Categories
Other Temples

திருவிடைகழி – ஸ்ரீ  சுப்ரணியர் முருகன்  கோயில்

கோயில் பெயர்:

ஸ்ரீ  சுப்ரணியர் முருகன்  கோயில்

தோற்றம் காலம்:

1500 ஆண்டுகளுக்கு முன்பு

தெய்வத்தின் பெயர்

மூலவர்: சுப்ரமணியர்

அம்பாள்: தெய்வானை

ஸ்தல விருக்ஷம் :குரா

ஸ்தல வரலாறு:

வேண்டுவதை செய்திடும் சுப்ரமணியர் குரா மரத்தின் அடியில் காலார நடந்தும் சிவனை நோக்கி தவம் இருந்ததும் இங்கேதான்.திருகடையூருக்கு செல்பவர்கள்   கண்டிப்பாக போக வேண்டிய தலம் .

முருகன் சூரபத்மனை  வதம் செய்தபின் அவன் மகன் இரண்யன் சுறா வடிவமெடுத்து  தரங்கம்பாடி கடலில் மீன்களுடன் இருக்க அம்பிகையின் உதவியுடன் அவனை வதம் செய்தான். இதனால்  தன் மீதான சாபம் தீர ஈசனை நோக்கி தவம் செய்த இடம் இந்த திருக்கோவில்.  தவத்திற்குபின் தோன்றிய ஈசன், முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் தலம்.

இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது. முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை. இம்மை, மறுமை மற்றும் முக்தி ஆகிய மூன்று நலன்களையும் தந்தருளும் முருகப் பெருமான் பாலசுப்ரமணியராக எழுந்தருளியுள்ளார். அவர் திருமுன் ஸ்படிக லிங்கமும் உள்ளது. சிவபெருமான், தம்மை குரா மரத்தடியில் பூஜித்த தம் குமாரர் முருகக் கடவுளைத் தம் வடிவாகவே இத்தலத்தில் விளங்கச் செய்ததாக புராணம் கூறுகிறது.

முருகப்பெருமான் ஒரு திருமுகம், இரு திருக்கரங்களுடன் ஒரு கரம் அபயமருள, மற்றொன்றை இடுப்பில் ஊன்றிய நிலையில் நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். இந்த தளத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு, இங்குதான் தெய்வானைக்கும் முருகப்பெருமானுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாம். இதற்கு சான்றுபோல் தெய்வானை சந்நிதியில் உள்ள அவரின் சிலையில் முகம் முருகப்பெருமானை நோக்கி சற்றே நாணத்துடன் தலை சாய்த்து இருப்பதுபோல் காணப்படுகிறது.  இத்தளத்தின் தல விருட்சம் குரா மரம், சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கு அமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது

இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது. முருகப்பெருமானின் தவத்திற்கு பின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் தலம். முருகனின் 16 வகை கோலங்களில் நான்காம் கோலம் சுப்ரணியர். சுப்ரமணியராக இக் கோவிலில் அருள்பாலிக்கிறார்.   தமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கென்று உள்ளத் திருத்தலங்களில் குரா மரத்தினைக் தன்னகத்தே தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைகழி மிக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.

இரண்டு தல விருட்சம் ,கருவறையில் இரண்டு பெருமான், இரண்டு கோபுரம், இரண்டு சண்டிகேஸ்வரர் என்று இரண்டிரண்டாக காணப்படுவது மிக்கச் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கே யோக சுப்பிரமணியர் என்றத் திருநாமத்துடன் முருகர் சிவ பெருமானை பூஜித்தார். தைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது!

திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர். அருணகிரிநாதரால் சம்ர்த்தனாகிய முருகன் எழிலுற பாடப்பட்ட அழகிய திருத்தலம் திருவிடைக்கழி..

தல விருட்சம் இரண்டு:

திருக்கோவில் தல விருட்சங்களில் மிகவும் அபூர்வமான ஒன்று குரா மரமாகும். மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் இம்மரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று..

முருகனை, ராகுபகவான் வழிபட்ட தலமாகும். “குரா” என்பதைத் திரும்பி படித்தால் ராகு என்பது விளங்கும். ராகு தோஷத்தால் பீடிக்கப்பட்டு களத்ர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, தோஷம் நீங்கப் பெறலாம். குன்றிருக்கும் இடம் மட்டும் குமரன் இருக்கும் இடமல்ல, குரா மரம் இருக்கும் இடமும் குமரன் இருக்கும் இடமே. ஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம்  அமைந்துள்ளது. குரா மரத்தின் இலைகளுக்கு விஷமுறிவு சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. குரா மரத்தின் மலரைப் போற்றாத சமய இலக்கியமே இல்லை எனலாம். குராமரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஒரேத் திருத் தலம் திருவிடைக்கழி ஆகும்.இம்மலரில் முருகனது திருப்பாதம் ஒளிந்து உள்ளது என்று திருப்புகழில் அருணகிரி நாதர் போற்றி உள்ளார். “சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி இருக்கு வேந்தனும் இமையவர் பரவிய திருக்குராவடி நிழல்தனில் உலவியப் பெருமானே”

வெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது வடக்கே குரா மரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது..மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் குராமரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று. இங்கே இதனருகேயே மகிழ மரம் ஒன்று இருக்கிறது.இது இத்தலத்தில் உள்ள பாபநாச பெருமானுக்குறிய தலவிருட்சமாகும். திருமணத்தடை நீக்கி திருமணம் கைகூட நிகழ்த்தபடும் வழிபாடுகள் மூலம் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்பது சத்தியம். முருகனின் 16 வகை கோலங்களில் நான்காம் கோலம் சுப்ரணியர் இக் கோவிலில் உள்ளவர்.

முருகனின் 16 வகை கோலங்கள்

 1. 1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

 1. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
 2. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
 3. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

 1. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.
 1. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
 2. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
 3. தாரகாரி : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.
 4. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.
 5. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.
 6. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
 7. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.
 8. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி,7 திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.
 9. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

பாதை:

கும்பகோணத்தில் இருந்து 52km.கும்பகோணத்தில் இருந்து திருவிடைமருதூர் ஆடுதுறை மங்கைநல்லூர்  சங்கரன்பந்தல் வழியாக  திருவிடைக்கழி சென்றடையலாம். திருகடையூரில் இருந்து 6km. தரங்கம்பாடியில் இருந்து 11km.

கோயில் நேரம்:

காலை 6 முதல் 12 வரை.மாலை 4 முதல் 8 மணிவரை கோவில் திறந்திருக்கும்

கோயில் தொலைபேசி எண்:

+91 9566623777, +91 4364 204888 / 204444,

கோயில் முகவரி:

ஸ்ரீ  சுப்ரணியர் முருகன்  கோயில்

திருவிடைக்கழி போஸ்ட்,

தரங்கம்பாடி தாலுகா,

போராயர்,

நாகப்பட்டினம் – 609310

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.