Categories
Library Library

குணசீலர்

சிறந்த முருக பக்தர். தினமும் செங்கோட்டு வேலவரை தரிசித்து தினம் பாடும் பழக்கம் உள்ளவர். திருச்செங்கோடு, தேவாரப் பாடல் பெற்ற ஒரு சிவஸ்தலம். அர்த்தநாரீஸ்வரர், பாகம்பிரியாள் இந்தத் தலத்தின் மூலவர்கள், செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகன் தனிச் சந்நிதிகொண்டு அருள்பாலிக்கிறார். செங்கோட்டு வேலவரின் மீது தணியாத பக்திகொண்டவர் குணசீலர்.

ஒருமுறை திருச்செங்கோட்டுக்கு ப்ரிதிவாட்டி பயங்கரன் என்கிற பாண்டிப்புலவரேறு என்ற அறிஞர் ஒருவர் வருகை புரிந்தார். இவரை வாதில் வெல்வது என்பது முடியாத காரியம். கல்வியில் இமயமான இவரை எதிர்த்து, எல்லாப் பகுதி புலவர்களும் தோற்றனர். அவர், தன்னை எதிர்க்க திருச்செங்கோட்டில் யாருமே இல்லை என்ற நிலையில் கோயிலுக்கு வந்தார். அங்குதான்,
முருகன் சன்னதியில் குணசீலரை சந்தித்தார்.

இருவரும் சாதரணமாக பேசிக்கொண்டு இருக்கும் போது பேச்சு முற்றி வாதமாக மாறியது. வாதம் சவாலாக மாறியது. குணசீலரை இந்த கோவிலிலேயே நாளை போட்டிக்கு வர அழைப்பு விடுத்தார் பாண்டிப்புலவரேறு. இது என்ன சோதனை என்று குணசீலன் இரவெல்லாம் பதறிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை, போட்டிக்காக பாண்டிப்புலவரேறு மலையின்மீது ஏறிக்கொண்டிருக்கும்போது, நாத மலையைப் பார்த்து “இது சர்ப்ப சைலம் என்றால் ஏன் படமெடுத்து ஆடவில்லை என்று பொருள் வரும்படிப் பாடினார்.

“சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” என்று பாடிக் கொண்டு இருக்கும் போது அந்தப் பாடலை முடிக்க முடியாமல் திணறினார். எத்தனை யோசித்தும் அடுத்த ஆதி வரவே இல்லை.

அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் உடனே, “அது, குமரன் திருமருகன் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” என்று பாடி வியக்கவைத்தான். ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இத்தனை அறிவா என வியந்து,அவனைப் பார்த்து யாரப்பா நீ என கேட்க, அவனோ, தான் குணசீலரின் கடைமாணாக்கன் என்று சொன்னான். பாண்டிப்புலவரேறு புலவருக்கு. வந்திருப்பது முருகன் என்றும், அவனது அருளைப்பெற்ற குணசீலரை எதிர்ப்பது ஆபத்து என்று உணர்ந்தார்.

குணசீலரிடம் மன்னிப்பு கேட்டு, செங்கோட்டு வேலவரை வணங்கி விடைபெற்றார்
அந்தப் புலவர். மலை அடிவாரத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றும் வைகாசிப் பெருவிழாவில் அந்தச் சம்பவம் நினைவு கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.