ஸ்ரீ மகா கணபதி ஆலயம் கணபதி ஆக்ரஹாரம்

ஸ்ரீ மகா கணபதி ஆலயம்
கணபதி ஆக்ரஹாரம்

கணபதி ஆக்ரஹாரம் இந்த கிராமத்தின் பெயர் இவ்வூரில் அமையப் பெற்ற புகழ்பெற்ற
ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

அகஸ்திய முனிவரால் இந்த ஆலயம் நிறுவப்பட்டது,
முனிவர் கௌதம மகரிஷி வழிபட்டுள்ளார்.

ஸ்ரீ கணபதி அக்ரஹார மக்களால் மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக வணங்கப்படுகிறார்.

ஸ்ரீ காஞ்சி மகாபெரியவாவுக்கு மிகவும் பிடித்தமான ஆலயம்.

பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால், இக்கோயிலில் உள்ள கணபதிக்கும் மயில்தான் வாகனமாய்த் திகழ்கிறது. எனவே, இந்தக் கணபதியை மயூரிவாகனன் என்றும் அழைக்கிறார்கள்.

கணபதி அக்ரஹாரம், பெரிய கிராமம். காவிரி சுழித்துக் கொண்டோடும் எழில் கொஞ்சும் பூமி. தெய்வங்களும், ஞானிகளும், மகரிஷிகளும் விரும்பி தங்கிச் செல்லும் தீர்த்தக் கட்டத்தைக் கொண்டது. மூன்று ஸ்நான கட்டங்களிலும் மடம் உண்டு. அவற்றில் கீழ் துறையிலுள்ள மடம் பெரியது. இங்கு விஜயம் செய்யும் துறவிகள் பலரும் கீழ்த்துறை மடத்தில் தங்குவார்கள். சாதுர்மாஸ்ய, வியாஸ பூஜைகள் நடக்கும். சங்கர ஜெயந்தி உற்சவமும் கொண்டாடப்படும். சங்கர ஜெயந்தி சமயத்திலும், சாதுர்மாஸ்ய சமயத்திலும் பல வித்வான்கள் கிராமத்திற்கு வருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் வறட்சியால் பாதிக்கப்பட்ட உலர்ந்த நிலமாக இருந்தது.

அகலியையின் கணவர் கௌதம மகரிஷி தனது ஆசிரமத்தை விட்டு வெளியேறிய நேரம். (அகலியை சாபத்தால் ஒரு கல் ஆக ஆக்கிய நேரம்) பின்னர் இந்த கிராமத்திற்கு வந்தார். கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கௌதம மஹரிஷி அவர்களின் மாண்பை உணர்ந்து, மழை கடவுளை
அழைத்து மழையை பெய்விக்க வேண்டினர்.
நிலத்தை வளமான நிலமாக மாற்றுவதற்காக அவரைக் கெஞ்சி மழையை பெய்விக்க வேண்டினர்.

அத்தகைய ஒரு வறட்சி காரணமாக கௌதமர் ஆச்சரியப்பட்டார், மகரிஷி அகஸ்தியரால் வணங்கப்பட்ட ஒரு கணபதி, மண்ணில் புதையுண்டு போய் இருப்பதை உணர்ந்தார்.

மாலைக்குள் அந்த சிலையைத் தேடி எடுத்து வர கிராம மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
சந்திரன் மாலை வரும் முன் சிலையை வெளியே கொண்டு வந்தனர் மக்கள் கௌதமரும் சடச்சார மந்திரத்துடன் கணபதியை பிரதிஷ்டை செய்தார்.
பிரதிஷ்டை செய்தவுடன்
மழை மேகங்கள் உருவாகி கிராமத்தில் ஒரு பெரிய மழை பெய்தது . மகா கணபதியை தினமும் தரிசனம் செய்ய காவிரியும் தன் பாதையை மாற்றிக்கொண்டாள்.
அந்த கிராமம் வழியாக தனது பயணத்தைத் தொடர்ந்தாள். கிராமம் வளமானதாக ஆனது.
மகா கணபதியால் கிராமம் வளர்ந்ததால், அது கணபதி அக்ரஹாரம் என பெயரிடப்பட்டது.

ஸ்ரீ ஸ்ரீ மகா கணபதி கோயில்

சிறிய கோவில்
அழகான கோவில்.
வண்ணமயமான முக்கிய நடைபாதை வழியாக நீங்கள் துவாஜஸ்தம்பம் வந்தால் துவாஜஸ்தம்பத்தில் கணபதி ஒரு சிறிய உருவமாக செதுக்கப்பட்டுள்ளது. அவரை தரிசித்து பின்

காஞ்சி மஹா பெரியவரின் பெரிய ஓவியம் பக்தர்களை வரவேற்கிறது. கணேச புராணம் சுவர்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கருவறையில் உள்ளே மகா கணபதி, அழகிய செதுக்கப்பட்ட பீடத்தின் மீது 5 அடி உயரமாக அமர்ந்துள்ளார்.
அவரது மோசிக வாகனம் ஒரு பிரார்த்தனை நிலைப்பாட்டில் அமர்ந்திருக்கிறது.
கணபதியின் தும்பிக்கை வலது நோக்கி வளைந்திருக்கிறது.
வலம்புரி விநாயகராய் அறியப்படுகிறார்.

செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளி கிழமைகளிலும் மற்றும் சதுர்த்தி அன்றும் ஸ்ரீ மகாகணபதி வெள்ளி கவசம் மற்றும் அழகான நகைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறார்.

பிரகார சுவர்கள் சுற்றி பல அழகான
ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

ஆலயத்தின் தென் கிழக்கே ஒரு சிறிய நந்தவனம் (தோட்டம்) உள்ளது.
அந் நந்தவனத்தில் வன்னி மற்றும் வேப்ப மரம் கோவிலின் ஸ்தல விருட்சமாக உள்ளது.

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்த கிராமத்தில் ஒரு தனித்துவமான முறை நடைமுறையில் உள்ளது,
யாரும் வீட்டினில்
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து
விநாயகர் சதுர்த்தி பூஜையை செய்வதில்லை .
அதற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டைகள் இந்த ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு பூஜை செய்த பிறகு பிரசாதமாக வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.

திருவிழாக்கள்

விநாயகர் சதுர்த்தி இந்த ஆலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வருடாந்த ‘பவித்ரோத்சாசம்’, மாதாந்திர சதுர்த்தி பூஜை பெரிய
அளவில் கொண்டாடப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து 25 கி.மீ.
கும்பகோணத்தில் இருந்து
சுவாமி மலை கபிஸ்தலம் பின்னர்
கணபதி அக்ரஹாரம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *