Categories
Library Library

கந்த சஷ்டி கவசத்தின் விளக்கவுரை

கந்த சஷ்டி கவசத்தின் விளக்கவுர

கந்த சஷ்டி கவசம் பற்றி அறியா பதர் ஒருவர், கொஞ்சமும் சிந்தனையோ தெளிவோ இல்லா ஒருவன், வெள்ளையாய் இருப்பதெல்லாம் கள் என நினைக்கும் மடையன் ஒருவன் என்னவோ சொல்லிவிட்டான் என ஏக சர்ச்சைகள்

இந்துக்களில் யாரும் அதுபற்றி விளக்கம் அளிக்காததாலும், வெறும் ஆத்திர வார்த்தை மட்டும் பேசிகொண்டிருப்பதாலும் நாம் சில வரிகளை சொல்ல வேண்டியது அவசியமாயிற்று

நாம் அந்த அற்பனுக்கு சவால்விடவில்லை மாறாக தமிழரின் கடவுளான முருகனே அருளிய அந்த உடலின் நோயகற்றும் கந்த சஷ்டி கவசம் பற்றியும் அதன் வரலாறு பற்றியும், நம்பிக்கையோடு சொல்வோருக்கு அது கொடுக்கும் பலன் பற்றியும் சொல்கின்றோம்

கந்த சஷ்டி கவசம் எப்படி உருவாயிற்று?

அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர் கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு முருகபெருமான் காட்சிஅளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது அவர் நோயினை மட்டுமல்ல உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்கின்றான் ஆம் அந்த கோவிலில் அந்நேரம் பாலதேவராயர் மட்டுமல்ல, இன்னும் ஏக்பட்ட நோயாளிகள் இருந்தனர்

தேவராயருக்கு வயிற்றில் வலி, மற்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய் தலையில் கட்டி, கன்னத்தில் புற்று, கழுத்தில் கழலை, நெஞ்சு கூடும் ஒரு எலும்புருக்கி நோய், வயிற்றுவலி, மூலம், தொடையில் புண் , கணுக்கால் வலி, என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய் இது போல பேய் , பில்லி சூன்யம் என பாதிக்கபட்டு வந்திருக்கும் கூட்டம் ஒன்று, சித்தபிரம்மை பிடித்த கூட்டம் ஒன்று வறுமை கூடிய கூட்டமொன்று, இன்னும் நோய் பிணி வறுமையில் வாடி நிற்கும் பெரும் கூட்டமொன்ன்று அந்த மொத்த மக்களின் குரலாக முருகனிடம் எல்லா பிணிகளுக்கும், நோய்க்கும் பேய்க்குமாக அந்த மனிதன் முருகன் சொன்னபடி பொதுநலத்தோடு பாடினான் அந்த மனிதன், அவனுக்கு வந்தது வயிற்றுவலி ஆனால் அவன் எல்லாருக்கும் பாடினான், எல்லோரும் பிணிதீர பாடினான்.

அவர்கள் எல்லோரையும் கவனிக்கும் அந்த நல்லவரான பாலதேவராயர், எல்லா பக்தரையும் முருகன் எக்காலமும் காக்கும்படி பாடினான் அழுகையும் , கதறலும் மிக்க அந்த கூட்டத்தின் சார்பாக பாட வந்தார் தேவராயன். அந்த சன்முகன் சந்நிதியில் இருந்து பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அதுதான் கந்த சஷ்டி கவசம் சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளபட்டது

அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது ஆழந்த அர்தமிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பே
சிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல் உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல் இது தொடரும் பாடலில் அர்த்தமில்லா சில வரிகள் வருவதாக தோன்றும், உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக‌

இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது. அக்கால புலவர்கள் ஞானமிக்கவர்கள், சித்தர்கள் சொன்ன நல்ல அதிர்வு, அதாவது தெய்வீக மற்றும் நேர்மறை சிந்தனையினை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு நிகரான‌ சரியான தமிழ் வார்த்தைகளை வைத்து பாடியிருப்பார்கள்

தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார் உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் , சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும் ஓம் எனும் வார்த்தையினை ஓங்காரமாக சில நாழிகை இழுத்து ம்ம்ம்ம்ம்ம் என்பதை அழுத்தி சில நாழிகை இழுத்தாலே சில அதிர்வுகளை உணரமுடியும் என்பார்கள் ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்

குகைகளில் முருகன் ஆலயம் வைப்பதும் ஒரு அறிவியல், பொதுவாக கற்கள் சூழ்ந்த இடம் நல்ல சூழலை கொடுக்கும் நோய்கள் நெருங்கா, செங்கல் இருந்தும் மன்னர்கள் கற்களால் ஆலயம் கட்டிய தத்துவம் அதுவேதான் முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்

முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்

வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம்

நலம் பெற்றோர் ஏராளம், ஆசியாவினையே புரட்டி போட்ட சுனாமி திருச்செந்தூர் பக்கம் வாலை சுருட்டி இருந்தது என்பதும் கண்டது இதைத்தான் பாடலாக சொன்னார்கள்

“முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே..”

இனி மனிதர் தங்களை தாங்களே காத்துகொள்ள வேண்டும் எனும் சூழல் வந்துவிட்ட நேரம், தெய்வ அனுக்கிரகம் ஒன்றே வழி. மருத்துவத்தால் கைவிடபட்ட நோயாளிகள் ஏராளம் கொரானாவுக்கு கூட மருந்தில்லா காலமது, அவனவன் ஓடி ஓளியவேண்டியிருக்கின்றது, இந்நிலையில் அன்றே முருகபெருமான் சொன்ன பாடலை பழிப்பது சரியல்ல‌ அந்த நபர் சொன்ன விமர்சனத்தை நாமும் கேட்டோம், கன்னத்துக்கு எதற்கு வேல் என்கின்றான் மடையன் கன்னபுற்று என்றால் என்ன அவனுக்கு தெரியுமா? அவன் குடும்பத்தில் யாராவது அப்படி அவன் அழுது அவர் பார்த்ததுண்டா? கழுத்து கழலை நோய் தெரியுமா? கழுத்தில் வரும் ஏக சிக்கல் தெரியுமா? முழு மருந்தில்லா நோய்கள் அவை இன்னும் கொஞ்சமும் தமிழ் அறிவே இல்லாமல், சேரிளம் முலைமார் என்பதற்ற்கு பெண்ணின் மார்பு என கொச்சைபடுத்துகின்றான் மடையன்

முலை என்றால் தொடக்கம் என பொருள, சேர் இளம் முலை என்றால் நெஞ்சுகூடு என பொருள், அது உயிர்நாடி, அதைத்தான் காக்க சொல்கின்றான் பாலதேவராயன் இது எப்படி தவறாகும் நாணாங்கயிறு என்றால் இடுப்பில் கட்டும் கயிறு, உடலின் அமைப்பு அறிந்து குடலின் தன்மை அறிந்து அப்படி ஒரு கயிறை கட்டுதல் தமிழர் மரபு அது குடலிரக்கம் எனும் கொடும் நோயினை காக்கும், உடலில் தொப்பை ஏறும் பொழுது அலாரம் அடிக்கும், அந்த கயிற்றின் இறுக்கம் வயிற்றுக்கு பல நன்மைகளை கொடுத்ததால் அவசியம் என்றார்கள்

குழந்தைக்கு வெள்ளியிலும் தங்கத்திலும் கொடி போடுதல் அந்த மருத்துவமே பருவ பெண்கணை பாவடை அணிய சொன்ன தத்துவம் அதுவே அடிவயிற்றில் கொடுக்கபடும் மெல்ல்லிய இறுக்கம் கர்ப்பபைக்கும் குடலுக்கும் நல்லது அக்கயிறு இருந்த காலமெல்லாம் குடலிரக்கம் இல்லை, குடல் நோய் இல்லை, சிசேரியன் போன்ற இம்சைகள் இல்லை

இடுப்பு கயிறு என்பது மிகபெரும் பாதுகாப்பு, அதைத்தான் பாலதேவராயன் குறிப்பிட்டு சொன்னார் இன்னும் ஆண்குறி காக்க சொல்வது தவறாம் சரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் வந்த மூல பிரதியான யூத தோரா சொல்வதென்ன, பைபிளின் பழைய ஏற்பாடு சொல்வதென்ன? விருத்தசேதனம் எனும் நுனிதோல் வெட்டுதல், ஏன்? ஏன் கடவுள் நினைத்தால் செய்யமுடியாதா? ஏன் ஆண்குறியில் வந்து அவர் வந்து தோலை வெட்ட சொல்கின்றார்?

ஆம் அதில் ஏதோ விஷயம் இருக்கலாம், நாம் அவர்களை பழிக்கவில்லை மாறாக பைபிளில் ஆண்குறி பற்றி சொன்னால் தவறு சஷ்டி கவசம் சொன்னால் தவறு என்பது எப்படி சரி? பைபிளில் இன்னொரு காட்சிவரும், யூதர்களை வதைத்த பெலிஸ்தியருக்கு கடவுள் மூலநோய் வரவைப்பார்

நோய்களில் கொடியதான மூலநோயின் கொடுமையினை தாங்கமுடியா பிலிஸ்தியர் மூலகட்டி வடிவில் தங்கநகை செய்து கடவுளுக்கு படைத்து மன்னிப்பு கேட்க அந்நோய் நீங்கும் , யூதரும் விடுதலையாவர் யாராவது ஏன் யூத கடவுள் பின்பக்கம் நுழைந்தது என கேட்டார்களா?

குருடனை குணமாகு என சொன்னால் ஆகமாட்டானா? இயேசு ஏன் அவன் கண்ணில் மணலை இட்டு துப்பி அவனை குணபடுத்தினார்? அவனை அவமதித்தாரா? அப்படியா பொருள் கொள்வது? சொன்னால் தாங்குமா? ஆம், நாகரீகமுள்ள இந்துக்கள் இப்படி
கேட்கமாட்டார்கள்.

உடலின் ஒவ்வொரு பாகமும் முக்கியம், அதன் அருமை நோய் வந்தால்தான் தெரியும் பல்வலி கூட ஒரு மனிதனை முடக்கும், காதுவலி கண்வலி எல்லாம் முடக்கும் விஷயம், அதுவும் ஒருதலை வலி எல்லாம் மருந்தே இல்லா ரகம் இவை எல்லாம் அனுபவத்தால் அன்றி தெரியாது. ஒவ்வொரு நோயின் கடினம் அறிந்து, வலி அறிந்து, ஒவ்வொரு உறுப்பின் முக்கியத்துவம் அறிந்து மிக நுணுக்கமாக பாடபட்டது சஷ்டி கவசம்

அது ஆபாசம் என்றால் பைபிளின் கதைகளும் விருத்த சேதனமும் மகா மகா ஆபாசமே நாம் சபையில் அருவெருப்பாக பேசவிரும்பவில்லை, எம் நோக்கம் அதுவல்ல, சாக்கடை பன்றி ஒன்று உறுமியதற்கு கோவில் மணி ஒலித்தது போல் பதில் சொல்லிவிட்டோம் அவ்வளவுதான் செல்வத்தில் மிக சிறந்தது உடல் நலம், அந்த உடல்நலத்தையும் மன நலத்தையும் தமிழரின் தனிபெரும் கடவுளும் முதன் முதலில் மானிடரை தேடிவந்தவருமான முருகனிடம் மன்றாடி கேட்பதே கந்த சஷ்டி கவசம் அதில் ஆபாசம் ஏதுமில்லை, அது ஆபாசமென்றால் மருத்துவர் முன் உடையின்றி கிடப்பதும் ஆபாசமாகும், அது எங்கணம் சரியாகும்?

அந்த மடையன் இன்னும் பல இந்து பாடல்களை, அருமருந்தும் ஆழ்ந்த மருத்தும் கொண்ட விஷயங்களை ஆபாசமாக விமர்சிப்பானாம் அப்படி அந்த கொடுமதியாளன் தன் சீழ்பிடித்த சிந்தையில் சொன்னால் கலங்காதீர்கள் நாம் பார்வைக்கு கொண்டுவாருங்கள், நாம் நம்மால் முடிந்த விளக்கத்தை ஞான மறைபொருளை விளக்கி சொல்கின்றோம், அந்த முருகன் நமக்கு வழிகாட்டுவான் நம் தனிபெரும் கடவுளையும் தத்துவத்தையும் காக்கும் பொறுப்பு நமக்கு எக்காலமும் உண்டு, நாம் அதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கின்றோம் அசுரனையே அடக்கி தன் கொடியாக சேவலாக மாற்றி தன் காலடியில் வைத்த முருகன் இவர்களுக்கும் அறிவும் தெளிவும் தர மன்றாடுவோம் ஆதலால் அன்பர்களே, அவன் எவ்வளவு குரைத்தாலும் நமக்கு பதில்கொடுக்குமளவு ஏகபட்ட விஷயம் இங்கு உண்டு, கவலை வேண்டாம் ஆனால் இன்னும் அவன் மோசமாக சொல்லிகொண்டிருந்தால் யூத தோராவின் சாயலான குரானும், பைபிளிலும் இன்னும் ஏகபட்ட கதைகள் உண்டு

நாம் அதை எல்லாம் மத நம்பிக்கை என ஏற்கின்றோம், ஆபிரகாமும் யோபுவும் தாவீதும் அவர்கள் நம்பிக்கை என்றால் கண்ணப்ப நாயனாரும், சுந்தரரும், ராஜராஜ சோழனும் நம் நம்பிக்கை அவர்கள் நம்பிக்கையினை நாம் தொடாதபொழுது நம் நம்பிக்கை பக்கம் அவர்கள் வராமல் இருப்பதுதான் சரி வந்தால் நமக்கென்ன? தெளிந்த நீரோடையான இந்துமதம் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கின்றது, அதை எடுத்து கொடுப்பதே நம் பணி நாம் அர்த்தம் சொல்லிவிட்டோம் அல்லவா? வாருங்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடுவோம்

“விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்” எனும் சஷ்டி கவச வரிகள் இவனுக்கே எழுதபட்டது, அதை அழுத்தி சொல்லி படியுங்கள் ஆலயத்திலும் வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ அது உருக்கமான பாடபடட்டும் நிச்சயம் முருகன் தமிழகத்தை காப்பார், சுனாமி நேரம் திருசெந்தூர் ஆலய மக்களை ஒரு சொட்டு கடல்நீரும் தாக்காமல் காத்த முருகன், நிச்சயம் தன்னை அழைக்கும் ஒவ்வொருவரையும் காப்பார், அந்த கயவன் மனம் திருந்துவான் பொல்லா இடும்பனையும் அடங்கா சூரபத்மனையுமே வதைத்த முருகனுக்கு இப்பதர் எம்மாத்திரம்? இந்த அற்பர்களுக்கும் நல்ல பதிலை அவரே கொடுப்பார். அவன் புத்தி தெளிவான். நம்பிக்கையோடு கந்த சஷ்டி கவசத்தை முன்னெடுப்போம், நிச்சயம் நல்லது நடக்கும்

“சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சன்முகா சரணம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.