திருவெக்கா – சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

மூலவர்:
சொன்ன வண்ணம் செய்த பெருமாள், திரு யதோதகாரி, திருவெக்கனை கிடந்தான்.

உற்சவர்:
திரு யதோதகாரி பெருமாள்

தாயார்:கோமளவல்லி நாச்சியார்

தீர்த்தம்:பொய்கை

மங்களாசாசனம்
பாடல் வகை:
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

மங்களாசாசனம் செய்தவர்கள்:
பொய்கை ஆழ்வார் , பேயாழ்வார் , திருமங்கை , திருமழிசை , நம்மாழ்வார் .

விமானம்:
வேதாசார விமானம்.

பழமை : 2000 வருடங்களுக்கு முன் புராண ஊர் பெயர் : திருவெக்கா

108 திவ்விய தேசங்களில் ஒன்று
இது 52வது தலம்.

“சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்ற பெயரிலேயே காஞ்சீபுரத்தில் ஒரு கோவிலில் பகவான், மஹாவிஷ்ணு இருக்கிறார். “யதோக்தகாரி” என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள். ‘யதோக்த’ – ‘யதா உக்த’: ‘சொன்னபடி’, ‘சொன்னவண்ணம்’; ‘காரி’ – செய்பவர்
சரஸ்வதி தேவி பெருமாளின் பாதத்தின் அருகே அமர்ந்தவண்ணம் கருவறையில் காட்சி . தருகிறார்.

பொய்கையாழ்வார்

12 ஆழ்வார்களில் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தின் அம்சமாக பொய்கையாழ்வார் இத்தலத்தில் அவதாரம் செய்தார்.

வைணவநெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்முதலாழ்வார் ஆவார்.

காஞ்சிபுரத்தில்ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர்.

இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது.
முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்

திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார்.
அனைத்து நிலத்திலும் இடமிருந்து வலமாக இருக்கும் பெருமாள் இங்கு ஆழ்வாருடன் போய் வந்து அவசரமாக படுத்ததால் திசைமாறி தரிசனம் தருகிறார்.

ஆழ்வார் கூறியதை கேட்ட இத்தல பெருமாள், நமது குறைகளையும் கேட்டு நிறைவேற்றுவார்

வேகவதி ஆறே வெக்கா ஆறு என அழைக்கப்படுகிறது.

தலபுராணம்

பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரதத் தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு விட்டு யாகத்தைத் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்க, நாராயணன்
விளக்கொளிப் பெருமாளாகத் திருதன்காவில் தோன்றினர். யாகத்தைத் தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம் எனும் பறவை மிருக உருவில் அசுரனை ஏவ, நாராயணன் எட்டுக் கைகளில் திவ்ய ஆயுதங்களுடன் அட்டபுயகரனாய்
வந்து சரபத்தை அழித்தார். பின்னர் பிரம்மா மீண்டும் தொடர்ந்த யாகத் தீயை அழிக்க, சரஸ்வதி தேவியே வெள்ளப்பெருக்காய் வேகவதி ஆறாய்ப் பெருகிவர, பெருமாள் தானே அணையாய் நதியின் குறுக்கே கிடந்து நதியின் போக்கை மாற்றி யாகத்தின் புனிதத்தீயைக் காத்த தலமே திருவெக்கா ஆகும். இதனாலே பெருமாள் வெக்கனை கிடந்தான் என ஆழ்வர்களால் அருளப்படுகிறார்.

திருமழிசைப்பிரான்

திருமழிசைப்பிரானின் சீடர்
கணிகண்ணன் இருவரும் காஞ்சிபுரம் வந்து குடில்கள் அமைத்து பெருமாள் கோவில்களுக்கு போய் வருகின்றனர்
குடிலை கூட்டி மெழுகிய பெண் வயதான தோற்றத்தோடு இருந்தார்.
அவரின் விருப்பப்படி

அவரை மிகச்சிறந்த அழகியாக ஆக்கினார் திருமழிசைபிரான்.

பல்லவ மன்னர் அவளை மணந்துகொள்கிறார்.
மன்னருக்கு மட்டும் வயதாகிகொண்டே போக அவள் இளமையுடனை இருக்கிறாள்.
அவளின் இளமையின் ரகசியம் கேட்க
நடந்ததை சொல்கிறார்
கணிகண்ணனை அழைத்து தம்மையும் இளமையானவனாக மாற்றி தர வேண்ட
முடியாது என்று சொல்லி
அனைவருக்கும் இது போல செய்யமுடியாதென்று சொன்னவுடன்
அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான்.

கதை 2

கணிகண்ணன்
திருமழிசையாருடைய சீடன். கச்சிப்பதியில் ஆட்சி புரிந்த பல்லவ அரசன் கணிகண்ணனிடம் தன்னை ஏற்றிக்கவிதை பாடச்சொல்ல அவர் மானிடனைப் பாடுவது குற்றம் என்று கூறி திருமாலைப் பாடினார்.

அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான். அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், ‘உம்முடன் நானும் வருவேன்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி,

கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடையசெந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்
என்று விண்ணப்பம் செய்தார்.

அப்பெருமானும் ஆதிசேஷனை பாயாக சுருட்டி கையில் எடுத்துக்கொண்டு திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார்.

பெருமாளை தொடர்ந்து திருமகளும் செல்ல கச்சி நகரம் இருண்டு மங்கலம் குறைந்து. இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர்.

கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி
கணிகண்ணன் போக்கொழிந்தான்

காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடையசெந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.
என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.

இதனாலே பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என போற்றப்பெருகிறார்.

காலை 7மணி முதல் 10 வரை மாலை 5மணி முதல் 8.30 வரை கோவில் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து 246km.
கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் வடலூர் பண்ருட்டி
அரசூர் விக்கிரவாண்டி வழியாக மேல்மருவத்தூர் உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம் திருவக்கா
விஷ்ணு காஞ்சி சென்றடையலாம்.
வரதராஜ பெருமாள் கோவில் பின் புறம் அருகில் உள்ளது.