தலைஞாயிறு – அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்.

கோயில் பெயர்

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்

தோற்றம் காலம்
2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்: குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர்)

அம்பாள்: கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை)

ஸ்தல தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை

ஸ்தல விருக்ஷம்: கொடி முல்லை

தேவாரப்பாடல் : திருஞானசம்பந்தர்

ஸ்தல வரலாறு

இராவணனின் மகன் மேகநாதன். இந்திரனைப் போரில் வென்றதால் இவனுக்கு “இந்திரஜித்” என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான் . இதனால் இந்த தடை ஏற்பட்டது என அறிந்தான். இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கியது. விமானம் மறுபடியும் பறந்தது. இப்படிப்பட்ட அற்புத இலிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான். இந்த செய்தியை கேட்ட இராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் “குற்றம் பொறுத்த நாதர்”எனப்படுகிறார்.

 

விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்தான். இறைவன் அருளால் அவனுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் இத்திருக்கோயிலை அழகுற கட்டினான் என்பது வரலாறு. சூரியபகவான் இத்தலத்தில் வழிபட்டதால் “தலைஞாயிறு” என வழங்கப்படுகிறது.

இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு இலிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார் எனத் தல புராணம் கூறுகிறது.

72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்களுக்கு அடுத்த பிறவி கிடையாது.

சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்பது ஐதீகம். எனவே தான் இத்தலம் “கருப்பறியலூர்”என வழங்கப்படுகிறது. அனுமன் தோஷம் நீங்கிய தலம். இராவண யுத்தத்தில் இராவணனை கொன்ற தோஷம் நீங்க இராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் “இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா”என்றார். உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் இலிங்கம் செய்து வழிபட்டார். அவரது பிரம்மகத்தி தோஷமும் நீங்கியது. ராமர் பூஜை செய்த தலம் ராமேஸ்வரம் ஆனது. தான் வருவதற்குள் இலிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான்.அத்துடன் அந்த இலிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது. சிவனைக் குறித்து தவமிருந்தால் சிவ அபராதம் நீங்கும் என இராமர், அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி, “அனுமனே. நீ கன்மபுரம் எனப்படும் தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்” என அருள்பாலித்தார். அனுமனும் அதன் படி தலைஞாயிறு வந்து வழிபட்டு,தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு இலிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது“திருக்குரக்கா” என வழங்கப்படுகிறது.

இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை “மேலைக்காழி” என்பர்.

கோயிலின் முதல் தளத்தில் உமா மகேஸ்வரரும், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் மனைவியுடன் வீற்றிருக்கிறார்.

தேவாரப்பதிகம்:

சுற்றமொடு பற்றுஅவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.

–திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 27வது தலம்.

திருவிழா:

திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், குழந்தை பிறந்து, இறந்து விடும் தோஷம் உள்ளவர்களும்,ஆண் வாரிசு வேண்டுபவர்களும், பெண் வாரிசு வேண்டுபவர்களும் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தலத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர்.

பாதை

மயிலாடுதுறை – மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் – திருப்பனந்தாள் சாலையில், “தலைஞாயிறு” என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

கோயில் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்

+91- 4364 – 258 833

கோயில் முகவரி

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்,

தலைஞாயிறு, (திருக்கருப்பறியலூர்),

நாகப்பட்டினம் மாவட்டம்

திருநள்ளாறு – ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீ சனி பகவான் கோவில்

சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்.

அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்.

தீர்த்தம் : நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்.

தலவிருட்சம் : தர்ப்பை.

இந்த தலம் ஆதிகாலத்தில் பிரமதேவர் பூஜை செய்ததால் ஆதிபுரி ஆனது.

ஆதிபுரி, தருப்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்சுரம் .என நான்கு பெயர்களும் முறையே நான்கு யுகங்களுக்கும் வழங்கப்படுகின்றன.

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம்.

திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான்.

சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர்.

அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.

தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது.

இங்கு இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி.

சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார்.

நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது

தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.

மகாவிஷ்ணு பிரம்மன். இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர்

திருமாலுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இந்த தலத்து தர்ப்பனேஸ்வரரையும் அன்னையும் வழிபட மன்மதனை குழந்தையாகப் பெற்றார்.

தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.

திருநள்ளாறு முசுகுந்தச் சக்கரவர்த்தி ஸ்தாபித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று..

சப்தம் என்றால் ஏழு.. டங்கம் என்றால் உளி.. விடங்கம் அதாவது உளி கொண்டு செதுக்காத சுயம்பு மூர்த்திகளால் உருவான திருத்தலங்கள் என்பதால் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்று பெயர்.. இத்திருத்தலங்களில் தியாகராஜரே வெவ்வேறு பெயரில் அருளுகிறார்… ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒவ்வொரு வித நடனமும் உண்டு..

அவ்வகையில், இத்திருத்தலத்தில் தியாகராஜருக்கு, நகவிடங்கர் என்று திருப்பெயர்.. நடனம் உன்மத்த நடனம்.

மற்ற திருத்தலங்களும் நடனங்களும்…..

1.திருவாரூர் – வீதிவிடங்கர் – அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும் ஆடுவது.)

2. நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – பாராவாரகரங்க நடனம் (அலைகள் அசைவது போன்ற நடனம்.)

3. திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம் (கோழி நடப்பது போன்ற நடனம்.)

4. திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம் (மலருக்குள் வண்டு செல்வது போன்ற நடனம்.)

5. திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம் ( குளத்திலிருக்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போன்ற நடனம்.)

6. திருமறைக்காடு – புவனிவிடங்கர் – ஹ‌ம்ஸபாத நடனம் ( அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்.)

இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை.

நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத்தலத்தின் தெற்கிலும ், வடக்கிலும் இரண்டு ஆறுகள் கூட அதன் நடுவே இத்தலம் இருப்பதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. சிலர் நளன் ஆறு என்பதே பின்னாளில் நள்ளாறு என்றாகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.

அரசலாறு, வாஞ்சாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கும் இடையே இருப்பதால் ‘திருநள்ளாறு’ என்று அழைக்கப் படுவதாகக் கூறுவதுண்டு.

திருஞானசம்பந்தர், மதுரையில் சமணரோடு நடத்திய அனல் வாதத்தில், இத்திருத்தலத்தில் இயற்றிய திருப்பதிகமான ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்று துவங்கும் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் வெளிவந்தது.. அதனால் அதற்கு ‘பச்சைப் பதிகம்’ என்று பெயர். இந்தப் பதிகத்தைப் பாடி, சனிபகவானை வழிபடுவோருக்கு, ‘சனி தோஷம்’ உண்டாகாது என்பது நம்பிக்கை.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 52வது தலம்.

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில் லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்
தது.

இது எப்படி சாத்தியம்??? – என்ப தை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோ ளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச் சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநே ஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரி யாத கருநீலகதிர்கள் அந்த கோ விலின் மீது விழுந்துகொண்டே இருக்கி றது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர் ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெ ளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவி டுகின்றன. அதே நேரத்தில் செய ற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில் லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவி ல்தான் இந்துக்களால் ‘சனி பக வான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவ ர்களும் சனிபகவானை கையெடுத்து
கும் பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண் ணில் செயற்கை கோள்கள் திருநள்ளா று பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”

நவக்கிரக மூர்த்திகளில் சனிபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். ஈஸ்வரனுக்கு சமமாக அவருக்கு மட்டுமே ஈஸ்வரப்பட்டம் இருக்கிறது. அதனாலேயே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார்.

கோவில்களில் நவக்கிரகப் பிரதிஷ்டை இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் சனீஸ்வரன் பிரதிஷ்டை இல்லாமல் இருக்காது.

உயர்ந்த மேடை ஒன்றில் அவரது பிரதிஷ்டை அமைந்திருக்கும்.
மன்னாதி மன்னர்கள் என்றாலும் சனிபகவானை வழிபடாதவர்களே இல்லை.

சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டே தசரத மகாராஜா பலகாரியங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். புரூவரசு சக்கரவர்த்தியும், நளச்சக்கரவர்த்தியும் சனிபகவானை வழிபட்டே புகழும், சிறப்பும் எய்தி ஆட்சி செய்திருக்கிறார்கள்.

சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டு அவரது அருளைப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்தும், சிறந்தும் விளங்குவர்.

ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.

உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார்.

ஏனைய நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதும் இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.

தல புராணம்:

சனிபகவானால், பல இடையூறுகளுக்கு ஆளாகி, தன் நாடு, மனைவி, மக்கள் அனைவரையும் இழந்த நள மகாராஜன், இங்கு வந்து வழிபட்டு, இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றான்..

அதனால், நள சரிதம் படிப்பது, சனி பகவானின் பேரருளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.. என்காலத்தில் உன்சரிதம் கேட்டாரை யான் அடையேன்!” என்று சனிபகவான் நளனுக்கு வரம் அருளியதாகப் புராணம். வரத்தை அளித்த சனிபகவான், “கட்டுரைத்துப் போனான்” என்று புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் கூறுகிறார். ‘கட்டுரைத்தல்’ என்றால், உறுதியாகக் கூறுதல். ஆதலால், சனிபகவான் நளசரித்திரம் படிப்பவரையும் கேட்பவரையும் காப்பார்.

இங்கு நளன் நீராடிய தீர்த்தமே நள தீர்த்தம். இதை இறைவனே நளனுக்காக அருளினார் என்பது நம்பிக்கை. நளதீர்த்தத்தை நளனுக்காக இறைவன் அருள் செய்தது வைகாசி மாதம். புனர்பூச நக்ஷத்திரம் ஆகும். அந்நாள் திருநள்ளாற்றில் மிக விசேஷமான வழிபாட்டு நாளாகும்.
.
நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி கொண்டிருந்த ஸ்ரீசனிபகவான் நளன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வந்து வணங்கி தரிசித்தவுடன் விலகி விடுகின்றார்.

பின்பு எம்பெருமானுடைய அருளாணையின் வண்ணம் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அனுக்ரக மூர்த்தியாக ஈஸ்வரப்பட்டம் பெற்றுக்கொண்டு துவார தேவதையாக இரண்டாவது கோபுர வாயிலில் விளங்குகின்றார்.
இங்கு நளன் விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து திருக்கோவில் அமைத்து இறைவனை பூசித்தான். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால் நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினான்.
அவையாவன:
இங்கு என்னைப்போல் ஸ்ரீசனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ சனிபகவான் அருள்செய்து துன்பம் போக்கி நலம்பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரமும். இரண்டாவதாக இத்தலத்தின் ஒருகாத விஸ்தீரணம் பரப்புகளில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று ஒரு வரமும்.
மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்று வேண்டினான். சனிபகவானும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அவ்வாறு அருள் செய்தனர். ஆகையால் இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால் இறைவனுக்கு ஸ்ரீநளேஸ்வரர் என்ற பெயரும் திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும் இவ்வூருக்கு திருநள்ளாறு என்ற பெயரும் விளங்கலாயிற்று.
முதலில் நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்த குளத்தை வலமாக பிரதட்சிணம் செய்து குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி தமயந்தி குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பின்னர் நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை ஸ்நானம் செய்து தலை முழுக்காட வேண்டும்.
பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

அதன் பின்னர், ராஜகோபுரத்தை முழுவதுமாக பார்த்து வணங்க வேண்டும்.
சனீஸ்வரரின் இருப்பிடமான படிக்கட்டை வணங்க வேண்டும். முதல் பிரகாரத்தில் நள சரித்திரத்தை பார்த்து வணங்கவும். காளத்தி நாதரை வணங்க வேண்டும். அடுத்து கருவறையில் உள்ள மூலவர் அருள்மிகு தர்பனேஸ்வரரை தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் தியாகவிடங்கர் சன்னதிக்கு சென்று பக்தி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் மரகத லிங்கத்தையும் அர்த்தநாரீஸ்வரரையும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், தரிசித்து வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்து பின்பு, கட்டைக் கோபுரத்துள் அருள்பாலிக்கும், அன்னை பிராணேஸ்வரியை வணங்கி அதன் பின்னர் தான் சனீஸ்வரரிடம் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிலர் முதலிலேயே சனீஸ்வரர் சன்னதிக்கு சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறை அல்ல என்றும், சனி தோஷ நிவர்த்தி கிட்டாது என்றும் கூறுகின்றனர்.

அவரவர்களுடையே வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி ஸ்ரீசனிபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை, அபிஷேகம், ஜபம்8, ஹோமம், தர்ப்பணம், தானம் முதலியன செய்யலாம்,,

காலை, மாலை இரு வேளையிலும் ஸ்ரீசனிபகவானை நவப்பிரதட்சிணம் செய்வது நல்ல பயன் தரும்.

கோவில் அமைப்பு

திருநள்ளாற்று கோவில் கிழக்கு நோக்கி திசையில் உள்ளதாகும்.
இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. இறைவர் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்மையார் சன்னதி முதல்பிரகாரத்தில் சோபன மண்டபத்தில் தெற்கு முகமாகவும் இருக்கிறது.
சனீசுவர பகவான் சன்னதி கிழக்கு முகமாய் அம்மையார் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ளது.
திருநள்ளாற்றுக் கோவில் அழகும், அருளும் நிறைந்த ஓர் கலைக்கோவிலாகும்.
கோவிலை வலம் வரும்போது தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலின் நீண்ட வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அருள்மிகு காளத்தியப்பர் சன்னதிக்கு வந்து சேரலாம். இக்கோவில் ஓரு சிற்றாலயமாக எழிலுற அமைந்திருக்கிறது. காளத்தியப்பர் சிவஜோதியாக வீற்றிருக்கிறார். இத்தலம் சனி பகவானுக்கு மட்டுமில்லாமல் ராகு, கேது இவர்களுக்காகவும் வழிபட வேண்டிய தலமாகும்.
ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.
உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார்.

சனி தோசம் நீங்க

சனி தோசம் உள்ளவர்கள் அகல் விளக்கு வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

எள் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபாடு செய்கிறார்கள் எள் சாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, அபிசேகம், நவகிரக சாந்த ஹோமம் ஆகியவற்றை செய்கிறார்கள்

தவிர உண்டியல் காணிக்கை, பசுமாடு தானம் தருதல், முடி காணிக்கை ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

பூஜைவிவரம் : ஆறுகாலபூஜைகள்.

திருவிழாக்கள் :

வைகாசி – உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றம் பின்னர் 18 நாட்கள் பெருவிழா எனப்படும் பிரம்மோத்சவம்,
புரட்டாசி பௌர்ணமி விசேஷம் தரும்,
நவராத்திரி மற்றும் விநாயகர்சதுர்த்தி,
அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் நாட்களில் தீர்த்தத்தில் மூழ்கி பின்னர் வழிபட்டால் மேன்மை பெறுவது நிச்சயம்.

மகாபாரதத்தின் ஒரு பகுதியில் நளன் மற்றும் தமயந்தியின் அழகான காதல் கதையும் அடங்கியுள்ளது.

நளன் – தமயந்தி கதை
இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான்.

நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.

தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

அயோத்தியாவை சேர்ந்த நிசத் அரசனுக்கு நளன் மற்றும் குவாரா என்ற இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
நிசத் அரசர் இறந்தவுடன், நளன் அரசனானார். பல்வேறு ராஜ்யங்களை கைப்பற்றி புகழை அடைந்தார். தன் சகோதரனான குவாராவுக்கு இது பொறாமையை ஏற்படுத்தியது. சூதாட்டம் தான் நளனின் பலவீனம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

அதனால் நளனை தாய விளையாட்டுக்கு போட்டி போட அழைத்தார் குவாரா. இந்த போட்டியில் நளன் அனைத்தையும் இழந்தார்.

இதனால் அரசனான குவாரா, நளனை அந்த ராஜ்யத்தை விட்டே வெளியேற்றினார். இதனால் காட்டிற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் நளன்.

காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.

தன் மனைவியையும் மாமனார் வீடு செல்ல பணிந்தும் தமயந்தி சாகும் வரை உங்கள் உடனேயிருப்பேன் என சொல்ல இரவில்
காட்டில் தமயந்தி தூங்கிக் கொண்டிருந்த போது, நளன் அவரை காட்டிற்குள் விட்டு சென்றார்.
மறுநாள் எழுந்த தமயந்தியால் தன் கணவனை காண முடியவில்லை
நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன்,
நளன் காட்டிற்குள் தனியாக சென்று கொண்டிருந்த போது உதவி நாடி அழும் குரல் ஒன்று கேட்டது. ‘நளன், தயவு செய்து இங்கே வரவும்’. அழுகை கேட்ட திசையை நோக்கி நளன் சென்றார். காட்டின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்ததை கண்டார் நளன். தன்னை அழைத்தது ஒரு பாம்பு என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். ‘நான் தான் கார்கொடகா,
பாம்புகளின் அரசன். என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்றவும்.’ என பாம்பு நளனிடம் கூறியது.

கார்கோடகனை தீயில் இருந்து காப்பாற்றினார் நளன்.

திடீரென நளனை பாம்பு கடித்தது. பாம்பின் விஷம் நளனின் உடம்பில் ஏறியதால், அவர் உருக்குலைந்து போனார்.

இதனால் அருவருப்பான தோற்றத்துடன் காட்சி அளித்தார் நளன்.

அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான்.

அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.

அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.

திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்

கும்பகோணத்தில் இருந்து 53km.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடி பேரளம் நல்லம்பல் பின்னர் திருநள்ளாறு சென்றடையலாம்.

கொல்லுமாங்குடி நெடுங்காடு பின்னர் திருநள்ளாறு சென்றடையலாம்.

சிக்கல் -ஸ்ரீ நவநாதேஸ்வரர் கோவில், ஸ்ரீ சிங்காரவேலர் கோவில்

கோயில் பெயர்

ஸ்ரீ சிங்காரவேலர் கோவில்

தோற்றம் காலம்

1500 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர் : நவநீதேஸ்வரர் (வெண்ணெய் பெருமான்)

உற்சவர் : சிங்கார வேலவர்

ம்மன்/தாயார் : சக்தியாயதாட்சி (வேல்நெடுங்கண்ணி)

தல விருட்சம் : மல்லிகை

தீர்த்தம் : க்ஷீர புஷ்கரிணி (பாற்குளம்)

ஆகமம்/பூஜை : காரண ஆகமம்

புராண பெயர் : மல்லிகாரண்யம், திருச்சிக்கல்

பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , அருணகிரிநாதர்

ஸ்தல வரலாறு

சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில். தொடக்கத்தில் இஃது அருவுருவத் திருவுருவமைந்த சிவன் கோயில், பின்னர் முருகன் இடம் பெற்றுச் சிங்காரவேலர்  கோயிலாயிற்று. வடக்கில் வாரணாசியைப் போல், தெற்கில் இங்கு தெய்வங்கள் அனைவரும் கூடுகின்றனர்; வாரணாசியில் இறந்தால் முக்தி; இங்கேயோ, சிவலிங்கத்தைக் கண்டாலே முக்தி என சிக்கல் தலம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்று.

விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.  சிவன், பெருமாள், முருகன், அனுமன் என நால்வரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது கோயில் தனி சிறப்பாகும்.  அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடியுள்ளார்.

கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 146 வது தேவாரத்தலம் ஆகும்.  இங்கு 80 அடி உயரத்தில் அமைந்துள்ள கோயிலில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிங்காரவேலர். வலப்புறம் சிவனாகிய ‘நவநீதேஸ்வரர்’, இடப்புறம் பார்வதிதேவியான ‘வேல் நெடுங்கண்ணி’.. இப்படி அம்மை – அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை பட்டாலே மலையளவு சிக்கல்களும் பனி போல மாயமாகி விடுமாம். கடல் நாகைக் காரோணத்தின் பஞ்சகுரோசப் பெரும்பதிகளில் ஒன்றான தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 83வது தலம். இத்ததல விநாயகர், சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்புடைய மூர்த்திகளாக இருப்பதால் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பர்.

கோவிலின் அமைப்பு:

கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. அதன் வழியாக் உள்ளே நுழைந்தவுடன் கார்த்திக மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபானியும் காட்சி தருகின்றனர். இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சினாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகார சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.  நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன.  கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம்.  இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது.

காமதேனுவும் வசிஷ்டரும்.

ஒருமுறை, மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் பசியின் கொடுமையால், பஞ்சத்தில் பிடியில் சிக்கிய தேவலோகப் பசு காமதேனு , நாயின் ஊனைத் தின்றதால் ஏற்பட்ட சாபம் தீர்த்த தலம் சிக்கல்.  பாவம் பற்றியதால், புலியின் முகத்தைப் பெற்றது. பிறகு, தவற்றை உணர்ந்து சிவனாரை வழிபட்டு, தனது புலிமுகம் நீங்குவதற்காக வழி கோரியது. ‘பூலோகத்தில், மல்லிகாவனத்துக்குச் சென்று தங்கி வழிபட்டால், புலி முகம் நீங்கும்’ என்று அருளினார் சிவபெருமான். அதன்படி, மல்லிகை வனமாக விளங்கிய இந்தத் தலத்தை அடைந்து, சிவனாரை வேண்டி, வணங்கியது. ஈசனின் கருணையால் புலிமுகம் நீங்கியது. மனதில் பொங்கிய மகிழ்ச்சியால், காமதேனு பாலைப் பொழிய, அந்த இடத்தில் பால் குளம் உருவானது.  இதனால், காமதேனு தீர்த்தம் என்றும், தேனு தீர்த்தம் என்றும், பால் குளமானதால் க்ஷீர புஷ்கரிணி என்றும் இங்கேயுள்ள தீர்த்தக்குளம் பெயர் பெற்றது.  பின்னர், வசிஷ்டர் சிவத்தை வழிபட ஆசை கொண்டார். கயிலைநாதரின் திருவுள்ளக் குறிப்பையும் உணர்ந்தார்.  காமதேனு குளித்தபோது பெருகிய பால் குளத்தைப் பார்த்து வசிஷ்ட முனிவர்அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. இறைவன் “வெண்ணெய் நாதர்’ வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும் போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் “சிக்கல்’ என்றழைக்கப்பட்டது.

தாயிடம் வேல்

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, ‘சக்தி – வேலன் புறப்பாடு’களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும். அப்படி வழியும் வியர்வையை அர்ச்சகர்கள்  பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல்.  சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பது ஒரு பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். தேவர்கள், சூரபத்மனிடமிருந்து தங்களை காக்க முருகப்பெருமானுக்கு

“திரி சதை’ செய்து வேண்டிக்கொண்டனர். இதனால் முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார். சிங்கார வேலனுக்கு, அம்மன் தன் சக்தியை வேலாக வழங்கிய இத்தல முருகனுக்கு  “சத்ரு சம்ஹார திரி சதை’ அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நலம் விளையும் என்பது நம்பிக்கை.

கோலவாமனப்பெருமாள்

ஒரு முறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் “கோலவாமனப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

மயில் மேல் முருகன்

இவ்வெண்ணெய்ப் பெருமான் கோயிலின் கிழக்கே முருகன் கோயில் கட்டுமலைக் கோயிலாகப் பெரிய அளவில் அமைந்துள்ளது. வள்ளி, தேவானையுடன் முருகன் மயில்மேல் அமர்ந்த தோற்றம் மிக அழகானது சிற்பக் கலையில் மிகப் பாங்குடையது.  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒர் காலில்  நிற்கும் மயிலின் மேல் வள்ளி தெவ்வயானை முருகன் ஆகியோர் உள்ளனர்.இந்த சிலை ஏழு அடி உயரமுடையது. முருகனின் விரல் நகங்கள் நரம்புகள் ஆகியவை தெரிவது மிகச்சிறந்த நேர்த்தியான சிற்பக்கலைக்கு சான்று. முருகனை பார்த்தது முதல் அவரை பிரிய மனம் வரவே வராது.

விசுவாமித்திரர்

திலோத்தமையால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற தலம் சிக்கல் முசுகுந்தச் சக்கரவர்த்தி முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்

திருவிழாக்கள்

கந்தசஷ்டி திருவிழா –ஐப்பசி மாதம் (சக்திவேல் வாங்குதல் வியர்க்கும் மகிமை) சித்திரை பெருந்திருவிழா –(சித்திரை மாதம் ) தெப்பத்திருவிழா –தைப்பூசத்தன்று நடைபெறும் மாதாந்திர கார்த்திகை பிரதோசம்-சுவாமி புறப்பாடு மாதாந்திர சங்கடகர சதுர்த்தி –விநாயகர் அபிஷேகம் திருவாதிரை –நடராஜர் அபிஷேகம் –ஊடல்,வீதி புறப்பாடு  தமிழ் வருடப்பிறப்பு –சிங்காரவேலவர் அபிஷேகம்  மாசி மாதம் –மகா சிவராத்திரி (நான்கு காலமும் பூஜை நடைபெறும் )  வைகாசி விசாகம்-சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆடிப்பூரம் –அம்பாள் அபிஷேகம்  ஆடிக்கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு -தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு விநாயகர் சதுர்த்தி-சுந்தரகணபதிக்கு சிறப்பு அபிஷேகம்  நவராத்திரி உற்சவம்-பள்ளியறை அம்மன் சிறப்பு அலங்காரம் சரஸ்வதி பூஜை –எல்லா சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்  விஜயதசமி –சிங்காரவேலவர் தங்கக்குதிரை வாகனத்தில் அம்பு போடுதல்  ஐப்பசி பெளர்ணமி –சிவனுக்கு அன்னாபிஷேகம்  தீபக்கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு –சொக்கப்பானை ஏற்றுதல்,சுவாமி வீதியுலா  பங்குனி கார்த்திகை-சிங்காரவேலவர் அபிஷேகம், இரவு –பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதியுலா  பங்குனி உத்திரம் –சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம்

பாதை

திருவாரூர் நாகபட்டினம் சாலையில் அடியக்கமங்கலம் கீழ்வேளூர் சிக்கல்.சென்றடையலாம்.

கோயில் நேரம்

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்

+91- 4365 – 245 452, 245 350.

கோயில் முகவரி

ஸ்ரீ  நவநீதேஸ்வரர் கோயில் ,

சிக்கல்

நாகபட்டணம்

 

 

 

 

 

 

 

 

 

 

திருநெல்லிக்கா – ஸ்ரீ நெல்லி வனநாதர் கோயில்

கோயில் பெயர்:

ஸ்ரீ நெல்லி வனநாதர் கோயில்

தோற்றம் காலம்:

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

இறைவன்: ஆம்லகவனேஸ்வரர், ஆம்லகேஸ்வரர், நெல்லி வனநாதர், நெல்லி நாதேஸ்வரர்

இறைவி: ஆம்லகேஸ்வரி, மங்களநாயகி

தல மரம்:    நெல்லி மரம்

புராண பெயர்கள்:

அமிர்த வித்யாபுரம். குஷ்ட ரோகஹரம், சர்வ உத்தமபுரம், பட்சாட்சர புரம், பஞ்சதீர்த்த புரம், அருண புரம் .

2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோவில் இது.

தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 181 வது ஸ்தலம் .

அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி வணங்கிய திருத்தலம். ஆகவே ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம், பஞ்சகூடபுரம் ஐந்து பஞ்சகூடபுரத்தில்  ஐந்தில் ஒன்று.ஐந்து  பஞ்சகூடபுரம் திருவானைக்கா, திருக்கோடிக்கா, திருக்கோலக்கா, திருநெல்லிக்கா மற்றும் திருக்குரங்குக்கா ஆகியவை

ஸ்தல தீர்த்தம்:

பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் இத் தலத்தில் உள்ளன. இந்த ஐந்து தீர்த்தங்களும் அமுதம் இறைவனிடம் இருந்து கிடைக்கப்பக்டவை.

தல விருட்சம்: நெல்லி மரம்

தேவராம்: திருஞானசம்பந்தர்

ஸ்தல வரலாறு:

தேவ லோகத்தில் உள்ள கற்பகம், பாரிஜாதம், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் வேண் டியதை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. இதனால் இந்த மரங்களுக்கு மிகுந்த கர்வம் உண்டாகி விட்டது. அதன் காரணமாக ஒருமுறை தேவலோகம் வந்த துர்வாசரை மதிக்காததால் அவர் கோபம் கொண்டு ” நீங்கள் பூமியில் புளிக்கும் கனிகளைக் கொண்ட நெல்லி மரங்களாக மாறுங்கள்” என்று சாபமிட்டார். அவை சாப விமோசனமடைந்து மீண்டும் தேவலோகம் செல்லவும், நெல்லி மரத்தின் அருமையை பூலோகத்தினர் அறிந்து கொள்ளவும், ஈசன் அந்த நெல்லி மரத்தின் அடியிலேயே சுயம்புலிங்கமாகத் தோன்றினார். ஐந்து தேவ மரங்களும் இறைவனுக்கு தொண்டு செய்த பின் தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றன. நெல்லி மரத்தின் அடியில் தோன்றியதால் இறைவன் நெல்லிவனநாதர் என அழைக்கப்படுகிறார்.

சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர், துர்வாசர் வழிபட்ட கோவில்.ஐந்தெழுத்தும் இறைவனை வழிபட்ட தலம். வழிபாடு பயன்கள் எளிதில் பெறத் தக்க தலம்.  சனீஸ்வர பகவானே இறைவனை வழிபட்ட பெருமை மிக்க திருத்தலம் இத்திருத்தலம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, சனி பகவானின் அருள் கிட்டும். ஆண்டுதோறும் ஐப்பசி கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முதல் ஏழுநாளும்,மாசி மாதம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை, ஏழு நாட்கள், மாலை 5 மணி அளவில் சிவலிங்கத்தை, சூரியக் கதிர் தழுவிச் செல்லும் காட்சியைக் காணலாம்.  இது பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்யும் நிகழ்வு மட்டுமின்றி, சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் வானவியல் அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ் கிறது.

சுயம்பு மூர்த்தியான மூலவர் நெல்லிவனநாதர்  மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்.இறைவன் தங்கிய இத்தலமும் திருநெல்லிக்கா என அழைக்கப்பட்டது.

ஸ்ரீ மங்களேஸ்வரி:

தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பிகை மங்களேஸ்வரி என்ற பெயரில் அருள்புரிகிறாள். இந்த அம்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. திருவாரூரை ஆண்டு வந்த உத்தம சோழனும், அவனுடைய மனைவியும் சிறந்த சிவ பக்தர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தைப் பாக்கியம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் திருவாரூர் சிவபெருமானை உருகி வேண்டினர். அப்போது மன்னன் மடியில் மூன்று வயதுச் சிறுமி வந்து அமர்ந்தாள்.  ‘உமக்கு மங்களம் வழங்க, பராசக்தியே மகளாக வந்துள்ளாள். அவளுக்கு ‘மங்கள நாயகி’ என்று பெயரிட்டு அழைத்து வா’ என்று ஒரு அசரீரி ஒலித்தது.

மன்னன் மகளாக மாறிய மங்கள நாயகி வளர்ந்து பெரியவள் ஆனாள். அப்போது ஆரூர் ஆலயத்தில் மங்கள நாயகி வழிபட்டுக் கொண்டிருந்தபோது, ‘ஆவணி முதல் வெள்ளிக்கிழமையன்று திருநெல்லிக்காவில் உம்மை மணமுடிப்போம்’ என்ற வாக்கு, ஈசனின் கருவறையில் இருந்து ஒலித்தது. அதன்படியே திருநெல்லிக்காவில் தெய்வத் திருமணம் நடைபெற்றது. எனவே இந்தத் திருத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால், திருமணத் தடை உள்ளவர்களுக்கு தடை நீக்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கந்தர்வன் ஒருவனின் குஷ்ட நோய் இத்தலத்தில் நீங்கியது. அவன் நீராடிய ரோகநிவாரண தீர்த்தம் உள்ளது.

கோபம் குறைந்த துர்வாசர் :

முனிவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் யுக்திகளை அறிந்தவர்கள். பிறருக்கும் உபதேசித்தவர்கள். அவர்களில் ஒருவரான துர்வாச முனிவருக்கு, எதற்கெடுத்தாலும் கோபம் பொங்கி வந்து விடும். உடனடியாக சாபம் கொடுத்து விடுவார் என்பது புராணக் கதைகளில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட துர்வாச முனிவர், இந்த தலத்தில் கோபம் குறைந்து சாந்தமானார் என்று தல வரலாறு கூறுகிறது.

கோபம் குறைய:

இந்த ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி, நெல்லிவனநாதரின் பாதத்தில் எல்லா பாரங்களையும் இறக்கி வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் தல விருட்சமான நெல்லி மரத்தை சுற்றி வந்து அதன் அடியில் அமர்ந்து சற்று நேரம் கண்களை மூடி தியானிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கோபம் குறைந்து உள்ளம் சாந்தமாகும் என்று கூறுகிறார்கள்.

கோவில் அமைப்பு:

மேற்கு நோக்கிய திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடன் சுற்றிலும் மதில்கள் சூழ காட்சி அளிக்கிறது.  5 நிலை கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள கவசமிட்ட கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் பணிந்து, நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லலாம். பிராகாரத்தில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், தலமரம், நெல்லி, மரத்தினடியில் நெல்லிவன நாதர், பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.  பிரகார வலம் முடித்துப் படிகளேறி முன் மண்டபத்தை அடைந்தால் இடதுபறம் சோமாஸ்கந்தர் தரிசனம்.  நேரே நடராஜ சபை உள்ளது. இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.  மூலவர் சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார். நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. தெற்கிலுள்ள கோபுர வாயில் வழியே அம்பாள் சந்நிதியை சென்று அடையலாம்.  தெற்கு வாயிலுக்கு வேளியே எதிரில் ஆலயத்தின் தீர்த்தக்குளம் உள்ளது.

சிறப்புக்கள் :

சோழர் காலக் கல்வெட்டுகள் எட்டு படி எடுக்கப்பட்டுள்ளன

பாதை:

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், மன்னார்குடியில் இருந்து கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருநெல்லிக்கா திருத்தலம்

கோயில் நேரம்:

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்:

04369-237 507, 237 438

கோயில் முகவரி:

ஸ்ரீ நெல்லிவனநாதர் கோயில்,

திருநெல்லகா- 610 205,

திருவாரூர்

கச்சனம் – அருள்மிகு கைச்சினநாதர் ஆலயம்

மூலவர்:  கைச்சினநாதர், கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்

தாயார்:   பல்வளை நாயகி, சுவேதவளை நாயகி, வெள்வளை நாயகி

தல விருட்சம்:கொங்கு, இலவம்

தீர்த்தம்:இந்திரதீர்த்தம்,வச்சிர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்

புராண பெயர்(கள்):

கைச்சினம், கோங்குவனம், கர்ணிகாரண்யம்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் தேவார பாடல்  பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 122ஆவது  சிவத்தலமாகும். சம்பந்தரால் பாடல் பெற்றது இத்தலம்.இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது அவர்  கை அடையாளம் சுவாமி மீது படிந்தது. எனவே கைச்சின்னம் என்ற பெயர் பெற்றது. இது தற்போது வழக்கில் கச்சனம் என்றாயிற்று. சுவாமி மீது விரல்கள் பட்ட அடையாளம் உள்ளது.

இந்திரன் ஐராவதத்தின் தந்தம் கொண்டு வளையல்கள் செய்து அம்பிகைக்கும் அணிவித்ததால்  அம்மன் வெள்வளைநாயகி ஆனார். முற்காலத்தில் இப்பகுதியில் கோங்கு மரங்கள் அடர்ந்திருந்தமையால் கோங்குவனம், கர்ணிகாரவனமென்றும் பெயர்கள் உண்டு.

சிறப்புகள்

இக்கோயில் மதுரை ஆதினத்திற்கு சொந்தமானது.  இந்திரன், அகத்தியர், திருணபிந்து முனிவர், அஷ்டவசுக்களில் விதூமன், மித்ரசகன் ஆகியோர் இக்கோவிலை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்கிறார். அகத்திய மகரிஷிக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதோடு, அவருக்கு இங்கே தியாகராஜராக காட்சி தந்தருளியுள்ளார் ஈசன்.

தல வரலாறு

கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் சதி செய்தான். கவுதமர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கமுடையவர்.எனவே சேவலாக உருவெடுத்து ஆசிரமத்தின் உச்சியில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார்.அகலிகை வழியனுப்பினாள். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். “விடியவே இல்லை, ஏதோ ஒரு சேவல் நேரம் கெட்ட நேரத்தில் கூவியுள்ளது” என்று சொல்லி விட்டு,அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆசிரமத்துக்குத் திரும்பினார் அகலிகை கற்பில் சிறந்தவளாக இருந்தாலும் அவள் இராமரால் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகக் கல்லாக மாற்றினார்.  இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார்.

இந்திரனின் உடல் முழுவதும் 1000 யோனிகள் ஆகக் கடவதென சாபமிட்டார். இதனால் வானுலகில் வாழ வெட்கித்து, பூவுலகம் வந்தான் தேவேந்திரன். பிருத்வி தலமாகவும், கமல தலமாகவும் விளங்கும் திருவாரூரில், சர்வேஸ்வரனை நோக்கித் தவமிருந்தான். அப்போது ஈசனின் அசரீரி வாக்கு ஒலித்தது. அதன்படி கோங்கு வனமான கச்சனம் திருத்தலத்தை வந்தடைந்தான். தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினான். அந்த தீர்த்த நீரால் மணல் லிங்கம் பிடித்து, தொடர்ந்து பூஜை செய்து வந்தான்.

வைகாசி மாத விசாக நட்சத்திர நன்னாளில், தான் பூஜித்து வந்த மணல் லிங்கத்தை தீர்த்தக் குளத்தில் கரைத்து பூஜையை முடித்திட எண்ணி, லிங்கத்தைக் கலைக்க முற்பட்டான். ஆனால் அந்த லிங்கம் பூமியை நிலையாகப் பற்றிக் கொண்டது. அதனை அசைக்க முற்பட்டதன் காரணமாக தேவேந்திரனின் கை விரல்கள் அந்த மணல் லிங்கத்தின் நெற்றியில் பதிந்தது.

உடன் பரமன் அங்கே தோன்றி, இந்திரனின் உடலில் இருந்த 1000 யோனிகள், 1000 கண்களாக மாற அருள் புரிந்தார். இதனால் இந்திரனுக்கு சகஸ்ராக்ஷன் எனும் பெயர் ஏற்பட்டது. சகஸ்ரம் எனில் ஆயிரம் என்றும் அக்ஷம் எனில் கண் என்றும் பொருள். சிவனாரை வணங்கி மகிழ்ந்த இந்திரன், ‘இத்தலத்தில் நீராடி, உம்மை வந்து வணங்கும் யாவருக்கும்  சகல வரங்களையும் அருள வேண்டும்,’ என கேட்க, அப்படியே அருளினார் அரனார். இந்திரனின் கை அடையாளம் (சின்னம்) லிங்கத்தின் மீது பாதித்துள்ளது இப்போதும் காணலாம்.

கோவில் அமைப்பு

கோயிலுக்குள் ஒரு பிராகாரமும் மதிலை அடுத்து ஒரு பிராகாரமும்,வெளிவீதியில் உள்ளன.  உள் பிராகாரத்தில் மேற்கில் விநாயகர்அஷ்டவசுக்களில் ஒருவனான விதூமன் வழிபட்ட விதூமலிங்கம், சுப்பிரமணியர், அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. கிழக்கில் நடராஜமண்டபம் உள்ளது.  மதிலுக்கு வடப்புறம் இந்திரதீர்த்தமும் தென்புறம் வச்சிரத் தீர்த்தமும் உள்ளது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான நஞ்சையில் வெட்டும் பொழுது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள்சிலை, உள்பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி – ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. (பின்புறத்தில் நந்தி உள்ளதுதெரிகிறது) நடனச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வர வடிவமும் அழகாக உள்ளன. எல்லோருக்கும் வீரம் மட்டும் போதாது. ஆற்றலையும், கல்வியையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்குரிய சரசுவதியை முதலிலும்,அடுத்து ஆற்றலுக்குரிய துர்க்கையையும், இதையடுத்து சோம்பேறித்தனத்தின் சின்னமான ஜேஷ்டாதேவியையும் (மூதேவி) இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கல்வியும் ஆற்றலும் இருந்தாலும் சோம்பலை விட்டவரே செல்வத்தை அடைய முடியும் என்பதற்கேற்ப இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள்.இத்திருக்கோயிலில் பதினொரு கல்வெட்டுகள் காணப்பெற்றுள்ளன.அவைகளில் இக்கோயிலுக்கும் பிறவுக்கும் அளிக்கப்பட்ட நிபந்தங்கள் -நிலபுலன்கள் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனுக்கு, ‘கோங்குஇலவுவனேஸ்வரசுவாமி, திருக்கைச்சின்னம் உடைய நாயனார்,கரச்சின்னேஸ்வரர்’ முதலிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. பூஜைகள், வழிபாடுகள் முதலியவை செம்மையாக நடைபெறுகின்றன. விசேஷ நாள்களில் சுவாமிக்கு வெள்ளி நாகாபரணமும், அம்பாளுக்கு வெள்ளி அங்கியும் சார்த்தப் பெறுகின்றன. பேய் பிடித்தல் போன்ற தோஷங்கள் இத்தலத்தில் நீங்குவதாக  சொல்லப்படுகிறது.

பிரார்த்தனை:

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவி செய்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

திருவிழா:

வைகாசி விசாகத்தில் கோயிற் பெருவிழா பத்துநாள்களுக்கு

நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை ஞாயிறு நாள்கள்,

மார்கழித் திருவாதிரை, மாசிமகம், பங்குனி உத்திரம் முதலிய விசேஷ

காலங்களிலும், பிரதோஷ காலங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது.

கந்தசஷ்டிவிழா சிறப்பாக நடத்தப்பெறுகிறது.

பாதை

கும்பகோணத்தில் இருந்து 61km. கும்பகோணத்தில் இருந்து  குடவாசல் வழியாக திருவாரூர் வந்து திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் திருக்காவாசல் அருனளயம் அடுத்து  கச்சனம். திருவாரூரிலிருந்து  15 கி.மீ., தொலைவில் கச்சனம் கிராமம் உள்ளது.

கோயில் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்

+91 94865 33293

கோயில் முகவரி

அருள்மிகு கைச்சினநாதர் ஆலயம்

கச்சனம்

திருவாரூர்

காஞ்சிபுரம் – ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில்

கோயில் பெயர்

ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில்

தோற்றம் காலம்

3000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்:  காம்பரேஸ்வரர்,ஏகாம்பரநாதர், திருவேகம்பர்

தாயார்: ஏலவார்குழலி

தலவிருட்சம்: மாமரம்

தீர்த்தம்: சிவகங்கை(குளம்), கம்பாநதி

தேவாரம் பாடியவர்கள்: சமயக்குரவர் மூவர்.

ஸ்தல வரலாறு:

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது.  ‘காஞ்சனம்’ என்ற பெயரில் இருந்து மருவி ‘காஞ்சி’ ஆனது. காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று பொருள்.  அந்நாளில் காஞ்சி நகரம் பெரும் சீரும் சிறப்போடு இருந்ததை இந்த சொல் குறிக்கிறது.

சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்

பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று.  இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது.  இத் தலத்தை  இயற்கை பேரழிவுகள் நான்கு யுகங்களாய் தாக்கியது இல்லை. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.  மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இக்கோவில். இங்கு உள்ள சிவபெருமான் மண்ணால் ஆனவர்  பிருத்வி லிங்கம்  என பெயர் பெற்ற அவர், சுயம்பு லிங்கம்.

இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள்  கிடையாது.  லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.   இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.  காஞ்சிபுரத்தில் அனைத்து சிவன் கோயில்களிலும் அம்மன் கிடையாது. அனைத்து கோவிலுக்கு காஞ்சி காமாட்சியே அம்மனாக உள்ளது தனி சிறப்பு. இக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது.

பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துக்களின் தொன்ம நம்பிக்கையின் படி முக்தி தரும் ஏழு நகரங்கள் உள்ளன. இந்நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று.  முக்தி தரும் ஏழு நகரங்கள்  வாரணாசி, அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜையின் மற்றும் ஹரித்துவார். காஞ்சிபுரம் ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது. “நகரங்களுள் காஞ்சி” என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி.  பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன.  சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.  இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் தொழுத இலிங்கங்கள் இருக்கின்றன.  அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன.

தேவாரப்பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது முதல் தலம். இந்நகரம் பற்றி சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன்என்ற மன்னன் ஆட்சிபுரிந்ததை பரிபாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  கி.மு வில் பதஞ்சலிமுனிவரால் காஞ்சி நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.  கி.பி 4 முதல் கி.பி 9 ம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள் கஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது ராபர்ட் கிளைவ்,  ஏகாம்பரநாதர் கோயிலை தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டான்

தல வரலாறு 1 :

முன்னொரு காலத்தில் பிரம்மன் தன்னுடைய வம்சத்தில் பிறந்து இறந்த அசுரர்களை மீண்டும் உயிர்பித்து வரங்கள் அள்ளித்தர முடிவெடுத்தான். அதற்காக காஞ்சியில் அருந்தவம் மேற்கொண்டான்.அவனின் காவலுக்கு மது-கைடபர் எனும் இரு அசுரர்களை உருவாக்கினான். இதை தடுக்க நினைத்த பராசக்தி,தனது மாயையினால் மஹாவிஷ்ணுவின் வடிவம் கொண்டாள். அந்த இரு அசுரர்களும் மகாவிஷ்ணு என்று எண்ணி பணிந்தனர்.அன்னை தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவினாள்.அது மது-கைடபரின் கைகளை அறுத்தது. பிரம்மதேவனின் தவம் கலைந்தது,இதனால் கோபம் கொண்ட பிரம்மன் அந்த மாய விஷ்ணுவை நெருங்கி,தன் பிரம்மாஷ்திரத்தை பயன்படுத்த முயன்றான். விஷ்ணுவாக வடிவத்தில் பராசக்தி,பிரம்ம தேவனே உன் காவலாளிகளை கொன்றது உருத்திர மூர்த்தி(சிவன்)தான் என்று சொல்லி ,உன் பின்புறத்தில்தான் ஓடுகிறார் என்று சொல்ல பிரம்மன் திரும்பிய சிறுபொழுதுக்குள்,பராசக்தி ருத்ரமூர்த்தியின் வடிவம் தாங்கி வடக்கு திசையில் ஓடினாள். பிரம்மன் மிகவும் குழப்பமுற்று நின்றான்.அந்த நாள் முதல் வடக்கு திசையில் காட்சி தந்த சிவ வடிவானது ஆம்பர விருஷ(மாமரம்) ரூபமாய் மாறி ஏகம்பரம் ஆனது. அங்கே ஏகம்பரநாதனுக்கு ஒரு கோவில் எழுந்தது.தென் திசையில் காட்சி தந்த திருமால் வரதராஜ மூர்த்தியாக கோவில் கொண்டனர் என்பதாகவும் வரலாறு உண்டு.

தல வரலாறு 2

பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது.  சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார்.  இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான்.  இங்கு வந்த அம்பாள் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார்.  கங்கை கம்பா நதியாக ஓடி வந்தது. அதிகமான வேகத்துடன் கம்பாநதி  வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள்.  உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார்.

பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில்.  பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.  காமாட்சி அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது. அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார்.  அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு “தழுவக்குழைந்த நாதர்’ என்ற பெயரும் இருக்கிறது.

தலபெருமை:

காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. மண்ணினால் அமைந்துள்ள சுயம்பு லிங்கதிருமேனிக்கு கவசமணிந்து அபிஷேகங்கள், ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றது.

சுந்தரரருக்கு அருள்:

கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார்.  ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார். பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார்.  எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ  நிலாத்துண்ட பெருமாள்

ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்.  சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு. தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

கோவில் சிறப்புகள்

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், ஸ்படிகத்திலேயே நந்தியும்இருக்கிறது.  ராமர் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு உள்ளது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் “கந்த புராணத்தை” இயற்றினார். பின்பு தான் இயற்றியதை அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.  இப்புனிதத் தலத்தில் விநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், அழகன் முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் காட்சியளிக்கின்றனர்.

ஸ்தலவிருட்சம்

இக் கோவிலில் ஸ்தலவிருட்சம்  3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன.  வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு.  இத்தெய்வீக மாமரம் இனிப்பு புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.  இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. கோயிலின் ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

இக்கோயிலிலே பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்ததற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம்மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

திருவிழாக்கள்

ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

பாதை

காஞ்சிபுரம் நகரத்தில் அமைந்துள்ளது – சுமார் 2 கி.மீ. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து.

கோயில் நேரம்

காலை 6.00 மணிமுதல் 12.30 மணி வரை.மாலை 4.00 மணிமுதல்இரவு 8.30 மணி வரை.

கோயில் தொலைபேசி எண்

044-2722 2084

கோயில் முகவரி

ஸ்ரீ ஏகம்பரேஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம்

PIN – 631502

திருச்சி ஸ்ரீ தாயுமானசுவாமி ஸ்வாமி கோயில், ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவில்

கோயில் பெயர்

ஸ்ரீ தாயுமானசுவாமி ஸ்வாமி கோயில்,

ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவில்

தோற்றம் காலம்

7 ஆம் நூற்றாண்டு

தெய்வத்தின் பெயர்

சுவாமி : உச்சி பிள்ளையார், தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர்.

அம்பாள் : மட்டுவார்குழலி.

தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம்

ஸ்தல வரலாறு

ஸ்ரீ  காஞ்சிப் பெரியவாளுக்கு மிகப் பிடித்த ஆலயங்களில் ஒன்று தாயுமானவர் திருக்கோயில். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமான அகநானூறில், குறுங்குடி மருதனார் என்ற புலவர் திரிசிரா மலையில் இன்னிசை வாத்தியங்கள்  பல முழங்க விழாக்கள் நடைபெற்றதாகப் பாடியுள்ளார் மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது.  அடிவாரத்திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதி முதல் நிலை.  மட்டுவார்குழலம்மை உடனாய ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்கள் இரண்டாம் நிலை.  குடவரைக்கோயில், உச்சி விநாயகர் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை.  இப்படி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதால், இதற்கு முத்தலை மலை என்றும் பெயருண்டு.

மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால்  தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.  உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும்

இம் மலை ஆராய்ச்சியில் ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.  பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு.  சிரா மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு.   இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும். ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசிரன், இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றதால்,  ‘சிராப்பள்ளி’ என்று பெயர். மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள கல் படுக்கைகள், சுமார் 5-ஆம் நூற்றாண்டில்  சமண முனிவர்களது வசிப்பிடமாக விளங்கினவாம். சமண முனிவர்களில் ஒருவரது பெயர் சிரா. அவரது பெயருடன் சமணப் பள்ளியை இணைத்து, ‘சிராப்பள்ளி’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் காலப்போக்கில் ‘திரு’ என்ற அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என மாறிய தாகவும் கூறுவர்.  சமண மதத்தில் இருந்து அப்பர் பெருமானால் சைவத்துக்கு மாறிய முதலாம் மகேந்திரவர்மனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான லலிதாங்குரன் நினைவாக ஒரு காலத்தில் திருச்சி ‘லலிதாங்குர பல்லவேச்சர கிருகம்’ எனப்பட்டது.  10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் ‘சிராமலை’ என்றும், ராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமானவரும் (ஸ்ரீதாயுமானவர் அருளால் பிறந்த தால் இவருக்கு இந்தப் பெயர்) ‘சிரகிரி’ என்றும் திருச்சியைக் குறிப்பிட்டுள்ளனர்.  சுமார் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் ‘திரிசிரபுரம்’ என்றும், அதன் பிறகு ஆங்கிலேயர் காலத்தில் ‘டிரிச்சினாபள்ளி’ என்றும் வழங்கப்பட்டது இந்த ஊர். இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன. பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது.  இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உமாதேவி, பிரம்மன், இந்திரன்,  அகத்தியர், ஜடாயு, சப்த ரிஷிகள், திரிசிரன், ராமபிரான், அர்ஜுனன், அனுமன், விபீஷணன், ஐயனார், நாக கன்னிகைகள், சாரமா முனிவர், சோழன், ரத்னாவதி, ஸ்ரீமௌனகுரு, தாயுமான அடிகள், அத்திரி முனிவர், தூமகேது, சேக்கிழார் மற்றும் வண்டு ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளன

கயிலாய மலைக்கு தோஷம் உண்டு; அதை ராவணன் அசைத்துப் பார்த்தான். பொதிகை மலைக்குத் தோஷம் உண்டு; அது இசைக்கு உருகிய மலை.  சிரா மலைக்கு தோஷம் இல்லை. ஆனால் கயிலாயம் போன்று சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகள் கொண்டது. எனவே, இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பர். மலைக்கோட்டை மேல்புறத்தில் உள்ள சறுக்குப் பாதையில் விபீஷணரின் பாதம் படிந்துள்ளது.

ஸ்ரீமௌனசுவாமிகள் மடத்தின், 7-ஆம் பட்டத்தின் தலைவரான வைத்தியலிங்கத் தம்பிரான், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி குடை, கமல வாகனம், கற்பக விருட்சம், அன்னம், மயில், கிளி வாகனம் ஆகியவற்றை இந்தத் திருக்கோயிலுக்கு அளித்துள்ளார். இங்கு நவக்கிரகங்கள் அனைவரும் சூரியனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.  சூரியனுக்கும் உஷாதேவிக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தம்பதி சமேதராக இங்கு காட்சி தருகின்றனர். தாயுமானவர் திருக்கோயிலின் மேற்கில், வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் பிரம்மதேவர் தன் இரு மனைவியருடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழக்கமான சனகாதி முனிவர்கள் நால்வருடன் அல்லாமல்,  அறுவருடன் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் மேற்பகுதியில் கல்லால் உருவாக்கப்பட்ட சங்கிலி, சிங்கத்தின் வாய்க்குள் கீழே விழாதவாறு சுழலும் பந்து ஆகியவை அந்தக் கால சிற்பக் கலைஞர்களது திறனுக்குச் சான்று. இங்கு எழுந்தருளியுள்ள மகாலட்சுமியை 108 செந்தாமரைகளால் அர்ச்சிப்பவர்கள் கடன் தீர்ந்து, செல்வச் சிறப்புகளுடன் வாழ்வர் என்பது ஐதீகம்.  ஸ்ரீதாயுமானவருக்கு நெய்யினால் பாத அபிஷேகம் மற்றும் பாத காணிக்கை செலுத்தி அந்த நெய்யை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குழந்தையில்லாத தம்பதிக்கு குழந்தை பிறக்கும். இந்தக் கோயிலின் தலமரம் வில்வம். இது பாராவாசல் நந்தவனத்தில் உள்ளது. பௌர்ணமி தினங்களில் திருச்சி மலையைச் சுற்றி கிரிவலம் நடைபெறுகிறது.

ஸ்ரீமட்டுவார் குழலம்மை

ஸ்ரீ உமாதேவியார்

ஸ்ரீமட்டுவார் குழலம்மை என்கிற சுந்தர குந்தளாம்பிகை மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ‘மட்டு’ என்றால் தேன்.  தேன் நிறைந்த மலர்களால் தொகுக்கப்பட்ட மாலையை அணிந்த, நீண்ட கூந்தலை உடையவள் என்பதால் இந்தப் பெயர். இந்த அம்பிகையின் சந்நிதியில் ஆதிசங்கரரின் ஸ்ரீசௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீமட்டுவார்குழலம்மை சந்நிதி எதிரில் ஒரு பாதாள அறையில் பாதாள ஐயனார் அருள் புரிகிறார்.  விவசாயம் செழிக்க மழை பொழிய  இவரை வேண்டினால் கைமேல் பலனாம். இவரை தரிசித்த பின்னரே அம்பிகையை தரிசிக்க வேண்டும். அம்பாள் சந்நிதியின் முன் உள்ள மண்டபத்தின் மேல் பகுதியில் ஸ்ரீசக்கரம் வரையப்பட்டுள்ளது. இதனால்  அம்பாளை சக்கரநாயகி என்றும் சொல்வர். திருவையாறு தியாகராஜ சுவாமிகள், இந்த அம்பாளின் மீது பாடல்கள் பாடி உள்ளார். சிவபெருமானை மணம் செய்ய விரும்பிய உமாதேவியார், தாமரை மலரில் சிறிய பெண் குழந்தையாக வடி வெடுத்தாள். காத்தியாயன முனிவர் அவளை வளர்த்து வந்தார்.  அவளின் கூந்தலில் நல்மணம் வீசியதால் அவள் மட்டுவார்குழலி என அழைக்கப்பட்டாள். பருவ மெய்திய மட்டுவார்குழலி சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி, அருகில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட்டு  தவம் செய்தாள்.  இந்த இடம் நாகநாத சுவாமி கோயில். பெருமான் அவளுக்குக் காட்சி கொடுத்து மணம் புரிந்தார். சித்திரைத் திருவிழாவின் 6-வது நாளில் இந்தத் திருமண விழா இங்கு நடைபெறும்.

மலை உச்சிக்கு வந்த பிள்ளையார்

ஸ்ரீராமர், இராவணனிடம் போர் செய்து சீதையை மீட்டு வந்தார். சீதையை மீட்க விபீஷணனும் துணையிருந்ததால் அசுரகுலத்தில் பிறந்தவனாக இருந்தும் இராவணனுடைய தம்பியாக இருந்தும் நியாயத்தின் பக்கம் இருந்து  நல்ல எண்ணத்துடன் உதவி செய்ததால் ஸ்ரீராமர் விபீஷணன் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அதனால், ஸ்ரீராமர் வணங்கி வந்த ஸ்ரீரங்கநாதர் சிலையை விபீஷணனிடம் தந்து, “இந்த விக்கிரகத்தை நல்லமுறையில் நீ பூஜை செய்து வந்தால் பல நன்மைகள் ஏற்படும்.” என்று கூறி ஆசி வழங்கி விபீஷ்ணனிடம் ஸ்ரீரங்கநாதரின் சிலையை கொடுத்து, “இந்த விக்கிரகத்தை நீ இலங்கைக்கு சென்று சேரும் வரை எந்த இடத்திலும் வைக்க வேண்டாம். அப்படி வைத்தால் வைத்த இடத்திலேயே ஸ்ரீரங்கநாதர் தங்கிவிடுவார். மீண்டும் விக்கிரகமாக உள்ள அவரை தூக்க உன்னால் இயலாது.” என்றார் ஸ்ரீஇராமர். அசுரகுலத்தில் பிறந்தவனிடம் ஸ்ரீரங்கநாதர் சிலையை தந்து அவன் முறையாக வழிப்பட்டால் நிச்சயம் விபீஷணன் யாரும் வெல்ல முடியாத அசுரகுல தலைவனாக திகழ்வான். அவன் நல்லவனாக இருக்கும் வரை அது நல்லதுதான். மாறுவது மனம் என்பார்களே அப்படி ஒருவேளை விபீஷணனின் நல்ல குணம் மாறி, தன்னுடைய பிறவி குணமான அசுரத் தன்மையை வெளிப்படுத்தினால் அது நமக்கு ஆபத்து என எண்ணிய தேவர்கள், ஸ்ரீஇராமர் விபீஷணனிடம் தந்த சிலையை எப்படியாவது வாங்கியே தீர வேண்டும் என்ற முடிவு செய்தார்கள். அதனால் தங்கள் பயத்தை விநாயகரிடம் சொல்லி முறையிட்டார்கள். “அமைதியாக இருங்கள். எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். ஆத்மலிங்கத்தை இராவணனால் இலங்கைக்கு எடுத்து செல்ல முடிந்ததா? அதுபோல் விபீஷ்ணனும் ஸ்ரீரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாது” என்று தேவர்களுக்கு நம்பிக்கை தந்து அனுப்பினார். எதுவும் அறியாத விபீஷணன், ஸ்ரீரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்து சென்று கொண்டு இருக்கும் போது, மாலை நேரம் வந்ததால் இறைவனை பூஜிக்க வேண்டும் என்று கருதி காவேரி கரை பக்கம் வந்தார். இறைவனை பூஜிக்கும் முன் குளிக்க வேண்டுமே… எப்படி குளிப்பது? இந்த ஸ்ரீரங்கநாதர் சிலையை கீழே வைத்து விட்டால் அந்த இடத்திலேயே ஸ்ரீரங்கநாதர் அமர்ந்து விடுவார் என்றாரே நம் ஸ்ரீராமர். என்ன செய்வது?” என்று குழப்பத்தில் இருந்தார். அந்த நேரத்தில் மாடு மேய்த்துகொண்டு ஒரு சிறுவன் எதிரில் வந்து கொண்டு இருந்தான். அந்த சிறுவனை அழைத்து, “இந்த சிலையை பத்திரமாக கையில் பிடித்து கொள். நான் காவேரில் குளித்துவிட்டு வருகிறேன்.” என்றார் விபீஷ்ணர்.   விபீஷ்ணர் குளித்து கொண்டு இருக்கும் போது, அந்த சிறுவன் ஸ்ரீரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டு ஒடினான். இதை கண்ட விபீஷ்ணர் கோபம் கொண்டு அந்த சிறுவனை துரத்திக் கொண்டு ஒடினார். அந்த சிறுவன் நிற்காமல் மிக வேகமாக ஓடி, ஒரு மலை உச்சியில் ஏறி அமர்ந்தான். அதிக வேகமாக ஓடியதாலும் வேகு தூரத்திற்கு அந்த சிறுவனை துரத்தி வந்ததாலும் களைப்பும் கோபமும் அடைந்த விபீஷ்ணர், அந்த சிறுவன் தலையில் ஓங்கி குட்டினார். குட்டுப்பட்ட அச்சிறுவன், “என்னை கண்டால் எல்லோரும் தன்னை தானே குட்டிக்கொள்வார்கள்… ஆனால் நீயோ என்னையே குட்டிவிட்டாயே.” என்று சிரித்து கொண்டே சிறுவன் விநாயகராக விபீஷணனுக்கு காட்சி தந்து  அந்த இடத்திலேயே சிலையாக அமர்ந்தார். இதனால் உச்சிபிள்ளையாருக்கு இன்றும் விபீஷணனிடம் தலையில் குட்டுப்பட்ட சிறுபள்ளம் இருக்கும்.

உச்சிபிள்ளையார் கோயில் உருவான கதை

மகேந்திரவர்மன் பல்லவன் மலை பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த மலைபகுதியை கிழக்கு பக்கமாக பார்த்த போது யானை முகமாகவும், வடக்கிலிருந்து பார்க்கும் போது மயில் நிற்பது போலவும், தெற்கில் இருந்து பார்க்கும் போது யானை போலவும் காட்சி கொடுத்தது மலை. இதை கண்ட அரசர் இந்த மலையில் ஏதோ தெய்வீக சக்தி படைத்தது என்று கருதி மலை மீது ஏறிபார்த்தார். அங்கு ஒரு விநாயகர் சிலையை கண்டார். அதை தன் அரண்மனைக்கு எடுத்து செல்ல முயற்சித்தபோது சிலையை அசைக்க முடியவில்லை. அதனால் மலையிலேயே கோயில் கட்டினார். உச்சி பிள்ளையாரை வணங்கினால் உயரிய வாழ்க்கை அமையும்.

விநாயகர் சதுர்த்தி விழா

இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி என்பது பிள்ளையார்பட்டிக்கு அடுத்தப்படியாக திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலில் கொண்டாடுவது  சிறப்பம்சமாகும்.  150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 18 மணி நேரம் அவித்தபின்   விநாயக சதுர்த்தி காலை  இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் வைத்து பக்தர்கள் சுமந்து உச்சிபிள்ளையாருக்கு எடுத்து வரப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது. விநாயக சதுர்த்தி விழா 14 நாட்கள் நடைபெறுகிறது. விநாயகர் தினமும் பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் வருடா வருடம் ஏற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு வந்து விநாயகரை வேண்டிக்கொண்டால் குழைந்தை இல்லாதோருக்கு, குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதிகாசம் இக்குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி மற்றும் விநாயகர்வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும் வாயுவிற்கும் இடையில் ஏற்பட்ட பெரும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இதுவும் ஒன்று எனவும் கூறுவர்

ஸ்ரீ  தாயுமானவர் சுவாமிகள்

தமிழ்நாட்டில் உள்ள நான்கு பெரிய லிங்கங்களில் ஸ்ரீதாயுமானவரின் லிங்கத் திருமேனியும் ஒன்று. லிங்கம் மேற்கு நோக்கி இருப்பதால் எதிரில் வழக்கப்படி உள்ள நந்தி கிடையாது. அதற்கு பதிலாக நந்தியம்பெருமான் தெப்பக்குளம் அருகே கோயில் கொண்டுள்ளார்.  மேற்கு நோக்கியுள்ள இறைவனின் முதுகுப்புறத்தைப் பார்த்தபடி நந்தியும், மேற்கு நோக்கியுள்ளது அதிசயம்தான்.

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர்

தாயுமானவர் புராணம்

தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி சிவனின் தோவரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69-வது தோவரத்தலம் ஆகும். திருச்சி மலைகோட்டையில் உள்ள தாயுமானவர் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது இங்கு சிவபெருமான் மாட்டுவார் குழலியுடன் தாயுமானவர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் தாயை பிறிந்தவர்கள் இவரை வேண்டிகொண்டால் தாயாக இருந்து வழிநடத்துவார் மேலும், பெண்கள் கர்பகாலத்தில் இவரை வணங்கினால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை

பெண்ணுக்கு திருமணம்:

காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் ரத்தின குப்தன் என்ற வணிகன். இவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. ரத்தினாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்தப் பெண், பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சிராப்பள்ளியில் இருந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை சிறப்புற திருமணம் செய்து கொடுத்தனர். ரத்தினாவதி தனது கணவருடன், திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் தெற்கு வீதியில் அமைந்த ஒரு இல்லத்தில் வாழ்ந்து  வந்தனர்.  சிவ பக்தையான ரத்தினாவதி, தினந்தோறும் சிவ பெருமானை வழிபட்டு வந்தாள். இந்த நிலையில் ரத்தினாவதி கருவுற்றாள். சில மாதங்கள் சென்ற நிலையில் அவளது கர்ப்ப காலம் முடிந்து, பேறு காலம் வந்தது. ரத்தினாவதியின் தாயார், தன் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, பேறு காலத்தில் தேவைப்படும் காய மருந்து, தைலம் போன்ற பொருட் களுடன் பூம்புகாரில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக திருச்சியை நோக்கி பயணித்தார். பல ஊர்களைக் கடந்து வரும்போது, பலத்த மழை கொட்டியது. பெரு மழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. ஆகவே ரத்தினாவதியின் தாயாரால் அக்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பேறு காலத்தின்போது, தாயார் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தினாவதி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பல நாட்கள் ஆகியும் தாய் வராததால் வருத்தம் அடைந்தாள். அவளது மனம் தாயின் வருகைக்காக ஏங்கியது. தாயின் துணை இல்லாததால், தான் தினமும் வழிபடும் திருச்சி செவ்வந்திநாதரையும், மட்டுவார் குழல் அம்பாளையும் நினைத்து பிரார்த்தித்து வந்தாள். பக்தையின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள். தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாக இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன. அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார் என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.

பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா. காவிரியின் தென்கரையில் சிறு குன்றின் மீது குடியிருந்து மலைக்கொழுந்து ஈசர் என்றும், சாரமா முனிவரால் செவ்வந்தி நந்தவனம் அமைக்கப்பட்டு, அந்தக் பூக்களை விரும்பிச் சூடிக்கொண்டதால் ‘செவ்வந்திநாதர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்தல ஈசன், இந்த நிகழ்வுக்குப்பிறகு ‘தாயுமானவர்’ என்றே அழைக்கப்பட்டார். சாரமான முனிவரை, உறையூர் சோழ மன்னன் உதாசீனப்படுத்தினான் என்பதற்காக, மேற்குப்புறமாக திரும்பி உறையூரில் மண் மழையைப் பெய்ய வைத்து மன்னனுக்கு தண்டனை கொடுத்த இறைவன், தன் பக்தையான ரத்தினாவதிக்கு தாயாக வந்து தலைப்பிரசவம் பார்த்தார் என்று சொல்லும்போது, இறைவன் தனது பக்தர்களுக் காக எதையும் செய்வார் என்பது புரிகிறது.

மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார்.

கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்தத் தலத்தின் தீர்த்தங்கள்:

காவிரி:  ஊருக்கு வடக்கே சுமார் அரை கி.மீ. தூரத்தில் ஓடுகிறது. ‘குடக காவிரி நீளலை, சூடிய திரிசிரா மலை மேலுரை வீர’ எனும் திருப்புகழ் வரியின்படி, காவிரி முற்காலத்தில் மலையை ஒட்டி ஓடியதாகத் தெரிகிறது.

சிவகங்கை: மலைக்கு வடமேற்கில் நாகநாத சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. கோயிலுக்கு மேற்புறம் மைய மண்டபத் துடன் அமைந்த இந்த தெப்பக் குளம் பிரம தீர்த்தம் என்றும் சொல்லப்படும். இது 16-ஆம் நூற்றாண்டில் திருச்சியை ஆண்ட விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது. இங்கு பங்குனியில் தெப்போற்சவம் நடைபெறும். இந்தக் குளம் எண்டோன்மென்ட் போர்டின் உத்தரவுப்படி (23.6.49 தேதி உள்ள ஒப்பந்தப்படி) திருச்சி மாநகராட்சிக்கு 99 வருஷங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இங்கு வசித்த முதலைகள், சில வருடங்களுக்கு முன் திருச்சிவாசிகளை ஆட்டிப் படைத்ததாம்.

நன்றுடையான்: திருச்சி டவுன் ரயில் நிலையத்தில் இருந்து மலைக்குக் கிழக்கே சுமார் கால் மைல் தூரத்தில் உள்ளது.

தீயதில்லான்: மலைக்குத் தெற்கில் அமைந்திருக்கும் இதை உட்குளம் என்றும் சொல்வார்கள். தற்போது இங்கு வைத்தே சித்திரை மாதம் பிரமோற்சவத்தின் 6-ஆம் நாளன்று அம்மனின் தபசு விழா நடைபெறுகிறது.

தலத்தை போற்றிப் பாடியுள்ளோர்

அருள்திரு சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர்கோன் நாராயணன் (சிராமலை அந்தாதி), மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் திருச்சியின் தொன்மை மற்றும் தலப் பெருமை குறித்து நூல்களை இயற்றியுள்ளனர். மேலும் தாயுமான அடிகள், அருணகிரிநாதர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகியோரும் இந்தத் தலத்தை போற்றிப் பாடியுள்ளனர்.   தமிழறிஞர்களான அ.சரவண முதலியார், அவரின் புதல்வர் அ.ச. ஞானசம்பந்தம், புலவர் கீரன், அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் மற்றும் பாரிஸ்டர் வ.வே.சுப்பிரமணிய ஐயரும் திருச்சியில் வாழ்ந்திருந்தனர்.

தெப்ப திருவிழா

பங்குனி மாதத்தில் நடைபெறும் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது. தாயுமானசுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகணி (தெப்பக்குளம்) உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறும்.

வரலாறு

கீழ்க் கோபுர வாயிலுக்குப் பக்கத்தில்  ஆயிரங்கால் மண்டபம் இடம்பெற்றிருந்தது. இந்த மண்டபம் 17-ஆம் நூற்றாண்டில், ‘அனுப்பி’ என்ற பெண்ணால் கட்டப்பட்டது என்கிறார்கள். கோபுர வாயிலில் உள்ள தூண் ஒன்றில் அவள் உருவம்  அமைக்கப்பட்டுள்ளது.  அங்கு 1772-ல் வெடி விபத்து ஏற்பட்டதால் இந்தப் பகுதி பலத்த சேதத்துக்கு ஆளானது. அதன் பின்னரே இந்தப் பகுதி கடை வீதியானது. இவ்விடம் முதன் முதலில் விசயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடகப் போர்களின் போது பிரித்தானியரால் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோட்டைப் பகுதிக்குள் இருக்கும் அமைப்புக்களுள் காலத்தால் முந்தியது கி.பி 580ல் உருவாக்கப்பட்ட பல்லவர் காலக் குகைக் கோயில் ஆகும். பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினர். சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை இப்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன் பின்னர் இவ்விடம் விசயநகரப் பேரரசின் கீழ் வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பின்னர் இப்பகுதி தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விசயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது. விசயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் ஆளுனர்களாகச் செயற்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். இவர்கள் காலத்திலேயே திருச்சி செழித்திருந்ததுடன் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் உருவாயின. நாயக்கர்களே மலைக்கோட்டைக் கோயிற் குளத்தையும் முக்கியமான சுவர்களையும் கட்டினர். பின்னர் திருச்சியே அவர்களின் தலைநகரமுமானது. இக்கோட்டை மாளிகையிலேயே இராணி மீனாட்சி, சந்தா சாகிப்பிடம் ஆட்சியைக் கையளித்தார். சந்தா சாகிப் பிரான்சியர் துணையுடன் ஆட்சி நடத்தினார். கர்நாடகப் போரின் பின்னர் சந்தா சாகிப்பின் மாமனான ஆற்காடு நவாப் பிரித்தானியரின் துணையோடு திருச்சிராப்பள்ளிக் கோட்டையைக் கைப்பற்றினார். இதுவே பிரித்தானியர் தமிழ்நாட்டிலும் பின்னர் முழுத் தென்னிந்தியாவிலும் காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தற்போது இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வுப்பிரிவின் சென்னை வட்டத்தின் மேலாண்மையின் கீழ் பேணப்பட்டு வருகின்றது.

வரலாற்றுச் சிறப்புகள்

பல்லவர்களால் சிறு குகைக் கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலைப், பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.

நாயக்கர்கள் காலம்

மதுரை நாயக்க வம்ச அரசர்களின் தலைநகரமாக இந்த மலை இருந்தமையால், இது பல பெரும்போர்களைக் கண்ணுற்றது. விஜய நகரப் பேரரசர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர் அவற்றில் ஒன்றாகும். நாயக்கர்களின் வடமேற்கு அரணாக இக்கோட்டை விளங்கியது. அவர்களது அரசாட்சியின் இறுதி நூற்றாண்டுகளில் தஞ்சைமாயக்கர்கள், பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் மற்றும் படையெடுத்து வந்த பிஜாப்புர், மைசூர் மற்றும் மராத்திய அரசர்களிடமிருந்து இக்கோட்டை அரணாகக் காத்து வந்தது.

கர்நாடக நவாப் காலம்

திருச்சி மலைக்கோட்டை சந்தா சாஹிப்மற்றும் ஆற்காட்டு அலி ஆகியோரிடையே நிகழ்ந்ததான போருக்காக மிகவும் நினைவு கூறப்படுகிறது. ஆங்கிலப் படைகளிடமிருந்து தப்பி இக்கோட்டையில் ஒரு குகையினுள் சந்தா சாஹிப் ஒளிந்து கொண்டதாகக் கூறுவர்.

ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ்

இப்போருக்குப் பிறகு, 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து விட்டது. மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate) எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது.

கோவில் அமைப்பு

அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து படி ஏறினால், மௌன சுவாமிகள் மடம், முருகன் சந்நிதி, நூற்றுக் கால் மண்டபம், இன்னும் பல மண்டபங்கள், தாயுமானவரின் கோயில் மண்டபம், கம்பத்தடி விநாயகர், ஆறுமுகன், அறுபத்துமூவர், செவ்வந்தி விநாயகர், மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை ஆகியோரை தரிசித்த பிறகு மூலவர் ஸ்ரீதாயுமானவரை தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், சகஸ்ரலிங்க மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சித்திர மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணி மண்டபம் ஆகியவை உள்ளன. சகஸ்ரலிங்க மண்டபத்தில் பல லிங்கங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் இறை அன்பர்களாலும் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.

கோயிலுக்குச் செல்லும் வழியில் இடப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் அழகான சலவைக்கல் மண்டபம் ஒன்றும் உள்ளது. இங்கு சித்திரை மாதத்தில் நிகழும் பெருந்திருவிழாவின் 5-ஆம் நாள் செட்டிப் பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சுகப் பிரசவம் நிகழ்வதற்காக சுக்கு வெல்லம் கலந்த மருந்துப் பொடி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மருந்தினால் பலன் அடைந்தோர் ஏராளம்.  மலைமேல் கோயிலில் சுவாமி சந்நிதிக்குப் போகும் வழியில் சித்திர மண்டபம் உள்ளது. இது அம்மன் கோயிலுக்கு மேலேயே மாடிக் கட்டடமாக  அமைந்துள்ளது. இங்கு நடராசர் திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும், சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. உச்சிமலைக்கு அருகே வலப் பக்கத்தில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இது தளவாய் முதலியாரால் சுமார் 1630-ல் கட்டப்பட்டது. இங்கு வசந்த விழா மற்றும் கோடை உற்சவ விழா ஆகியன நடைபெறும். இதை எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பகுதியாக அன்றைய ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். தற்போது உல்லாசப் பயணிகள் கட்டணம் செலுத்தி, திருச்சி நகர அழகை பார்க்க வசதியாக இங்கு தொலைநோக்குக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பதினாறு கால் மண்டபத்துக்கு மேல் உள்ள மணி மண்டபம் உறையூர் வணிகர், உலகநாத செட்டியாரது  முயற்சியால் நகர மாந்தரின் உதவியுடன் 1918-ல் கட்டப்பட்டது. இங்கு நிறுவப்பட்டுள்ள மணி நாகப்பட்டினம் தொழிற்சாலையில் செய்யப்பட்டு, சி.கிரிக்டன் என்ற ஆங்கிலேயரால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது இரண்டரை டன் எடையுடன் சுமார் 4 அடி 8 அங்குல நீளமும், அதே அளவு குறுக்களவும் கொண்டது.  தினமும் காலை 4, 6, 10, 12  மற்றும் மாலை 6, 10 மணியளவிலும் நேரங்களிலும், திருவிழா நாட்களிலும் இந்த மணி அடிக்கப்படுகிறது.  மலைப் பாதையின் நடுவிடத்தில் இடப்புறத்தில் ‘சிவசிவ ஒலி’ மண்டபம் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் திருமுறை ஓதுதல், ஒலிபெருக்கி வசதியுடன் நடந்து வருகிறது

திருவிழாக்கள் :

பங்குனி, சித்திரை மாதங்களில் முறையே தெப்பத் திருவிழாவும் தேர்த் திருவிழாவும், வைகாசியில் வசந்தத் திருவிழாவும், ஆடியில் ஆடிப்பூரத் திருவிழாவும் புரட்டாசியில் நவராத்திரி விழாவும், ஐப்பசியில் கந்தர் சஷ்டித் திருவிழாவும்  சிறப்புற நடைபெறுகின்றன. ஐப்பசி மாத பௌர்ணமியில் ஸ்ரீதாயுமானவருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாத சோம வாரங்களில் உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரையில் பிரம்மோற்ஸவம்,பங்குனியில் தெப்ப உற்சவம்,ஆடிப்பூரம்,ஐப்பசியில் அன்னாபிஷேகம்,திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம்,சிவராத்திரி,விநாயகர் சதுர்த்தி,ஆங்கிலப்புத்தாண்டு,தமிழ்புத்தாண்டு,பொங்கல்.

பாதை

மலைக்கோட்டை கோயில், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்திலும் உள்ளது.

கோயில் நேரம்

உச்சிப் பிள்ளையாரை காலை 6 முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம். அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் சந்நிதி மற்றும் தாயுமானவர் திருக்கோயில் காலை 5- 12 வரையும், மாலை 4- இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்:

0431 2704621, 2710484, 2700971.

கோயில் முகவரி:

ஸ்ரீ தாயுமானசுவாமி ஸ்வாமி கோயில்

மலைக்கோட்டை

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி (P.O)

தமிழ்நாடு

இந்தியா.

 

திருவெறும்பூர் – திருஎரும்பீஸ்வரர் திருக்கோயில்

கோயில் பெயர்

திருஎரும்பீஸ்வரர் திருக்கோயில்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்: எறும்பீஸ்வரர், மதுவனேசுவரர், மாணிக்க நாதர் மணிகூடாசலதேஸ்வரர் திருவெறும்பியூர் ஆழ்வார், திருமலைமேல்,மகாதேவர்

உற்சவர்: சோமாஸ்கந்தர்

தாயார்: நறுங்குழல் நாயகி, சௌந்திர நாயகி, இரத்தினம்மாள், மதுவனவிஸ்வதி, நறுங்குழல் நாயகி

தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், குமார தீர்த்தம்

ஆகமம்: காமீகம்

சிறப்பு திருவிழாக்கள்:

பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை

ஸ்தல சிறப்பு

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருமால், பிரம்மா  இந்திரன் முதலான தேவர்களும் அகத்தியர் நைமிச முனிவர் ஆகிய முனிவர்களும் இத்தலத்தின் சிறப்பறிந்து இங்கு வழிபட்டனர். பழமையான கோயில்களைப் பாதுகாக்கும் தொல்லியல் துறையின் கீழ் உள்ளது இக்கோயில்.

தமிழகத்தில் உள்ள 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 124-வது ஸ்தலமாகும். இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது.

இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

இது சோழர் காலக் கோயில். இக்கோயில் 120 அடி உயர மலையின் மேல் 125 படிகள் ஏறிச் சென்று காணும் வகையில் அமைந்துள்ளது. முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம். விலங்குகள் வழிபடும் ஆலயங்கள் என பிரத்தியேகமாக குறிப்பிடப்படும் ஆலயங்களின் வரிசையில் எறும்புகள் வழிபட்ட தலமாக கருதப்படுவது திருவெறும்பேஸ்வரர் கோயில்.  எறும்புகளுக்கும் அருள் ஈந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால், இத்தலம் எறும்பியூர் எனப்பட்டது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் புற்றுமண்ணால் உருவாகியிருக்கும் சுயம்புலிங்கம். எண்ணெய் காப்பு மட்டுமே செய்கின்றனர்.

லிங்கம் இடப்புறத்தில் சாய்ந்தபடி இருக்க, மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. பார்வைக்கு லிங்கம் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பது போல இருக்கிறது.  இதில் வலப்புறம் உள்ள பகுதியை சிவன் அம்சம் என்றும், இடப்புறத்தை அம்பாள் அம்சம் என்றும் சொல்கின்றனர்.  இந்த லிங்கத்திற்கு “சிவசக்தி லிங்கம்’ என்ற பெயரும் உண்டு. சிவமும், சக்தியும் ஒன்று என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. அபிஷேக காலங்களில் லிங்க வடிவத்தின் மேல் கவசம் அணியப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் காணலாம்.

சூரியன் இரண்டு மனைவியரோடு காட்சி தருகிறார், சிவன் சன்னதியின் இடப்புறம் நவகிரகங்கள் சன்னதியும்,  சிவன் சன்னதிக்கு வெளியே சௌந்தர நாயகி அம்மன் சன்னதியும் உள்ளன. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சுவாமியை வழிபடுவது மிகவும் விசேஷம். மன்மதனின் மனைவி ரதி, அழகு மீது தனக்கு ஆணவம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளாள்.  பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள்.  இவள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருக்கிறாள் என்பது ஐதீகம். எனவே, இப்பெயரில் அழைக்கின்றனர். இவளுக்கு தினமும் வேறுவேறு விதமாக அலங்காரம் செய்கின்றனர். இதனால் அம்பாள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் ஆதியில் வழிபடப்பட்ட அம்பாள் சிலை இருக்கிறது.

சிவன் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இவ்வடிவம் காட்டுகிறது. கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருக்கிறதாம். கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர்.

ஸ்தல வரலாறு :

தாரகாசுரன் என்ற அரக்கனின் காரணமாக தேவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். அவர்கள் நாரதரிடம் சென்று தாரகாசுரன் கொடுமைகளில் இருந்து மீள வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் திருசிராபள்ளி அருகே உள்ள இத்தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு அவரிடம் முறையிடும்படி ஆலோசனை கூறினார். தேவர்களும் அதன்படி இங்கு வந்து அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவம் எடுத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அச்சமயம் லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருக்க எறும்பு உருவில் இருந்த தேவர்கள் அதன் மீதேறி இறைவனை வழிபட மிகவும் சிரமப்பட்டனர். இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தன் லிங்க உருவை ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். இதன் காரணமாக இத்தலம் எறும்பியூர் என்றும் இறைவன் எறும்பீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருச்சி மலைக் கோட்டையில் திரிசிரன் வழிபட்டதைப் போன்று, அவனது சகோதரனான கரன் இங்கு எறும்பு உருக்கொண்டு வழிபட்டதாகக் கூறுவதுமுண்டு ஆதித்த சோழன் காலத்தின் கற்றளியாக எழுப்பப்பட்ட ஆலயம் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் விரிவாக கட்டப்பட்டது. ஆதித்த காலன் காலத்தில் கோயில் கட்டப்பட்டு பின்னர் ராஜராஜ சோழன் காலத்தில் விரிவாக வடிவம் பெற்றது.  கண்டராதித்த சோழன், சுந்தரசோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோர் புகழ் சொல்லும் கல்வெட்டுக்கள் ஆலயப் பிரகாரச் சுவற்றிலும்  அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கின்றன.  கல்வெட்டில் இறைவர் ஷ்ரீகண்ட சதுர்வேதி மங்கலத்து தென் கயிலாயத்து மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளார். கி. பி. 1752ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுப் படையினருக்கு இடையில் நிகழ்ந்த போரில் இம்மலை போர் வீரர்களின் தளமாகப் பயன்பட்டது போர்காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ நிகழ்ந்த அழிவில் ஆலயத்தின் வசந்த மண்டபப் பகுதி மிகச் சிதைவுற்றுப் போனது. இந்த சிதைந்த பகுதிகளைச் சேர்த்து ஆலயத்தின் இடது புறத்தில் வசந்த மண்டபம் போன்ற ஒரு வடிவத்தை இந்திய தொல்லியல் துறை அமைத்திருக்கின்றது.

ஆலயத்தினுள்ளே சுரங்கப் பாதை ஒன்றும் உள்ளது.  இது தேவார முதல்வர்களான நால்வர் சன்னிதிக்குப் பக்கத்தில் உள்ள வாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இச்சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் முன்புற மண்டபத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் சன்னதி உள்ளது. ஹம் சக்திகள் பொலியும்

திருவெறும்பூர் படிக்கட்டுகள்  ஓம் என்பது அற்புத சக்தி வாய்ந்த பீஜாட்சர மந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே. அது போல எண்ணற்ற பீஜாட்சர மந்திரங்கள் எம்பெருமானின் உடுக்கை நாதத்திலிருந்து சதா சர்வ காலமும் தோன்றி இப்பிரபஞ்சத்தில் நிறைந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த பீஜாட்சரங்களுக்கெல்லாம் ஆதியான தனக்குத்தானே அநாதியான பீஜாட்சரமே ஹம் என்ற பீஜாட்சர மந்திரம் ஆகும். ஓம் என்று சொல்லும்போது அது உண்மையில் வெறும் ஓம் என்ற சொல் கிடையாது, பல ஆயிரக் கணக்கான ஒலி ஒளி சக்திகளின் சங்கம சக்திளைக் குறிக்கும் அடையாளச் சின்னம் என்பதே உண்மை. அதே போல ஹம் என்பதும் பல்லாயிரக் கணக்கான ஒலி ஒளி சக்திகளின் சங்கமம் ஆகும்.

பிரார்த்தனை     

சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக உழைக்கும் குணம் உண்டாகும், துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

திருவிழா:

வைகாசியில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

பாதை

தஞ்சாவூர் நோக்கி திருச்சிராப்பள்ளி இருந்து. 10 கி.மீ தூரத்தில் கோயில் உள்ளது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஜங்க்ஷன் பேருந்து நிலையத்திலிருந்தும் நிறைய பேருந்துகள் செல்கின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் தொடர் வண்டிகளும் திருவெறும்பூரில் நின்று செல்கின்றன

கோயில் நேரம்

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயில் தொலைபேசி எண்

0431 6574738, 9842957568.

கோயில் முகவரி

ஸ்ரீ எரம்பேஸ்வரர் கோயில்

திருவெறும்பூர்திருவெறும்பூர் (P.O)

திருச்சிராப்பள்ளி

தமிழ்நாடு

இந்தியா.

பழையாறை – ஸ்ரீ சோமநாத சுவாமி கோயில்

கோயில் பெயர்

ஸ்ரீ சோமநாத சுவாமி கோயில்

கோவில் தோற்றம் காலம்

6 ஆம் நூற்றாண்டிற்கு முன்

தெய்வத்தின் பெயர்

மூலவர்: சோமநாத சுவாமி

அம்பாள்: சோம கலாம்பிகை

ஸ்தல தீர்த்தம்: சோமா தீர்த்தம் மற்றும் ஜாதாய தீர்த்தம்

ஸ்தல விருக்ஷம்: நெல்லி

தேவராம்: அப்பர், ஞானசம்பந்தர் மற்றும் சுந்தர்

புகழ்பெற்ற பழையாறை கிராமத்தின் மையத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது மேல பழையாறை கீழப்பழையாறை என இரு பிரிவுகளை உள்ளது. இதில் கீழபழையாறையில்  கிழக்கு நோக்கிய இக்கோயில் உள்ளது. சோழ மன்னர் சுந்தரசோழரின் தலைநகராக விளங்கிய மண். கம்பீரமான ஏழுநிலை முதன்மை கோபுரம் இருந்தது, கால போக்கில் அழிந்தது போக அதன் கல்ஹாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. எனினும் மாடு இளைத்தாலும் அதன் கொம்பு இளைக்கவில்லை எனும் கிராமத்து சொலவடை க்கு ஏற்ப கம்பீரமாய் இரண்டரை ஏக்கர் பரப்பில்  பரந்து விரிந்து காணப்படுகிறது.

உள்ளே நுழைந்தவுடன் முதல் மற்றும் இரண்டாம் கோபுரத்தின் இடைப்பட்ட பகுதியில் அம்பிகை திருக்கோயில் எட்டு அடிக்கும் மேற்ப்பட்ட உயர அடித்தளத்துடன் உள்ளது. அதன் முன்புறம் அதிட்டான அங்கங்களில் பலவித நாட்டிய பெண்களும், முன் பகுதியில் நரசிம்ம மூர்த்தி சம்ஹார காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடன் உள்ளது அதனை கடந்தால்  பெரியதொரு பரப்பில் கம்பீரமாய் பட்டத்து யானை போல் தற்போது புது பொலிவுடன் காட்சியளிக்கிறது இறைவனின் திருக்கோயில்  முன்பகுதி தாராசுரத்தினை நினைவு படுத்தும். ராஜராஜனால் திருப்பணி செய்யப்பட்டு அருண்மொழி தேவேச்சுரம் என வழங்கப்பட்டது.  ஆறை என்றால் ஆற்றிடைப்பட்ட ஊர் என பொருள் ,இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டு காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இந்நகரம் இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது.  அமர்நீதி நாயனார் இவ்வூரில் பிறந்தார். முழையூர், பட்டீச்சுரம், திருச்சக்தி முற்றம், சோழ மாளிகை, திருமேற்றளி, கோபிநாத பெருமாள் கோயில், ஆரியப் படையூர், புதுப் படையூர், பம்பைப் படையூர், மணப்படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம், நாதன்கோயில் ஆகிய ஊர்கள் அடங்கிய ஊரே பழையாறு ஆகும்.

பழையாறை ஊர் நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளி ஆகிய பிரிவுகளாக இருந்தன. அவற்றில் இன்று வடதளி தர்மபுரீஸ்வரர் கோவிலும், கீழ்த்தளி சோமேஸ்வரர் கோவிலும் உள்ளது. கருவறைஇடை மண்டபம் ,முக மண்டபம், என நீண்ட மண்டபங்களுள்ளன. இவற்றில் முக மண்டபம் குதிரை இழுப்பது போன்றதொரு அமைப்பில் உள்ளது பிற்சேர்க்கையாக இருக்கலாம். கருவறைமேல் உயர்ந்த கோபுரம் உள்ளது.  பின் புறம் விநாயகர் முருகனுக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. இங்குள்ள துர்க்கை வீர துர்க்கை என அழைக்கப்படுகிறாள். தன்னம்பிக்கை, மண் திண்மை வேண்டி  இவ்வம்மையை சிறப்புடன் வழிபடுகின்றனர். சந்திரன் வழிபாட்டு தன் கயரோகம் நீங்க வழிபட்டதால் இறைவனுக்கு இப்பெயர்.

பாதை

கும்பகோணம் – தாராசுரம் – பட்டேஸ்வரம் இருந்து 3 கி.மீ.

கோவில் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை

கோயில் தொலைபேசி எண்:

98945 69543

கோயில் முகவரி

ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில்

ஆட்சியில் இத்தலம்

பட்டீஸ்வரர் (P.O)

கும்பகோணம் (தாலுக்)

தமிழ்நாடு

இந்தியா.

 

திருவாரூர் – ஸ்ரீ தியாகராஜர் கோவில்

கோயில் பெயர்

ஸ்ரீ தியாகராஜர் கோவில்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வத்தின் பெயர்

மூலவர்:    வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி

தாயார்:  அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

தல விருட்சம்: பாதிரி.

தீர்த்தம்: கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்

தேவாரம் பாடியவர்கள்:   அப்பர், சம்பந்தர், சுந்தரர்

ஸ்தல வரலாறு

தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதை சோமகுல ரகசியம் என்பர்.  ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குந்தலம் திருவாரூர். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும்.

புராண பெயர்(கள்):

க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம் சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால்,எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே,சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், , அகத்தியர், விசுவாமித்திரர், மகாபலி, துர்வாசர், சுகுந்தன், தசரதன், ஸ்ரீராமன், லவ-குசர். புரூரவஸு, தேவர், யட்சர், கின்னரர், கிம்புருடர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தண்டி அடிகள் என பலரும் தியாகேசரை வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் இது!

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம்காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. சிதம்பர ரகசியம் போல தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது. நினைத்தாலே முக்தி தரும் தலம் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப் படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும்  மாலை 6 மணிக்கு பிரதோஷபூஜை நடத்தப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இதை ‘நித்தியபிரதோஷம்` என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக்கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும். நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் . சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.

பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.

கோயில் ஐந்து வேலி

குளம் ஐந்து வேலி

ஓடை ஐந்து வேலி

என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம்.  ஐந்து வேலி – 1000 அடி நீளம் 700 அடி அகலம்.  இத்தலத்தின் கோயில், கமலாலயக் குளம், இறைவனுக்குச் சார்த்தப்பெறும் செங்கழுநீர் மலரோடை இவை ஒவ்வொன்றும் ஐந்துவேலி பரப்புடையது. கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முகுந்தன், புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகும்.  திருவாரூரையும் தியாகராசர் கோயிலையும் பிரித்து வரலாறே எழுத முடியாது.

காவிரி ஆற்றின் வளமான வண்டல்பகுதியை உள்ளடக்கியது திருவாரூர் வட்டம். சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்). சப்த விடங்கத் தலங்களுள் இந்தத் தலமும் ஒன்று. வி+டங்கம் என்றால் உளியினால் செதுக்கப்படாதது என்று பொருள். மூலவர் வன்மீகநாதர் சுயம்புத் திருமேனி. தியாகராஜர் இங்கே, சோமாஸ்கந்தராகக் காட்சி தருகிறார் தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதை சோமகுல ரகசியம் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யர்கள்.  ஸ்ரீசக்ரம் இறைவனின் மார்பை அலங்கரிப்பதால் கூடுதல் சிறப்பையும் சாந்நித்தியத்தையும் பெறுகிறது ஆலயம்! நித்திய பூஜை, திருமஞ்சனம் ஆகியவை மூலவரின் அருகிலிருக்கும் மரகத லிங்கத்துக்கே நடைபெறுகிறது.  தில்லை நடராஜ சபை- பொன் அம்பலம். ஆரூர் ஸ்ரீதியாகராஜ சபை- ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர். பஞ்ச தாண்டவங்களில் இங்கு அஜபா தாண்டவம் நடைபெறுகிறது.  வாயால் சொல்லாமல் சூட்சுமமாக ஒலிப்பதால் இதற்கு அஜப என்று பெயர்.  அஜபா என்றால் ஜபிக்கப்படாதது என்று அர்த்தம். இந்த வித்தையை விளக்குவதே திருவாரூர் தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். எல்லாக் கோயில்களிலும் பாடும் முன் திருச்சிற்றம்பலம் என்பார்கள். இங்கு ‘ஆரூரா தியாகேசா’ என இரு முறை கூறுவர். தில்லை நடராஜ சபை- பொன் அம்பலம். ஆரூர் ஸ்ரீதியாகராஜ சபை- ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர் அமைந்தது. மணித் தண்டு, தியாகக் கொடி, ரத்தின சிம்மாசனம், செங்கழுநீர் மாலை, வீரகண்டயம், அஜபா நடனம், ஐராவணம், அரதன சிருங்கம், பஞ்சமுக வாத்தியம், பாரி நாகஸ்வரம், சுத்த மத்தளம், குதிரை-வேதம், சோழ நாடு, ஆரூர், காவிரி, பதினெண் வகைப் பண்- ஆகியவை தியாகராஜரின் 16 விதமான அங்கப் பொருட்கள்.

தியாகேசர் சந்நிதியில், மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்! பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும். சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. அத்துடன், தியாகராஜர் சந்நிதியில் ‘திருச்சாலகம்’ எனும், தென்றல் தவழும் சாளரம் உள்ளது குறிப்பிடத் தக்கது. தியாகராஜருக்கு மாலை நேர பூஜையின் போது 18 இசைக் கருவிகள் (சுத்த மத்தளம், கர்ணா, சங்கு, எக்காளம், நகரா, நமுகி (நட்டுமுட்டு), கிடுகிட்டி (கொடுகொட்டி), புல்லாங்குழல், தாரை, பாரிநாயனம், பஞ்சமுக வாத்தியம், தவண்டை, பேரிகை, பிரம்மதாளம், வாங்கா, திருச்சின்னம், தப்பட்டை, முக வீணை) இசைக்கப் பட்டன என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்! ஆரூர்ப் பெருமானை ‘பவனி விடங்கர்’, ‘விடங்கராய் வீதி போந்தார்’ என்றெல்லாம் சிறப்பிக்கிறது தேவாரம். இவருக்கு ‘தக்கார்க்குத் தக்கான்’ எனும் பெயரும் உண்டு. மற்றும் சில பெயர்களைப் பார்ப்போமா. மூலவர் வன்மீகநாதர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். கலை மகள், மலைமகள், அலைமகள்  ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள். இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் , அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். கலை மகள், மலைமகள், அலைமகள்  ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக அம்பிகை விளங்குகிறாள். இத்தலத்துக்கு சென்று தியாகேசரை வணங்கினால் , அம்மன் சந்நதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.

அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும். ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள்பெறலாம். அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷர பீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. அசைந்தாடும் பெருமாள், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், ரத்தின சிம்மாசனாதிபதி, கருணாகரத் தொண்டை மான், கனகமணித் தியாகர், தியாக விநோதர், மணித் தண்டில் அசைந்தாடும் பெருமான், செவ்வந்தித் தோடழகர், செம்பொற் சிம்மாசனாதிபதி, இருந்தாடழகர், கம்பிக் காதழகர், வசந்த வைபோகத் தியாகர், தேவசிந்தாமணி, முன்னிலும் மும்மடங்கு பின்னழகர், தியாக சிந்தாமணி, அந்திக் காப்பழகர், தியாகப் பெருமான், செம்பொன் தியாகர், கிண்கிணிக்காலழகர், தேவரகண்டன் இப்படிப் பல திருநாமங்கள் இறைவனுக்கு! இங்கு மாலை வேளையில் தேவேந்திரன் வந்து பூஜிப்பதாகவும், சாயரட்சை பூஜையின் போது தேவர்களும் ரிஷிகளும் கலந்து கொள்வதாகவும் ஐதீகம். தியாகேசரின் அசல் விக்கிரகத்தை ‘செங்கழுநீர்ப்பூ மூலம் சரியாகக் கணித்தான் முசுகுந்தன். எனவே, தியாகேசருக்கு செங்கழுநீர்ப்பூ சாத்துவது சிறப்பு. மூன்றாவது பிராகாரத்தில், வடமேற்குத் திசையில் ஈசான்யத்தை நோக்கி அருள்மிகு கமலாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த அம்பிகை மூன்று தேவியரின் சங்கமம். (க- & கலைமகள், ம- & மலைமகள், ல- & அலைமகள்). அம்பிகைக்குத் தனிக் கொடி மரம் உண்டு. சர்வேஸ்வரனைப் போன்று தன் சிரசில் கங்கையையும், பிறையையும் சூடி, யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள். அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில், 51 அட்சரங்கள் எழுதப்பெற்ற அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. கமலாம்பிகை கருவறையின் அணுக்க வாயிலின் இரு புறமும் சங்க- பதும நிதிகள் உள்ளன. இந்தத் தலத்தின் ஆதிசக்தியான நீலோத்பலாம்பிகைக்கும் (அல்லியங்கோதை) தனிச் சந்நிதி உள்ளது. நான்கு கரங்கள் கொண்ட இவளின் அருகே இடுப்பில் முருகப் பெருமானைத் தாங்கியபடி தோழி ஒருத்தி காட்சி தருகிறாள். அம்பிகை, தன் இடக் கரங்களுள் ஒன்றால் முருகப் பெருமானின் தலையைத் தொட்டபடி காட்சியளிக்கிறாள். இந்தக் கோயிலில் எரிசினக் கொற்றவை (ரௌத்திர துர்கை) சந்நிதி உள்ளது. இவளை ராகு காலத்தில் வழிபட்டால் திருமணத் தடை அகலும். கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம். கமலாலயம் என்று பெயர்.பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். இந்தக் குளக்கரையில் மாற்றுரைத்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். விருத்தாசலத்தில் இறைவனிடம் பொன் பெற்ற சுந்தரர் அதை அங்குள்ள மணிமுத்தா நதியில் இட்டு, திருவாரூர் வந்து கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொண்டார் என்று ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது. பொன் தரமானவையா என்று மாற்றுரைத்துப் பார்த்ததால், இந்தப் பெயர்.  இங்கு தெப்பத் திருவிழா 3 நாட்கள் நடைபெறும்.  நாள் ஒன்றுக்கு மூன்று சுற்று வீதம் நடைபெறும் தெப்பத்தில் ஸ்ரீகல்யாண சுந்தரரராக பவனி வருவார் சிவபெருமான்! துர்வாச முனிவருக்காக கமலாலயத் தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார் சிவபெருமான்.  அதனால் இந்தத் தீர்த்தத்துக்கு ‘கங்காஹ் ரதம்’ என்றும், துர்வாசரின் தாபத்தைத் தீர்த்ததால், ‘தாபஹாரணீ’ என்றும் திருநாமம் வந்தது.  இதில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.  இந்தத் தீர்த்தத்தின் தென்கரையில் துர்வாச மகரிஷி மடம் இருக்கிறது. தீர்த்தக் கரையில் பர்ணசாலை அமைத்து, கமலநாயகி எனும் பெயரில் தவம் செய்தாள் அம்பிகை. இதனால், பங்குனி மாதம், பௌர்ணமி, சுவாதி நட்சத்திரத்தில் தியாகராஜர் – கமலநாயகி திருமணம் நடந்தது. இங்கு உள்ள அழகான ஆழித் தேருக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் விஷமி ஒருவன் தீவைத்தான். தேரை புனரமைப்பு செய்யும் பணியில் முக்கியமானவர் எழுலூர் ஸ்ரீமான் சுப்பராய வாத்தியார். இவர் பின்னாளில் ‘ஸ்ரீநாராயண பிரம்மேந்திரர்’ எனப்பட்டார். இங்கு ஆனந்தீஸ்வரர், தட்சிணேஸ்வரர், அகத்தீஸ்வரர், சித்தீஸ்வரர், அல்வாதீஸ்வரர், பந்தேஸ்வரர், பிரம்மேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், பாதாளேஸ்வரர், பாண்டியநாதர், சேரநாதர் என்று சந்நிதிகள் நிறைய உண்டு! எட்டு துர்கைகள், இங்கு அருள்பாலிக்கின்றனர். முதல் பிராகாரத்தில் மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்கையாக திகழ்கிறாள். தவிர, முதல் பிராகாரத்தில் மூன்றும், 2-ம் பிராகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்று. ஆக, எட்டு துர்கைகள். இங்கு சுமார் 15 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். இதை விசேஷமாகச் சொல்கின்றனர் பக்தர்கள். இங்குள்ள நவக்கிரக மூர்த்தியர் வக்கிரம் இன்றி ஒரே வரிசையில் தென் திசையில் உள்ள ஸ்ரீ தியாகராஜஸ்வாமி நோக்கி அமைந்துள்ளனர். நளனும் சனியும் வழிபட்ட தலம் இது. வடக்கு கோபுரத்தின் எதிரில் வெளிப்புறச் சுவரை ஒட்டி சிவன் சந்நிதி உள்ளது. இவர் ஒட்டுத் தியாகேசர் என்பார்கள். விறன் மிண்ட நாயனார், ஆலயத்துக்குள் போக விடாமல் தடுத்ததால் மனம் வருந்தினார் சுந்தரர். அவரது வருத்தத்தைப் போக்க ஸ்ரீதியாகராஜ பெருமான் சுந்தரருக்குக் காட்சியளித்தார். இங்குள்ள விஸ்வகர்ம லிங்கத்துக்கு ஒற்றைப் படை எண்ணிக்கையில் செங்கல் வைத்து அபிஷே கித்து வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும். 2&ம் பிராகாரத்தில் ‘ஜுரஹரேஸ்வரர்’ சந்நிதி உள்ளது. நோயாளிகள் இவரை வேண்டி, ரசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், நோய்களிலிருந்து விடுபடலாம்.  இதே பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது அசலேஸ்வரர் சந்நிதி. அப்பரால் பாடப்பட்டது. சமற்காரன் என்ற அரசனின் கடும் தவத்துக்கு மகிழ்ந்து அவன் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனியில் எழுந்தருளியதால் அசலேசர் ஆனார். அசலேஸ்வரருடன் பஞ்சபூத லிங்கங்களாக இறைவன் காட்சி தருவது சிறப்பு. நமிநந்தியடிகள், எண்ணெய்க்குப் பதிலாகக் குளத்து நீரைக் கொண்டு இறைவனுக்கு விளக்கு எரித்த திருத்தலம் இது. சங்கீத மும்மூர்த்திகளான தியாகய்யர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி அவதரித்த தலமும் இதுவே!

இக்கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபம், கல்தூண்களை மட்டுமே உடையது. விழாக்களின்போது அவற்றின் மீது பந்தல் அமைத்துக் கொள்வர். இம்மண்டபத்தை சேக்கிழார் பாடியுள்ளார்.  நின்ற நிலையில் நந்தி இருப்பது இக்கோயிலின்  சிறப்பாகும். தியாகராசருடைய ‘அசபா நடனம்’ இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது. மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது. சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே. பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோயில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது. தண்டபாணிக் கோயில், இராஜதுர்கை கோயில், மாணிக்க நாச்சியார் கோயில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை. இக்கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில்தான் சுந்தரருடைய திருத்தொண்டத் தொகையை இயற்றப்பட்டதாக கூறுவர். 64 சக்தி பீடங்களில் திருவாரூர் முக்கியமான ஊர். இக்கோயிலில் ஞானசக்தியாகவும் (கமலாம்பிகை), கிரியா சக்தியாகவும் (நீலோத்பலாம்பாள்), இச்சாசக்தியாகவும் (கொண்டி) வடிவு கொண்டு அருள் புரிகிறாள். இக்கோயிலில் உள்ள சித்தீஸ்வரம், மேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுர ஆதீன நிறுவனர் உபதேசம் பெற்றதாக கருதப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னன் சகாஜி திருவாரூர் தியாகராஜர் மீது தமிழில் பல நூறு கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவரும் இவருக்குப் பின்னர் முதல் சரபோஜியும் ஆண்டபோது திருவாரூரில் மன்னரின் பிரதிநிதியாக சாமந்தனார் ஒருவர் பணிபுரிந்தார். அவருடைய மந்திரியாய் பணிபுரிந்தவர் சிங்காதனம். இவர் சிறந்த ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களில் கோயிலின் மண்டபத்தில் இன்றும் உள்ளது. அதன் வாயிலாக 17 ஆம் நூற்றாண்டில் ஆரூர் திருக்கோயில் எப்படித் திகழ்ந்துள்ளது என்றும் ஆரூர் மக்களின் பண்பாடு, அவர்களின் இயல், இசை, கூத்துக்கள் பற்றி விளக்கமாக நாம் காண முடிகிறது. ‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்’ என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?

திருவாரூர்த் தேர்

அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும். இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள் உள்பட அலங்கரிக்கப்படாத மரத்தேரின் எடை சுமார் 220 டன்களாகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகளும், 50 டன் எடையுள்ள மூங்கில்களும், சுமார் 10 டன் எடையுள்ள சவுக்கு மரங்களும் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தார் இரும்பு அச்சுக்கள், சக்கரங்கள், மற்றும் ஹைட்ராலிக் பிரேக் போன்ற சாதனங்களைப் பொருத்தினர். 10 சக்கரங்களுக்குப் பதில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இரும்புக் கயிறு, ஹைட்ராலிக் பிரேக் போன்றவற்றின் எடையைக் கூட்டினால் தேரின் எடை சுமார் 300 டன்களாகும். நான்கு வடங்களும் ஒவ்வொன்றும் சுமார் 425 அடி நீளம் கொண்டவை. வடம் இழுக்கப் பயன்படும் கயிற்றின் சுற்றளவு 21 அங்குலமாகும். இந்த மாற்றங்களால் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய இத்தேரை மூவாயிரம் பேர் சேர்ந்து இழுத்தாலே நகரும் என்பது தற்போதைய நிலை. ‘திருவாரூர்த் தேரழகு’ என்றும் ‘திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்’ என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். ‘ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே’ என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம். மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும். தமிழகத் தேர்களில் திருவாரூர் தேரே பெரியதாகும். இதனால் இதனை ‘ஆழித்தேர்’ என்று அழைக்கின்றனர். ‘ஆழி’ என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன் மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

1748இல் தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது. 1765 ஆம் ஆண்டு தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர் தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது கடந்த பல வருடங்களாக திருத்தேர் ஓடும் போது ஆரூரா தியாகேசா என தேரில் இருந்து பக்திமணம் கமழ குரலை ஓங்கி ஒளிப்பவர் திரு.ராமசாமி அவர்கள் ஆரூரான் கரும்பு ஆளையில் வேலைபார்க்கிறார் கும்பகோணத்தை சேர்ந்தவர்.

திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின் போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த  பதி. எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். திருவாரூர் நகரமும் ஆலயமும் சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராண ங்கள். வருட ஆரம்பமான வசந்த காலத்தில் பௌர்ணமி அன்று, குரு சந்திர யோகம் சேர்ந்த கடக லக்கினத்தில், புண்ணியபுரம் எனும் திருவாரூரின் நடுவில் தியாகபதியாகத் தோன்றினார் சிவபெருமான். அப்போது திருக்கோயிலின் நடுவே லிங்கமாகவும், தியாகராஜ வடிவமாகவும் தோன்றினார். இங்கு உள்ள தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப் பெற்றார். பின்னர் இந்த தியாகராஜ மூர்த்தம், திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்ரவர்த்திக்கும் அளிக்கப்பட்டது.

சப்தவிடங்கத் தலங்கள்

சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.

திருவாரூர் – தியாகராசப்பெருமான்

திருநள்ளாறு – நாகவிடங்கர்

நாகைக்காரோணம் – சுந்தரவிடங்கர்

திருக்காராயில் – ஆதிவிடங்கர்

திருக்குவளை – அவனிவிடங்கர்

திருவாய்மூர் – நீலவிடங்கர்

வேதாரண்யம் – புவனிவிடங்கர்

சப்தவிடங்க நடனங்கள்

ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.

திருவாரூர் தியாகராசப்பெருமான் – உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்

திருநள்ளாறு – பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்

நாகைக்காரோணம் – கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்

திருக்காராயில் – கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்

திருக்குவளை – வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்

திருவாய்மூர் – தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்

வேதாரண்யம் – அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்

இத்தலங்களில் சிவபெருமான் ஆடும் தாண்டவங்கள் சப்த விடங்க தாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

செங்கல் கட்டுமானமாக இருந்த ஆலயம் இது. சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால் பிறகு கற்றளியாக மாற்றி அமைக்கப்பட்டது. முதலாம் ஆதித்த சோழனால் கி.பி. 9-ம் நூற்றாண்டு) கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்கர், விஜய நகர, மராட்டிய மன்னர் களால் பராமரிக்கப்பட்டிருக்கிறது. முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) காலக் கல்வெட்டு முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய மன்னர் சரபோஜி காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. முற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே வலிவு பெற்றிருக்கிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்றது திருவாரூர். 330 தேவாரப்பாடல்களும், திருவாசகப் பாடல்களும் உள்ளன. இது தவிர திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளிலும் போற்றப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், தெலுங்கிசை மும்மூர்த்திகள், கயிலை ஞானப்பிரகாசர், குருஞானசம்பந்தர், இரட்டைப்புலவர்கள், அந்தகக்கண் வீரராகவ முதலியார், மராட்டிய மன்னர் சகாஜி, வள்ளலார் முதலியோராலும், தமிழ், தெலுங்கு, மராட்டி, சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் இவ்வூரைப்பற்றி பாடப்பட்டுள்ளன.

அருட்திரு தியாகராஜசாமி கருவறை விமானத்துக்கு தங்கத்தகடு போர்த்திய முதலாம் இராஜேந்திரன் குடமுழுக்கும் செய்வித்ததாக இக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்று திருபுவனம் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இரண்டாம் இராஜாதிராஜன் பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். இரண்டாம் இராஜேந்திரன் வீதிவிடங்கர் எழுந்தருளியுள்ள கருப்பக் கிருகத்தையும், வன்மீகநாதர் கருவறையையும் பொன்வேய்ந்தான் என்பதும், திருமுறை ஆசிரியர்களின் திருநாட்களைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும், திருவிளக்குப் பணிக்காகவும் பூசை முதலியவற்றுக்காகவும் சோழ மன்னர் நிலம் அளித்தனர் என்பதும் இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.

முசுகுந்தனும் சப்தவிடங்களும்

ஒரு சமயம், லோகநாயகன் சிவபெருமான், மனித வடிவம் கொண்டு ஒரு வில்வ மரத்தினடியில் தியானத்தில் அமர்ந்தார். அம்மரத்தின் மேல் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்தது. அது மரத்தில் உள்ள வில்வ இலைகளை பறித்து வாயிலிட்டு கடித்துக் கீழே துப்பியது. அவ்விதம் விழுந்த வில்வ இலைகள் தியானத்தில் இருந்த ஈசன் மீது பட்டு அவரை மறைத்து சிறுகுண்று போல் ஆனது. தியானம் கலைந்து கண்களை திறந்து பார்த்தார் ஈசன். தன் மேனி முழுவதும் அர்ச்சனை செய்யப்பட்டதுபோல், வில்வஇலைகள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். தன் சுய உருவில் ஜடாமுடியும், பிறையும், திரிசூலமும், புலித்தோல் ஆடையுமாய் காட்சி தந்த பெருமான், மரத்தின் மேலே இருந்த குரங்கை பார்த்து ஐந்தறிவு பெற்ற விலங்கினமாய் இருந்தாலும், வில்வஇலைகளால் அர்ச்சித்து என்னை மகிழ்வித்திருக்கிறாய். உனது அடுத்த பிறவியில் மன்னனாகப் பிறந்து பல பல அருட்தொண்டுகள், தர்மகாரியங்கள் செய்து பரகதி அடைவாய், என அருளினார். ஈசனின் திருவருள் பெற்றதால் அந்தக் குரங்கு பகுத்தறிவையும் பெற்று உன்னதமான நிலையை அடைந்தது. சுவாமி! இந்த மிருக ஜன்மத்தில் என்னை அறியாமல் மனிதப்பிறவி அர்ச்சித்தேன். ஆனால் மனிதப்பிறவி அப்படி அல்ல. மனிதன் வஞ்சகன். சூது நிறைந்தவன், பொறாமை குணம் கொண்டவன். பகுத்தறிவு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆன்மிக உணர்வுகளை வெட்டி விலக்குபவன். நான் மனிதனாக, மன்னனாகப் பிறந்தாலும் என் முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்க அருள் செய்ய வேண்டும். அது எனக்கு இந்தப் பிறவியை நினைவூட்டவும், இறைபக்தியுடன் நல்லுணர்வுகளோடு இருக்கவும் உதவிசெய்யும், என்றது. ஈசனும் அப்படியே அருள்புரிந்தார். மறுபிறவியில் குரங்கு முகமும், மனித உடலும் கொண்டு பிறந்தது. திருவாரூரை ஆட்சி புரிந்தது. அவரது பெற்றோர் முசுகுந்தன் எனப்பெயரிட்டனர். முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள். முசுகுந்தன் வீரதீரம் மிக்க மகாவீரன். இவரது வீரத்தையறிந்த தேவேந்திரன், தேவ லோகத்தில் அசுரர்களுடன் நடந்த போரில் தனக்கு உதவிசெய்ய இவனை அழைத்தான். முசுகுந்தனும் போரில் ஈடுபட்டு இந்திரனின் வெற்றிக்கு உதவினான். இந்திரன் முசுகுந்தனை தனது மாளிகைக்கு அழைத்து பலவித உபசாரங்கள், மரியாதை செய்தான். அவன் எந்தப் பரிசைக் கேட்டாலும் அளிப்பதாகக் கூறினான். ஒரு அழகிய மண்டபத்தில் இருந்த சோமாஸ் கந்த விக்ரகத்தைப் பார்த்த முசுகுந்த மன்னன் அதைத் தனக்கு தருமாறு கேட்டான். அவ்விக்ரகம் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டது. மிக அபூர்வமானது என்பதால், இந்திரனுக்கு அதைக் கொடுக்க மனமில்லை. அதைப்போல் வேறொரு விக்ரகத்தை சிருஷ்டித்து, அதை அம்மண்டபத்தில் வைத்துவிட்டான். அன்றிரவு ஈசன் அவன் கனவில் தோன்றி, நடந்ததைச் சொல்லிவிட்டார். எனவே, அவ்விக்ரகத்தைப் பெற முசுகுந்தன் மறுத்துவிட்டான். இப்படி ஆறு முறை ஏமாற்றிய இந்திரன், வேறு வழியின்றி உண்மையான விக்ரகத்தையும், அதைப் போலவே செய்த மற்ற ஆறு மூர்த்தங்களையும் அவனிடம் கொடுத்துவிட்டான். முசுகுந்தன் பூலோகம் வந்து அந்த மூர்த்தங்களை திருவாரூரை சுற்றியுள்ள சிவத்தலங்களில் பிரதிஷ்டை செய்தான். பூமி ஸ்தலமாகிய திருவாரூரில் இந்திரன் பூஜை செய்த நிஜ மூர்த்தியையும், மற்ற மூர்த்திகளை திருக்குவளை, நாகப்பட்டிணம், திருவாய்மூர், திருக்காறாயில், வேதாரண்யம், திருநள்ளாறு ஆகிய தலங்களிலும் பிரதிஷ்டை செய்தான். இவை சப்தவிடங்கத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. விடங்கம் என்றால் சிறிய லிங்கம் எனப்பொருள்.

நமி நந்தி நாயனார்

நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .சோழ வளநாட்டில் திருவாரூருக்கு அண்மையில் உள்ள ஏமப்பேரூர் என்ற தலத்தில் அவதரித்தவர் இந்நாயனார். அந்தணர் குலம் ஒங்க அவதரித்த இப்பெருந்தகையார், வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்தவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற துணிவுடையவர். சாம கண்டனாகிய பரமேசுவரனது செம்பொற்பாதத்தில் சிந்தை நீங்காது தொண்டு புரிந்தவர். திருவாரூருக்குச் சென்று பூங்கோயிலில் உள்ள புற்றிடம் கொண்ட பெருமானைத் தரிசிப்பதைப் பெரும் பேறாகவும், மிகப்பெரிய ஊதியமாகவும் கருதி வந்தார். இவ்வாறு நியமத்துடன் வழிபட்டிருந்த போது, அக்கோயிலின்   தனிச் சன்னதிகளில் ஒன்றாக  விளங்கும் அரநெறியில் தீபம் ஏற்றி வழிபட விரும்பினார். மாலைக் காலம் வந்து விட்ட படியால், இருட்டுமுன் விளக்கேற்ற எண்ணினார். அண்மையில் உள்ள வீடுகளில் இருந்து நெய் வாங்கி வந்து தீபம் ஏற்றத் துணிந்தார். நெய் வேண்டி அவர் சென்ற வீடுகளோ சமணர்களது வீடுகளாக இருந்தன. அவர்கள் நமது நாயனாரை நோக்கி, “ கையில் தீபம் ஏந்தி ஆடும் உங்கள் கடவுளுக்கு விளக்கு எதற்கு? நெய் இங்கு இல்லை. விளக்கு எரிக்க வேண்டுமானால் தண்ணீரை விட்டு ஏற்றிக் கொள்வீர் ” என்று இகழ்ந்தனர். அது கேட்ட நமிநந்தியார் இறைவனது சன்னதிக்குத் திரும்பிச் சென்று முறையிட்டார். இவ்வாறு மனவருத்தத்துடன் நாயனார் முறையிட்டுப் பணிந்து வீழ்ந்த வுடன், தியாகேசப் பெருமானின் அருள் வாக்கு அசரீரியாக ஒலித்தது. “இனிக் கவலை நீங்கப்பெறுவாயாக.உனது விருப்பப்படியே எமது சன்னதியில் விளக்கேற்றுவதற்கு இக்கோயிலின் அருகிலுள்ள திருக்குளத்து நீரைக் கொண்டு வந்து ஏற்றுவாயாக.” என்ற வாக்கைக் கேட்டவுடன் சிந்தை மகிழ்ந்த நமிநந்தி அடிகள் ஒருகணம் அம்மகிழ்ச்சி  மேலிட்டுச் செய்வதறியாது திகைத்த பின்னர், திருக்குளத்திற்குச் சென்று நாதன் நாமமாகிய பஞ்சாக்ஷர மகா மந்திரத்தை  ஜபம் செய்து, குளத்து நீரைக் கொண்டு வந்து இறைவனது சன்னதியில் உலகமே அதிசயிக்கும் வகையில் நீரால் விளக்கெரித்தார். இரவு மீண்டும் தம் ஊருக்குத் திரும்பி மனையில் நியமப்படி மறுநாள் காலையில் பூஜையைச் செய்துவிட்டுத் திருவாரூருக்கு மீண்டும் சென்றார். அரநெறி வீற்றிருந்த பிரானுக்குத் தீபம் ஏற்றிப் பணிகள் பலசெய்து, வலம் வந்து, அரிய தொண்டாற்றினார். இவை எல்லாம் நாம் உய்வதற்காகச் செய்தார் என்கிறார்  சேக்கிழார் பெருமான் ( “ எந்நாளும் நன்மை பெருக நமிநந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய.” – பெரிய புராணம் )

திருவாரூர்ப் பெருமான் ஒரு நாள் அருகிலுள்ள மணலிக்கு எழுந்தருளியபோது எல்லாக் குலத்து அடியார்களும் பெருமானுடன் உடன் வர, தாமும் அங்கு சென்று அவ்வருட் காட்சியில் திளைத்து மகிழ்ந்தார். எல்லோருடனும் ஒன்றியபடி மணலிக்குச் சென்றபடியால், தமது மனைக்குத் திரும்பிய நாயனார், இழிவு தீரக் குளித்து விட்டுப் பின்னர் சிவ பூஜை செய்யக் கருதித் தமது மனைவியாரிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். அப்போது இறைவர் அருளால் உறக்கம் வரவே, கனவும் வந்தது. அதில் வீதி விடங்கப் பெருமான் காட்சி அளித்து, “ திருவாரூரில் பிறந்தோர்கள் எல்லாம் நமது கணங்கள் ஆகும் தன்மையை அறிவாய்” என்று அருளிச் செய்து விட்டு மறைந்தார். தவற்றை உணர்ந்த நமிநந்தியார், அந்நிலையிலேயே,பூஜை செய்துவிட்டு மறுநாள் திருவாரூருக்கு விரைந்து சென்றார். பெருமான் அருளால் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோரும் மணிகண்டனாகிய ஈசனது வடிவாவதைக் கண்டு தலை மீது கைகள் கூப்பியவராய் நிலமிசை வீழ்ந்து வணங்கிக் களிப்புற்றார். சிவனடியார்களுக்கு முறையுடன் வேண்டுவன எல்லாம் செய்து பணி செய்தபடியால், இவரைத் திருநாவுக்கரசு நாயனார் “ தொண்டர்க்கு ஆணி” என்று கூறும் பெருமை பெற்றதுடன் நீங்காப் புகழும் பெற்றார். நிறைவாகத் திருவாரூர்ப் பெருமானது பாத நீழலில் வைகாசிப் பூச நன்னாளில் சென்றடைந்தார். நாயனாரது அவதாரத் தலம் தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப் படுகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

பாதை 

தஞ்சாவூரிலிருந்து 56 கி.மீ.

கும்பகோணத்திலிருந்து 40 கி.மீ.

நாகப்பட்டினத்திலிருந்து 24 கி.மீ.

நாகூரிலிருந்து 29 கி.மீ.

காரைக்காலில் இருந்து 40 கி.மீ.

மயிலாடுதுறையில் இருந்து 40 கி.மீ.

கோவில் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

கோயில் முகவரி:

ஸ்ரீ வான்மகனாதர் கோயில்

திருவாரூர் (p.o)

திருவாரூர்

தமிழ்நாடு

இந்தியா.