திருபுவனம் – ஸ்ரீ காம்பஹேஸ்வர ஸ்வாமி ஆலயம்,  சரபேஸ்வரர் ஆலயம்

கோயில் பெயர்

ஸ்ரீ காம்பஹேஸ்வர ஸ்வாமி கோயில்

தோற்றம் காலம்

2000 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்: ஸ்ரீ காம்பஹரேஸ்வரர்

அம்பால்: ஸ்ரீ தர்மசமுர்த்தியி

ஸ்தல தீர்த்தம்: சரபர் தீர்த்தம்

ஸ்தல விருக்ஷம்: வில்வாம்

ஸ்தல வரலாறு

பிரகலாதன், திருமால், தேவர்கள் முதலானவர்களுக்கும்,  நமக்கும் விளைந்த நடுக்கத்தை  நீக்கி அருள்புரிபவர் கம்பகரேஸ்வரர்.  கம்பம் என்றால் நடுக்கம் என்று அர்த்தம். இதனால் கம்பகரேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.  ஒருமுறை உலகம் உய்வடையும் பொருட்டு  பூவுலகில் இருந்து இரு நாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது இயற்றி தம்மை அறியுமாறு  அம்பிகைக்கு அருளினார்  ஐயன். அதன்படி ஐயன் அளந்த இருநாழி நெல்லுடன் பூவுலகில் காஞ்சி எனும் திருத்தலத்தில் கம்பை ஆற்றின் கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாது வளர்த்தனள் அம்பிகை என்பது ஐதீகம். அதனாலேயே அம்பிகைக்கு அறம் வளர்த்த நாயகி . அம்பிகை அறம் வளர்த்தது காஞ்சியில் என்றாலும் அங்கே அவளுக்கு ஸ்ரீகாமாட்சி என்பதே திருப்பெயர். ஆனால், செயலால் சீர் கொண்ட சேயிழையாள் அறம் வளர்த்த நாயகி எனும் திருப்பெயர் கொண்டு திகழ்வது – திருபுவனத்தில்தான்.

சரபேஸ்வரர்

அதிதி, திதி காசிப முனிவரின் மனைவியர் அதிதி  விஷ்ணுவை மகனாக அடைந்தாள். திதி அந்தி நேரத்தில் காசிப முனிவருடன் உறவு கொண்டு காசிப முனிவர் இந் நேரத்தில் கரு தரித்தால் உகந்ததல்ல என சொல்லியும் கேளாமல்

இரு அரக்க மகன்களை பெற்றெடுத்தாள். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகியோர் ஆவர். இரண்யாட்சன் பூமியை கடலுக்குள் ஒளித்து வைத்தான். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனை வதம் செய்து பூமியை மீட்டார். இதையறிந்த இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபு, மகாவிஷ்ணுவின் மீதும் தேவர்கள் மீதும் கோபம் கொண்டார். அவர்களை பழி தீர்க்க தன் சக்தியை அதிகரிக்க எண்ணினான். எனவே பிரம்மதேவனை நோக்கி தவம் இருந்தான். இந்த நிலையில் இரண்யகசிபுவின் மனைவி கயாது கர்ப்பிணியாக இருந்தாள். இரண்யகசிபுவின் தவத்தை கலைக்கும் நோக்கில், இந்திரன் கயாதுவை சிறை பிடித்து, அவள் வயிற்றில் வளர்ந்த சிசுவை கொல்ல முயன்றான். இதையறிந்த நாரதர், கயாதுவை மீட்டு தனது குடிலில் வைத்து பாதுகாத்து வந்தார். அப்போது நாள்தோறும் நாராயணரின் பெருமைகளை கயாதுவுக்கு கூறி வந்தார். அதனை கருவில் வளர்ந்த குழந்தையும் கேட்டு வந்தது. குழந்தைக்கும் நாரதர் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி வந்தார். சகல சாஸ்திரங்களை கருவில் இருக்கும் போதே அந்தக் குழந்தைக்கு கற்பித்து தர்ம உபதேசம் செய்தார்.  இரண்யகசிபுவின் தவத்தின் அக்னியைத் தாங்க முடியாமல் உலகத்து உயிர்களெல்லாம் அல்லலுற்றன. பிரம்மா உடனே மந்திரமலைச் சாரலுக்குச் சென்றார். அங்கே எறும்புகள் அரித்த தோலும், எலும்புமாகத் தவத்தில் இருந்தான் இரணியன். அவன் மீது கமண்டல நீரைத் தெளித்தார் . தவத்தின் சக்தியால் விளைந்த பொன்மேனியுடன் வெளிப்பட்டான் இரணியன். இறவா வரம் பெற வேண்டும் என்பதே அவன் விருப்பம்.ஆனால் யாருமே இறவா வரம் பெற முடியாது என்பதால் மரணமே நிகழ முடியாதபடி தந்திரமாக வரம் கேட்டான்.தனக்கு பூமியிலோ, வானத்திலோ மரணம் நேரக் கூடாது. இரவிலோ, பகலிலோ, வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ இறப்பு சம்பவிக்கக் கூடாது. மனிதர்கள், தேவர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எந்தவொரு ஆயுத்தத்தாலும் தான் கொல்லப்படக் கூடாது என்று தந்திரமாக இறப்பே நிகழாமல் இருக்க வரம் வேண்டிப் பெற்றான் இரணியன். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார். அசுரேந்திரத்துக்குத் திருப்பிய இரணியன் தேவர்களை வாட்டி வதைத்தான். மூவுலகிலும் தன்னை வெல்ல ஆளே இல்லை என்ற மமதையில் இருந்தான். அனைவருமே தன் நாமத்தைச் சொல்லும்போது தன் மகன் பிரகலாதன் மட்டும் ஹரியின் நாமத்தை உச்சரிப்பதைக் கேட்டுச் சினமுற்றான். பெருமாளின் பாதங்களைச் சரணடைவதுதான் மோட்சத்துக்கு வழி வகுக்கும் என்று சொன்ன மகன் மீது கோபம் கொண்டான் இரணியன். எங்கே இருக்கிறான் உன் பெருமாள் என்று ஆவேசத்துடன் கேட்டான் இரணியன். பிரகலாதனோ, “அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று அமைதியுடன் சொன்னான். அதற்கு இரணியன், “அப்படியென்றால் இந்தத் தூணில் இருக்கிறாரா என்று பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே பிரகலாதன் இறுகப் பற்றியிருந்த தூணை வாளால் குத்தினான்.  உடனே அண்டமெல்லாம் நடுங்கும்படி பேரொலி கேட்டது. தூணை இரண்டாகப் பிளந்துகொண்டு மனித உடலுடனும், சிங்கத் தலையுடனும் வெளிப்பட்டார் பெருமாள். அந்தத் தோற்றம் கண்டு இரணியன் பயந்துவிட்டான். மனித உடலும் இல்லாமல், விலங்கு உருவமும் இல்லாமல் தன்னைக் கொல்வதற்காக பெருமாள் எடுத்த அவதாரம்தான் அது என்பது இரணியனுக்குப் புரிந்துவிட்டது. நரசிம்மரைத் தாக்குவதற்காக நெருங்கினான். நரசிம்மரோ அவனைத் தன் மடியில் கிடத்தி, கூரிய நகங்களால் அவன் வயிற்றைக் கிழித்து வதம் செய்தார். இரணியன் வரம் பெற்றது போலவே அவன் மரணமும் நிகழ்ந்தது. அது காலையும் மாலையும் இல்லாத அந்தி நேரம். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் வாயிற்படியில், வானிலும் மண்ணிலும் இல்லாமல் தன் மடியில் இரணியனைக் கிடத்திக் கொன்றார் பெருமாள். மனித உருவும், விலங்கு உருவும் இணைந்த வடிவத்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி தன் கூரிய நகங்களால் அவனை வதம் செய்தார்.

அச்சமயத்தில் நரசிம்மர் இரண்யகசிபுவின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்ததால் உக்ரம் கொண்டார். அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த “ஸ்ரீ” கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.

காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.

சரபேஸ்வரர்

எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக உள்ளார். கால்களில் ஒன்று துர்க்கையமம்னை அனைத்தவாறு இருக்கும். இந்த வடிவத்தின் சக்தி தேவி அரிப்ரணாசினி. வியாசர் இந்த மூர்த்தியை பரிகாரமற்ற துன்பத்திற்கும், நோய்களுக்கும், விஷபயம் மற்றும் பூத பிரேத உபாதைகள் ஆகியவற்றுக்கு வணங்கலாம் என்று கூறுகிறார். சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி, சூனியம், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.  கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.  சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்

திரிபுவனச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க கோயில் திரிபுவனம் கம்பேசுவரர் கோயில்.  திருமலைநாதர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் சரபேஸ்வரர் குறித்து சரப புராணம் என்னும் தமிழ்நூலைப் பாடியுள்ளார். திருபுலனத்தில் இறைவனை வழிபட்டவுடன்  திருபுவனம் கைதறி பட்டு புடவை, தாவணி, வேஷ்டிகளுக்கு இங்கு நிறைய கடைகள் உண்டு கைதறி பட்டு வாங்கினால்  பல குடும்பங்கள் பயனடையும். கைதறியில் செய்ததை கேட்டு வாங்குங்க.

வழி:

கும்போணம் திருவிடைமருதூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 8 km.

கோவில் நேரம்:

காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை – 4.00 மணி முதல் இரவு 8.50 மணி வரை

கோயில் தொலைபேசி எண்:

0435-2460760

கோயில் முகவரி:

ஸ்ரீ காம்பஹேஸ்வர ஸ்வாமி கோயில்,

திருபுவனம் (Po.),

திருவிடைமருதூர் (TK.),

தஞ்சாவூர்-பின்: 612 103.

 

 

திருநள்ளாறு – ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீ சனி பகவான் கோவில்

சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்.

அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்.

தீர்த்தம் : நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்.

தலவிருட்சம் : தர்ப்பை.

இந்த தலம் ஆதிகாலத்தில் பிரமதேவர் பூஜை செய்ததால் ஆதிபுரி ஆனது.

ஆதிபுரி, தருப்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்சுரம் .என நான்கு பெயர்களும் முறையே நான்கு யுகங்களுக்கும் வழங்கப்படுகின்றன.

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம்.

திருநள்ளாறு என்றாலே நம் நினைவுக்கு வருவது சனி பகவான் தான்.

சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்பர்.

அவ்வளவு சக்தி கொண்ட சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு.

தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது.

இங்கு இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி.

சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார்.

நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது

தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது.

மகாவிஷ்ணு பிரம்மன். இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர்

திருமாலுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இந்த தலத்து தர்ப்பனேஸ்வரரையும் அன்னையும் வழிபட மன்மதனை குழந்தையாகப் பெற்றார்.

தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.

திருநள்ளாறு முசுகுந்தச் சக்கரவர்த்தி ஸ்தாபித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று..

சப்தம் என்றால் ஏழு.. டங்கம் என்றால் உளி.. விடங்கம் அதாவது உளி கொண்டு செதுக்காத சுயம்பு மூர்த்திகளால் உருவான திருத்தலங்கள் என்பதால் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்று பெயர்.. இத்திருத்தலங்களில் தியாகராஜரே வெவ்வேறு பெயரில் அருளுகிறார்… ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒவ்வொரு வித நடனமும் உண்டு..

அவ்வகையில், இத்திருத்தலத்தில் தியாகராஜருக்கு, நகவிடங்கர் என்று திருப்பெயர்.. நடனம் உன்மத்த நடனம்.

மற்ற திருத்தலங்களும் நடனங்களும்…..

1.திருவாரூர் – வீதிவிடங்கர் – அசபா நடனம் (மேலும் கீழுமாக ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாகச் சென்று வந்தும் ஆடுவது.)

2. நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – பாராவாரகரங்க நடனம் (அலைகள் அசைவது போன்ற நடனம்.)

3. திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம் (கோழி நடப்பது போன்ற நடனம்.)

4. திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம் (மலருக்குள் வண்டு செல்வது போன்ற நடனம்.)

5. திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம் ( குளத்திலிருக்கும் தாமரை மலர் காற்றில் அசைந்தாடுவது போன்ற நடனம்.)

6. திருமறைக்காடு – புவனிவிடங்கர் – ஹ‌ம்ஸபாத நடனம் ( அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்.)

இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை.

நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத்தலத்தின் தெற்கிலும ், வடக்கிலும் இரண்டு ஆறுகள் கூட அதன் நடுவே இத்தலம் இருப்பதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. சிலர் நளன் ஆறு என்பதே பின்னாளில் நள்ளாறு என்றாகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.

அரசலாறு, வாஞ்சாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கும் இடையே இருப்பதால் ‘திருநள்ளாறு’ என்று அழைக்கப் படுவதாகக் கூறுவதுண்டு.

திருஞானசம்பந்தர், மதுரையில் சமணரோடு நடத்திய அனல் வாதத்தில், இத்திருத்தலத்தில் இயற்றிய திருப்பதிகமான ‘போகமார்த்த பூண்முலையாள்’ என்று துவங்கும் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் வெளிவந்தது.. அதனால் அதற்கு ‘பச்சைப் பதிகம்’ என்று பெயர். இந்தப் பதிகத்தைப் பாடி, சனிபகவானை வழிபடுவோருக்கு, ‘சனி தோஷம்’ உண்டாகாது என்பது நம்பிக்கை.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 52வது தலம்.

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போ ல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில் லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்
தது.

இது எப்படி சாத்தியம்??? – என்ப தை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோ ளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச் சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநே ஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரி யாத கருநீலகதிர்கள் அந்த கோ விலின் மீது விழுந்துகொண்டே இருக்கி றது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர் ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெ ளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவி டுகின்றன. அதே நேரத்தில் செய ற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில் லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவி ல்தான் இந்துக்களால் ‘சனி பக வான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவ ர்களும் சனிபகவானை கையெடுத்து
கும் பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண் ணில் செயற்கை கோள்கள் திருநள்ளா று பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”

நவக்கிரக மூர்த்திகளில் சனிபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். ஈஸ்வரனுக்கு சமமாக அவருக்கு மட்டுமே ஈஸ்வரப்பட்டம் இருக்கிறது. அதனாலேயே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார்.

கோவில்களில் நவக்கிரகப் பிரதிஷ்டை இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் சனீஸ்வரன் பிரதிஷ்டை இல்லாமல் இருக்காது.

உயர்ந்த மேடை ஒன்றில் அவரது பிரதிஷ்டை அமைந்திருக்கும்.
மன்னாதி மன்னர்கள் என்றாலும் சனிபகவானை வழிபடாதவர்களே இல்லை.

சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டே தசரத மகாராஜா பலகாரியங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். புரூவரசு சக்கரவர்த்தியும், நளச்சக்கரவர்த்தியும் சனிபகவானை வழிபட்டே புகழும், சிறப்பும் எய்தி ஆட்சி செய்திருக்கிறார்கள்.

சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டு அவரது அருளைப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்தும், சிறந்தும் விளங்குவர்.

ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.

உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார்.

ஏனைய நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதும் இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.

தல புராணம்:

சனிபகவானால், பல இடையூறுகளுக்கு ஆளாகி, தன் நாடு, மனைவி, மக்கள் அனைவரையும் இழந்த நள மகாராஜன், இங்கு வந்து வழிபட்டு, இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்றான்..

அதனால், நள சரிதம் படிப்பது, சனி பகவானின் பேரருளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.. என்காலத்தில் உன்சரிதம் கேட்டாரை யான் அடையேன்!” என்று சனிபகவான் நளனுக்கு வரம் அருளியதாகப் புராணம். வரத்தை அளித்த சனிபகவான், “கட்டுரைத்துப் போனான்” என்று புகழேந்திப் புலவர் நளவெண்பாவில் கூறுகிறார். ‘கட்டுரைத்தல்’ என்றால், உறுதியாகக் கூறுதல். ஆதலால், சனிபகவான் நளசரித்திரம் படிப்பவரையும் கேட்பவரையும் காப்பார்.

இங்கு நளன் நீராடிய தீர்த்தமே நள தீர்த்தம். இதை இறைவனே நளனுக்காக அருளினார் என்பது நம்பிக்கை. நளதீர்த்தத்தை நளனுக்காக இறைவன் அருள் செய்தது வைகாசி மாதம். புனர்பூச நக்ஷத்திரம் ஆகும். அந்நாள் திருநள்ளாற்றில் மிக விசேஷமான வழிபாட்டு நாளாகும்.
.
நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி கொண்டிருந்த ஸ்ரீசனிபகவான் நளன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வந்து வணங்கி தரிசித்தவுடன் விலகி விடுகின்றார்.

பின்பு எம்பெருமானுடைய அருளாணையின் வண்ணம் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அனுக்ரக மூர்த்தியாக ஈஸ்வரப்பட்டம் பெற்றுக்கொண்டு துவார தேவதையாக இரண்டாவது கோபுர வாயிலில் விளங்குகின்றார்.
இங்கு நளன் விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து திருக்கோவில் அமைத்து இறைவனை பூசித்தான். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால் நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினான்.
அவையாவன:
இங்கு என்னைப்போல் ஸ்ரீசனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ சனிபகவான் அருள்செய்து துன்பம் போக்கி நலம்பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரமும். இரண்டாவதாக இத்தலத்தின் ஒருகாத விஸ்தீரணம் பரப்புகளில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று ஒரு வரமும்.
மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்று வேண்டினான். சனிபகவானும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அவ்வாறு அருள் செய்தனர். ஆகையால் இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால் இறைவனுக்கு ஸ்ரீநளேஸ்வரர் என்ற பெயரும் திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும் இவ்வூருக்கு திருநள்ளாறு என்ற பெயரும் விளங்கலாயிற்று.
முதலில் நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்த குளத்தை வலமாக பிரதட்சிணம் செய்து குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி தமயந்தி குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பின்னர் நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை ஸ்நானம் செய்து தலை முழுக்காட வேண்டும்.
பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

அதன் பின்னர், ராஜகோபுரத்தை முழுவதுமாக பார்த்து வணங்க வேண்டும்.
சனீஸ்வரரின் இருப்பிடமான படிக்கட்டை வணங்க வேண்டும். முதல் பிரகாரத்தில் நள சரித்திரத்தை பார்த்து வணங்கவும். காளத்தி நாதரை வணங்க வேண்டும். அடுத்து கருவறையில் உள்ள மூலவர் அருள்மிகு தர்பனேஸ்வரரை தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் தியாகவிடங்கர் சன்னதிக்கு சென்று பக்தி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் மரகத லிங்கத்தையும் அர்த்தநாரீஸ்வரரையும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், தரிசித்து வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்து பின்பு, கட்டைக் கோபுரத்துள் அருள்பாலிக்கும், அன்னை பிராணேஸ்வரியை வணங்கி அதன் பின்னர் தான் சனீஸ்வரரிடம் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிலர் முதலிலேயே சனீஸ்வரர் சன்னதிக்கு சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறை அல்ல என்றும், சனி தோஷ நிவர்த்தி கிட்டாது என்றும் கூறுகின்றனர்.

அவரவர்களுடையே வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி ஸ்ரீசனிபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை, அபிஷேகம், ஜபம்8, ஹோமம், தர்ப்பணம், தானம் முதலியன செய்யலாம்,,

காலை, மாலை இரு வேளையிலும் ஸ்ரீசனிபகவானை நவப்பிரதட்சிணம் செய்வது நல்ல பயன் தரும்.

கோவில் அமைப்பு

திருநள்ளாற்று கோவில் கிழக்கு நோக்கி திசையில் உள்ளதாகும்.
இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. இறைவர் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்மையார் சன்னதி முதல்பிரகாரத்தில் சோபன மண்டபத்தில் தெற்கு முகமாகவும் இருக்கிறது.
சனீசுவர பகவான் சன்னதி கிழக்கு முகமாய் அம்மையார் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ளது.
திருநள்ளாற்றுக் கோவில் அழகும், அருளும் நிறைந்த ஓர் கலைக்கோவிலாகும்.
கோவிலை வலம் வரும்போது தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலின் நீண்ட வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அருள்மிகு காளத்தியப்பர் சன்னதிக்கு வந்து சேரலாம். இக்கோவில் ஓரு சிற்றாலயமாக எழிலுற அமைந்திருக்கிறது. காளத்தியப்பர் சிவஜோதியாக வீற்றிருக்கிறார். இத்தலம் சனி பகவானுக்கு மட்டுமில்லாமல் ராகு, கேது இவர்களுக்காகவும் வழிபட வேண்டிய தலமாகும்.
ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.
உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார்.

சனி தோசம் நீங்க

சனி தோசம் உள்ளவர்கள் அகல் விளக்கு வாங்கி அதில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

எள் விளக்கு ஏற்றி சுவாமியை வழிபாடு செய்கிறார்கள் எள் சாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, அபிசேகம், நவகிரக சாந்த ஹோமம் ஆகியவற்றை செய்கிறார்கள்

தவிர உண்டியல் காணிக்கை, பசுமாடு தானம் தருதல், முடி காணிக்கை ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

பூஜைவிவரம் : ஆறுகாலபூஜைகள்.

திருவிழாக்கள் :

வைகாசி – உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றம் பின்னர் 18 நாட்கள் பெருவிழா எனப்படும் பிரம்மோத்சவம்,
புரட்டாசி பௌர்ணமி விசேஷம் தரும்,
நவராத்திரி மற்றும் விநாயகர்சதுர்த்தி,
அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் நாட்களில் தீர்த்தத்தில் மூழ்கி பின்னர் வழிபட்டால் மேன்மை பெறுவது நிச்சயம்.

மகாபாரதத்தின் ஒரு பகுதியில் நளன் மற்றும் தமயந்தியின் அழகான காதல் கதையும் அடங்கியுள்ளது.

நளன் – தமயந்தி கதை
இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்
படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான்.

நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.

தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

அயோத்தியாவை சேர்ந்த நிசத் அரசனுக்கு நளன் மற்றும் குவாரா என்ற இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
நிசத் அரசர் இறந்தவுடன், நளன் அரசனானார். பல்வேறு ராஜ்யங்களை கைப்பற்றி புகழை அடைந்தார். தன் சகோதரனான குவாராவுக்கு இது பொறாமையை ஏற்படுத்தியது. சூதாட்டம் தான் நளனின் பலவீனம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

அதனால் நளனை தாய விளையாட்டுக்கு போட்டி போட அழைத்தார் குவாரா. இந்த போட்டியில் நளன் அனைத்தையும் இழந்தார்.

இதனால் அரசனான குவாரா, நளனை அந்த ராஜ்யத்தை விட்டே வெளியேற்றினார். இதனால் காட்டிற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் நளன்.

காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.

தன் மனைவியையும் மாமனார் வீடு செல்ல பணிந்தும் தமயந்தி சாகும் வரை உங்கள் உடனேயிருப்பேன் என சொல்ல இரவில்
காட்டில் தமயந்தி தூங்கிக் கொண்டிருந்த போது, நளன் அவரை காட்டிற்குள் விட்டு சென்றார்.
மறுநாள் எழுந்த தமயந்தியால் தன் கணவனை காண முடியவில்லை
நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தமயந்தியை பிரிந்த நளன்,
நளன் காட்டிற்குள் தனியாக சென்று கொண்டிருந்த போது உதவி நாடி அழும் குரல் ஒன்று கேட்டது. ‘நளன், தயவு செய்து இங்கே வரவும்’. அழுகை கேட்ட திசையை நோக்கி நளன் சென்றார். காட்டின் ஒரு பகுதி எரிந்து கொண்டிருந்ததை கண்டார் நளன். தன்னை அழைத்தது ஒரு பாம்பு என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். ‘நான் தான் கார்கொடகா,
பாம்புகளின் அரசன். என்னை இந்த தீயில் இருந்து காப்பாற்றவும்.’ என பாம்பு நளனிடம் கூறியது.

கார்கோடகனை தீயில் இருந்து காப்பாற்றினார் நளன்.

திடீரென நளனை பாம்பு கடித்தது. பாம்பின் விஷம் நளனின் உடம்பில் ஏறியதால், அவர் உருக்குலைந்து போனார்.

இதனால் அருவருப்பான தோற்றத்துடன் காட்சி அளித்தார் நளன்.

அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான்.

அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.

அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.

திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோவில் திறந்திருக்கும்

கும்பகோணத்தில் இருந்து 53km.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடி பேரளம் நல்லம்பல் பின்னர் திருநள்ளாறு சென்றடையலாம்.

கொல்லுமாங்குடி நெடுங்காடு பின்னர் திருநள்ளாறு சென்றடையலாம்.

Tiruverkadu – Sri Devi Karumariamman temple

Sri Devi Karumariamman temple

Period of origin

Before 1500 years

Name of deity

Moolavar: Devi Karumariamman

Sthala Theertham: Velayudha theertham

Sthala Virksham:Karuvela tree

Sthalapuranam:

As per legends, One day Devikarumari took the image of old nomadic lady and went to Sun to forecast his future. Without realising her as Devikarumari, He simply neglected her. Devikarumari immediately vanished. Sun has lost it’s brightness and its glory started declining. Realising his mistake He begged Devikarumari to forgive and excuse him. Sun also requested Devikarumari to celebrate Sunday as the day of Devikarumari. Devikarumari also accepted it.He also got permission from Her to pour on her sun rays twice in a year in the month of Panguni and Purattasi. So Sunday is celebrated as the day of Karumari . We can happily witness the scene of sun rays falling on the head of Devikarumari twice in a year. Devikarumari made Narayanan Seat there.Once upon a time Lord Thirumal came to Thiruverkadu to witness the grace rule of Umadevi. When Thirumal personally met his sister Karumari, she requested him “to seat there as Srinivasan of Thirumurai and assist Her and bless the devotees who worship Navagraham and stand towards southern direction”. He was happy and promised Her, that He would sit by her side and protect the position of Nine planets. Veda Viyasar was extremely happy to see Annai Parasakthi and Lord Venkatesan together.

An another legends goes this way,There was an ant-hill in this place long ago.  People were worshipping this as Mother Ambica.  Mother appeared in the dream of a devotee and asked him to build a temple for Her in that spot.  When people demolished the ant-hill, they found Ambica as a swayambu and built the temple here.  As She was not in the womb of a Mother, she is praised as one not from the womb (Karuvil Illadha Karumari).  There is also an Ambica idol behind the presiding deity as Mahakali with fire, sword, skull, trident and a drum called Damarukam.  Kumkum archana is performed to Ambica in the evening between 4.30 p.m. and 6.00 p.m. called Pradosha time.

There are also peacock, serpent, and lion vehicles of the Gods.  This lamp is ever burning.  It is believed that worshipping Ambica and this lamp would keep their families wealthy.  The flag post-kodimaram is in front of Ambica shrine.  Festivals begin in Ambica temples with Kappu Kattu (announcing the beginning of festival) ceremony.  Here, festivals begin by hoisting the flag.  Ash of cow dung is offered as Prasad in the temple.  We have seen Lord Vinayaka in temple with His tusk in the right hand and Modhaga-the sweet pudding ball- in the left.  Here, He blesses the devotees with the right hand and keeps the left assuring them – Abhaya hastha.  This is a different style.  It is said those worshipping Mother Devi Karumariamman should worship in this shrine too.

The sage had to come to south to balance the earth as went down due to the heavy weight of a huge gathering of Sages when the wedding of Shiva-Parvathi took place there.  Lord Shiva granted the wedding darshan to the Sage here.  Also, the shrine of Mother Verkanni who granted darshan to the sage is here.

Procession Ambica graces from the corridor-prakara sitting on a moving plank called Unjal.  In front of the temple, Lord Vinayaka graces sitting under the Peepal tree called Arasamaram in Tamil.  Mother Ambica looks young on Her Lion vehicle.  On the new moon day, a yaga is performed with red chillies.  There are shrines for Navagrahas the nine planets, Lord Muruga with His consorts Valli and Deivanai, Srinivasa-Padmavathi and Sri Anjaneya.  On Vaikasi Visakam festival in May-June, Lord Srinivasa graces darshan on Garuda with Mother Padmavathi.  There are also shrines of Lord Dakshinamurthy, Angala Parameswari, Uchishta Ganapathi, Gayatri, Mahalakshmi, Rajarajeswari, Savithri, and Mother Durga.

Aipasi Annabishek is performed to Mother Devi Karumariamman in October-November. Aadi Festival in July-August is very famous. Maximum duration of festivals goes up to 15 days. Rarely in some Shakti temples, festivals run upto 48 days also. In this temple, the festival that begins in the month of Aadi (July-August) continues for 12 weeks ending with Purattasi month-September-October. On Sundays, abishek is performed with 108 pots of milk followed by procession. On the 9th Sunday, Mother Devi Karumariamman is taken in procession in a palanquin decorated with flowers. On Masi Magam day in February-March, Amman is taken to Bay of Bengal for sea bath. Other festivals include Thai Brahmmotsavam in January-February, Chitra Poornima in April-May, Vaikasi Visakam in May-June, big festivals in Aadi (July-August) Navarathri in September-October, Skanda Sashti in October-November and Panguni Uthiram in March-April.

Route:

Tiruverkadu is 12 km from Chennai Koyambedu on the Poonamallee Road. Bus facilities are available from all points in the city.

Temple Timings:

05.30 am To 12.00 pm   04.30 pm To 09.00 pm

Temple Telephone Number:

+91-44-2680 0430, 2680 0487, 2680 1686.

Temple Address:

Sri Devi Karumariamman Temple,

Tiruverkadu,

Tiruvallur Dist.

 

திருச்சி ஸ்ரீ தாயுமானசுவாமி ஸ்வாமி கோயில், ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவில்

கோயில் பெயர்

ஸ்ரீ தாயுமானசுவாமி ஸ்வாமி கோயில்,

ஸ்ரீ உச்சி பிள்ளையார் கோவில்

தோற்றம் காலம்

7 ஆம் நூற்றாண்டு

தெய்வத்தின் பெயர்

சுவாமி : உச்சி பிள்ளையார், தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர்.

அம்பாள் : மட்டுவார்குழலி.

தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம்

ஸ்தல வரலாறு

ஸ்ரீ  காஞ்சிப் பெரியவாளுக்கு மிகப் பிடித்த ஆலயங்களில் ஒன்று தாயுமானவர் திருக்கோயில். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியமான அகநானூறில், குறுங்குடி மருதனார் என்ற புலவர் திரிசிரா மலையில் இன்னிசை வாத்தியங்கள்  பல முழங்க விழாக்கள் நடைபெற்றதாகப் பாடியுள்ளார் மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது.  அடிவாரத்திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதி முதல் நிலை.  மட்டுவார்குழலம்மை உடனாய ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்கள் இரண்டாம் நிலை.  குடவரைக்கோயில், உச்சி விநாயகர் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை.  இப்படி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதால், இதற்கு முத்தலை மலை என்றும் பெயருண்டு.

மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால்  தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.  உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும்

இம் மலை ஆராய்ச்சியில் ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.  பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு.  சிரா மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு.   இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும். ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசிரன், இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றதால்,  ‘சிராப்பள்ளி’ என்று பெயர். மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள கல் படுக்கைகள், சுமார் 5-ஆம் நூற்றாண்டில்  சமண முனிவர்களது வசிப்பிடமாக விளங்கினவாம். சமண முனிவர்களில் ஒருவரது பெயர் சிரா. அவரது பெயருடன் சமணப் பள்ளியை இணைத்து, ‘சிராப்பள்ளி’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் காலப்போக்கில் ‘திரு’ என்ற அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என மாறிய தாகவும் கூறுவர்.  சமண மதத்தில் இருந்து அப்பர் பெருமானால் சைவத்துக்கு மாறிய முதலாம் மகேந்திரவர்மனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான லலிதாங்குரன் நினைவாக ஒரு காலத்தில் திருச்சி ‘லலிதாங்குர பல்லவேச்சர கிருகம்’ எனப்பட்டது.  10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் ‘சிராமலை’ என்றும், ராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமானவரும் (ஸ்ரீதாயுமானவர் அருளால் பிறந்த தால் இவருக்கு இந்தப் பெயர்) ‘சிரகிரி’ என்றும் திருச்சியைக் குறிப்பிட்டுள்ளனர்.  சுமார் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் ‘திரிசிரபுரம்’ என்றும், அதன் பிறகு ஆங்கிலேயர் காலத்தில் ‘டிரிச்சினாபள்ளி’ என்றும் வழங்கப்பட்டது இந்த ஊர். இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன. பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது.  இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உமாதேவி, பிரம்மன், இந்திரன்,  அகத்தியர், ஜடாயு, சப்த ரிஷிகள், திரிசிரன், ராமபிரான், அர்ஜுனன், அனுமன், விபீஷணன், ஐயனார், நாக கன்னிகைகள், சாரமா முனிவர், சோழன், ரத்னாவதி, ஸ்ரீமௌனகுரு, தாயுமான அடிகள், அத்திரி முனிவர், தூமகேது, சேக்கிழார் மற்றும் வண்டு ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளன

கயிலாய மலைக்கு தோஷம் உண்டு; அதை ராவணன் அசைத்துப் பார்த்தான். பொதிகை மலைக்குத் தோஷம் உண்டு; அது இசைக்கு உருகிய மலை.  சிரா மலைக்கு தோஷம் இல்லை. ஆனால் கயிலாயம் போன்று சிராப்பள்ளி மலையும் மூன்று அடுக்குகள் கொண்டது. எனவே, இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பர். மலைக்கோட்டை மேல்புறத்தில் உள்ள சறுக்குப் பாதையில் விபீஷணரின் பாதம் படிந்துள்ளது.

ஸ்ரீமௌனசுவாமிகள் மடத்தின், 7-ஆம் பட்டத்தின் தலைவரான வைத்தியலிங்கத் தம்பிரான், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி குடை, கமல வாகனம், கற்பக விருட்சம், அன்னம், மயில், கிளி வாகனம் ஆகியவற்றை இந்தத் திருக்கோயிலுக்கு அளித்துள்ளார். இங்கு நவக்கிரகங்கள் அனைவரும் சூரியனை நோக்கியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.  சூரியனுக்கும் உஷாதேவிக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தம்பதி சமேதராக இங்கு காட்சி தருகின்றனர். தாயுமானவர் திருக்கோயிலின் மேற்கில், வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் பிரம்மதேவர் தன் இரு மனைவியருடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழக்கமான சனகாதி முனிவர்கள் நால்வருடன் அல்லாமல்,  அறுவருடன் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் மேற்பகுதியில் கல்லால் உருவாக்கப்பட்ட சங்கிலி, சிங்கத்தின் வாய்க்குள் கீழே விழாதவாறு சுழலும் பந்து ஆகியவை அந்தக் கால சிற்பக் கலைஞர்களது திறனுக்குச் சான்று. இங்கு எழுந்தருளியுள்ள மகாலட்சுமியை 108 செந்தாமரைகளால் அர்ச்சிப்பவர்கள் கடன் தீர்ந்து, செல்வச் சிறப்புகளுடன் வாழ்வர் என்பது ஐதீகம்.  ஸ்ரீதாயுமானவருக்கு நெய்யினால் பாத அபிஷேகம் மற்றும் பாத காணிக்கை செலுத்தி அந்த நெய்யை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குழந்தையில்லாத தம்பதிக்கு குழந்தை பிறக்கும். இந்தக் கோயிலின் தலமரம் வில்வம். இது பாராவாசல் நந்தவனத்தில் உள்ளது. பௌர்ணமி தினங்களில் திருச்சி மலையைச் சுற்றி கிரிவலம் நடைபெறுகிறது.

ஸ்ரீமட்டுவார் குழலம்மை

ஸ்ரீ உமாதேவியார்

ஸ்ரீமட்டுவார் குழலம்மை என்கிற சுந்தர குந்தளாம்பிகை மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ‘மட்டு’ என்றால் தேன்.  தேன் நிறைந்த மலர்களால் தொகுக்கப்பட்ட மாலையை அணிந்த, நீண்ட கூந்தலை உடையவள் என்பதால் இந்தப் பெயர். இந்த அம்பிகையின் சந்நிதியில் ஆதிசங்கரரின் ஸ்ரீசௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீமட்டுவார்குழலம்மை சந்நிதி எதிரில் ஒரு பாதாள அறையில் பாதாள ஐயனார் அருள் புரிகிறார்.  விவசாயம் செழிக்க மழை பொழிய  இவரை வேண்டினால் கைமேல் பலனாம். இவரை தரிசித்த பின்னரே அம்பிகையை தரிசிக்க வேண்டும். அம்பாள் சந்நிதியின் முன் உள்ள மண்டபத்தின் மேல் பகுதியில் ஸ்ரீசக்கரம் வரையப்பட்டுள்ளது. இதனால்  அம்பாளை சக்கரநாயகி என்றும் சொல்வர். திருவையாறு தியாகராஜ சுவாமிகள், இந்த அம்பாளின் மீது பாடல்கள் பாடி உள்ளார். சிவபெருமானை மணம் செய்ய விரும்பிய உமாதேவியார், தாமரை மலரில் சிறிய பெண் குழந்தையாக வடி வெடுத்தாள். காத்தியாயன முனிவர் அவளை வளர்த்து வந்தார்.  அவளின் கூந்தலில் நல்மணம் வீசியதால் அவள் மட்டுவார்குழலி என அழைக்கப்பட்டாள். பருவ மெய்திய மட்டுவார்குழலி சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி, அருகில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட்டு  தவம் செய்தாள்.  இந்த இடம் நாகநாத சுவாமி கோயில். பெருமான் அவளுக்குக் காட்சி கொடுத்து மணம் புரிந்தார். சித்திரைத் திருவிழாவின் 6-வது நாளில் இந்தத் திருமண விழா இங்கு நடைபெறும்.

மலை உச்சிக்கு வந்த பிள்ளையார்

ஸ்ரீராமர், இராவணனிடம் போர் செய்து சீதையை மீட்டு வந்தார். சீதையை மீட்க விபீஷணனும் துணையிருந்ததால் அசுரகுலத்தில் பிறந்தவனாக இருந்தும் இராவணனுடைய தம்பியாக இருந்தும் நியாயத்தின் பக்கம் இருந்து  நல்ல எண்ணத்துடன் உதவி செய்ததால் ஸ்ரீராமர் விபீஷணன் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அதனால், ஸ்ரீராமர் வணங்கி வந்த ஸ்ரீரங்கநாதர் சிலையை விபீஷணனிடம் தந்து, “இந்த விக்கிரகத்தை நல்லமுறையில் நீ பூஜை செய்து வந்தால் பல நன்மைகள் ஏற்படும்.” என்று கூறி ஆசி வழங்கி விபீஷ்ணனிடம் ஸ்ரீரங்கநாதரின் சிலையை கொடுத்து, “இந்த விக்கிரகத்தை நீ இலங்கைக்கு சென்று சேரும் வரை எந்த இடத்திலும் வைக்க வேண்டாம். அப்படி வைத்தால் வைத்த இடத்திலேயே ஸ்ரீரங்கநாதர் தங்கிவிடுவார். மீண்டும் விக்கிரகமாக உள்ள அவரை தூக்க உன்னால் இயலாது.” என்றார் ஸ்ரீஇராமர். அசுரகுலத்தில் பிறந்தவனிடம் ஸ்ரீரங்கநாதர் சிலையை தந்து அவன் முறையாக வழிப்பட்டால் நிச்சயம் விபீஷணன் யாரும் வெல்ல முடியாத அசுரகுல தலைவனாக திகழ்வான். அவன் நல்லவனாக இருக்கும் வரை அது நல்லதுதான். மாறுவது மனம் என்பார்களே அப்படி ஒருவேளை விபீஷணனின் நல்ல குணம் மாறி, தன்னுடைய பிறவி குணமான அசுரத் தன்மையை வெளிப்படுத்தினால் அது நமக்கு ஆபத்து என எண்ணிய தேவர்கள், ஸ்ரீஇராமர் விபீஷணனிடம் தந்த சிலையை எப்படியாவது வாங்கியே தீர வேண்டும் என்ற முடிவு செய்தார்கள். அதனால் தங்கள் பயத்தை விநாயகரிடம் சொல்லி முறையிட்டார்கள். “அமைதியாக இருங்கள். எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். ஆத்மலிங்கத்தை இராவணனால் இலங்கைக்கு எடுத்து செல்ல முடிந்ததா? அதுபோல் விபீஷ்ணனும் ஸ்ரீரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாது” என்று தேவர்களுக்கு நம்பிக்கை தந்து அனுப்பினார். எதுவும் அறியாத விபீஷணன், ஸ்ரீரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்து சென்று கொண்டு இருக்கும் போது, மாலை நேரம் வந்ததால் இறைவனை பூஜிக்க வேண்டும் என்று கருதி காவேரி கரை பக்கம் வந்தார். இறைவனை பூஜிக்கும் முன் குளிக்க வேண்டுமே… எப்படி குளிப்பது? இந்த ஸ்ரீரங்கநாதர் சிலையை கீழே வைத்து விட்டால் அந்த இடத்திலேயே ஸ்ரீரங்கநாதர் அமர்ந்து விடுவார் என்றாரே நம் ஸ்ரீராமர். என்ன செய்வது?” என்று குழப்பத்தில் இருந்தார். அந்த நேரத்தில் மாடு மேய்த்துகொண்டு ஒரு சிறுவன் எதிரில் வந்து கொண்டு இருந்தான். அந்த சிறுவனை அழைத்து, “இந்த சிலையை பத்திரமாக கையில் பிடித்து கொள். நான் காவேரில் குளித்துவிட்டு வருகிறேன்.” என்றார் விபீஷ்ணர்.   விபீஷ்ணர் குளித்து கொண்டு இருக்கும் போது, அந்த சிறுவன் ஸ்ரீரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டு ஒடினான். இதை கண்ட விபீஷ்ணர் கோபம் கொண்டு அந்த சிறுவனை துரத்திக் கொண்டு ஒடினார். அந்த சிறுவன் நிற்காமல் மிக வேகமாக ஓடி, ஒரு மலை உச்சியில் ஏறி அமர்ந்தான். அதிக வேகமாக ஓடியதாலும் வேகு தூரத்திற்கு அந்த சிறுவனை துரத்தி வந்ததாலும் களைப்பும் கோபமும் அடைந்த விபீஷ்ணர், அந்த சிறுவன் தலையில் ஓங்கி குட்டினார். குட்டுப்பட்ட அச்சிறுவன், “என்னை கண்டால் எல்லோரும் தன்னை தானே குட்டிக்கொள்வார்கள்… ஆனால் நீயோ என்னையே குட்டிவிட்டாயே.” என்று சிரித்து கொண்டே சிறுவன் விநாயகராக விபீஷணனுக்கு காட்சி தந்து  அந்த இடத்திலேயே சிலையாக அமர்ந்தார். இதனால் உச்சிபிள்ளையாருக்கு இன்றும் விபீஷணனிடம் தலையில் குட்டுப்பட்ட சிறுபள்ளம் இருக்கும்.

உச்சிபிள்ளையார் கோயில் உருவான கதை

மகேந்திரவர்மன் பல்லவன் மலை பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த மலைபகுதியை கிழக்கு பக்கமாக பார்த்த போது யானை முகமாகவும், வடக்கிலிருந்து பார்க்கும் போது மயில் நிற்பது போலவும், தெற்கில் இருந்து பார்க்கும் போது யானை போலவும் காட்சி கொடுத்தது மலை. இதை கண்ட அரசர் இந்த மலையில் ஏதோ தெய்வீக சக்தி படைத்தது என்று கருதி மலை மீது ஏறிபார்த்தார். அங்கு ஒரு விநாயகர் சிலையை கண்டார். அதை தன் அரண்மனைக்கு எடுத்து செல்ல முயற்சித்தபோது சிலையை அசைக்க முடியவில்லை. அதனால் மலையிலேயே கோயில் கட்டினார். உச்சி பிள்ளையாரை வணங்கினால் உயரிய வாழ்க்கை அமையும்.

விநாயகர் சதுர்த்தி விழா

இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி என்பது பிள்ளையார்பட்டிக்கு அடுத்தப்படியாக திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலில் கொண்டாடுவது  சிறப்பம்சமாகும்.  150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் படையல் இட்டு நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 18 மணி நேரம் அவித்தபின்   விநாயக சதுர்த்தி காலை  இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் வைத்து பக்தர்கள் சுமந்து உச்சிபிள்ளையாருக்கு எடுத்து வரப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது. விநாயக சதுர்த்தி விழா 14 நாட்கள் நடைபெறுகிறது. விநாயகர் தினமும் பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் வருடா வருடம் ஏற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு வந்து விநாயகரை வேண்டிக்கொண்டால் குழைந்தை இல்லாதோருக்கு, குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதிகாசம் இக்குன்றின் மீதுள்ள மூன்று சிகரங்களில் சிவன், பார்வதி மற்றும் விநாயகர்வீற்றிருந்ததாகவும், ஆதிசேஷனுக்கும் வாயுவிற்கும் இடையில் ஏற்பட்ட பெரும்போரின் விளைவாக, இமயமலைத் தொடரிலிருந்து இந்தியாவின் பல பாகங்களுக்கும் பறந்து சென்ற மலைத் தொகுதிகளில் இதுவும் ஒன்று எனவும் கூறுவர்

ஸ்ரீ  தாயுமானவர் சுவாமிகள்

தமிழ்நாட்டில் உள்ள நான்கு பெரிய லிங்கங்களில் ஸ்ரீதாயுமானவரின் லிங்கத் திருமேனியும் ஒன்று. லிங்கம் மேற்கு நோக்கி இருப்பதால் எதிரில் வழக்கப்படி உள்ள நந்தி கிடையாது. அதற்கு பதிலாக நந்தியம்பெருமான் தெப்பக்குளம் அருகே கோயில் கொண்டுள்ளார்.  மேற்கு நோக்கியுள்ள இறைவனின் முதுகுப்புறத்தைப் பார்த்தபடி நந்தியும், மேற்கு நோக்கியுள்ளது அதிசயம்தான்.

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர்

தாயுமானவர் புராணம்

தென் கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி சிவனின் தோவரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69-வது தோவரத்தலம் ஆகும். திருச்சி மலைகோட்டையில் உள்ள தாயுமானவர் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது இங்கு சிவபெருமான் மாட்டுவார் குழலியுடன் தாயுமானவர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் தாயை பிறிந்தவர்கள் இவரை வேண்டிகொண்டால் தாயாக இருந்து வழிநடத்துவார் மேலும், பெண்கள் கர்பகாலத்தில் இவரை வணங்கினால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை

பெண்ணுக்கு திருமணம்:

காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் ரத்தின குப்தன் என்ற வணிகன். இவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. ரத்தினாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்தப் பெண், பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சிராப்பள்ளியில் இருந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை சிறப்புற திருமணம் செய்து கொடுத்தனர். ரத்தினாவதி தனது கணவருடன், திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் தெற்கு வீதியில் அமைந்த ஒரு இல்லத்தில் வாழ்ந்து  வந்தனர்.  சிவ பக்தையான ரத்தினாவதி, தினந்தோறும் சிவ பெருமானை வழிபட்டு வந்தாள். இந்த நிலையில் ரத்தினாவதி கருவுற்றாள். சில மாதங்கள் சென்ற நிலையில் அவளது கர்ப்ப காலம் முடிந்து, பேறு காலம் வந்தது. ரத்தினாவதியின் தாயார், தன் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, பேறு காலத்தில் தேவைப்படும் காய மருந்து, தைலம் போன்ற பொருட் களுடன் பூம்புகாரில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக திருச்சியை நோக்கி பயணித்தார். பல ஊர்களைக் கடந்து வரும்போது, பலத்த மழை கொட்டியது. பெரு மழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. ஆகவே ரத்தினாவதியின் தாயாரால் அக்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் தன்னுடைய பேறு காலத்தின்போது, தாயார் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தினாவதி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பல நாட்கள் ஆகியும் தாய் வராததால் வருத்தம் அடைந்தாள். அவளது மனம் தாயின் வருகைக்காக ஏங்கியது. தாயின் துணை இல்லாததால், தான் தினமும் வழிபடும் திருச்சி செவ்வந்திநாதரையும், மட்டுவார் குழல் அம்பாளையும் நினைத்து பிரார்த்தித்து வந்தாள். பக்தையின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள். தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாக இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன. அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார் என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.

பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா. காவிரியின் தென்கரையில் சிறு குன்றின் மீது குடியிருந்து மலைக்கொழுந்து ஈசர் என்றும், சாரமா முனிவரால் செவ்வந்தி நந்தவனம் அமைக்கப்பட்டு, அந்தக் பூக்களை விரும்பிச் சூடிக்கொண்டதால் ‘செவ்வந்திநாதர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்தல ஈசன், இந்த நிகழ்வுக்குப்பிறகு ‘தாயுமானவர்’ என்றே அழைக்கப்பட்டார். சாரமான முனிவரை, உறையூர் சோழ மன்னன் உதாசீனப்படுத்தினான் என்பதற்காக, மேற்குப்புறமாக திரும்பி உறையூரில் மண் மழையைப் பெய்ய வைத்து மன்னனுக்கு தண்டனை கொடுத்த இறைவன், தன் பக்தையான ரத்தினாவதிக்கு தாயாக வந்து தலைப்பிரசவம் பார்த்தார் என்று சொல்லும்போது, இறைவன் தனது பக்தர்களுக் காக எதையும் செய்வார் என்பது புரிகிறது.

மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார்.

கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்தத் தலத்தின் தீர்த்தங்கள்:

காவிரி:  ஊருக்கு வடக்கே சுமார் அரை கி.மீ. தூரத்தில் ஓடுகிறது. ‘குடக காவிரி நீளலை, சூடிய திரிசிரா மலை மேலுரை வீர’ எனும் திருப்புகழ் வரியின்படி, காவிரி முற்காலத்தில் மலையை ஒட்டி ஓடியதாகத் தெரிகிறது.

சிவகங்கை: மலைக்கு வடமேற்கில் நாகநாத சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. கோயிலுக்கு மேற்புறம் மைய மண்டபத் துடன் அமைந்த இந்த தெப்பக் குளம் பிரம தீர்த்தம் என்றும் சொல்லப்படும். இது 16-ஆம் நூற்றாண்டில் திருச்சியை ஆண்ட விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது. இங்கு பங்குனியில் தெப்போற்சவம் நடைபெறும். இந்தக் குளம் எண்டோன்மென்ட் போர்டின் உத்தரவுப்படி (23.6.49 தேதி உள்ள ஒப்பந்தப்படி) திருச்சி மாநகராட்சிக்கு 99 வருஷங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இங்கு வசித்த முதலைகள், சில வருடங்களுக்கு முன் திருச்சிவாசிகளை ஆட்டிப் படைத்ததாம்.

நன்றுடையான்: திருச்சி டவுன் ரயில் நிலையத்தில் இருந்து மலைக்குக் கிழக்கே சுமார் கால் மைல் தூரத்தில் உள்ளது.

தீயதில்லான்: மலைக்குத் தெற்கில் அமைந்திருக்கும் இதை உட்குளம் என்றும் சொல்வார்கள். தற்போது இங்கு வைத்தே சித்திரை மாதம் பிரமோற்சவத்தின் 6-ஆம் நாளன்று அம்மனின் தபசு விழா நடைபெறுகிறது.

தலத்தை போற்றிப் பாடியுள்ளோர்

அருள்திரு சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர்கோன் நாராயணன் (சிராமலை அந்தாதி), மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் திருச்சியின் தொன்மை மற்றும் தலப் பெருமை குறித்து நூல்களை இயற்றியுள்ளனர். மேலும் தாயுமான அடிகள், அருணகிரிநாதர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகியோரும் இந்தத் தலத்தை போற்றிப் பாடியுள்ளனர்.   தமிழறிஞர்களான அ.சரவண முதலியார், அவரின் புதல்வர் அ.ச. ஞானசம்பந்தம், புலவர் கீரன், அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் மற்றும் பாரிஸ்டர் வ.வே.சுப்பிரமணிய ஐயரும் திருச்சியில் வாழ்ந்திருந்தனர்.

தெப்ப திருவிழா

பங்குனி மாதத்தில் நடைபெறும் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது. தாயுமானசுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகணி (தெப்பக்குளம்) உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தெப்பத் திருவிழா நடைபெறும்.

வரலாறு

கீழ்க் கோபுர வாயிலுக்குப் பக்கத்தில்  ஆயிரங்கால் மண்டபம் இடம்பெற்றிருந்தது. இந்த மண்டபம் 17-ஆம் நூற்றாண்டில், ‘அனுப்பி’ என்ற பெண்ணால் கட்டப்பட்டது என்கிறார்கள். கோபுர வாயிலில் உள்ள தூண் ஒன்றில் அவள் உருவம்  அமைக்கப்பட்டுள்ளது.  அங்கு 1772-ல் வெடி விபத்து ஏற்பட்டதால் இந்தப் பகுதி பலத்த சேதத்துக்கு ஆளானது. அதன் பின்னரே இந்தப் பகுதி கடை வீதியானது. இவ்விடம் முதன் முதலில் விசயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடகப் போர்களின் போது பிரித்தானியரால் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோட்டைப் பகுதிக்குள் இருக்கும் அமைப்புக்களுள் காலத்தால் முந்தியது கி.பி 580ல் உருவாக்கப்பட்ட பல்லவர் காலக் குகைக் கோயில் ஆகும். பல்லவர்கள் இப்பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினர். சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை இப்பகுதி அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன் பின்னர் இவ்விடம் விசயநகரப் பேரரசின் கீழ் வந்தது. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பின்னர் இப்பகுதி தில்லி சுல்தானகத்தின் கீழ் வந்தது. இவர்களைத் துரத்திவிட்டு விசயநகரப் பேரரசு இப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தியது. விசயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, அதன் சார்பில் இப்பகுதியில் ஆளுனர்களாகச் செயற்பட்ட மதுரை நாயக்கர்கள் இப்பகுதியைத் தமது நேரடி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். இவர்கள் காலத்திலேயே திருச்சி செழித்திருந்ததுடன் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் உருவாயின. நாயக்கர்களே மலைக்கோட்டைக் கோயிற் குளத்தையும் முக்கியமான சுவர்களையும் கட்டினர். பின்னர் திருச்சியே அவர்களின் தலைநகரமுமானது. இக்கோட்டை மாளிகையிலேயே இராணி மீனாட்சி, சந்தா சாகிப்பிடம் ஆட்சியைக் கையளித்தார். சந்தா சாகிப் பிரான்சியர் துணையுடன் ஆட்சி நடத்தினார். கர்நாடகப் போரின் பின்னர் சந்தா சாகிப்பின் மாமனான ஆற்காடு நவாப் பிரித்தானியரின் துணையோடு திருச்சிராப்பள்ளிக் கோட்டையைக் கைப்பற்றினார். இதுவே பிரித்தானியர் தமிழ்நாட்டிலும் பின்னர் முழுத் தென்னிந்தியாவிலும் காலூன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தற்போது இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வுப்பிரிவின் சென்னை வட்டத்தின் மேலாண்மையின் கீழ் பேணப்பட்டு வருகின்றது.

வரலாற்றுச் சிறப்புகள்

பல்லவர்களால் சிறு குகைக் கோயிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோயிலைப், பின்னர், இதன் இயற்கையாகவே அமைந்த அரண்களைச் சாதகமாக்கிக் கொண்ட நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோயில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கது.

நாயக்கர்கள் காலம்

மதுரை நாயக்க வம்ச அரசர்களின் தலைநகரமாக இந்த மலை இருந்தமையால், இது பல பெரும்போர்களைக் கண்ணுற்றது. விஜய நகரப் பேரரசர்களுக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போர் அவற்றில் ஒன்றாகும். நாயக்கர்களின் வடமேற்கு அரணாக இக்கோட்டை விளங்கியது. அவர்களது அரசாட்சியின் இறுதி நூற்றாண்டுகளில் தஞ்சைமாயக்கர்கள், பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் மற்றும் படையெடுத்து வந்த பிஜாப்புர், மைசூர் மற்றும் மராத்திய அரசர்களிடமிருந்து இக்கோட்டை அரணாகக் காத்து வந்தது.

கர்நாடக நவாப் காலம்

திருச்சி மலைக்கோட்டை சந்தா சாஹிப்மற்றும் ஆற்காட்டு அலி ஆகியோரிடையே நிகழ்ந்ததான போருக்காக மிகவும் நினைவு கூறப்படுகிறது. ஆங்கிலப் படைகளிடமிருந்து தப்பி இக்கோட்டையில் ஒரு குகையினுள் சந்தா சாஹிப் ஒளிந்து கொண்டதாகக் கூறுவர்.

ஆங்கிலேயர் ஆளுகையின் கீழ்

இப்போருக்குப் பிறகு, 18ஆம் நூற்றாண்டில், திருச்சி அநேகமாக ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்து விட்டது. மலைக்கோட்டையின் கதவு முதன்மை அரண் கதவு (Main Guard Gate) எனப்படலானது. இன்றும் அது அப்பெயரிலேயே வழங்கப்படுகிறது. இதனருகிலேயே ராபர்ட் கிளைவ் வாழ்ந்ததாகக் கூறப்படும் இடமும் உள்ளது. மலைக் கோயிலை ஒட்டிய மேற்கு வீதியில் உள்ள தெப்பக்குளத்தின் அருகில் இது உள்ளது.

கோவில் அமைப்பு

அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து படி ஏறினால், மௌன சுவாமிகள் மடம், முருகன் சந்நிதி, நூற்றுக் கால் மண்டபம், இன்னும் பல மண்டபங்கள், தாயுமானவரின் கோயில் மண்டபம், கம்பத்தடி விநாயகர், ஆறுமுகன், அறுபத்துமூவர், செவ்வந்தி விநாயகர், மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை ஆகியோரை தரிசித்த பிறகு மூலவர் ஸ்ரீதாயுமானவரை தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், சகஸ்ரலிங்க மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், சித்திர மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணி மண்டபம் ஆகியவை உள்ளன. சகஸ்ரலிங்க மண்டபத்தில் பல லிங்கங்கள் உள்ளன. இந்த மண்டபங்கள் அனைத்தும் மன்னர்கள் மற்றும் இறை அன்பர்களாலும் வெவ்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.

கோயிலுக்குச் செல்லும் வழியில் இடப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் அழகான சலவைக்கல் மண்டபம் ஒன்றும் உள்ளது. இங்கு சித்திரை மாதத்தில் நிகழும் பெருந்திருவிழாவின் 5-ஆம் நாள் செட்டிப் பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சுகப் பிரசவம் நிகழ்வதற்காக சுக்கு வெல்லம் கலந்த மருந்துப் பொடி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மருந்தினால் பலன் அடைந்தோர் ஏராளம்.  மலைமேல் கோயிலில் சுவாமி சந்நிதிக்குப் போகும் வழியில் சித்திர மண்டபம் உள்ளது. இது அம்மன் கோயிலுக்கு மேலேயே மாடிக் கட்டடமாக  அமைந்துள்ளது. இங்கு நடராசர் திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும், சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. உச்சிமலைக்கு அருகே வலப் பக்கத்தில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இது தளவாய் முதலியாரால் சுமார் 1630-ல் கட்டப்பட்டது. இங்கு வசந்த விழா மற்றும் கோடை உற்சவ விழா ஆகியன நடைபெறும். இதை எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பகுதியாக அன்றைய ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுப் படையினர் பயன்படுத்தினர். தற்போது உல்லாசப் பயணிகள் கட்டணம் செலுத்தி, திருச்சி நகர அழகை பார்க்க வசதியாக இங்கு தொலைநோக்குக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பதினாறு கால் மண்டபத்துக்கு மேல் உள்ள மணி மண்டபம் உறையூர் வணிகர், உலகநாத செட்டியாரது  முயற்சியால் நகர மாந்தரின் உதவியுடன் 1918-ல் கட்டப்பட்டது. இங்கு நிறுவப்பட்டுள்ள மணி நாகப்பட்டினம் தொழிற்சாலையில் செய்யப்பட்டு, சி.கிரிக்டன் என்ற ஆங்கிலேயரால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது இரண்டரை டன் எடையுடன் சுமார் 4 அடி 8 அங்குல நீளமும், அதே அளவு குறுக்களவும் கொண்டது.  தினமும் காலை 4, 6, 10, 12  மற்றும் மாலை 6, 10 மணியளவிலும் நேரங்களிலும், திருவிழா நாட்களிலும் இந்த மணி அடிக்கப்படுகிறது.  மலைப் பாதையின் நடுவிடத்தில் இடப்புறத்தில் ‘சிவசிவ ஒலி’ மண்டபம் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் திருமுறை ஓதுதல், ஒலிபெருக்கி வசதியுடன் நடந்து வருகிறது

திருவிழாக்கள் :

பங்குனி, சித்திரை மாதங்களில் முறையே தெப்பத் திருவிழாவும் தேர்த் திருவிழாவும், வைகாசியில் வசந்தத் திருவிழாவும், ஆடியில் ஆடிப்பூரத் திருவிழாவும் புரட்டாசியில் நவராத்திரி விழாவும், ஐப்பசியில் கந்தர் சஷ்டித் திருவிழாவும்  சிறப்புற நடைபெறுகின்றன. ஐப்பசி மாத பௌர்ணமியில் ஸ்ரீதாயுமானவருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாத சோம வாரங்களில் உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரையில் பிரம்மோற்ஸவம்,பங்குனியில் தெப்ப உற்சவம்,ஆடிப்பூரம்,ஐப்பசியில் அன்னாபிஷேகம்,திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம்,சிவராத்திரி,விநாயகர் சதுர்த்தி,ஆங்கிலப்புத்தாண்டு,தமிழ்புத்தாண்டு,பொங்கல்.

பாதை

மலைக்கோட்டை கோயில், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்திலும் உள்ளது.

கோயில் நேரம்

உச்சிப் பிள்ளையாரை காலை 6 முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம். அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் சந்நிதி மற்றும் தாயுமானவர் திருக்கோயில் காலை 5- 12 வரையும், மாலை 4- இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

கோயில் தொலைபேசி எண்:

0431 2704621, 2710484, 2700971.

கோயில் முகவரி:

ஸ்ரீ தாயுமானசுவாமி ஸ்வாமி கோயில்

மலைக்கோட்டை

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி (P.O)

தமிழ்நாடு

இந்தியா.