றிவரும் பாதையில் தான் இருபத்தியேழு நட்சத்திரங்களும் உள்ளன. இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின்ன் பாதைகளை பன்னிரண்டு ராசிகளாக பிரித்து, அவற்றை நூற்றி இருபது அம்சங்களாக பகுத்திருக்கின்றனர். சந்திரன் இரண்டேகால் நாழிகை ஒரு ராசியில் சஞ்சரிப்பார். பிறந்த நேரத்தினைக் கொண்டு சூரியனின் அமைப்பைக் கொண்டு ஒருவரின் லக்னத்தையும், சந்திரனை வைத்து ராசியும் கண்டுபிடிக்கபடுகிறது. ஜோதிட விதிகளின் படி நாழிகை கணக்கே வழக்கத்தில் உள்ளது. ஒருநாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதாவது இருபத்தி நாலு மணி நேரம் அறுபது நாழிகை என்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நாள் என்று எழு நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் ராகு , கேது கிரகங்களுக்கு தனியே நாட்கள் வழங்கப்பட வில்லை. இப்படி கிரகங்கள் சஞ்சரிக்கும் கால அளவுகளை ஒட்டியே கிழமைகள், திதிகள்,வாரம், வருஷம், எல்லாம் குறிக்கப்படுகின்றன. பன்னிரண்டு ராசிகளும் பன்னிரண்டு கட்டங்களில் குறிக்கப் படுகிறது. இந்த கட்டங்களை அந்த அந்த ராசிகளின் வீடுகள் என்று குறிப்பிடுவர். இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் இந்த பன்னிரண்டு ராசிகளுக்குள் பிரிக்கப் பட்டிருக்கும். அதாவது ஒரு கட்டத்திற்கு ஒரு ராசியும் அதற்குண்டான நட்சத்திரங்களும் பிரிக்கப் பட்டிருக்கும். அந்த கட்டத்திற்குறிய ராசியினை, ராசி நாதன் அல்லது ராசி அதிபதி என அழைப்பர். பன்னிரண்டு ராசி அதிபதிகளும் அதற்க்கு உரிய நட்சத்திரங்களின் விவரம் வருமாறு…. மேஷம் – செவ்வாய் – அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம். ரிஷபம்- சுக்கிரன் – கிருத்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருகசிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம். மிதுனம் – புதன் – மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், திருவாதிரை,புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம். கடகம் – சந்திரன் – புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம். சிம்மம் – சூரியன் – மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் . கன்னி – புதன் – உத்திரம்2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் . துலாம் – சுக்கிரன் – சித்திரை 3ஆம், 4ஆம் பாதம்,சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் . விருச்சிகம் – செவ்வாய் – விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை. தனுசு – குரு – முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம். மகரம் – சனி – உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திருவோணம்,அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம். கும்பம் – சனி – அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம். மீனம் – குரு – பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் எந்த வீட்டில் குறிக்கிறதோ அதை முதலாவதாக கொண்டு எண்ணுதல் வேண்டும். முதலில் ராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும், பிறந்த வேளையில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அதுவே ராசி ஆகும். இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான குணாம்சங்களை கொண்டவை. இவை ஒவ்வொன்றும் பிற கிரகஙக்ளோட நட்பு, பகை அமைப்புகள் கொண்டவை. இதனை வைத்து ராசி கட்டங்களில் நட்பு வீடுகள், பகை வீடுகள், ஆட்சி , உச்ச , நீச வீடுகள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள்….இவை பன்னிரெண்டு கட்டங்களில் அமைக்கப் பட்டிருப்பது அதன் விவரங்கள் என்னவென்பதை கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம். ஒருவர் பிறந்த நேரத்தினை வைத்து லக்கினம் கணிப்பதும்,ராசியினை நிர்ணயித்து அவருக்கான ஜாதக கட்டங்கள் அமைப்பதன் அடிப்படைகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இனி இந்த பதிவில் கிரகங்களின் குணாம்சங்களை கவனிப்போம்…. கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை, இவை மற்ற கிரகங்களோடும், ராசிகளோடும் எத்தகைய அணுகு முறையினை வைத்திருக்கிறது என்பதும் மிக முக்கியமானது. இதை நட்பு நிலை, பகை நிலை,வலுவடைந்த நிலை, வலுக் குறைந்த நிலை, வலு இழந்த நிலை என்பதாக பிரித்திருக்கின்றனர். முதலில் ராசிகளோடு நட்பு நிலை பாராட்டும் கிரகங்களைப் பார்ப்போம்…. சூரியன் – விருச்சிகம், தனுசு, கடகம், மீனம். சந்திரன் – மிதுனம், சிம்மம், கன்னி. செவ்வாய் – சிம்மம், தனுசு, மீனம். புதன் – ரிஷபம், சிம்மம், துலாம். குரு – மேஷம், சிம்மம்,கன்னி, விருச்சிகம். சுக்கிரன் – மிதுனம், தனுசு, மகரம்,கும்பம். சனி – ரிஷபம், மிதுனம். ராகு, கேது – மிதுனம், கன்னி,துலாம், தனுசு, மகரம், மீனம். ராசிகளோடு பகை நிலை பாராட்டும் கிரகங்களைப் பார்ப்போம்… சூரியன் – ரிஷபம்,மகரம், கும்பம். செவ்வாய் – மிதுனம், கன்னி. புதன் – கடகம்,விருச்சிகம். குரு – ரிஷபம், மிதுனம், துலாம். சுக்கிரன் – கடகம், சிம்மம், தனுசு. சனி – கடகம், சிம்மம், விருச்சிகம். ராகு, கேது – கடகம், சிம்மம். சந்திரன் – எல்லா வீடுகளுமே நட்பு தான் பகை வீடு கிரகங்களின் ஆட்சி, உச்ச, நீச,திரிகோண நிலையங்கள்…  கிரகங்களின் பார்வைகள்…. எல்லா கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது வீட்டை அதாவது ஏழாவது கட்டத்தினை பார்ப்பார்கள். செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7 , 8 வீடுகளை பார்க்கும் தன்மை உண்டு. { 4ம், 8 ம் பார்வை விசேட பார்வை}. குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 வீடுகளை பார்ப்பார். { 5ம், 9 ம் பார்வை விசேட பார்வை}. சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். { 3ம், 10ம் பார்வை விசேட பார்வை}. புலிப்பாணி சித்தரின் சோதிட நூலினைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர்,இதுவரையில் நாம் பார்த்த சோதிட அடிப்படைகள் சிலவற்றை நினைவு படுத்திட விரும்புகிறேன். ஒருவரின் ஜாதக பலனை கணிப்பதற்க்கு, அவரின் பிறந்த நேரம் வைத்து ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை வரையறுக்கப் படுகிறது. இராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இராசி என்பது பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அது தான் ராசி. அந்த ராசியை கொண்டு தான் கிரகங்களின் சஞ்சாரங்களை கணித்து பலன் கூற வேண்டும். இதையே கோசார பலன் என்று அழைப்பர். லக்னம் என்பது குறிப்பிட்ட ஜாதகருக்கு என்ன திசை நடக்கிறது எபதையும், எந்த கிரகம் எத்தனையாவது வீட்டில் உள்ளது என்பதையும், அதன் அதிபதி யார்?, அவர் என்ன நிலையில் இருக்கிறார்? அவர் ஆட்சி பெற்றிருக்கிறாரா?, அல்லது உச்சம் பெற்றிருக்கிறாரா?,அல்லது நீசம் அடைந்திருக்கிறாரா?, என்பதை அறிய உதவும். இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்ட எவரும் “புலிப்பாணி ஜோதிடம் 300 ” என்ற நூலை எளிதில் புரிந்து கொள்ள முடியும். “புலிப்பாணி ஜோதிடம் 300 ” என்ற நூலில் காப்பு அடங்கலாக மொத்தமாக 309 பாடல்கள் உள்ளன. அந்த பாடல்கள் அனைத்திற்கும் தெளிவான பொருள் கூற தெரிந்தவர்கள் உலகிலுள்ள எந்த ஒரு மனிதரின் ஜாதக பலன்களையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நான் அறிந்த வரையில் மிகச் சிலரே இதில் விற்பன்னராய் இருக்கின்றனர். அவர்களை தேடியறிந்து பலன் கேட்பதே சிறப்பு. இந்த நூலில், “ஆதியெனும் பராபரத்தின் கிருபை காப்பு அன்பான மனோன்மணியாள் பாதங் காப்பு சோதி எனும் பஞ்ச கர்த்தாள் பாதங் காப்பு சொற்பெரிய கரிமுகனுங் கந்தன் காப்பு தீதி எனும் மூல குரு முதலாயுள்ள நிகழ்ச்சித்தார் போகருட பாதங் காப்பு வாதிஎனும் பெரியோர்கள் பாதங் காப்பு வாழ்த்துகிறேன் ஜோசியத்தின் வண்மை கேளே”  ஆதிக்கும் ஆதியாய் விளங்கும் பரம்பொருளுக்கும், அன்பான மனோன்மணி அம்மனின் பாதத்திற்கும், ஜோதிவடிவான பஞ்ச பூதங்களின் பாதத்திற்கும், முதற் கடவுளான ஆனைமுகனுக்கும்,கந்தனுக்கும், என்றும் வாழும் சித்தராகிய போகருக்கும்,எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சான்றோர்களையும் வணங்கி நல்வாழ்த்துக்களுடன் ஜோதிடத்தின் சிறப்பை சொல்கிறேன் கேள் என்பதாக ஆரம்பிக்கிறார். புலிப்பாணி முனிவர் இந்த நூலினை ஒரு புதிர் விளையாட்டினைப் போல அமைத்திருக்கிறார். எந்த ஒரு மனிதரின் பலனையும் துல்லியமாய் அறிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட இந்த நூலின் கட்டமைப்பு அசாத்தியமானது. ஒன்றைத் தொட்டு ஒன்றாய் தொடந்து செல்வதாக வடிவமைத்திருக்கும் புலிப்பாணி முனிவரின் அறிவுத்திறம் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது. நூலின் துவக்கத்தில் லக்னங்களைப் பற்றி விவரித்து விட்டு,தொடர்ச்சியாக கிரகங்களின் தன்மையினை விளக்குகிறார். பின்னர் லக்னத்தை கொண்டு குறிக்கப்படும் ஒவ்வொரு பாவங்களின் பலன்களை விவரிக்கிறார். அதைத் தொடர்ந்து என்ன லக்னத்திற்கு என்ன பலன் என்று விளக்கி விட்டு. ஒவ்வொரு கிரகமும் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை விவரித்துக் கொண்டு சொல்கிறார். கிரகங்களின் பார்வைகளும் அதன் பலன்களையும் சொல்லும் வேளையில்,ஒருவரது ஜாதகத்தில் உள்ள யோகங்களைப் பற்றி விளக்கும் அவர், தோஷங்களைப் பற்றியும் அதற்க்குரிய பரிகாரங்களையும் சொல்கிறார். உதாரணத்திற்கு பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க என்ன பரிகாரம்,நாகதோஷம், செவ்வாய் தோஷம், காரியத்தடை எதனால் ஏற்படுகிறது அதை நிவர்த்திசெய்வது எப்படி? எந்த கிரகநிலை உள்ளவர் என்ன தொழில் செய்தால் அதிக லாபமீட்டலாம் என்பதையும், அத்துடன் என்ன கிரக நிலை உள்ள ஜாதகர் என்ன கற்பார் என்றும் , சில கிரகங்களின் அமைவிடத்தை வைத்து அந்த ஜாதகருக்கு புதையல் கிடைக்கும் என்பதையும் வரையறுக்கும் முறையும் சொல்லியுள்ளார். இந்த கிரகங்களின் மகா திசையில் இந்த புத்தி நடைபெற்றால் இன்ன பலன் என்பதையும் வரையறுத்து தெளிவாக சொல்கிறார். இவை எல்லாம் விளக்கமாக சொல்லும் அவர் இடைக்கிடையே தன்னுடைய குரு போகரின் அருளால் பக்குவமாக சொல்கிறேன் புலிப்பாணி என்று கூறிச் செல்கிறார். “பாரே நீ போகருட கடாட்சத்தாலே பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே” இந்த நூலின் அமைப்பினையும், தன்மையும் நானறிந்த வகையில் விளக்கியிருக்கிறேன். இதை பயன் படுத்தும் முறையினை பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். தமிழுக்கும், சோதிட கலைக்கும் கிடைத்த அரும்பெரும் கொடை இந்த நூல் என்றால் மிகையில்லை. இந்த நூலை முறையாக பயன் படுத்தினால் எவரும் தங்களின் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்

சட்டை முனி

சட்டைமுனி

பெயர்: சட்டைநாதர்

பிறந்த தமிழ் மாதம்: ஆவணி

தமிழ் பிறந்த நட்சத்திரம்: மிருகசீரிஷம்

ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 14 நாட்கள்

ஜீவசமாதி அடைந்த இடம்: திருவரங்கம்

சட்டை முனி      தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மலோடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. இவர் சரக்கு வைப்பு,நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை,ஞான விளக்கம் உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார்.    சட்டை முனி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். தமிழைக் கற்றார். ஞானம் கொண்டார். சதுரகிரி சென்று சேர்ந்தார். வாதம் புரிந்து அநேக வேதியியல் விந்தைகள் செய்தார். பின் வேறு ஒருவரின் தேகத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். கற்ப மூலிகைகளை உண்டார். காயசித்தி செய்து கொண்டு அதிலேயே வாழ்ந்தார் என்றும் கருவூரார் கூறுகிறார்.     தமிழர் கண்ட வேதியியல் விந்தைகளைத் தரணியில் உள்ளோர்க்கு எடுத்துக் காட்ட , சட்டைமுனியின் வாத காவியம் ஒன்றே போதுமானது. இதிலுள்ள வேதியியல் விந்தைகளை, விவரிக்க முடியாத அதிசயங்களை,அற்புதங்களைக் காட்ட முயல்வதும், மிகவும் அரிய செயலாகும்.     சட்டைமுனி இரசவாதம் என்ற நூலில் பாதரசத்தை மணியாக்கி, அதற்கு உலோகங்கள் இரத்தினங்கள், உபரசங்கள் எல்லாவற்றினுடைய சத்துக்களையும் கொடுத்து, அவற்றை உயிருள்ள இரசமணிகளாக்கும் விதத்தையும் கூறுகின்றார்.     சட்டை முனி, திருவரங்கத்தில் இறைவனுடன் ஒன்றாகக் கலந்து மறைந்தார்; இன்றும் அவர் அங்கேயே இருக்கிறார் என்று கருதப்படுகிறது. சட்டை முனி்      சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர். சேணிய வகுப்பைச்சார்ந்தவர்.தாய்,ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டு தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்து பிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்டக் காரணத்தால் விவசாய  கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின் வாசல்களில் தட்டை ஏந்தி யாசம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.
ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது வட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர் விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய்,தந்தையரை காப்பாற்றும் பொருட்டு நீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும். சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார். சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனை ஆலயம் சென்று தினம் வணங்கினான். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம் நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிப்பட தவறவில்லை.
ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டு வெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்து ஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதவிவிட எண்ண மில்லையா? ‘ சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில் வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்று தாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். [ இவரை‘கயிலாய சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளி சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்..] சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்த செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ‘இதில் ஒன்றும் வியப்பில்லை. இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ இது போகப்போக விளங்கும்” என்றார். அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்து சித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார்.போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர்,கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞான நிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார்.இவரின் தவத்தால் கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்..ரோமசர் போன்ற சித்தர்களின் நட்பும், ஆதரவும் பெற்று சிறந்து விளங்கினார் சட்டைமுனி ஆயிரத்து இருநூறு, திரிகாண்டம்,சரக்கு வைப்பு, நவரத்தின் வைப்பு, நிகண்டு, வாத காவியம்,தீட்சை, ஞான விளக்கம் என பதினான்கு நூல்களையும் இயற்றியுள்ளார்.
” கயிலாய பரம்பரையில் வந்த பேர்க்குக்  கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே..“     என்று இவர் பாடுவதால் கயிலாயத்தில் வாழ்ந்தவர் என உறுத்திப்படுத்தியுள்ளார். அதனால் இவர் இயற்றிய பாடல்கள் மானிட உலகிற்குச் கிடைத்த மாபெரும் சொத்தாகும். இவர் இயற்றிய ஞானப் பாடல்களாகும்.                ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்                அறிந்து கொண்டே அறிவாலே நின்று பாரு;                சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்                செகமெலாம் பெண்ணான வுருத்தானப்பா!                ஓமப்பா பொன்மண்வா சணைவி னாசை                ஒற்றி நின்ற விந்திரிய மயக்கத் தாசை                நாமப்பா வென்று சொன்ன ஆண்மையாசை              நல்வினைக்குத் தீவினைக்கும்  வித்து மாச்சே.  [இவ்வுலகை எல்லாம் அடக்கி ஆளும் “திரோதாயி’’ எனும் மாபெரும் சக்தி பெண் சக்தியாகும்.    இவ்வுலகப் பொருள்களின் மேல் கொள்ளும் ஆசைதான் துன்பங்களுக்கு மூலகாரணம்.   இதனை நன்கு அறிந்துக்கொள்ளவேண்டும். நாம் கொள்ளும் ஆசை, ஐம்புலன்கள தம் வழியே  செயல்படும்போது நன்வினைக்கும் தீவினைக்கும் வித்தாக அமைகிறது. ]     சட்டைமுனி ஒருநாள் இரவு திருவரங்கம் கோயில் கோபுரத்தை தரிசித்து “அரங்கா….. அரங்கா…”என்று குரல் கொடுக்க, வாசல் திறந்தது. கோயிலுக்குள் சென்று இறைவனை மனமுருகி வேண்டினார். கோயில் வாயிற் திறந்திருப்பதைக் கவனித்த காவலர்கள் சட்டைமுனியை கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். நிர்வாகித்தனர் அரசனிடம் அழைத்துச் சென்றனர். மன்னர் விசாரணையில் நடந்த விபரத்தினை கூற மன்னன் இந்த கூற்றை நம்பவில்லை.     இது உண்மையா என அறிய சட்டைமுனியை மீண்டும் கோயில் வாசலில் நிறுத்தி….,  “எங்கே குரல் கொடு மணி அடிக்கிறதா… வாயிற் கதவு திறக்கிறதா என்று பார்ப்போம்.. என்றனர்.   சட்டைமுனி மீண்டும் “அரங்கா……, அரங்கா…”என்று மூன்று முறை குரல் கொடுக்க வாயிற் கதவு தானே திறந்து மணியும் ஒலித்தது. மன்னரும் மக்களும் அவரின் மகத்துவைத்தை உணர்ந்து வணங்கி நின்றனர். மன்னன் தான் தவறு செய்த உணர்ந்து அவரை தம்மோடு தங்கியிருக்க வேண்டினார். சட்டைமுனியும் திருவரங்கத்திலேயே தங்கி இறைவனுடன் கலந்தார்.       மயங்குவான் பொண்டேப் புரட்டுப் பேசி        மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்        தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;        சாதகமா யோகத்திற் சார்ந்தே என்பான்;        தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே என்பான்        செகசால் திரோதாயி சிரிப்பான் பார்த்து;       முயங்குவான் சமாதிவிட்டே னையோ வென்பான்       மூடமொற்ற ஞான்மெல்லா முலகிற் பாரே.      [ மனிதன் பொன்னையும், பொருளையும் தேடப் பொய் பேசுகிறான்.       ஞானம் (மெய்யறிவு) எதுவும் பெறாமலேயே மகத்தான ஞானம்        தாம் பெற்று விட்டதாக வீண் ஜம்பம் செய்வான். யோகத்தில்        என்னை ஈடுபடுத்தி கொண்டு விட்டேன் என மக்களை மயக்குவான்        தனக்கு நோயோ, வேறு எந்த துயரங்களோ வருமாயின் இறைவா !        எனக்கா இந்த சோதனை என்பான். செலவந்தனாக இருந்த போது       இறைவனை நினையான். இதனை கண்டு மாயை [திரோதாயி]        சிரிக்கிறாள் ]         பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;        பொல்லாத ஆசையென்ன?மாலின் கூறு;        மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்       தங்கின்ற யோகம் போய் ஞானம் பாழாய்ச்       சமாதியென்ன மிந்திரியச் சார மூடித்        தொங்குகின்ற மோட்சனத்தின் தரைபோ லாகத் சுனியமாய் ஞானமெல்லாம் தோற்றுமாறே.  உடலில் தோன்றுகிற ஆசையால் மனம் சுகங்களில் அலைப்பட்டு   வாழ்வு வீணாகிறது. இறுதியில் வாழ்க்கை சூனியமாகிறது. அதன்  பின்தான் மனிதனுக்கு ஞானமும், அறிவும் தோன்றுகிறது.  இதனைத்தான் கண்ணதாசன் “ கெட்ட பின்பு ஞானி “என்றார். “பாலனாம் சிங்களவ தேவ தாசி பாசமுடன் பயின்றேடுத்த புத்திரன் தான் சீலமுடன் சட்டை முனி என்று சொல்லி சிறப்புடனே குவலயத்தில் பெருண்டாச்சு” – போகர்7000 – சதுரகிரி தல புராணம், போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னிரெண்டாயிரம் போன்ற நூல்களில் இவர் பற்றிய பல குறிப்புகள் இடம் பெறுகின்றன.
பொதுவாக சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால் சட்டை முனி என்று அழைக்கப்பட்டார். இவர் போகருடைய சீடர் என்று சொல்லப் படுகிறது. இவர் சீர்காழியில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகின்றது.சட்டைமுனி ஞானம் எண்சீர் விருத்தம் காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய் கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார் பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும் நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார் நம்முடைய பூசையென்ன மேருப் போலே ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே உத்தமனே, பூசை செய்வார் சித்தர்தாமே.
1 தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும் சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர் வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற் கோனென்ற வாதசித்தி கவன சித்தி கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே.
2 கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய் குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய் மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய் மைந்தனே இவளை நீபூசை பண்ணத் தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய் திறமாகப் புவனையைநீ பூசை பண்ணு ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றிப் பூசைபண்ணே.
3 பண்ணியபின் யாமளைஐந் தெழுத்தைக் கேளாய் பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும் கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம் காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!
4 தியங்கினால் கெர்சித்துத் துரத்துச் சண்ணுஞ் சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும் மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ ?தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள் சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப் பாழே.
5 பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ ? பரந் தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ ? வாளான விழியுடைய பெண்ணைச் சேரும் மயக்கமற்று நிற்பதெப்போ ? மனமே ஐயோ ? காழான உலகமத னாசை யெல்லாங் கருவறுத்து நிற்பதெப்போ ? கருதி நின்ற கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக் கூடுவது மேதனென்றால் மூலம்பாரே.
6 (பாடல்கள் நிறைவுபெற்றது.) சட்டைமுனி (நாதர்) சித்தர் தாள் போற்றி ! நல்லோர் பதம் போற்றி! நாயகன் பதம் போற்றி !!

 

சட்டைமுனி (நாதர்) .

ரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்த பாழும் மனிதர்களின் சந்தேகத்தை தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! அப்படிப்பட்ட எனக்கு,இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன். கயிலையிலே சிவபெருமானை காணச்செல்லும் சித்தர்களில் நானும் ஒருவன். அங்கே செல்லும் போது, குளிர் தாங்க முடியவில்லை என்பதற்காக கம்பளிச் சட்டை அணிந்தேன். அதையே நிரந்தரமாக எங்கு சென்றாலும் அணிந்து கொள்கிறேன். அதனால் தானே என்னை சட்டை முனி என்றே எல்லாரும் அழைக்கிறார்கள்! இந்த உடையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்! நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, என கதறினாரோ இல்லையோ,அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்களெல்லாம் பதறிப் போனார்கள். மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.யார் இந்த சட்டை முனி?கடல்சூழ் இலங்கையிலே சிங்கள தாசிப்பெண் ஒருத்திக்குப் பிறந்தவர் சட்டை முனி. இந்தப் பெண்மணியும், அவரது கணவரும் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். மகனைச் சீர்திருத்தி, இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச் செய்ய மிகவும் போராடினர் பெற்றோரான சிங்கள தம்பதியர். மிகவும் கட்டாயப்படுத்தி மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.ஆனால், இறைவன் சித்தமோ வேறு மாதிரியாய் இருந்தது. சட்டைமுனிக்கு இல்லறத்தில் அறவே நாட்டமில்லை. துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். காடு, மலைகளில் திரிந்த அவர் போகர், திருமூலர்,அகத்தியர் ஆகிய சித்தர்களைத் தரிசித்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டினார். ஒருமுறை உரோமசர் என்ற முனிவரை பொதிகை மலையில் தரிசித்தார். கயிலைக்குச் செல்லாமல் பொதிகைக்கு சிவபெருமானை வரவழைக்கும் அற்புதமான தவத்தில் ஈடுபட்டிருந்தவர் இந்த முனிவர். ஒருமுறை சிவன் இவருக்கு காட்சி கொடுத்து, முனிவரே! கயிலையில் கங்கைக்கு ஈடான பலன் கொடுக்கும் நதி ஒன்று அகத்தியரால் இங்கு பிறக்கும். தாமிரபரணி எனப்படும் அந்த நதி வற்றாத ஜீவநதியாக ஓடும். அந்நதியில் நீ ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடு. அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் அமைத்து வழிபடு. கயிலைக்கு அடுத்தபடியாக பொதிகையும் என் இருப்பிடங்களில் ஒன்றாக உன் விருப்பப்படியே அமையும்,என்று அருள்பாலித்தார். (இந்த தலங்களே தற்போது நவகைலாயங்கள் என்ற பெயரில் திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன).இப்படி சிவதரிசனம் பெற்ற உரோமசரைச் சந்தித்த சட்டை முனி, முனிவரே! இந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக உள்ளனர். அடுத்தவர்களின் குறைகளைக் காணுகிறார்களே தவிர தங்கள் குறையைக் களைவது பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த மக்களை நேர்வழிப்படுத்த விரும்புகிறேன். அதற்கு தாங்களே வழிசெய்ய வேண்டும்,என்றார். அன்பனே! உன் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானே இதற்கு உனக்கு வழிகாட்ட இயலும். அவரது தரிசனம் வேண்டுமானால் நீ கயிலைக்குச் செல். அவரை வழிபடு. கயிலைக்கு நீ இங்கிருந்து நடந்து செல்ல முயற்சிக்காதே. கடுமையான தவமிரு. அஷ்டமாசித்திகளை உன்னுள் வரவழைக்க கடும் பயிற்சி மேற்கொள். அவற்றை நீ அடைந்து விட்டால், உன் உடம்பைப் பஞ்சாக்கி நீ எந்த இடத்திற்கும் செல்ல முடியும், என அருளுரை வணங்கினார்.சட்டைமுனி சதுரகிரி எனப்படும் மலைக்கு வந்தார். அங்கே பல சித்தர்களின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு சேவை செய்து,அவர்களின் நம்பிக்கையை  பெற்று அஷ்டமாசித்திகளை அடைந்தார். கடும் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து சென்றார். கயிலைமலையான் இவரது முயற்சியைக் கண்டு,நண்பன் போல இவருடன் பேசினார்.சிவதரிசனம் பெற்ற சட்டைமுனி மீண்டும் தென்னகம் வந்தார். மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக்குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார். இறந்தவர்களை எழுப்பும் கலையை சித்தர்கள் சங்கேத மொழியிலேயே குறித்து வைப்பர். ஏனெனில், சித்தர்களின் குறிப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். சட்டை முனி பகிரங்கமாக எழுதியதால் ஆத்திரப்பட்ட சில சித்தர்கள் அந்தக் குறிப்புகளை கிழித்து எறிந்து விட்டனர். எனவே, அவரது மருத்துவக் குறிப்புகளும்,இன்னும் சில பயனுள்ள தகவல்களும் மட்டுமே எஞ்சின. மேலும், சட்டைமுனிவர் பற்றி சிவபெருமானிடமும் புகார் சொல்லி, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.இந்நிலையில் ஸ்ரீரங்கம் வந்த சட்டைமுனி ரங்கநாதனைச் சேவிக்கச் செல்லும்முன் அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டு விட்டது. சட்டைமுனி வெளியில் இருந்தபடியே, ரங்கநாதா! உன்னை இன்றைக்குள் தரிசிக்க அவசர அவசரமாக வந்தேனே! பயனின்றி போய் விட்டதே, எனச் சொல்லி அரற்றினார்.தன் பக்தனின் அபயக்குரலைக் கேட்ட பெருமாள் நடையைத் திறக்கச் செய்தார். சித்தர் கருவறை அருகே சென்றதும், தனது அணிகலன்களை அவருக்கு சட்டை போல் அணிவித்தார்.(இதனாலும் இவர் சட்டைமுனி என பெயர் பெற்றார் என்பதுண்டு). அப்போது, ஊர் மக்கள் அவரைத் திருடனென சந்தேகித்து அரசனிடம் கொண்டு போய்விட, மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்தது. இவர் திருவரங்கம் அல்லது சீர்காழியில் சமாதியாகி இருக்கலாம் என நம்புகின்றனர். சித்தர்களில் குறிப்பிட்ட நாளில் விரதம் இருப்பது இவருக்கு மட்டுமே. திருவோணம், புனர்பூசம், பூசம், திருவாதிரை நட்சத்திர நாட்களிலும், புதன்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் வாஸ்து தினத்தன்றும் ஸ்ரீசட்டைநாத மாமுனி தர்ப்பயாமி என்று குறைந்தது 18 முறையும், அதிகபட்சமாக 108 முறையும் சொல்லி வழிபட்டால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.
திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர் இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய“தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும்”என்ற நூலில் காணப்படுகிறது. சட்டைமுனி இயற்றிய நூல்கள்: சட்டைமுனி நிகண்டு – 1200 சட்டைமுனி வாதகாவியம் – 1000 சட்டைமுனி சரக்குவைப்பு – 500சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500 சட்டைமுனி வாகடம் – 200 சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200 சட்டைமுனி கற்பம் – 100 சட்டைமுனி உண்மை விளக்கம் – 51 தியானச் செய்யுள் சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே! சட்டைமுனி சுவாமி பூசை முறைகள் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள்,குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். பதினாறு போற்றிகள்: 1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி! 2.ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி! 3.தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி! 4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி! 5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி! 6. வருண பகவானை வணங்குபவரே போற்றி! 7.நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி! 8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி! 9. கவலைகளை அகற்றுபவரே போற்றி! 10. நோய்களை அழிப்பவரே போற்றி!11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி! 12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி! 13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி!14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி! 15. ராமநாமப் பிரியரே போற்றி! 16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி! இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி!”என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும். ஸ்ரீ சட்டைமுனி சுவாமியின் பூசை பலன்கள்: இவர் நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால், 1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி,பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும். 2. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும். 3.சரியாகப் படித்தாலும் பரிட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும். 4. மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும். 5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும். 6.போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைப்பிடித்தல்,குடிப்பழக்கம் அகலும். 7. ஆன்மிகப்பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும். 8. இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம். பூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.

கொங்கணர்

கொங்கணர்

பெயர்: கொங்கணர்

பிறந்த தமிழ் மாதம்: சித்திரை

தமிழ் பிறந்த நட்சத்திரம்: உத்திராடம்

ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 16 நாட்கள்

ஜீவசமாதி அடைந்த இடம்: திருப்பதி

கொங்கணவர்      மேலைக் கடற்கரை     கொங்கண தேசத்தவர் . வேட்டுவ குலத்தில் பிறந்தவர். போகரின் மாணாக்கர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது,மரக்கிளையில் இருந்த கொக்கு எச்சமிட, அதனால் தவம் கலைந்து, கோபமுடன் சித்தர் நோக்க, கொக்கு எரிந்து சாம்பலானது . பிறகு,     நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந் தாழ்த்தி அன்னமளித்தார். சித்தர், அந்த அம்மையாரை,சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்கு’ என்று அமைதியாகப் பதில் அளித்தார். ‘என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்’ என்றார் அவர்.     கொங்கணவர்,அந்த பெண்மணியின் தொலைவில் உணர்தலை (ஞானதிருஷ்டி) எண்ணி வியந்தார். அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார்.    போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார் என்ற குறிப்பு போகர் ஏழாயிரத்தில் காணப்படுகிறது. இவர் திருவேங்கடத்தில் யோக சமாதியில் அமர்ந்தார் என்பர். கொங்கணவர் வாத காவியம் பல வேதியியல் ரகசியங்களைப் பெற்றுள்ளது. கொங்கணவரின் முக்காண்டங்கள்,
வைத்தியம் 200,
வாதசூத்திரம் 200,
ஞான சைதன்யம்,
வாலைக்கும்மி,
சரக்கு வைப்பு,
முப்பு சூத்திரம்,
ஞான வெண்பா,
உற்பத்தி ஞானம்,
சுத்த ஞானம் குறிப்பிடத்தக்கதாகும். இவர் சுமார் 24 நூல்கள் இயற்றியுள்ளார்.
எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.      கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார். அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து “கொங்கணரே,தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.      தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார்.      ஒருநாள் கொங்கணர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்” என்றார். ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே திரட்டி கொடுத்து “இரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்” என்று கொடுத்தார். ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார். கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.
ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.       தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார். உடனே வாசுகி அம்மையார் நகைத்து“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!” என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.      திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார்.       கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். “சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. “அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.      தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்”என்று கூறி அவரிடம் விடைபெற்றான். கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.      கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் பல சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார்.
தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.    பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார். அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான். அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றி அருளினார். இறுதியில் கொங்கணர் திருவேங்கடத்தில் சித்தியடைந்தார்.
கொங்கணவர் இயற்றிய நூல்கள்:
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் – 80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21
கொங்கணவர் சுத்த ஞானம் – 16 என்பவையகும்.
கொங்கணவர் சித்தர் தியானச் செய்யுள்
கொக்கை எரித்த கொங்கணரே அம்பிகை உபாசகரே கௌதமரின் தரிசனம் கண்டவரே இரசவாதமறிந்த திவ்யரே உங்கள் திருப்பாதம் சரணம்.
கொங்கண சித்தருக்கான பூசை முறைகள்:
அகப்புறத் தூய்மையுடன் பூஜையைத் துவக்க வேண்டும். அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகிக் கோலமிட்டு, எட்டு பக்கங்களிலும் சந்தனமும், குங்குமமும் இடவேண்டும். அப்பலகை மீது கொங்கணரின் உருவப்படத்தை வைக்க வேண்டும். சுத்தமாக விளக்கிய குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் மலரிட்டு அலங்கரித்து முக்கூட்டு எண்ணெய் தீபமேற்றி பூசையைத் துவங்க வேண்டும். முதலில் தியானச் செய்யுளை சொல்லி பக்தியுடன் வணங்கவேண்டும். பின்பு வில்வம், சாமந்தி,அரளி ஆகியவற்றால் 16 போற்றிகளைச் சொல்லிக் கொண்டே அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் உள்ளவரே போற்றி!
2. அம்பிகைப் பிரியரே போற்றி!
3. இரசவாத சித்தரே போற்றி!
4. அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி!
5. சிறந்த தவசக்தி பெற்றவரே போற்றி!
6. செல்வங்களைத் தருபவரே போற்றி!
7. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
8. நோய்களை அழிப்பவரே போற்றி!
9. வறுமையை போக்குபவரே போற்றி!
10. ஞானம் அளிப்பவரே போற்றி!
11. தீய கனவுகளில் இருந்து காப்பவரே போற்றி!
12. மாயையை அகற்றுபவரே போற்றி!
13. கருணாமூர்த்தியே போற்றி!
14. காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி!
15. கொங்கு தேசத்தவரே போற்றி!
16. குலம் விளங்கச் செய்பவரே போற்றி!
இவ்வாறு அர்ச்சித்தபிறகு “ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!” என்று 108 முறை ஜெபித்து பிரார்த்தனையை கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.
ஸ்ரீ கொங்கணசித்தரின் பூஜா பலன்கள்: முறைப்படி இவரை வழிபட்டால்
1. மனவளர்ச்சி அபிவிருத்தி ஏற்படும்.
2. கேது பகவானின் தோசம் நீங்கி களத்திர தோசம் இன்றி திருமணம் நல்ல முறையில் நடக்கும்.
3. தியானம் கைகூடும்.
4. சகவாச தோசம் நீங்கும்.
5. தீய பழக்கங்கள் விலகும்.
6. ஞாபக சக்தி உண்டாகும்.
7. உறவினர்களின் பலம் உண்டாகும்.
8. முன் கோபம் உள்ளவர்கள் சாந்த சொரூபிகளாவர்கள். இவருக்கு மஞ்சள், அல்லது சிவப்பு வர்ணங்கள் உடையை வைத்து அல்லது அணிவித்து பூஜை செய்யலாம். வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.
நிவேதனம்: தயிர்சாதம், கல்கண்டு, பழங்கள்.
போகரின் சிஷ்யர்களுள் வித்தியாசமானவர்,கொங்கணர் கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால்,கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர்.அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர்.ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள்.இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும்.கொங்கணர் குடும்பத்தில்,சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது.கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார்.தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது… திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. ‘தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள். அப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க… சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது. அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர்,நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது. கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது.
இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது. போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார். ‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல…! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர்.‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’ ‘‘தவம் புரிவது என்பது,உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’ ‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே…. உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான்,மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது….. ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது….’’ ‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’ ‘‘தவத்தில் மூழ்கு…. தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால்,அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்…’’ ‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா…? வேறு வழிகள் இல்லையா?’’ ‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது. பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும். பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி… தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும். நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும்… தீவினைகள் புரிந்திருந்தால்,மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை,களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்…!’’ என்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது. அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது.
போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது. ‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்…’’ _ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது. எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன. அதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின. அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது…! ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன்,ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்;தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம்…. யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது? இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம். உதாரணத்திற்கு, விசுவாமித்திரர் ஒருவர் போதுமே…! இப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர், தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது. பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார்.‘‘சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது… யாகம்,ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார். இப்படி கொங்கணர் அப்படியும் இப்படியுமாக தடுமாறினாலும், இறுதியில் தவத்தின் பெருமையை உணர்ந்து, பெரும் தவசியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். ‘நான் ஒரு தவசியே இல்லை…. நான் தவசியாக வேண்டுமானால் என்னையே மறக்க வேண்டும். எனக்கு என்னை நன்றாகத் தெரிகிறது எனும்போது, நான் எப்படி தவசியாவது…? ஒருவேளை, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் தவசியாகக் கூடும்!’ என்று அவர் தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது.
மொத்தத்தில், கொங்கணர் வாழ்க்கை என்பது, மானுடர்களுக்கு தவத்தின் சக்தியை உணர்த்தும் ஒரு வாழ்க்கையாக ஆகிவிட்டது. இவர் வாழ்வில், பல ரசமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லை. கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது. அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்… அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்?’’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு…. ஜீவன் முக்தர்களுக்கு துளியும் ஆகாத விஷயம்,கோபமும் கர்வமும்… மாயை இந்த இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டுதான், ஜீவன் முக்தர்களையே ஆட்டி வைக்க முயற்சி செய்யும். துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது. இவர்கள் எல்லாம் மானுட வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு உதாரணங்களானார்கள். ஆனால் இவர்களிடையே,தன்னையே தாழ்த்திக் கொண்டு தன்னை ஜடமான கல் மண்ணாகக் கருதிய ஆழ்வார்கள், சுலபமாக நித்யமுக்தி பெற்றார்கள். ‘படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேனோ’ என்று ஆழ்வார் ஒருவர், இறையை அனுதினமும் அனுபவிக்க, அந்த ஆலயத்துச் சன்னதியின் வாயிற்படி ஆகக்கூடத் தயார்… அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்றார். ‘நான்’ என்பது நீங்கி மமதை விலகிடும்போது, எல்லாமே வசப்படுகிறது. அல்லாதவரையில், எத்தனை பெரிய தவசியாக இருந்தாலும்,மாயை அவர்களை விடுவதில்லை. கொங்கணரையும் அது அவ்வப்போது ஆட்டிவைத்து தலையில் குட்டியது.
கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. அப்போது வள்ளுவருக்கு வாசுகி பணிவிடை செய்தபடி இருந்தாள். கற்புக்கரசிகளான நளாயினி, கண்ணகி, சீதை போன்றவர்களுக்கு ஒரு மாற்றுக் கூட குறையாதவள், வாசுகி. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது. காரணம், அவளது பணிவிடை. இது புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்…’ என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து ‘கொக்கென்று நினைத்தாயோ… கொங்கணவா?’ என்று திருப்பிக் கேட்க,ஆடிப்போய் விட்டது கொங்கணனின் தேகம். வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது? இது முதல்கேள்வி. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை? இது அடுத்த கேள்வி. அதற்கு விடை பிறகுதான் அவருக்கு விளங்கியது. ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல்,தானென்ற அகந்தை துளியும் இன்றி பணிவிடை புரிவது,தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது! அந்த நொடி கொங்கணருக்கு தன் தவச் செயலால் உருவான கர்வம் தூள்தூளாகிப் போனது. ஒரு பதிவிரதை முன்னால் நூறு தவசிகளும் சமமாகார் என்பதையும் விளங்கிக் கொண்டார். இப்படி, கொங்கணர் அனுபவத்தால் அறிந்ததும் ஏராளம். தன் சத்குருவான போகருக்கு ஒருமுறை ஒரு பெண்மேல் பிரேமை ஏற்பட்டது… ஆனால் அவளோ அவருக்கு வசப்படாமல் போனாள். போகர் வருந்தினார். இதை அறிந்த கொங்கணர் ஒரு அழகிய சிலையை அவர் விரும்பும் பெண்ணாக்கி போகர் முன் சென்று நிறுத்தினார். ‘கல்லுக்கே உயிர் கொடுக்கும் அளவு உங்கள் சிஷ்யன் தவசக்தி மிக்கவன்’ என்று சொல்லாமல் சொல்ல, போகர் சிரித்து விட்டார். ‘‘இப்படி ஆக்கிக்கொள்ள எனக்குத் தெரியாதா… மாயையில் வந்தது மாயையிலேயே செல்லும்’’ என்று உரைத்த போகர், தன் மனதைக் கவர்ந்த பெண்ணிடம் அழகைக் கடந்த பல அம்சங்கள் இருந்ததைக் குறிப்பிட்டு, ‘‘அதை உன்னால் இப்பெண்ணுக்குள் ஏற்படுத்த முடியுமா?’’என்று கேட்க, கொங்கணர் சூட்சுமம் அறிந்தார். கொங்கணர் வாழ்வில் இப்படி பலப்பல பாடங்கள். காலப்போக்கில் இரும்பைத் தங்கமாக்குவதில் இருந்து குளிகைகள் செய்வது வரை எவ்வளவோ கற்றார்.
ஒருமுறை, சிவலிங்கம் ஒன்றின்மேல் பூப்போட்டு வணங்குவது போல குளிகையைப் போட்டு வணங்கினார். அந்தக் குளிகை பொடிந்து பூசிக் கொள்ளும் நீறாகாமல் அப்படியே ஆவியாகி விட்டது. அது, குளிகைக்கு நேர்மாறான செயல்! அங்கே அவ்வாறு ஆகவும், இறைவன் தனக்கு எதையோ உணர்த்த விரும்புவதைப் புரிந்து கொண்டு, அங்கேயே தவம் செய்து, ‘குளிகையை மலரினும் மேலாகக் கருதி அதை லிங்கத்தின் மேல் வைத்தது தவறு’என்பதை உணர்ந்தார். அப்படி உணர்ந்த நொடியில் அக்குளிகை திரும்ப அவருக்குக் கிட்டியது. சில குளிகைகள்,வைக்கப்படும் இடத்தில் கல்லோ மண்ணோ இருந்தால்,அதை சாம்பலாக்கி விடும். அவ்வளவு உஷ்ணமானவை. லிங்கத்தையே கூட தன் குளிகை சாம்பலாக்கும் என்று காட்ட கொங்கணர் முயன்றார். ஆனால், தோற்றார் என்றும் கூறுவர். கொங்கணர், தம் வாழ்நாளில் கௌதமர், போகர்,திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல சான்றோர்களை தரிசித்து, பலவிதங்களில் ஞானம் பெற்றதை அறிய முடிகிறது. தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி,இறுதிவரை பூஜித்து வந்ததாகவும் தெரிகிறது. அபிதான சிந்தாமணி, இவரை அகத்தியரின் மாணாக்கர் என்கிறது. இவர் எழுதிய நூல்கள் கொங்கணர் கடைக்காண்டம்,ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவையாகும்

கொங்கண நாயனார் சித்தர் இவர் திருமழிசை ஆழ்வார் காலத்தவர். கி.பி. ஏழாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.இவருடைய தாய்,தந்தையார் இரும்பை உருக்கிக் கலங்கள் செய்து கோயில் வாசலில் வைத்து, அவற்றை விற்று வரும் பணத்தில் பிழைத்து வந்தனர். ஏழமை நிலையில்இருந்தாலும் தங்கள் இல்லம் வரும் முனிவர்கள்,சாதுக்கள்,சித்தர்களையும் முகம் மலரஅகம் குளிர வரவேற்று உபசரித்து வந்தனர்.அதே வழியில்கொங்கணாரும் சாதுக்களையும்,சந்நியாசிகளையும் ஆதரித்து தொண்டு ஊழியம் செய்து வந்தார். கொங்கணர்  பிற்காலத்தில் மிகவும் செல்வந்தராக இருந்தார் என்பதை,     “  தோணவே கைத் தொழிலாங் கலங்கள் செய்து          தோராமல் வர்த்தகத்தில் நிபுணனாகி          ஆணவங்கள் உள்ளடக்கி அரிய பாலன்         அவனிதனில் வர்த்தகனாயிருந்தார் தாமே…’ என்று  அகத்தியர் கூறும் பாடலின் மூலம் அறியலாம். வீரட்டகாச மூர்த்தியின் சிரசில் தமது குளிகையை வைக்க அச்சிவலிங்கமூர்த்தம் அக்குவிகையை நீராக்காமல் மறைத்ததால் அச்சிவ மூர்த்தியைப்பூசித்து இவர் குளிகைபெற்றார். இவர் ஒரு சமயம் திருமழிசை ஆழ்வாரிடம் குளிகை ஒன்றைக் கொடுத்து’ “ இது காணி கோடியைப் போதிப்பது!” என்று கூற திருமாழிசை ஆழ்வார் தம் தேகத்தின்அழுக்கையே உருட்டிக் கொடுத்து, ”இது காணி கோடியாக்கும்!” என்று கூறினார். அதை இவர்பரீட்சித்து அறிந்து ஆழ்வாரிடம் நட்புக் கொண்டார். இவரது நாடு கொங்கு நாடாயிருக்கலாம். இவர் வடக்கிலிருந்து தெற்கில் வந்து தஞ்சாவூரில்தன் பெயரால் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து முக்தி பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரைச்சிலர் அகஸ்தியர் மாணவர் என்று சொல்வர்.
இவர் மருத்துவ நூல்களும், இரசவாத நூல்களும், யோக நூல்களும்,
கொங்கணர் கடை  காண்டம்,திரி காண்டம், ஞானம் நூறு,குவிகை, கொங்கண தேவர் ஐந்நூற்றிரண்டு,கொங்கண தேவர் கலை, கொங்கண நாதர் சூத்திரம், கலைஞர் சூத்திரம்,துருசுகுடுமுப்பத்தொன்று, தலைக்காண்டம், நடுகாண்டம்,முப்பூதிட்சை, கொங்கணர் வாக்கியம்,கொங்கணர் தியானம் முதலிய நுட்களை இயற்றியுள்ளார். கொங்கணர் சித்தருக்குள் தனக்குதானே ஏதோ சிந்தனை ஓட்டம் பரவியது.நிஷ்டை ஆழ்ந்தார்.ஆழந்த நிஷ்டை மூலாதாரத்தில் சித்தி சித்தி செய்தபோது ஆறாதாரமும் பணிந்து ஒளிரும்.அண்டம் கைக்குள்ளடங்கி சித்தித்தது. காயசித்தி, வாதசித்தி, யோக சித்தி, ஞானசித்தி அனைத்தும்பெற்றார். தன்னை அறிந்து அர்ச்சிக்க உடல் தத்துவம் அறிய வரும். உலகம் அணுவின் சேர்க்கை.உடல் இறந்த பின்பு பஞ்ச பூதங்களும் அதன் அதன் கூட்டில் கலந்துவிடும். உடல் அழியாமல் காக்கும்நெறி அறிந்தவர்கள் சித்தர்கள்.
ஞானப்பால் அருந்தியகொங்கணர் சித்தரிடம் அஞ்ஞானம் அகல, ஒருநாள் அவர் சந்நியாசியாகிகாடு, மலை, வனங்களென சுற்றி திரிந்தார். இப்படி காடுகளில் சுற்றி திரிந்த போது  அரிய கற்பகமூலிகை கண்டறிந்தார்.  ஒருநாள்  வனாந்தரங்களில் மூலிகைகளை தேடிகொங்கணர் அலைந்தபோது, ஒரு துயர் சம்பவத்தை பார்த்தார். அக்காட்டில் பளிங்கர் இனத்தைச் சேர்ந்த ஓர் அழகிய இளைஞன் இறந்து கிடந்தான். அவனதுஉற்றார் உறவினர் அனைவரும் துக்கத்தால் நெஞ்சம் குமற கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த துயரமான சம்பவம் கண்டகொங்கணருக்கு துக்கம் சூழ்ந்தது. உடல் அழிந்து போகுமென்றுசாமான்யர் அழலாம். அழியாது காக்கும் நெறியறிந்த சித்தர் கவலை கொள்ளலாமா? தான்கற்ற கூடுவிட்டுக் கூடுபாயும்  பரகாயப் பிரவேசம் மூலம்,  தனது உடலை மறைவாக  ஓர்இடத்தில் உதிர்த்துவிட்டு இறந்து போன பளிங்கர் இளைஞர் சடலத்துள் புகுந்து உயிர் பெறசெய்தார்.   உற்றார், உறவினர்,நண்பர்கள் என சுற்றிலும் எல்லாரும் கதறிக்கொண்டிருக்க பளிங்கர் இளைஞன் அப்போதுதான் உறங்கி எழுப்பவன் போல் உயிர் பெற்று எழுந்ததைப் பார்த்து அவர்கள் அனைவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அங்கு மறைவாக மறைத்து வைத்திருந்த கொங்கணர்  உடலை பளிங்கர் கூட்டம் கண்டவர். உயிரணைந்த உடல் உடன் எரிதீயில் நனைய வேண்டும். மரப்பட்டைகளை கொண்டு எரித்து சாம்பலாக்கினர் சகல சித்திகளும் பெற்ற சித்தர்களுக்கு,யோகிகளுக்கும்,ஞானிகளுக்கு எந்த உடலும் தேவையுமில்லை, சொந்தமுமல்ல. உயிர் நடமாட ஒரு கூடு மட்டும் தேவை. அதுவும் வாய்க்கவில்லை எனின் தனித்து சூக்கும உடலாய் அலையவும் அறிந்தவர்கள்.இப்போது பளிங்கர் உடலில் புகுந்த கொங்கணர்  அரிய மூலிகைகளின் இரகசியத்தை அனைத்தையும் கண்டறிந்தார். அனைத்து காய சித்திகளையும்  மூலிகையும் தெரிந்துக்கொண்டார். மகா சித்தர் போகரையும் அகத்தியரையும் சந்தித்து அவர்களிடமிருந்து ஞானம் பெற்றார். பிண்டத்தினை அறிந்தால் அண்டத்தை உணரலாம்.அந்த ஆதிப்புள்ளியையும் போகரிடம் இருந்து அறிந்து வைத்திருந்தார்.அந்த ஆதி,அந்தம் புள்ளியை நோக்கி,அக்கானத்தில் மூச்சடக்கி நிஷ்டையில் ஆழ்ந்தார். கவிந்த வாழைப் பூவைப்போல முகத்தை கீழ் நோக்கி வைத்துக்கொண்டு, பெண்பாம்பு  (வாலை)     போல் சுருட்டி சீறியபடி கிடக்கும் குண்டலினி சோதி  தட்டி எழுப்பினார். மூலத்தில் சோதியை கண்டவரே கொங்கணர். தடையற்ற அந்த ஆனந்த மகிழ்ச்சியில் நிஷ்டையில் இருந்த போது ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று‘சட்டென’ கண்ணிமையில் எச்சமிட.., சித்தரின் இமைப்பகுதி திறக்க கோபக்கனல் பட்டு அந்த கொக்கு எரிந்து சாம்லாகி தரையில் விழுந்தது. நிஷ்டை கலைந்து போயிற்று.
நீண்ட காலம் ஆகாரமற்று இருந்த காரணத்தால் வயிறு பசித்தது. ஆகாரம் வேண்டி ஒரு இல்லத்தில் முன் நின்று உண்ன உணவு வேண்டினார். அந்த இல்லத்தரசி கொங்கணர் வந்து நின்றதையே கண்டு கொள்ளாது, வெளியிலிருந்து வந்த தன் கணவனுக்கு ஆசனமிட்டு, தலைவாழை இலை விரித்து சாப்பாடும்,பதார்தங்களையும் இட்டு பரிமாறினாள். கணவனுக்கு உணவு பரிமாறுவதிலும், தாகம் தீர்க்க தண்ணீரும்,தாம்பூலம் தரித்து கொடுப்பதிலும் கவனம் பிசகாது நடந்துகொள்வதை கண்ட கொங்கணரும் உடல் கோபத்தில் நடுங்கியது. இல்லத்தில் பத்துபாத்திரம் தேய்க்கும் அற்ப மானுடப் பெண், சகல சித்திகளும் கைவரப் பெற்ற தன்னை வாசலில் காத்து நிற்க வைத்து காயப்படுத்தி விட்டாளே என்று அவளை சினம் பொங்க விழித்துப் பார்த்தார். “ ஓ…,என்னை கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா “என்று அவரது சினப்பார்வையை சட்டை செய்யாது அந்தப் பதிவிரதை கேட்டதும் அப்படியே அதிர்ந்து போனார் கொங்கணர். இந்த சாமான்ய பெண்மணிக்கு இந்த உடன் அறியும் சித்து எப்படி சாத்தியமாயிற்று? மனமானது நம்மிடத்திலேயே உள்ளது என்ற போதிலும், நமக்கே தெரியாத ஆழ்கடல் இரகசியங்கள் அதனுள் புதைந்து கிடக்கின்றன. இம்மண்ணுலகில் சாதாரண மானுடர் இடத்திலும் அதீத சித்து இருப்பதை கொங்கணர் அறியக்கூடிய வாய்ப்பு இது. பதிவிரதை தர்மத்தின் முன்னால் தனது சித்து ஏதும் செல்லா என்பதை உணர்ந்தார். இச்சம்பவத்தினால் மிகவும் மனம் நொந்த போனார் கொங்கணர்.இதனிலும் மேல் தனது வலிமையை பெருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான இடமும்,வழிமுறைகளை தேடி அலைந்தார். கானகத்தில் இடம் தேடி அலைந்தபோது அவர் காதுகளில் சங்கு,செகண்டிகள் முழங்க, மத்தளம், பேரிகையும் ஒலியும் கேட்டது. அப்போது கொங்கணர் கண்ணெதிரே ஒரு சமாதி தெரிந்தது.கைகூப்பி வணங்கி நின்றபோது போது சமாதியிலிருந்து சோதி சொரூபியாக கெளதம மகரிஷி வெளியே வந்தார். கொங்கணர் கெளதம மகரிஷி வணங்கியபடி தன் வாழ்க்கை வரலாற்றினை அனைத்தும் அவருடன் பகிர்ந்து கொண்டார். ”சுவாமி நான் இன்னும் மேலான பரிபூரண சித்து அடைய விழைகிறேன். அதற்கு தாங்கள் அருள் புரிய வேண்டும்” என்று கொங்கணர் வேண்டினார். “ நான் அது ஆனேன் என்பது வேதாந்தம். அது நான் ஆனேன் என்பது சித்தாந்தம். முன்னதில்  நான் எனும் முனைப்பு தோன்றி ஆன்மா முற்பட்டு நிற்க , பிரம்மம் பிற்பட்டு நிற்கிறது. ஆனால்,  பின்னதில் பிரம்மம் முன்னிற்க,நான் எனும் ஆன்மா பின்னிற்கிறது .இவைகளை தாண்டி நீ இன்னும் உயர் சித்தி அடைய சமாதி நிலை தேவை. அதற்கேற்ற இடமும் இதுதான் ”            என்று  ஓரிடத்தினை கெளதம மகரிஷி காட்டினார். கொங்கணர் அந்த இடத்தில் இறங்க மழை பொழிகிறது. அவர் சாமதி இருந்த இடத்தில் பூமி மூடிக்கொண்டது. துக்கமிலா ஒளிமயமான மனநிலை மனநிலை மனத்தை உறுதிப் படுத்துகிறது. மனமானது ஒன்றையே எண்ணியிருந்து வேறு நிலையில் நிலைக்காதிருக்க அதுவே சமாதி. பரத்தோடு சேர்ந்து பரம் பொருளாக ஆகும் நிலை அது. ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் சமாதி நிலையில் இருந்தார் கொங்கணர். பற்றற்ற சித்தருக்கும் சித்துக்கள் மீதான ஆசைப் பற்று அற்று போய்விடுவதில்லை.சமாதி நிலையிலிருந்து திரும்பிய கொங்கணர் இன்னும் உயர்நிலை பெறும் வேட்கையில் யாகம் செய்ய முற்பட்டார். இதனை அறிந்த கெளதம மகரிஷி கோபமுற்று கொங்கணர் சித்தரிடம் வந்தார்.
“சித்தர்கள் வாழ்க்கை முறை வேறு;முனிவர்கள் வாழ்க்கை முறை வேறு. முனிவர்கள் செய்யும் யாகங்களை சித்தர்கள் செய்தல் தவறு. சித்தர் செய்யும் ஒரு நாளும் முனிவராவதில்லை. சாபங்களும் வரங்களும் அருளும் சக்தி எங்களுக்கு மட்டுமே உரியது. நீ செய்தது அதிக பிரசங்கித்தனமான செயல். செயலுக்குரிய செயலால் இதோ பிடி சாபம்..”  – என்று கெளதம மகரிஷி சபித்தபோது கொங்கணர் மிரண்டு போனார்  “சுவாமி, சாபம் ஒன்று உண்டெனில் விமோசனம் என்ற ஒன்று உண்டல்லவா?  தயை கூர்ந்து சாப விமோசனம் தாருங்கள் “              என வேண்டினார். “நீ தில்லை வனத்துக்குச் சென்று தாயாரைத் துதித்து சாப விமோசனம் பெறுவாய்..” தில்லை வனத்துக்குச் சென்ற கொங்கணர் தாயாரை துதித்த போது அங்கு வந்தபராசர முனிவரை வணங்கி சாப விமோசனம் பெற்றார். திருமாளிகைத் தேவரைக் கண்டு வணங்கி பல இரகசிய சாதனை முறைகளை அறிந்து கொண்டு தீட்சை பெற்று, நிர்வாண தீட்சையும் பெற்றார். செரூப மணியை வாயில் வைத்துக்கொண்டும் கமலினியை இடுப்பில் கட்டிக்கொண்டும் அட்டமா சித்திகள் யாவும் செய்தபடி ஆகாய மார்க்கமாக உலகமெங்கும் உலா வந்தார் கொங்கணர். கொங்கணருக்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட சீடர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் யோக ஞான சித்திகளைப் பெற வழிகாட்டினார். இறுதியாக் திருவேங்கடமலைக்குச் சென்று தவம் செய்து அங்கேயே சமாதி நிலையடைந்தார்.  கொங்கணச் சித்தர் இயற்றிய பாடல்கள்,    ‘’ கொங்கண நாயனார் வாலைக் கும்மி”             என அழைக்கப்படுகின்றன இப்பாடல்கள் மிகச் சிறந்த கருத்துகளைக் கொண்டவை. மக்களுக்கு நல்லறிவைப் புகட்டுபவை. ஊத்தைச் சடலமென றெண்ணா – தேயிதை உப்பிட்ட பாண்டமென றேண்ணாட்தே பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப் பார்த்துக்கொள் உன்ற ணுடலுக்குள்ளே.  இவ்வுடலை மாயமென்றும்,நிலையில்லாமை என்று எண்ணாதே.   சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இவ்வுடல் மூலம்   தான் யோகம் செய்து குண்டலினி சக்தியை வசப்படுத்தி இறவா  நிலையை எய்த முடியும். இவ்வுடலை ‘ஊத்தை சடலமென்று  எண்ணாதே” உப்பு என்பது உணவு, வெறும் உணவை மட்டுமே   உட்கொள்கின்ற உடலல்ல.இந்த உடலைக்கொண்டுதான் சித்தம்   அடைய முடியும்

 

திருமூலர்

திருமூலர்

பெயர்: திருமூலர்

பிறந்த தமிழ் மாதம்: புரட்டாசி

தமிழ் பிறந்த நட்சத்திரம்: அவிட்டம்

ஆயுள் காலம்: 3000 ஆண்டுகள், 13 நாட்கள்

ஜீவசமாதி அடைந்த இடம்: சிதம்பரம்

திருமூலர்  இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் இவரே முதல் சித்தர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது திருவாவடுதுறையில் பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சதுரகிரி மலை பல சித்தர்கள் தங்கித் தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது. சதுரகிரி மலையின் விசேஷத் தன்மை பற்றி நந்தீசுவரர் தான் திருமூலருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து ஒரு உருவமாக அமைந்ததால்தான் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்ததாகத் திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் வருணிக்கிறார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும்.
திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார். நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169) என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் சுந்தரர் என்ற பெயரும் இருந்துள்ளது. இவர் நெடுங்காலம்     தவத்தில் இருந்து ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடினார் என்பர். இவர் காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு. இவர் சீடர்களில் காலாங்கியும்,கஞ்சமலைச் சித்தரும் இன்றியமையாதவர்கள். இவரது சமாதி சிதம்பரத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், போகர் என்னும் சித்தர். திருமூலர் இயற்றியவை:
திருமந்திரம்,
வைத்தியம் ஆயிரம்,
கருக்கிடை வைத்தியம் 600,
பெருங்காவியம் 1600 என்பனவாகும்.
திருமந்திரம்,யோகத்தின் படிநிலைகளையும்,சித்தாந்த வேதாந்தக் கருத்துகள்,மந்திர,தந்திர முறைகளையும் விளக்கியமைக்கிறது.
திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவரைப் பற்றி,திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் திருவந்தாதி,சதுரகிரித் தலபுராணம் போன்ற நூல்கள் குறிப்பிடும். சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர்.
இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம்,அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம்,திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார். பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார்,திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும்,அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.
அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.
1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2. திருமூலர் சிற்ப நூல் – 1000
3. திருமூலர் சோதிடம் – 300
4. திருமூலர் மாந்திரிகம் – 600
5. திருமூலர் சல்லியம் – 1000
6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
10. திருமூலர் பெருங்காவியம் – 1500
11. திருமூலர் தீட்சை விதி – 100
12. திருமூலர் கோர்வை விதி – 16
13. திருமூலர் தீட்சை விதி – 8
14. திருமூலர் தீட்சை விதி – 18
15. திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
17. திருமூலர் ஆறாதாரம் – 64
18. திருமூலர் பச்சை நூல் – 24
19. திருமூலர் பெருநூல் – 3000
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் நடுவணை ஞானம் 30
திருமூலர் ஞானக் குறி 30
திருமூலர் சோடச ஞானம் 16
திருமூலர் ஞானம் 11
திருமூலர் குளிகை 11
திருமூலர் பூஜாவிதி 41
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 100… என்ற நூல்களும் இயற்றியதாக சொல்லப் படுகிறது.போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு,கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.யோக மார்க்கமும், ஞானத் தேடலும் உள்ளவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது, திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருமூலர் பற்றி பல கதைகள் வழக்கத்திலுள்ளன. அதில் எதை நம்புவது என்பதில் ஐயம் எழுவது இயற்கையே. ஆகவே அது பற்றிய தேடல்களை விட்டு விடலாம்.
திருமூலர் என்ற ஒரு சித்தர் வாழ்ந்தது உண்மை,அது போதும்.. இவர் நந்தீசரின் சீடராவார். இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை “மந்திர மாலை” என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர். திருமந்திரம் என்று அழைக்கப்படும் அந்த நூலில் பல யோக ரகசியங்களையும்,வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார். தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப்
பற்றத் தலைப்படும் தானே” – திருமந்திரம்.
இவர் மேலை சிதம்பரம் என்னும் இடத்தில் சமாதி அடைந்ததாக சொல்லப் படுகிறது.
ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி
ஓம் ககன சித்தராய வித்மஹே பிரகாம் சொரூபினே தீமஹி தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்
1) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
2) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
3) அன்பே சிவம் ஆகியவைகளே ஆகும்.
திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும்,இலக்கியங்களையும், நூல்களையும் தொண்டங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றபடுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டுவந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயற்று பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கு சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கலாந்தில் இன்று அருங்காட்சியத்திலும் ஒன்றாக சாட்சி கூறுகிறது. இவரது திரு நூலுக்கு தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், பின்னர் அந்த நூல்”திருமூலர் திருமந்திரம்” என்று வழங்கப்பட்டது. இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது. கிழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது பின்னர் வந்த பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு,கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

திருமூலரின்  திருமந்திரம்.

திருமூலரின்  திருமந்திரம் 63 நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும்,திருவள்ளுவரின் குருவாகவும் அறியப்படும் திருமூலரால் இயற்றப்பட்டது திருமந்திரம் ஆகும். இந்நூல் சைவ திருமுறைகளுள் பத்தாம் சைவ திருமுறையாக போற்றப்படுகிறது. திருவாவடுதுறையிலிருந்தவாரே இந்நூல் இயற்றப்பட்டதாக வரலாற்றில் காணக்கிடைக்கிறது. திருமூலர் இயற்றிய இத்திருமந்திரம் ஒன்பது தந்திரங்களில்(இயல்கள்) மூவாயிரம் பாடல்களை உடையது.’மூலன் உரை செய்த மூவாயிரந்தமிழ் ஞாலம் அறியவே நந்தியருளது’ என்ற திருமூலரின் வாக்கினாலேயே இதனை அறியலாம். வேறு பெயர்கள்: திருமந்திர மாலை,மூவாயிரந்தமிழ் என்பன திருமந்திரத்தின் வேறு பெயர்கள் ஆகும். நூல் பெருமை: இந்நூ்ல பண்டைய இந்திய சித்தர்களின் அறிய கண்டுபிடிப்புகளையும் வாழ்வியல் உண்மைகளையும் விளக்குகிறது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்தூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. இந்நூ் இறைவனை துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கை வழிகாட்டி நூலாகவும் சாத்திர நூலாகவும போற்றப்படுகிறது பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம் குண்டலினி யோகம் மருத்துவம் நல் ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும் அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்தில் பதியும்படி கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாம். தோத்திரத்திற்குத் திருவாசகம் சாத்திரத்திற்குத் திருமந்திரம் எனச் சான்றோர் கூறுவர். மேலும் சிவன் அன்பு வடிவானவன் என்னும் அரிய உண்மையினை கூறும் திருமூலரின் இத்திருமந்திரமே சைவ சித்தாந்தத்தின் முதல் நூலாகும்.எல்லாம் வல்ல பரம் பொருளாகிய இறைவருளால் பல ஆயிரம் ஆண்டுகள் யோக நிலையில் இருந்து தவம் செய்தவர். யோகியாகவும் எல்லாம் வல்ல சித்தராகவும்,பலகலை அறிந்த ஞானியாகவும், அருள் நிறைந்த நாயன்மாராகவும் விளங்கினார்! இறைவன் பெரிய கருணையினால், உலகுக்கு அளித்த ஆகமப் பொருளை அருந்தமிழ் மறையாய் மூவாயிரம் மந்திரங்களில் நமக்குத் தந்துள்ளார்.
திருமந்திரம் 10ஆம் திருமுறை. தோத்திரமாகவும், சாத்திரமாகவும், யோகநூலாகவும்,ஞானநூலாகவும், தந்திர நூலாகவும், மந்திரங்கள் அமைந்த பாராயண நூலாகவும், சமய, சமூக, ஒருமைப்பாட்டு நல்லிணக்க நூலாகவும் திகழ்ந்து உலகுக்கு உயிராக விளங்குகிறது திருமந்திரம். “இறைவனே தமிழொடு – வடமொழியிலும், ஆரியத்தொடு தமிழிலும் உடனே சொல்லிக் காரிகையார்க்குக் கருணை செய்தானே” என்கிறார் முத்தமிழ் வேதம் தத்துவம் சதாசிவம். திருமூலர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் இயற்பெயர் சுந்தரர். தமிழகத்தில் பொதிகை மலையில் – அகத்தியர் – தமிழ்ச் சங்கத்தில் உலக நூல்களைக் கற்றார். பின், கயிலைக் குருகுலம் சென்று, ஞான நூல்களான அருமறைகள், ஆகமங்களை நந்தியெம் பெருமானிடம் கற்றார். நந்தி அருளால் ‘நாதன்’ என்ற பட்டம் பெற்று, சுந்தர நாதர் ஆகித் தவம் செய்தார்.
கயிலையில் இவருடன் பாடங்கேட்டவர்கள்: சனகர் – சனந்தனர்- சானாதனர் – சனற்குமாரர், பதஞ்சலி,வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய ஏழுபேருடன்,தானும் உடனிருந்து கற்றதாக அகச்சான்று கூறுகிறார். பதஞ்சலி – வியாக்கிர பாதருடன் இவர் தில்லைக்கு வந்து திருக்கூத்து தரிசனம் செய்தார். மீண்டும் கயிலை சென்றார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலே ஆசிரமங்கள் அமைத்துக் தங்கிவிட்டனர். தில்லைக் கோபுரத்தில் – திருமூலர்சிலையை காணலாம். இரண்டாவது முறையாக அகத்தியரைக் காண பொதிகை நோக்கி வருகிறார். ‘குறு முனிபால் உற்றதொரு கேண்மையினால் உடன் சில நாள் உறைதற்கு, நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார்’ என்கிறார் சேக்கிழார். பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும்,விளங்குபவர் இறைவன் இதனை மாணிக்கவாசகர்,முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே! என்கிறார் மாணிக்கவாசகர் உடம்பார் அழியின் உயிரால் அழிவர்  திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள திருமந்திரம் என்ற ஒப்பற்ற தத்துவ நூலை இயற்றியவர்தான் திருமூலர். “காயமே இது பொய்யடா…  வெறும் காற்றடைத்த பையடா” என்ற மாயாவாதத்துக்கு எதிராக, அறிவு பூர்வமான யதார்த்த வாதத்தை முன்வைத்த சிந்தனைச் சித்தர்தான் திருமூலர். சங்கன்னர் என்ற சித்தரின் அவதாரமாக கருதப்படும் திருமூலர், சிதம்பரம் தில்லை நடராஜரின் சன்னதியில், நீண்ட காலம் நிட்டையில் அமர்ந்துதான்,உலகுக்கு மிகச் சிறந்த தத்துவ நூல்களை வழங்கியுள்ளார். உடலை வருத்தித்தான் ஞானத்தை அடையவேண்டும் என்ற கருத்தை மறுத்த அவர், பலவீனமான உடலை வைத்துக்கொண்டு வலிமையான ஞானத்தை அடைய முடியாது என்பதையும் உறுதிப்படக் கூடியுள்ளார்.
இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும்,
திருமூலர் அறுநூற் றொன்று,
திருமூலர் வைத்தியம்,
திருமூலர் ஞானம்,
திருமூலர் வழலைச் சூத்திரம்,
திருமூலர் பல திரட்டு,
திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். உடல் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை நமது ஆன்மீக மரபில் அழுத்தமாகப் பதிய வைத்தவர் திருமூலர்தான். உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ள தெளிந்தமாருக்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காணா மணி விளக்கே உடலும், அதில் திரண்டுள்ள ஊனும் எம்பெருமான் கோயில் என்று சொல்லும் திருமூலர்,வாயைக் கோபுரம் என்றும், உயிரை சிவனென்றும் சித்தரிக்கிறார். புலன்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை என்பதால் அவற்றை கள்ளப் புலன்கள் என்கிறார். இயல்பான மனித வாழ்வின் மூலமாக மேன்மையை அடைய முடியும் என்பதே திருமூலரின் சாரமான கருத்து என்று சொல்லலாம். இயற்கைக்கு மாறான வெறுப்பும், சலிப்பும், விரக்தியும் மனிதனுக்கு சிறுமைப் பண்புகளைத்தான் அதிகரிக்குமே தவிர, பேரியல்புகளை வளர்க்காது. திருமூலரின் ஞான மார்க்கம் இந்த அடிப்படையில் அமைந்ததுதான்.

பொதுவாக சித்தர்களின் தத்துவமே, மனித வாழ்விலிருந்து இறைமையை நாடுவதுதான். இறை வாழ்வு என்பதே இயற்கையோடு இயைந்த வாழ்வுதான் என்பதே சித்தர்களின் சிந்தனை. திருமூலர், அதைக்கொஞ்சம் அழுத்தமாகவும், விரிவாகவும் சொல்லியிருக்கிறார். அவர் இயற்றியுள்ள திருமந்திரம், நல்வாழ்விற்கு ஒருமந்திரம்.“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..” என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம். சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும் ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக இருந்து வருகிறது.  முற்றிலும் தவறான பதிவு என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்.   மொழி இல்லாமல் எது நிலைக்கும்?  தமிழின் முதல் இலக்கண நூலைத் தந்தவரே அகத்தியர்தான் என்பதை ஆன்றோரும் சான்றோரும் ஆணித் தரமாக சொல்லுகிறார்கள்.  ஞானமும் தமிழும் இணைந்த போதுதான் சித்தர்களின் தத்துவம் செழுமை பெற்றது. மொழியை இழந்த சமூகம் வரலாற்றையும் இழந்துவிடும்.  மொழி என்ற வேர்கள் இல்லாமல் சமூகவிருட்சம் தழைக்கவோ, செழிக்கவோ முடியாது.  முக்காலத்தையும் அறிந்த சித்தர்களுக்கு முத்தமிழின் பெருமை தெரியாமலா போய்விடும்! தமிழைப் பாடுவதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான் என்று புளங்காகிதம் அடைந்திருக்கும் திருமூலர் தமிழின் பெருமையும் இறைவனின் அருமையும் இரண்டறக் கலந்திருப்பது குறித்து மனம் குழைந்து கூறி இருப்பதைக் கவனியுங்கள்… “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்தவர் ஈசனை நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதியது விரும்பாரன்றே” (திருமந்திரம்) அதனால்தான்  “அருமலர் மொழியுஞான அமுதர்த செந்தமிழைச் சொல்வாம்” என்கின்றார் ஞானவெட்டியான். ஆம்… தமிழை அவர் வெறும் மொழியாக மட்டும் பார்க்கவில்லை.  ஞானாமிர்தமாகப் பார்க்கிறார். அதுமட்டுமல்ல.. சித்தர்களின் சிறப்பை பற்றி சொல்ல வரும்போது, “பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தென்தரை மீதிற் றெளிந்தவர் சித்தரே” என்றும் பாராட்டுகின்றார்.  தங்களின் தொன்மமான பெருமைகளில் தோய்ந்தது மட்டுமல்லாமல், தமிழையும் உணர்ந்ததாலேயே சித்தர்கள் சிறப்புப் பெற்றார்கள் என்கிறார். “பொதிகை மேவு மகத்தீர ராலெனது போதத் தமிழ் வாக்கியம்” என கேட்பவரை கிறுகிறுக்க வைக்கும் தன்தமிழ் ஆற்றல்,பொதிகையில் வாழும் அகத்தியன் தந்த கொடை என்று போற்றுகிறார். அகத்தியர் தமிழைப் பற்றி என்ன சொல்லுகிறார்? “சிந்தையுறு ஞானத் தெளியவுரை பாடுதற்கு  வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே – செந்தமிழ் நூல் காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும் தேவியென்னும் பூரணியே சீர்” (அகத்தியர் ஞானம் 100) என்று தமிழை பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே சித்தரிக்கின்றார்.

பட்டினத்தாரே, மனித வாழ்வின் முழுமையான தத்துவத்தையும், தமிழின் முச்சங்கங்களின் பெயராலேயே விளக்குகிறார். “முதற்சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்  இசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -கடைச் சங்கம் இம்போதது ஊதும் அம்மட்டோ  நாம் பூமி வாழ்ந்த நலம்” இப்படி மூலிகையைச் சொன்னாலும், முக்தி பற்றிச் சொன்னாலும், முத்தமிழில் குழைத்தே சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள். சித்தர்கள் சித்தத் தெளிவு மட்டுமல்ல, செந்தமிழ்த் தெளிவும் கொண்டவர்கள் என்பதை இனியேனும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமூலர் வரலாறு செந்தமிழ்ச் சிவாகமம்:`சிவபூமி` எனப் போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத் திகழ்வது; சைவ சமயமாகும். உலகமக்கள் உள்ளத்திலே தெய்வம் உண்டு என்னும் தெளிவினை நல்கி அன்பு நெறியில் ஒழுகப்பணித்து அறிவு நெறியை வளர்ப்பன தெய்வநெறிச் சிவம் பெருக்கும் சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளாகும். திருமுறைப் பனுவலாகிய அருள் நூல்களுள் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, தமிழ் மூவாயி ரமாகிய திருமந்திரமாகும். திருமந்திரமாலை என்னும் இத்திருமுறை, சைவசித்தாந்த சாத்திரமாகவும் இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திர மாகவும் விளங்குந் தனிச் சிறப்புடையது; வேத நெறியாகிய உலகியலொழுக்கத்தையும் மிகு சைவத் துறையாகிய சிவாகமவுண்மைகளையும் இனிய தமிழால் விரித்து விளக்குவது. உலக மக்கள் எல்லோரும் பொதுவாக மேற்கொள்ளுதற்குரிய நல் வாழ்க்கை முறையினையும் சிவநெறிச் செல்வர்களாற் சிறப்பாக மேற் கொள்ளத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருங்கே விளக்குவதாய்ச் சைவசித்தாந்த மெய்ந்நூற் பொருளை அறிவுறுத்தும் செந்தமிழ்ச் சிவாகமமாகத் திகழ்வது இத்திருமந்திரமேயாகும்.
திருத்தொண்டர் திருவந்தாதியில்: திருமந்திர மாலையாகிய இத்திருவருட் பனுவலை அருளிச் செய்தவர்,இறைவனருளால் எண்வகைச் சித்திகளும் பெற்றுச் சிவமே பெறுந்திருவினராய் எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராய்ப் பன்னெடுங்காலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`என்னும் நல்ல குறிக்கோளுடைய ராய்த் தாமுணர்ந்த ஞானப்பொருளைத் தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு வழங்கியருளிய திருமூல நாயனாராவர். இவ்வாசிரியரை.
“நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`
-தி.7 ப.35 பா.5
என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு, திருத்தொண்டத் தொகையின் வகையாகிய (தி.11)திருத்தொண்டர் திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியில்,
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டெ னுச்சி
அடிமன்ன வைத்த பிரான்
மூல னாகிய அங்கணனே. -தி.11 ப.33 பா.36 எனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார். “நற்குடிகள் நிலைபெற்று வாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்“ என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன் அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும் வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப் பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார் என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.
திருத்தொண்டர் புராணத்தில்:அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், திருத் தொண்டத் தொகையின் விரியாகத் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்திலே திருமூல நாயனாரது வரலாற்றினை இருபத்தெட்டுப் பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.
தென்னாடு வருகை: திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங் காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்;அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி),விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத் தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார். அங்குத் திருவேகம் பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார். கல்வியிற் கரையிலாத காஞ்சி நகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதி கையை யடைந்து திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும் பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய் யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.

 சாத்தனூரில்: தில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து மன்னுயிர்க்கு அருள் புரியுந் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை வலம் வந்து வழித்துணை மருந்தாகிய மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறையீசர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடு பட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்துகொள்ள உயிர்நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து வெற்றுடலாய்க் கிடந்தான். அவனது உயிர்பிரியவே அவனால் அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கிநின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.
திருமூலராதல்: ஆக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவருள்ளத்திலே `பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால் தோன்றியது, `இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா“ எனத் தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். அவர் ஆயனுடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள் யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.
ஊரவர் உண்மை உணர்தல்: அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக, மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி “என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ“ என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே செல்பவள் திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள்.`இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்` என எண்ணினாள்; அவரைத் தளர்ச்சியின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடு தற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவர் தம்மைத் தீண்டாதபடி தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். “நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்“ என்று புலம்பி வாட்ட முற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப்பார்த்து, “நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார். தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். `இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று;சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்` எனத் தெளிந்தார்கள். `இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்` என மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

திருவாவடுதுறையில் சிவயோகம்:சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.`சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார். திருமந்திரம் அருளிச் செய்தல் இங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில், ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள், நின்றனன் மூன்றினுள்,நான்குணர்ந்தான், ஐந்து வென்றனன், ஆறு விரிந்தனன்,ஏழும்பர்ச் சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10பாயி. பா.2 என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார். திருமூலரது முன்னை நிலை: இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து,திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது.திருமந்திரத்தில் அகச்சான்று – நந்திதேவர் அருள்:திருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்திதேவர் பால் ஞான நூற் பொருள்களை ஓதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது, நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே. -தி.10 பா.6 எனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

திருமூலர் வரலாறு தொடர்ச்சி….

 சிவயோக சித்தர்: சிவயோகியார் திருமூலராவதற்கு முன் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றவர் என்பதும், பசுக்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டே இறைவன் அருளின்வழி தம் உடம்பினை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் செலுத்தி மீண்டுவந்து தம் பழையவுடம் பினைத் தேடிப் பார்த்து இறைவனருளால் அவ்வுடம்பு மறைந்தொழிய அதனைக் காணாதவராய், தமது முன்னைய உடம்பினாற் பயனில்லை யெனவுணர்ந்து இறைவன் திருக்குறிப்பின் வண்ணம் மூலன் உடம்பிலேயே நெடுங்காலம் விரும்பித் தங்கியிருந்தனர் என்பதும், “அரிய தெனக்கில்லை அட்டமாசித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத்தானே“ -தி.10 பா.626 எனவும் நந்தியருளாலே நாதனாம் பேர்பெற்றோம் நந்தியருளாலே மூலனை நாடினோம் நந்தி அருளாஅது என்செயும் நாட்டினில் நந்திவழிகாட்ட நானிருந் தேனே. -தி.10 பா.7எனவரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். மேற்குறித்த திருமந்திரம் 7ஆம் பாடலில் `நந்தி அருளா அது`எனத் திருமூலர் சுட்டியது, இறைவனால் மறைக்கப்பட்ட தமது பழைய உடம்பினை. நந்தியால் அருளப்படாத அப்பழைய உடம்பு நாட்டிலுள்ளோர்க்கு என்ன பயனைத் தரவல்லது? ஒரு பயனையுந் தாராது என அதனை, வெறுத்து விடும் நிலையில் `நந்தி அருளா அது என்செயும் நாட்டினில்` (தி.10 பா.7) என வினவிய குறிப்பு ஆழ்ந்துணரத் தகுவதாகும்.
திருவருட் செயல்: இவ்வாறு இறைவன் தமது பழைய உடம்பினை மறைத்து மூலன் என்னும் ஆயனுடம்பிற் புகச்செய்தருளிய இப்படைப்புத் தொழில், அம்முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறங்களைத் தமிழ்ப் பாக்களால் நன்றாகப் புனைந்து போற்றுதற்கேற்ற நலந்தரும் வாழ் வினை நல்கியதென வுணர்ந்த சிவயோகியார், பரகாயப் பிரவேசம் என்னும் சித்தித் திறத்தால் தாம் புகுந்திருந்த மூலனுடம்பினை “எனது முன்னைத் தவத்தின் பயனாக எனக்கு இறைவனால் நன்றாகத் திருத்தமுறச் செய்தளிக்கப்பட்ட நல்ல படைப்பு இதுவாகும்“ எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தனர் என்பது, பின்னை நின்றென்னே பிறவி பெறுவது முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -தி.10பா.20 எனவரும் அவரது வாய்மொழியால் இனிது விளங்கும்.
ஆவடுதுறையில் அருள்யோகம்:மூலனுடம்பிற் புக்க சிவயோகியார், திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள சிவபோதியாகிய அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் இறைவனை ஞானத்தால் தொழுது சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது, சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. -தி.10 பா.18 எனவும்,இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. -தி.10 பா.19எனவும், ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து நானு மிருந்தேன்நற் போதியின் கீழே. -தி.10 பா.21எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது புலனாம். இத்திருப்பாடலில் `நந்திநகர்` என்றது திருவாவடு துறையினை.
திருமந்திரமாலை என்னும் பெயர்:சிவபெருமான் திருவடிகளைச் சென்னியிற் கொண்டு அம்முதல்வன் அருளிய சிவாகமப் பொருளை விரித்துரைக்க எண்ணிய திருமூலநாயனார் சிவனருளைச் சிந்தித்திருந்து தமிழ் மூவாயிரமாகிய மந்திரப்பனுவலை அருளிச் செய்தார் என்பதும், இவ்வருள் நூலுக்குத் திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை என்பதும், நந்தி யிணையடி நான் தலை மேற்கொண்டு புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய் அந்தி மதிபுனை அரனடி நாள்தோறும் சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. -தி.10 பா.12 எனவும், பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. -தி.10 பா.25 எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு புலனாம்.
திருக்கூத்துத் தரிசனம்: திருமூலர் தம்முடன் இருந்து நந்தி தேவர் பால் உபதேசம் பெற்றவர்களாகச்(சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்னும்) நந்திகள் நால்வரையும், சிவயோகமாமுனி, தில்லையில் திருக்கூத்துத் தரிசனம் கண்ட பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாத முனிவர் ஆகியவர்களையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளார் (தி.10 பா.6). இதனை நோக்குங்கால் இவர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய முனிவர்கள் காலத்தில் உடன் வாழ்ந்த சிவாகமச் செல்வர் என்பது உய்த்துணரப்படும். திருமூலர் தில்லையில் திருக்கூத்துத் தரிசனங்கண்டு இவ்வுலகில் நெடுங்காலம் இருந்தவர். இச்செய்தி, செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றும் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. -தி.10 பா.13 எனத் திருமூலரே தமது வரலாற்றைக் குறிப்பிடுதலால் இனிது விளங்கும்.
திருமூலர் மரபு: இவ்வாறு நெடுங்காலம் இந்நிலவுலகில் தங்கியிருந்ததன் காரணம், இறைவனுடன் பிறப்பின்றி விளங்கும் அருட் சத்தியாகிய புவனபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ் வன்னையின் அருளால் இவ்வுலகிற் பத்திநெறியையும் யோக நெறியையும் ஞான நெறியையும் நிலைபெறச் செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும் தமிழ் வேதமாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற்பொருட்டே என்பதனைத் தம் மாணாக்கர்களாகிய இந்திரன்,மாலாங்கன் ஆகியவர்களை நோக்கி அறிவுறுத்தும் முறையில் அமைந்தன, இருந்தவக் காரணங் கேளிந் திரனே பொருந்திய செல்வப் புவனாபதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. -தி.10 பா.14 எனவும், மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே. -தி.10 பா.16 எனவும் வரும் திருமந்திரத் திருப்பாடல்களாகும்.
தேவர்க்கெல்லாம் முதன்மை: திருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற்பொருளை அவர்பாற் கேட்டுணர்ந்த மாணாக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு,காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் எனத் தெரிகிறது. இச்செய்தி, மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என்வழி யாமே. -தி.10 பா.8 எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும்.
திருமூலர் பெருமை: மூலனுடம்பிற் புக்குத் திருமூலராய் எழுந்த சிவயோகியார், இறைவனருளால் சதாசிவமூர்த்தியை ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மையும் உடையவராகத் தாம் விளங்கிய திறத்தினை,நந்தி யருளாலே மூலனை நாடிப்பின் நந்தி யருளாலே சதாசிவ னாயினேன் நந்தி யருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் நந்தி யருளாலே நானிருந் தேனே. -தி.10 பா.29என வரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.
தமிழ் முனிவர்: தமிழ் முனிவராகிய அகத்தியரைக் காண விரும்பித் திருக் கயிலாயத்தினின்றும் தென்றிசை நோக்கிவந்த சிவயோகியார், வட நாட்டிற் சிவத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டு வருபவர், தென் னாட்டிற் காஞ்சி நகரத்தையடைந்து அங்கு வாழும் சிவயோகியர் பலரொடும் அளவளாவினார் எனச் சேக்கிழாரடிகள் குறித்தலாலும், தமிழ் நாட்டிற் பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவரொடு பழகிய நட்பினால் அவரைக் காணப் புறப்பட்டு வந்தமையாலும்,தமிழகத்தின் தெற்கெல்லையாகிய குமரித்துறையில் அருட்சத்தியாகிய அம்மையார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும், தம் காலத்தில் தமிழ்நாடு ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டிருத் தலையும்,வழிப்போவார் அச்சமின்றிச் செல்லவொண்ணாதபடி கொங்கு நாட்டில் வழிப்பறித் தொழில் நிகழ்தலையும் இந்நூலிற் குறித்துள்ளமையாலும் இந்நூலாசிரியராகிய சிவயோகியார் மூல னுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயரைப் பெறுவதற்கு முன்னரும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகள் வாழ்ந்த பயிற்சியுடையார் என்பது நன்கு தெளியப்படும். சிவாகமப் பொருளை நன்றாகத் தமிழிற் செய்யும்படி இறைவன் தம்மை நன்றாகப் படைத்தனன் எனத் தம்மைத் தமிழொடு தொடர்பு படுத்திக் கூறுதலால் அவர் தமிழ்க்குலத் தொடர் புடையவர் என்பதும், எனவே தென்தமிழ் நாட்டிலிருந்து வட கயிலையை அடைந்து மீண்டு தென்னாடுபோந்து திருவாவடு துறையிற் சிவயோகத் தமர்ந்து செந்தமிழாகமத்தை அருளிச்செய்து சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்த தமிழ்முனிவர் திருமூல நாயனாரென்பதும் நன்கு துணியப்படும்.
திருமந்திரம் அருளிய காலம்: இனி,திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும்,திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள் களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து ஆண்டுக் கொரு திருப்பாடலாக மூவாயிரந் திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனப் பெரிய புராணம் கூறும். சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது, “ஒப்பில் எழு கோடி யுகமிருந்தேனே` -தி.10 பா.13 எனவும் “இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி“ -தி.10 பா.19 எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். திருமூலரால் `இக்காயம்` எனச் சுட்டப் பட்டது. மூலனுடைய உடம்பெனக் கொள்ளுதல் பொருந்தும்
பதினெண் மொழிகள்: திருமூலர் திருமந்திரத்தை அருளிச்செய்த காலத்து இந் நாட்டின் தாய்மொழியாகிய தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப்பதினெண் மொழிகளில் வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்து கொள்வதில் அக் காலச் சான்றோர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம்மொழிகள் யாவும் உலகமக்கள் நலன்கருதி அறமுதற் பொருள்களையுணர்ந்து கொள்ளுதற்குரிய சாதனமாக இறைவனாற் படைத்தளிக்கப்பெற்றன. இப்பதினெண் மொழிகளிற் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப் பெற்றனர் என்பது, பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங் கண்டவர் கூறுங் கருத்தறிவா ரென்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. -தி.10பா.111 எனவரும் திருமந்திரத்தால் இனிது விளங்கும்.
ஐந்து தமிழ் மண்டலம்: இவ்வாறு தமிழுடன் திசைமொழிகள் பதினேழினையும் சேர்த்துப் பதினெண்மொழிகள் என வழங்கும் வழக்கம் சங்க நூல்களிற் காணப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில்`வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு` எனவும் சங்க காலத்தில் குணபுலம், குடபுலம், தென்புலம் எனவும் தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பகுக்கப் பெற்றிருந்தது. சங்க காலத்திற்குப் பின் தமிழ்நாடு சேர மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பெற்றது. இப்பகுப்பினை, “தமிழ் மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம்“ (தி.10 பா.1646) என வரும் திருமந்திரத்தில் திருமூலர் குறித்துள்ளார். தமிழ் நாடு மேற்குறித்த ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித் தனியாட்சியில் நிலைபெற்ற காலம் கடைச் சங்க காலத்திற்குப்பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினை யொட்டியதாகும். தில்லையிற் கூத்தப் பெருமான் அருட்கூத்தியற்றும் திருவம்பலத்திற்குப் பொன்வேய்ந்து அதனைப் பொன்னம்பலமாகத் திருப்பணி செய்தவன்; கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பர் வரலாற்றாராய்ச்சியாளர். எனவே அவ் வேந்தனாற் பொன் வேயப்பெற்ற திருச்சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் போற்றிய திருமூல நாயனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும். திருமூல நாயனார் இந்நிலவுலகில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்து அமர்ந்திருந்து தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழார் நாயனார் கூறுதலால் திருமூலர் திருவாவடுதுறையிற் சிவபோதியாகிய அரசின் கீழ்ச் சிவ யோகத்தமர்ந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூ றாண்டுகள் முற்பட்டதாகும். எண்ணிலிகாலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த அத்தவமுனிவர் கடைச்சங்கம் நிலவிய காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும் தமிழ் நாட்டில் சிவயோக நிலையில் இருந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ள வேண்டியுளது.
தொல்காப்பிய உரைக் குறிப்பு:தொல்காப்பியம் புறத்திணையியல் 20 – ஆம் சூத்திர உரையில், “யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேய்த்து அனைநிலை வகையோர் ஆவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத் தராவர்“ என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர் களையும் குறித்தமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும்.
திருமந்திரச் சொல்லாட்சிகள்:வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் தெளிந் துணர்ந்த சிவஞானச் செல்வராகிய திருமூலர், தாம் சிவயோக நிலையி லிருந்து சிந்தித்துணர்ந்த சிவாகம உண்மைகளை இந்நாட்டவர் யாவரும் ஓதியுணர்ந்து உய்தல் வேண்டும் என்னும் அருள்நோக்குடன் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தமையால், அவரருளிய பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம்; ஆணவம்,கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம்,ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம்,நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம்,விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம் விஞ்ஞானர்,பிரளயாகலத்து அஞ்ஞானர்; இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம்,சமாதி; கவச நியாசங்கள் முத்திரை; பத்மாசனம்,பத்திராசனம், சிங்காதனம்; பூரகம், கும்பகம், ரேசகம் என்பன முதலாகவுள்ள வடசொற்களும் சொற்றொடர்களும் அக்காலத்துப் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன. தமிழ் வடமொழி என்னும் இருமொழிகளையும் கலந்து திருமூலர் தாமே படைத்து வழங்கிய அணுவன் (தி.10 பா.2501), மாயாள் (தி.10பா.399), என்றாற்போலும் புதுச் சொற்களும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன. வேத ஆகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்ற பொருளில் சித்தாந்தம் என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூல நாயனா ரேயாவர். சுந்தரர் காலத்துப் பல்லவ மன்னனாகிய இரண்டாம் நரசிங்க வர்மன், தான் காஞ்சியில் அமைத்த கைலாசநாதர் கோயிலிற் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டில், சைவ சித்தாந்த மார்க்கத்தைப் பின் பற்றியவன் எனத் தன்னைக் குறித்திருப்பது இங்கு நோக்கத்தகுவதாகும். ஆரியம் தமிழ் என்னும் இருமொழிகளையும் உணர்ந்து இமயம் முதல் குமரிவரையுள்ள எல்லாத் தலங்களிலும் போக்கு வரவு புரிந்த தவமுனிவராகிய திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய வட சொற்களும் சேரி வழக்குச் சொற்களும் விரவிக் காணப்படுதல் இயல்பே; திருமந்திரத்தின் மொழிக்கலப்பு ஒன்றே பற்றித் திருமூலர் காலத்தின் தொன்மை யினைக் குறித்து ஐயுறுதற்குச் சிறிதும் இடமில்லை. பிற சமயத்தைப் பற்றிய குறிப்புக்கள் திருமூலர், தம் நூலில் ஆறுசமயங்கள் எனவும் அவற்றிற் பல வாகிய நூறு சமயங்கள் எனவும் இந்நாட்டில் வழங்கும் சமயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் வேத வழக்கொடு மாறுபட்ட புறச் சமயங்களாகிய புத்த, சமண மதங்களைப் பற்றிய குறிப்பெதுவும் புறச் சமய தூடணம் பற்றிய திருமந்திரப் பாடல்களில் இடம் பெறவில்லை. இதனைக் கூர்ந்து நோக்குங்கால், புத்த சமண மதங்கள் தமிழ் நாட்டிற் புகுந்து யாண்டும் பரவித் தமிழ் மக்களது வாழ்க்கையில் வேரூன்றி நிலைபெறுதற்கு முன்னரேயே சிவயோகியராகிய திருமூலர், சிவாகமப் பொருள் குறித்த இத்திருமந்திரப் பனுவலை இயற்றி யருளினார் என்பது இனிது விளங்கும்.

 

நந்தீஸ்வரர்

நந்தீஸ்வரர்

பெயர்: நந்தீஸ்வரர்

பிறந்த தமிழ் மாதம்: வைகாசி

தமிழ் பிறந்த நட்சத்திரம்: விசாகம்

ஆயுள் கால அளவு: 700 ஆண்டுகள் 03 நாட்கள்

ஜீவசமாதி அடைந்த இடம்: காசி

 

சிலாதர் என்ற தவ முனிவர் இருந்தார். அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தது. இந்திரன் அவர் முன் தோன்றி சிவபெருமானை நோக்கித் தவம் புரியக் கூறினான். ஆனால் “கருவில் உதிக்காத குழந்தை வேண்டி தவம்புரி. கருவில் உதிப்பவர்கள் இறந்து விடுவார்கள். எல்லாவற்றையும் படைக்கும் கடவுள் பிரம்மன். ஹிரண்ய கர்ப்பன். அவர் கூட ஊழிக் காலத்தில் மறைந்து மீண்டும் மீண்டும் பிறக்கிறார். திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிப் பிறகே படைப்புத் தொழிலைத் தொடர்கிறார். ஆதலின் கருவில் தோன்றுவோர் மறைவர்” என்று அறிவுரை வழங்கினான்.  சிலாதர் கருவில் உதிக்காத குழந்தை வேண்டிக் கடும் தவம் புரிந்தார். அவர் உடல் முழுதும் கரையான் புற்று மூடியது. பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் அவருடைய தசை இறையாகியது. வெறும் எலும்புக் கூடே எஞ்சியது. அவர் தவத்தை மெச்சி சிவபெருமான் வரம் அளித்தார். “சிலாத உன் வேண்டுகோளுக்கு இணங்கிக் கருவில் தோன்றாத குழந்தையை உணக்கு அளிக்கிறேன். அந்தக் குழந்தையாக நானே உனக்கு தோன்றுகிறேன்” என்று அருள் செய்து மறைந்தார்.  சிலாதர் யாக அங்கணத்துக்கு வந்தார். அங்கு சிவ பெருமானின் அருளால் திவ்ய தேஜஸுடன் ஒரு குழந்தை காணப்பட்டது. தலையில் சடாமுடியும் மூன்று கண்களும் நான்கு கரங்களில் சூலம்,பரசு, கதை, வஜ்ரம் ஆகிய படைகள் தென்பட்டன. அந்தக் குழந்தையைக் கண்டதும் பிரும்மா முதலிய தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்ஸரப் பெண்கள் எல்லாம் ஆனந்தக் கூத்தாடினர்.  கால சூரியனுக்குச் சமமான தேஜுடைய அந்தக் குழந்தையை எடுத்து பிரும்மா, விஷ்ணு,ருத்ரர், ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி முதலிய அனைத்தது தேவதைகளும் மகிழ்ந்தனர். சிலாத மகரிஷி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு எனக்கு மகவாக தோன்றியிருக்கும் பெருமானே உன்னை வணங்குகிறேன். ஆனந்தத்தை அளிப்பதால் இந்தக் குழந்தையை நந்தி என்று அழைக்கிறேன் எனப் பெயரிட்டு அக்குழந்தையைத் தம்குடிலுக்கு எடுத்துச் சென்றார்.  அவர் குடிலுக்குச் சென்றதும் அக்குழந்தையின் தெய்வீக உருவம் மறைந்தது. இரண்டு கைகளையுடைய சாதாரண மானிடக் குழந்தையாக மாறி விட்டது. ஆதலால் வருந்திய சிலாதர் அந்தக் குழந்தைக்குப் படிப்படியாக நான்கு வேதங்கள்,ஆயுர்வேதம், தனுர் வேதம், கந்தர்வவேதம், அச்வ வேதம்,கஜசாஸ்திரம், மனுஷ சாஸ்திரம் முதலிய பல சாஸ்திரங்களைப் போதித்தார்.  அந்தக் குழந்தைக்கு எழு வயது ஆகும் போது மித்ரன் வருணன் என்ற இரண்டு ரிஷிகுமாரர்கள் வந்தனர். அவன் தேஜஸைக் கண்டனர். அவன் தந்தையிடம் சென்று, இன்னும் ஒராண்டுக்குள் இவன் இறந்துவிடுவான் என்று கூறிச் சென்று விட்டனர். அதனால் சிலாதர் மனம் உடைந்து கதறி அழ ஆரம்பித்து விட்டார். இதைக் கண்டு நந்தி சிவனை நோக்கிக் கடும் தவம் புறிந்தான். அவன் தவத்தை கண்டு சிவன் தேவியுடன் நந்தியின் முன் தோன்றினார். நந்தியைத் தன் இருகரங்களாலும் இறுகத் தழுவிக் கொண்டு இன்று முதல் உனக்கு மூப்பு இறப்பு என்பது ஏதும் இல்லை. எனக்கு நிகரான ஒளியும், வலிமையும், யோகமும் பெற்று என் விருப்பத்துக்கு உகந்தவனாக என் கணங்களுக்கு எல்லாம் தலைவனாக நீ விளங்குவாய். என் அருகிலேயே விளங்குவாய் என்று அருள் புரிந்தார். அழகிய மாலையை எடுத்து நந்தியின் தலையில் சூட்டினார்.
உமையன்னை நந்திகேசுரரைக் கரத்தில் எடுத்து அணைத்து ஆனந்த பாஷ்பம் பெருகினார். சிவபெருமானின் ஜடையிலிருந்து விழுந்த நீரும், தேவியின் ஆனந்தக் கண்ணீரும், சிவபிரானின் வாகனமாம் காளையின் பெரும் கர்ஜனையில் தோன்றிய நீரும், மேகம் பொழிந்த நீரும்,ஜாம்பூநாதமான மகுடத்திலிருந்து விழுந்த நீரும் அவர் மீது விழுந்து ஐந்து நதிகளாக ஒடின. ஆதிலின் அவை பஞ்சநதம்,ஐயாறு என்று பெயர் பெற்றன.  அன்றிலிருந்து நந்திகேசுரர் சர்வலோகத்துக்கும் அதிபதியாகவும் எல்லாக் கணங்களுக்கும் தலைவராகவும் முடிசூட்டப்பட்டார். ஈசுவரரின் அதிகாரியாக எப்பொழுதும் அவர் அருகிலேயே அழியாத் தன்மையுடன் விளங்குகிறார். என்று நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது இந்தச் செய்தி புராண மரபு.  இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் சாலங்காயன கோத்திரத்தில் சிலாதர் அல்லது சிலாசினி என்ற முனிவர்க்கு மகனாகப் பிறந்து தத்துவம்,யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம்,காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம். அவருடைய ஆற்றலையும் தொண்டையும் கண்டு வியந்த மக்கள் அவரை ஈசுவரருடைய அவதாரமாகவே கொண்டனர் என்று கருதத் தோன்றுகிறது.  நந்திகேசுரர் அளித்த நூல்களில் இப்போது மிகவும் கற்கப்பட்டு, போற்றப்படும் துறைகள் தத்துவமும் நாட்டியமும் ஆகும். நாட்டியக் கலையில் பெரும்பாலானவர்கள் இப்பொழுது நன்கு அறிந்திருப்பது நந்திகேசுவரர் இயற்றிய “அபிநயதர்ப்பணம்” என்ற நூலாகும்.  சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
அம்முறைதன்னை நந்திகண்டே நாலாயிரம் கிரந்தமாக அருளிய அதனை பரதமுனிவன் அறிந்து அரன் நோக்கியே நடிக்க என்று உள்ள செய்யுள் இதைத் தெளிவாக்குகிறது. பரத நாட்டிய சாஸ்திரம் நந்திகேசுவரரைத் தண்டுரிஷி என்று குறிக்கிறது. சிவபெருமான் நாட்டியத்தில் பயன்படுத்தக்கூடிய அங்க பிரயோகங்களைத் தண்டுவின் மூலமாக பரதருக்கு கற்றுக் கொடுத்தார்.  “தத: தண்டும் சமாஹுய புரோக்தவான் புவனேஸ்வர: பிரயோகம் அங்கஹாரானாம் ஆசக்ஷவ பரதாய வை”  என்பது அச்செய்யுள். தண்டு முனவரிடமிருந்து பிறந்தது தாண்டவம். அபிநவகுப்தர் என்று புகழ்வய்ந்த உரையாசிரியர் தண்டு என்ற சொல் நந்திகேசுவரரைக் குறிக்கும் என்கிறார். சார்ங்கதேவர் என்ற மற்றொரு நூலாசிரியர் தம் “சங்கீத ரத்னாகரம்” என்ற நூலில் பரதருக்கு நிருத்தபிரயோகங்களை தண்டு கற்றுக் கொடுத்தார் என்பதுடன் அவர் சிவகணங்களுக்கு எல்லாம் தலைவர் கணாக்ரனீ என்றும் கூறுகிறார்.  “நிருத்த ரத்னாவளி” என்ற நூலை 13 ஆம் நூற்றாண்டில் இயற்றய ஜயசேனாபதி என்பவர் இவரை “பட்டதண்டு” என்று அழைக்கிறார். இவற்றிலிருந்து நந்திகேசுவரர் தண்டுரிஷி என்று அழைக்கப்பட்டார் என்றும் அவர் உண்மையில் வாழ்ந்த வரலாற்றுப் பாத்திரம் என்றும் அறிகிறோம். அவரே பரத முனிவருக்கு நாட்டியக் கலையைப் போதித்தவர். இன்றைய நாட்டியக் கலையின் தந்தை என்று அவரை அழைக்கலாம். தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர். தமிழ்நாட்டில் நாட்டியாசாரியரைக் குறிக்கும் தொன்மையான உருவம் இதுவே.  காஞ்சிபுரத்தில் இராஜசிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார். கால்களைச் சுவஸ்திகமாக்கி நந்திமுகத்துடனும்,மனித உடலுடனும் சதுர தாண்டவம் புரியும் நந்திகேசுவரரின் நடனம் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள கருத்தையும் தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி.700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதையும் காட்டுகிறது.  நந்திகேசுவரர் சிறந்த நாட்டியசார்யராக மட்டும் இல்லாமல் சிறந்த இசை ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார்.
அம்பலத்தரசர் ஆடுகின்ற போது நந்தி மத்தளம் வாசிக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் பல சிற்பங்களும் ஓவியங்களும் இக்காட்சியைச் சித்தரிக்கின்றன. “குடமுழா நந்தீசனை வாயில் காப்பாகக் கொண்டார்” என்பது தேவாரம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. இதை பாரசவர் என்ற குலத்தோர் வாசிக்கின்றனர். அண்மையில் கிடைத்த “பஞ்சமுக வாத்தியலக்ஷணம்” என்னும் சுவடியில் இது நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. ஆதலின் வாத்ய சாஸ்திரங்களிலும் நந்திகேசுவரர் சிறந்தவர் என்பது தெரியவருகிறது.  தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள நாட்டிய நாடகங்களில் தொடக்கத்தில் வரும் பாத்திரத்தை முறையே “கட்டியக்காரன்” என்றும் “சூத்திரதாரி” என்றும் அழைப்பர். கட்டியக்காரன் ஜனரஞ்சகமான நாட்டியத்தை ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவான். அவன் கையில் “வேத்ரம்” என்ற “கோல்” இருக்கும். கட்டியக்காரன் என்னும் பாத்திரம் நந்திகேசுவரரைக் குறிக்கும். கும்பேசர் குறவஞ்சி என்னும் நாட்டிய நூல் “நந்திவாகனாம் கட்டியக்காரன், திகைக்க வெண்ணீறு பூசிச் செயஞ்செயமென வந்தானே” என்று கூறுகிறது. நந்தியாக முதலில் வந்து மொழிவதால் “சூத்ரதார வசனத்தை” சம்ஸ்கிருதத்தில் “நாந்தி” என்று சொல்லுவார்கள். காமசாஸ்திரத்தை தோற்றிவைத்தவரும் நந்திகேசுவரரே என்றும் பல நூல்கள் கூறுகின்றன. வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம் என்னும் நூல் மூன்று முனிவர்களைக் குறிக்கிறது. தர்மசாஸ்திரத்தைத் தோற்றுவித்தவர் “மநு” என்றும் அர்த்தசாஸ்திரத்தைத் தோற்றுவித்தவர் “பிருஹஸ்பதி” என்றும் காமசாஸ்திரத்தை இயற்றியவர் “நந்திகேசுவரர்” என்றும் கூறுகிறது. நந்தி இயற்றிய பல செய்யுட்களை “ரதிரகசியம்” என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.  சிவபெருமான் சீகண்ட பரமேசுவரராகப் பதினெட்டுப் புராணங்களை நந்திதேவருக்குக் கூறினார். நந்தி அவற்றைச் சனந்தகுமாரருக்கு கூற அவர் அதை வேதவியாஸருக்குக் கூறினார் என்றும், அவரிடம் சூதபௌளராணிகர் அறிந்தார் என்றும் கூறுவர். ஆதலின் புராணங்களை எடுத்துரைத்த மரபும் நந்திகேசுவரரையே சாரும் என்றும் அறிகிறோம்.
ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. நந்திகேசுவரரிடமிருந்து சிவதத்துவத்தை அறிந்து நந்தீசர் பிறருக்குப் போதித்தார் என்று ரௌளரவாகமம் கூறுகிறது. சைவமரபில் தலையாயது “சிவஞான போதம்” என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார் என்றும் அந்த மரபே இந்நூல் என்றும் பல நூல்கள் குறிக்கின்றன. சிவஞான போதச் சிறப்புப் பாயிரத்தில்  மயர்வற நந்தி முனிகணத்தளித்த உயர் சிவஞான போத மளித்தோன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் “அருள் நந்தி தனக்கியம்ப நந்தி கோதில் அருட் சனற்குமாரருக்குக் கூற” என்று சிவஞானசித்தியார் என்னும் நூல் குறிக்கிறது. திருமூலர் சிவபெருமானையே நந்தி என்று பல இடங்களில் குறிக்கிறார். நந்தி அருளாலே நாதனாம் பெயர் பெற்றோம் என்கிறார். சைவசித்தாந்த மரபு முழுவதும் நந்திகேசுவரர் மரபு என்பதில் ஐயமில்லை.  சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர். மற்றவர் மாகாளர் என்பவர். வழிபாட்டில் நந்திகேசுவரருக்கு முதலிடம் வழங்கப் படுகிறது. அவர் “சர்வலோகாதிபதி” ஆதலாலும், கணங்களின் தலைவர் ஆதலாலும் “அதிகாரி” என்றும் அதிகாரநந்தி என்றும் அழைக்கப்பட்டார். தாராசுரத்தில் முன்மண்டபத்திலிருந்து கர்ப்பக் கிருகத்துக்குள் நுழையும் போது அதிகாரநந்தியின் உருவத்தைப் பார்க்கலாம். இரு கரங்களை கூப்பி நீண்டவாளை மார்பில் இடுக்கி ஜடாமகுடத்துடன் நெற்றிக் கண்ணுடன் இவர் நிற்பார். சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம். நான்கு கரங்களுடனும் சிவபெருமானுக்குரிய சின்னங்களுடன் இவர் காணப்படுகிறார். மேலிரு கரங்களில் மானும் மழுவும் உண்டு. கீழ்க்கரங்கள் கும்பிடும் நிலை சடை முடியும் நெற்றிக்கண்ணும் உண்டு.  மருத்தினுடைய பெண்ணாகிய “சுயஸ்” என்பவளை நந்திகேசுவரர் மணந்தார். அவளும் அவருடன் நிற்பதைக் காணலாம். அதிகார நந்தி மனித உருவுடன் கோபுரத்தின் நுழைவாயில் உள்ளது குறப்பிடத்தக்கது. சிவபெருமானின் பிரதான அதிகாரி ஆதலின் இவரது பார்வையிலேயே உள்ளே செல்லவும் வெளியே வரவும் இயலும். அருள்பாலிப்பதும், அறிவுரை புகட்டுவதும், தண்டனை அளிப்பதும் இவரே. ஆதலின் கோயில் கோபுரவாயிலில் உள்ள இவரது அனுமதி பெற்றே சிவாலயத்துள் செல்ல வேண்டும். இது தத்துவம். பரமேசுவர தத்துவம் நந்திகேசுவரர் மூலமாக உலகில் வெளிப்படுகிறது. அந்தத் தத்துவத்தைத் தாங்கி உலா வருவது இவரே. அதுவே அதிகார நந்தி சேவை என்னும் தத்துவம். பரமேசுவரனைத் தம் முதுகில் தாங்கி வருவதாகப் பாவனை.
இராமாயணத்தில் மிகவும் உன்னத பாத்திரம் அனுமன். அறிவின் சிகரமாக, சொல்லின் செல்வனாக,வீரர்களின் தலைவனாக, தூதுவர்களில் ஈடு இணையற்றவனாக, ஆற்றலும் தூய்மையும் நிறைந்த அமைச்சனாக, அனைத்துக்கும் மேலாகப் பக்தியின் உருவகமாக திகழ்வது அனுமானே. அத் தன்னேரில்லாத தகைமையாளன் யார்? நந்திகேசுவரரின் மறு அவதாரமே அனுமான்.  ஒரு முறை இராவணன் கைலயங்கிரிக்குச் செல்ல நந்தி அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆதலால் கோபம் கொண்டு அவரைக் குரங்கு மூஞ்சி என்று இழித்துரைத்தான். குரங்காகவே வந்து உன்னை அழிக்கிறேன் போ! என்றார் நந்தி. ஆதலால் பலமுறை அனுமனைக் கண்டபோது நந்தியே அனுமனாக வந்திருக்கிறானோ என்று திகைத்தான் தசமுகன் என்று வால்மீகி கூறுகிறார்.  சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது. இராமர் பரபிரும்ம தத்துவம் அனுமன் அவர் காலடியில் அமர்ந்து வாசிக்க அத்தத்துவத்தை ராமர் போதித்ததாகக் கூறுவது நம்மரபு. அக்ரே வாசயதி பிரபஞ்சனசுதே தத்வம் முனிப்ய: பரம் வியாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் இராமம் பஜே சியாமளம் என்பது நாளும் படிக்கின்ற ஸ்லோகம். இது நந்திகேசுவர தத்துவத்தின் மறு வடிவம்.  இந்திய நாட்டு மக்களின் வாழ்வில் நந்திகேசுவரர் நாட்டியாச்சாரியாராக கலைகளின் பிறப்பிடமாக வைத்திய முறைகளைப் போதித்தவராக புராண ஆகம முறைகளைப் போதித்தவராக யோகியாக தத்துவத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார் என்பது நாம் அறிய வேண்டிய பண்பு

அகத்தியர்

அகத்தியர்

பெயர்: அகத்தியர்

பிறந்த தமிழ் மாதம்: மார்கழி

தமிழ் பிறந்த நட்சத்திரம்:ஆயில்யம்

ஆயுள் கால அளவு: 4-யுகம் , 48 நாட்கள்

ஜீவசமாதி அடைந்த இடம்: திருவனந்தபுரம்

 

தேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ! உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே! தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே! கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால் சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.
தேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது? என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி! நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம்,  என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே! தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும்? மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும்? ஆறுகள் இல்லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன்  கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.
இந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி! நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?இந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.
மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு,  கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.
குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய  வேண்டியிருந்ததைக் கருத்தில்  கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.
அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள்  தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார்.  ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய  தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன்  முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன்  தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும்  அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.
ராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும்,  முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா! நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி? என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே! என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.
பிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி  ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர்,  தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை  மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள்  அகத்தியா! அகத்தியா! என கத்தினர். நீங்களெல்லாம் யார்? என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை  வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது? என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே! உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா! நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை.  சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே! நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்?
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? என்றாள்.
லோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே! உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை? துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன்? என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே! என்ன யோசனை? இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும், என்றார்.
ஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா? இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி  விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா! நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர்  குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.
பெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா! நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட  லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி நிலையடைந்தார்