Categories
Library Library

முசுகுந்த சக்ரவர்த்தி

மஹாபாரதம், விஷ்ணு புராணம், கந்தபுராணம் போன்ற புராணங்களிலும் சிலப்பதிகாரம், திருவாலங்காடு செப்பேடு போன்றவைகளாலும் முசுகுந்த சக்ரவர்த்தி சோழகுலத்தின் முன்னோடி என அறியப்படுகிறார். விதூமன் என்ற கந்தர்வன், பிரம்மாவை கேலி பேசியதால் குரங்காக ஆக சாபம் கொடுத்தார்.வில்வ மரங்களில் முசுவின் (குரங்குக்) கூட்டங்கள் தங்கியிருந்தன. அவற்றில் வயது முதிர்ந்த ஆண் முசு (குரங்கு) ஒன்று, வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே அமர்ந்திருந்த பார்வதி – பரமேஸ்வரர் மீது போட்டுக் கொண்டிருந்தது.குரங்கின் அந்தச் செயல் தனக்கு அர்ச்சனை செய்வதுபோல் உணர்ந்த ஈசன், அந்த குரங்குக்கு அருள்புரிய திருவுள்ளம் கொண்டார்.

அவர் குரங்கைப் பார்த்து, ”தெரிந்தோ தெரியாமலோ நீ என் மீது வில்வதளங்களைப் பறித்துப் போட்டது என்னை அர்ச்சித்து வழிபடுவதுபோல் உணர்ந்தோம். நீ அடுத்த பிறவியில் சோழர் குலத்தில் மாந்தாதாவின் மகனாகப் பிறந்து சக்கரவர்த்தியாகத் திகழ்வாய்” என்று ஆசிர்வதித்தார். தனக்கு சிவபக்தி என்றும் நிலைத்திருப்பதற்கு தன்னுடைய முகம் மட்டும் குரங்கின் முகமாகவே இருக்கவேண்டும் என்று அந்தக் குரங்கு கேட்டுக்கொள்ளவே, சிவபெருமானும் அப்படியே அருள்புரிந்தார்.அந்தக் குரங்கு சோழகுலத்தில் பிறந்து முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் பெயருடன் திருவாரூரை ஆட்சி செய்தார்.

இந்நிலையில், சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்து, தேவர் பதியை மீட்ட செய்தி முசுகுந்தனுக்கு எட்டியது. கந்தவேளுக்கு, இந்திரன் தன் மகள் தேவசேனாவை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுக்க இருக்கும் செய்தியையும் இந்திர தூதர்கள் முசுகுந்தரிடம் தெரிவித்தனர்.திருப்பரங்குன்றத்தில்
இந்திரன்-இந்திராணி மற்றும் தேவர்களைக் கண்டு வணங்கினார் முசுகுந்தர்.பிரம்மன் திருமணச் சடங்குகளைச் செய்ய, தெய்வானைக்கு திருமுருகன் மங்கலநாண் பூட்டினார். பிறகு அந்தத் தம்பதி, சிவ – பார்வதியை வணங்கி ஆசி பெற்றனர். முருக பக்தரான முசுகுந்தரும் கந்தனை துதித்து வாழ்த்திய பிறகு
ஊர் திரும்பியவுடன் முசுகுந்தரும் முருகனை நோக்கி தவம் இருந்து முருகனிடம் இருந்து வரம் பெற்று முருகனின் சேனை வீரர்கள் ( பத்மாசுரன் எனும் சூர பத்மனை வென்ற படை) தனக்குச் சேனையாக கேட்டுப் பெற்றிருந்தார். மானுடனாக வந்த வீரபாகு புஷ்பகந்தி என்பவளை மணந்து இல்லறம் நடத்தினார். தான் பெற்ற சித்ரவல்லி என்ற பெண்ணை முசுகுந்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

அவருக்கு குழந்தை வரம் வேண்டி திருவாவடுதுறை சென்று மாசிலாமணியை வேண்ட வேண்டி அசரரி வாக்காக சொல்ல கோமுக்தி தீர்த்ததில் நீராடி மாசிலாமணி தெய்வத்தை வணங்கி எட்டு குழந்தைகளை பெற்றெடுத்தார்.முசுகுந்த சேனையை யாரும் வெல்ல இயலாததாய் இருந்தது.,அவனது நாட்டை நன்றாக விரிவுபடுத்தி நன்கு ஆண்டு வந்தான்.,வலாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கு மிக்க துன்பம் கொடுத்ததுடன், இந்திரனை போரில் வென்றான். இதனால் வானுலகை விட்டு இந்திரன் பூமிக்கு வந்தான். இதையறிந்த முசுகுந்தன் முருகப் பெருமானின் பெருஞ்சேனையுடன் சென்று வலாசுரனை அழித்து, கற்பக நாட்டை மீட்டு இந்திரனுக்கு அளித்தார்.

தனக்கு உதவி செய்த முசுகுந்தனை பாராட்டிய இந்திரன், ‘உனக்கு தேவையானதைக் கேள். உடனே தருகிறேன்’ என்றான்.முசுகுந்தன், ‘மயன் உனக்கு அளித்த தியாகேசமூர்த்தியை எனக்கு தர வேண்டும்’ என கேட்டார். இந்திரனுக்காக முசுகுந்த மன்னர். உணவு, தூக்கம் இன்றி நீண்ட காலம் போரிட்டதால் முசுகுந்தர் பெரும் களைப்பில் ஆழ்ந்தார்.இந்திரனிடம் மற்றொரு வரத்தையும்
வேண்டினார் தான் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்றும், தன்னை யாராவது எழுப்பினால், அது யாராக இருந்தாலும் அவர் என் பார்வை பட்டதும் எரிந்து சாம்பலாக வேண்டும் என்றும் வரம் கேட்டார். இந்திரனும் சிரித்தவாறே அப்படியே வரம் அளித்தார்.உடனே மயனை அழைத்து, உண்மையான தியாகேச மூர்த்தி போலவே ஒரு திருமேனி செய்து முசுகுந்தரிடம் கொடுக்க இந்த திருமேனி தாங்கள் வணங்குவது இல்லை என சொல்ல

இவ்வாறு ஆறுமுறை நடந்தது.,பின்னர் கடைசியில் ஏழாவதாக .,தன்னிடம் இருந்த தான் வணங்கிய லிங்கத் திருமேனியை கொடுத்தான் இந்திரன் .,இந்த லிங்கத்திருமேனியே தாங்கள் வணங்குவது என சொன்னவுடன் சப்த லிங்கங்களையும் முசுகுந்தரிடமே கொடுத்தார் இந்திரன்.சப்த விடங்கேசுவரையும் பெற்றுக்கொண்ட முசுகுந்தன், அவற்றைத் தேர் மேல் வைத்து பூமிக்கு கொண்டு வந்தார். பின்னர் திருநாகைக்காரோணம், திருக்ககோளிலி, திருவாய்மூர், வேதாரண்யம், திருநள்ளாறு, திருகாரவாயில் ஆகிய ஆறு இடங்களில் கோவில் அமைத்து எழுந்தருளச் செய்தார்.

பின்னர் வீதி விடங்கதியாகேசரை திருவாரூரில் பொற்கோவில் உருவாக்கி இறைவியோடும், பீடத்தில் எழுந்தருள செய்தார்.ஆழ்ந்து தூங்க வேண்டும் என எண்ணம் கொண்டுமுசுகுந்தர் துவாரகை அருகே இருந்த ஒரு குகையில் சென்று படுத்து உறங்கினார். காலம் உருண்டோடியது. பரந்தாமன் கண்ணபிரான் அவதாரம் எடுத்தார்.

கண்ணன் தனது குடிமக்களாகிய மதுராவாசிகளை சமுத்திர அரசனிடம் கேட்டு வாங்கிய பன்னிரண்டு யோசனை பரப்பளவு உள்ள இடத்தில் துவாரகையை உருவாக்கி குடியேற்றினார். யாதவர்கள் ஒருமுறை கார்க்கியர் என்னும் யோகியை அவமதித்து விட்டனர்.

இதனால் கோபம் கொண்ட அவர், யாதவர்களை ஒழிக்க காலயவனன் என்ற மகனைப் பெற்றார். காலயவனன் எந்த ஆயுதத்தாலும், இந்த யுகத்தில் பிறந்த யாராலும் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தோடு பிறந்தான். பெரும் அசுரன் போன்று வளர்ந்த காலயவனன் அதர்மமே வடிவாக இருந்தான். சொல்லொணாத கொடுமைகளை எல்லாருக்கும் செய்து வந்தான். தனக்கு யாருமே எதிரிகள் இல்லை என்று எண்ணி இருந்த காலயவனனை ஒழிக்க நினைத்த நாரதர் காலயவனனிடம் சென்று கண்ணனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, கண்ணனை எதிர்க்கும்படி தூண்டி விட்டார். கண்ணனை எதிர்க்க பெரும்படை கொண்டு சென்றான் காலயவனன். அவனைக் கண்டதும் கால் தெறிக்க ஓடினார் கண்ண பரமாத்மா. அனைத்து உயிர்களையும் காத்து ரட்சிக்கும் பரம்பொருள் இப்படி ஓடியது யாதவ படையினருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. வேகமாக ஓடிய கண்ணபெருமான், முசுகுந்தர் படுத்து இருந்த குகைக்குள் ஓடி ஒளிந்தார்.

பின்னாலேயே தொடர்ந்து வந்து நுழைந்த காலயவனன், அங்கே இருட்டில் படுத்து இருந்த உருவத்தை எட்டி உதைத்து எழுப்பினான். கிருஷ்ணர்தான் படுத்து இருக்கிறார் என்று எண்ணியவனுக்கு ஆச்சரியம், எழுந்தவர் ஒரு யோகியைப் போல இருந்தார். எழுந்த வேகத்தில் கோபத்தில் கண்ணைத் திறந்த முசுகுந்த சக்ரவர்த்தியின் பார்வை பட்டதுமே காலயவனன் எரிந்து சாம்பலானான். என்ன நடந்தது என்று புரியாமல் முசுகுந்தர் விழிக்க, ஸ்ரீ கிருஷ்ணர் எதிரே வந்தார்.

சிரித்தபடியே நடந்தைக் கூறி, அவன் பெற்ற வரத்தின் படி தான் அவனைக் கொல்லமுடியாது என்றும், சென்ற யுகம் முதலே உறக்கத்தில் இருக்கும் நீங்களே அவனைக் கொல்ல முடியும் என்பதால்தான் இந்த நாடகம் என்று கூறிச் சிரித்தார். கிருஷ்ணபரமாத்மாவை மனம் குளிர தரிசித்த முசுகுந்த சக்கரவர்த்தி அளவற்ற ஆனந்தம் கொண்டார்.

”கண்ணா, தங்களை தரிசித்த இந்த எளியோன் இனி இந்த புவியில் இருக்க ஆசைப்படவில்லை. தங்களோடு இனி என்றென்றும் இருக்க வேண்டும், அதுவும் தாங்களே என்னை எப்போதும் தாங்கி இருக்க வேண்டும் என்றும் வரம் கேட்டார். கேட்டவருக்கு இல்லை என்று கூறாமல் வரங்களை அளிக்கும் வரதனான கண்ணன் அப்படியே கொடுத்தார். ஆம், முசுகுந்த சக்ரவர்த்தி ஓர் அழகிய தாமரை மலராக வடிவெடுத்தார். கண்ணன் அவரை தமது திருக்கரத்தில் தாங்கிக் கொண்டார்.

Categories
Library Library

பொன்னனையாள்

மதுரை திருப்புவனம் கோவிலில் பல கன்னிகையர் பணிபுரிந்து வந்தனர். அதில் தேவர் அடியார்களாகவும் பல கன்னிகையர் பணிபுரிந்து வந்தனர். பொன்னனையாள் என்ற பெண்ணும் அங்கு பணியாற்றி வந்தாள்.அவள் இறைவன் மீது அளவற்ற பற்றுக் கொண்டவள். பெண்களே பொறாமை கொள்ளும் அழகான பொன்னனையாள்
பாடிக் கொண்டே நடனம் ஆடுவதில் திறமைசாலியாகவும் அனுபவமிக்கவளாகவும் இருந்தாள்.

பொன்னனையாள் தினமும் அதிகாலையில் எழுந்து சலசலத்து ஓடும் வைகையில், தனது தோழியரோடு நீராடிவிட்டு தியானத்தில் ஈடுபடுவாள். சிவனை தியானித்தப்பின் சிவ பூஜை செய்வாள். அது முடிந்ததும் நேராக திருப்புவன நாதனை வணங்கி, ஒரு தேவ நடனம் ஆடுவாள். திருத்தமான அந்த நடனத்தில் எந்தக்குறையும் கண்டுபிடிக்க முடியாது. நடனத்தாலே இறைவனை தொழுது முடிப்பாள்.அதன்பின் தோழிகள் புடைசூழ வீட்டிற்கு வந்து தன் இல்லம் தேடி வரும் சிவனடியார்களுக்கு உணவு படைப்பதற்காக சமையல் வேலையைத் தொடங்குவாள்.

சிவனடியார்களை சிவன் என்றே நினைத்து பாவிப்பாள். அவர்களை மனம் மலர வரவேற்று உணவுப் படைப்பாள். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு எஞ்சியிருக்கும் உணவை தேவமிர்தமாக உண்டு பசியாறுவாள்.சிவனையே நினைத்து வாழ்ந்தவளுக்கு ஓர் ஆசையும் உண்டு அது திருப்புவனம் கோவிலுக்கு சிவபெருமானின் உற்சவ சிலையை செய்து அளிக்க வேண்டும் என்பதே.நடனம் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் சிவனடியார்களுக்கு உணவு அளிக்க செலவானது. எவ்வளவு முயன்றும் பணத்தை சேமிக்க முடியவில்லை. அவளது சிலை வடிக்கும் ஆசைமட்டும் தினம் தினம் வளர்ந்துகொண்டே இருந்தது.

ஓர் நாள் வழக்கம் போல பல சிவனடியார்கள் உணவு உண்டு செல்ல ஒரேயொரு சிவனடியார் மட்டும் உணவருந்தாமல் யாரிடமும் பேசாமல் தனித்து நின்றிருந்தார்.மற்ற சிவனடியார்களை விட மகாஞானம் பொருந்தியவராகவும் தெய்வாம்சம் நிறைந்தவராகவும் இருந்தார். பொன்னனையாள் தோழிகள் தனியாக நின்றிருந்த சிவனடியாரிடம் “தாங்கள் மட்டும் உணவு உட்கொள்ள வரமால் தனித்து நிற்கிறீர்களே எங்களின் உபசரிப்பில் ஏதாவது குறையிருந்தால் தாங்கள் பொறுத்து, உணவு உட்கொள்ள வீட்டினுள் வர வேண்டும்!” என்று வேண்டினாள்..அதற்கு அந்த சித்தர் மென்மையாக சிரித்தார். எனக்கு பொன்னனையாள் வேண்டும் அவளை இங்கே வரச்சொல்லுங்கள் என்றார்.சித்தரின் பேச்சு தோழிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் நேராக பொன்னனையாளிடம் சென்று
ஓர் சிவனடியார் உணவு உண்ணாமல் வீட்டினுள் வராமல் வெளியே இருப்பதை தெரிவித்தனர்.சித்தர் திருமேனியின் அழகும் வனப்பும் கண்டு மதிமயங்கிய பொன்னனையாள்
பேச வார்த்தையின்றி சித்தர் முன் நின்றாள். பின் சுதாரித்துக் கொண்டு சித்தருக்கு ஆசனம் கொண்டு வந்து கொடுத்து அமரச் சொன்னாள்.திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தாள்.“ தாங்கள் இங்கு எழுந்தருள நாங்கள் என்ன தவம் செய்தோமோ அறியோம்!” என்று கூறி கைக்கூப்பித் தொழுதாள். சித்தரின் அன்புவலையில் பொன்னனையாள் அகப்பட்டாள்.“பெருமானே! எனது வீட்டின் உள்ளே தாங்கள் எழுந்தருள வேண்டும். தங்களின் திருவுள்ளத்திங்கு ஏற்றவாறு தொண்டுபுரிய காத்திருக்கிறேன்” என்று அன்போடு அழைத்தாள். சித்தரும் அவள் அழைப்பை ஏற்று வீட்டிற்குள் வந்தார்.வீட்டிற்குள் வந்த சித்தர் “பொன்னனையாளே ஏன் உன் முகம் வாட்டத்துடனே இருக்கிறது. என்ன காரணமாக இருந்தாலும் என்னிடம் மறைக்காமல் சொல்! என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்..!” என்றார்.சித்தரின் திருவடிகளை வணங்கி
“பெருமானே, என் மனதினுள் நீண்ட நாளைய ஆசை ஒன்று இருக்கிறது. அது சிவபெருமானின் உற்சவர் சிலையை உருவாக்க வேண்டும் என்பதே. ஆனால் எனக்கு வரும் பொருளெல்லாம் மிச்சமில்லாமல் செலவாகிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்கையில் என் ஆசை நிறாசையாய் ஆகிவிடுமோ என்ற எண்ணம் நாளும் என்னை வாட்டி வதைக்கிறது” என்று கூறிமுடித்தாள்.

. “பெண்ணே! நீ அறிவில் சிறந்தவள். இந்த சிறு வயதிலே யாக்கையும் இளமையும் செல்வமும் நிலையில்லாதவை என்று உணர்ந்து வைத்திருக்கிறாய். தர்மம் மட்டுமே நிலையானது என்பதை புரிந்து கொண்டுள்ளாய் தருமங்களுள் சிவதர்மமே சிறந்தது என்றும். அந்த சிவதர்மத்துள்ளும் சிவபூஜையே உயர்ந்தது என்று உணர்ந்து அதற்கேற்ப மகேஸ்வர பூஜை செய்து வருகிறாய். இத்தனையும் உன்னுள் இருப்பதால் நீ இந்தப் பிறவியின் பயனையும் மறுமைப் பயனையும் பெற்றுக்கொண்டாய். அதனால் உன் ஆசை நிறைவேறும் பொன்னனையாள் என்ற உன் பெயருக்கு ஏற்றபடி அழிவில்லாத இறைவன் திருவுருவைப் பொன்னால் செய்யப் பெறுவாயாக. இப்போதே உன் வீட்டில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் இங்கு கொண்டு வா” என்று கூறினார்.சித்தரின் கட்டளைக்கு இணங்கி வெள்ளி செம்பு பித்தளை ஈயம் இரும்பு என்று வீட்டில் இருந்த அத்தனைப் பொருட்களையும் கொண்டுவந்து சித்தர் முன் வைத்தாள். தனது விபூதிப் பைக்குள் இருக்கும் திருநீறை எடுத்து பாத்திரங்கள் மீது தூவிய சித்தர் “இவையெல்லாம் பொன்னாக மாறுக!” என்றார்.பிறகு பொன்னனையாளிடம் “இந்த பாத்திரங்களை எல்லாம் இன்றிரவே நெருப்பிலிடு. நெருப்பு பட்டவுடனே இவைகள் பொன்னாக மாறிவிடும். பிறகு இறைவனின் திருவுருவை வார்ப்பித்து உன் ஆசையை நிறைவேற்றுவாயாக!” என்று ஆசிர்வதித்தார்.

“சுவாமி! தாங்கள் இன்றைய இரவு இங்கு தங்கி உணவு உண்டு அதன்பின் பொன்னாக்கும் இந்த அற்புதத்தையும் செய்து முடித்துவிட்டு பொழுது விடிந்ததும் தாங்கள் தங்கள் இருப்பிடம் செல்லலாமே!” என்று வேண்டினாள்.“பெண்ணே! சந்நியாசி இரவில் தங்கக் கூடாது”.“சுவாமி! எனக்கு இத்தனை பேருதவி செய்த தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?”“நான் மதுரையில் வசிக்கும் ஒரு சித்தர் வல்லப சித்தன் என் பெயர்” என்று கூறிய சித்தர் அங்கிருந்து மறைந்தார்.சித்தர் கூறியது போலவே பாத்திரங்களை தீயிலிட்டு பொன்னாக மாற்றினாள்.சிற்பி ஒருவரை அழைத்து சிவபெருமானை உற்சவராக செய்ய
சொல்ல பொன்னாக ததும்பிக் கொண்டிருந்த உலோக திரவத்தை எடுத்து எந்த வடிவமும் இல்லாத இறைவனை திருவுருவமாக வார்ப்பித்தான்.சிலை அழகாய் வந்திருந்தது.

சிலையின் அழகில் சொக்கிப் போன பொன்னனையாள் கன்னத்தைக் கிள்ளினாள். பின் கிள்ளிய இடம் வலிக்குமே என்று முத்தமிட்டாள். இந்த சிலையை மதுரை சென்று சித்தரிடம் காட்டி ஆசி வாங்கிய பின்
கோவிலில் சேர்க்கலாம் என முடிவு செய்து மதுரை நகரில் தேடினாள்அனைவரிடமும் கேட்டாள்.
கடைசியாக கோவில் பிரகாரத்தில் பார்த்ததாக சொன்னவுடன் பூ நிறைய வாங்கிக்கொண்டு
மதுரை கோவிலில் சிவ பெருமான் சோமசுந்தரரை தரிசித்து அன்னை மீனாட்சியையும் தரிசித்த பின்
சித்தரை தேடினாள்.சித்தர் துர்க்கை சன்னதி அருகே கண் மூடி தியானத்தில் இருப்பதை கண்டு அவர் முன் அமர்ந்தாள்.கண் விழித்தவரிடம் என்னை தெரிகிறதா சுவாமி என்றாள்

சிரித்தபடியே உன்னையும் அறிவேன்
உன் கையிலுள்ள சிவபெருமானையும் அறிவேன் என்றார் வல்லபசித்தர்.சித்தரை தாங்கள் யார் என்று கேட்க கூடாதே இவர் யார் என எப்படி தெரிந்து கொள்வது என பொன்னனையாள் நினைத்தவுடனேபெண்ணே! என்னைச் சுந்தரானந்தர் என்பார்கள். சிவசித்தர் என்பவர்களும் உண்டு. இந்தக் கோவிலிலில் உள்ளவர்கள் என்னை சுந்தரேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். எனக்கு ஏராளமான நாமங்கள். மதுரையில் சித்தராக மானிடப் பிறவி எடுத்த நான் என்னை வல்லப சித்தன் என அழைத்துக் கொள்கிறேன் என்றார்.பின்னர் பூக்களால் தங்களை அர்ச்சிக்க விரும்புகிறேன் என பொன்னனையாள் சொன்னவுடன் ஆகட்டும் என்றார்.பூவால் பூப்பந்தல் அமைத்து சித்தரை வணங்கிய போது சித்தர்
இல்லாமல் அங்கே அவர் உருவச்சிலை இருந்தது.அசரிரீயாய் திருப்புவனம் கோவிலில் நீ செய்த உற்சவர் சிலை காலம் உள்ள மட்டும் இருக்கும்,
அது உன் புகழை சொல்லும் உன் சிவ தொண்டு தொடரட்டும் பின் என் திருவடிகளை வந்துசேர்வாய்!
என சொன்னவுடன்

சித்தராய் வந்தவர் சிவனான அந்த சோமசுந்தரக் கடவுளே என்பதை உணர்ந்து கொண்ட பொன்னனையாள் இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினாள்.பின்னர் அந்த உற்சவ திருவுருவை திருப்புவனம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து திருவிழாவையும் தேர்விழாவையும் நடத்தினாள்.இன்றைக்கும் திருப்புவனம் சௌந்தரநாயகியம்மாள் புஷ்பனேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவனின் சிலையில் கன்னத்தில் கிள்ளிய வடு இருப்பதைக் காணலாம். சித்தர்களுக்கு எல்லாம் முதன்மை சித்தரான சிவனின் திருவிளையாடல்களில் 36வது திருவிளையாடலாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

Categories
Library Library

ஆதிசங்கரர்

சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தம்.அத்வைதம் என்றால் இரண்டற்ற நிலை என்பது பொருளாகும். அதாவது ஜீவன் வேறு இறைவன் வேறல்ல இரண்டுமே ஒன்று தான். “அஹம் பிரம்மாஸ்மி” நாமே பரபிரம்மம் என்ற உயர்ந்த தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியவர்.கேரளத்திலுள்ள “காலடி” எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதியினருக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் மகனாய் தோன்றினார்.

மூன்று வயதிலேயே தந்தையை இழந்த சங்கரர், தாய் ஆரியாம்பாள் அன்பிலேயே வளர்ந்து வந்தார். தாயிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர், சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.அவரது தாய் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பிய போது, திருமணம் செய்ய மறுத்துத் துறவு மேற்கொள்ளப் போவதாகச் சொன்னார். ஆனால், அவரது தாய் அதற்கு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் ஒருநாள், ஆதிசங்கரர் தன் தாயுடன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது, ஆற்றில் இருந்த முதலை அவரது காலை கவ்வி இழுத்தது. மகனின் நிலையைக் கண்ட தாய், கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தும் சங்கரரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.உடனே சங்கரர் தன் தாயிடம், ‘அம்மா! என்னைத் துறவு செல்லத் தாங்கள் அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும். இல்லையேல் இது என்னை விழுங்கி விடும்’ என்றார். அதைக் கேட்டுப் பயந்து போன அவரது தாய், தன் மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்துத் துறவு செல்ல அனுமதித்தார். முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. அதன் பிறகு துறவு மேற்கொண்ட சங்கரர், தாயின் மேல் கொண்ட அன்பால், அடிக்கடி அவரை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார்.

சங்கரரின் தாய், சிறிது தொலைவிலிருக்கும் பெரியாறு ஆற்றில் தினமும் குளித்து, அங்கிருக்கும் கண்ணனை வழிபட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வயதான காரணத்தால் அந்த வழக்கத்தை கடைப்பிடிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை ஒரு முறை சங்கரரிடம் சொல்லி வருந்தினார்.அதைக் கேட்ட சங்கரர், கண்ணனை நினைத்து வணங்கினார். அப்போது, ‘குழந்தையே! நீ காலடி எடுத்து வைக்கும் இடத்திற்குப் பெரியாறு தேடி வரும்’ என்று அசரீரி கேட்டது. அதனைக் கேட்ட சங்கரரும் தனது காலடியை எடுத்து வைக்க,காலடி எடுத்து வைக்க வைக்க ஆறு அந்த பெரியாறு தன் போக்கில் மாறுபட்டு

பெரியாறு சங்கரரின் தாயிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதுவரை ‘சசலம்’ என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமம், அதன் பிறகு ‘காலடி’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பெரியாற்றிலிருந்து பிரிந்து வந்த அந்த ஆறு ‘பூர்ணா ஆறு’ என்று அழைக்கப்படுகிறது.சங்கரர் தாயின் விருப்பத்திற்கேற்ப அவர் வழிபடுவதற்காக அங்கு கண்ணனுக்கு ஒரு கோவிலைக் கட்டி, அதில் கண்ணன் சிலையையும் நிறுவினார். ஆதிசங்கரர் நிறுவிய இந்தக் கோவில் தற்போது ‘திருக்காலடியப்பன் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.காஞ்சி மடத்தில் புகழ்பெற்ற புவியியலாளர் (ஜியோலஜிஸ்ட்) ஒருவர் மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற வேண்டும் என்று ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்துக்கு வந்தார்.அவரிடம் மகாபெரியவா
எனக்கு ஓர் உபகாரம் செய்ய முடியுமா என கேட்டார்.
ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தை கண்டறிய நான் சொல்வதை செய்ய வேண்டும் என்றார்.

பூர்ணா நதிலேர்ந்து நான் சொல்ற ரெண்டு எடத்துல மண்ணு சாம்பிள் எடுத்துக்கோ. அது ரெண்டையும் டெஸ்ட் பண்ணி, எத்தனை காலத்துக்கு முந்தைய மண்ணுன்னு சொல்லணும்.’’
முதலில் பூர்ணா நதி காலடிக்கு முன் உள்ள ஊரில் பெரியாரில் கொஞ்சம் மண்ணையும் காலடிக்குள் ஆதி சங்கரர் வாழ்ந்த வீட்டிற்கு அருகே உள்ள பூர்ணா ஆற்றில் உள்ள மணல் இரண்டின் வயதை கார்பன் டேட்டிங் முலம் கண்டறிந்து வரச்சொன்னார் அந்த புவியியலாளர் ஆராய்ச்சி முடிவில் ஆற்றின் வயது அதாவது காலடி முன் உள்ள ஊரில் உள்ள மண்ணின் வயது அதவாது பெரியாரின் வயது ஒரு இலட்சம் என்றும் காலடியில் ஆதி சங்கரர் வீட்டின் அருகே கிடைத்த பூர்ணா நதியின் மண்ணின் வயது 2500 என்றும் சொன்னார்.

ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு என்றும், அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-ஆம் ஆண்டு
என்றும் பெரியவா சொன்னார்.ஆதி சங்கரர் இந்து மதத்தில் இருந்த வேற்றுமைகளை, நீக்குவதற்கு, தனித்தனி பெயர்கள் கொண்ட தெய்வங்கள் காணினும், முடிவில் எல்லாம் ஒன்றே என்னும் எண்ணத்தினை மக்களிடையே பரப்பினார்.

ஆறு மதங்களை கைகொள்ளச் செய்தார். அதனால் இவருக்கு ‘ஷண்மத ஸ்தாபனாச்சாரியார்’ என்கிற திருநாமமும் உண்டு. அவை,
ஞானத்திற்கு, சிவன் – சைவம்.
ஐஸ்வர்யத்திற்கு, விஷ்ணு – வைணவம் .
சக்திக்கு, அம்பிகை – சாக்தம்.
பலத்திற்கு, கணபதி – காணாபத்யம்.
வீரியத்திற்கு, முருகர் – கௌமாரம்.
தேஜஸ்ஸிற்கு, சூரியன் – சௌரம்.

ஆகியவை ஆகும்.

அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர்.அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவதுபோல், ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும்போது, எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர், நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர், அவரை வழியைவிட்டு விலகிப் போகச்சொல்கிறார்.எதிரில் வந்தவர், ‘நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும், தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே?

அது தன் இயல்பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம்தானே? அப்படி இருக்கும்போது, என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம்தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார்.ஆதிசங்கரருக்கு அப்போதுதான் புரிந்தது, தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே, அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அதுதான் மனீஷா பஞ்சகம்.

ஆதிசங்கரர் வகுத்து கொடுத்துள்ள நெறிப்படி இந்த
ஸ்ரீ சக்கர வழிபாடு நடத்தப்படுகிறது.அம்பாளை 64 உபகாரங்களை அளித்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டின் போது ஸ்ரீ சக்கர சிம்மாசனத்தில் அன்னை எழுந்தருளி இருப்பதாக பாவித்து பூஜிப்பது நல்லது.யந்திரத்தின் நடுவில் பிந்துவில் அம்பிகையை எழுந்தருளச்செய்து, அவளது பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி ஒவ்வொரு கோணங்களிலும் எழுந்தருளி இருப்பதாக பாவித்து வழிபடுவதே ஸ்ரீசக்கர பூஜையாகும்.ஆதிசங்கரர் நிறுவியது போன்று தற்போது பல பல அம்பிகை தலங்களில் ஸ்ரீசக்கர வழிபாடு நடத்தப்படுகிறது.

ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி மதில்களாகவும் கோட்டைகளாகவும் 44 வரிசைகளை பாவனையுடன் பூஜிக்க வேண்டும். இதுவே ஸ்ரீசக்கர பூஜையின் முதன்மையான அம்சமாக சொல்லப்படுகிறது.ஸ்ரீ சக்கர வழிபாடுக்கு “ வித்யோபாகனை” என்ற பெயரும் உண்டு. ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீ சக்கரத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அவற்றில் கணித அறிவும், விஞ்ஞான உணர்வும் நிரம்பி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

சக்கரங்கள் அனைத்துக்கும் ஸ்ரீ சக்கரமே ராஜாவாக கருதப்படுகிறது. எனவே ஸ்ரீ சக்கரத்தை “ சக்ரராஜம்“ என்று போற்றுகிறார்கள்.யந்திரங்களில் நிறைய எழுத்துக்கள் காணப்படும். ஆனால் சக்கரத்தில் இருப்பது இல்லை.

அத்வைத தத்துவத்தை உலகிற்கு போதித்த அம்மகான், பத்து உபநிஷத்துக்கள், பிரும்ம சூத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றிற்கு விளக்க உரை அளித்துள்ளார். சிவானந்தலஹரி, கோவிந்தாஷ்டகம், விவேக சூடாமணி, ஆத்ம போதம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரமண்ய புஜங்கம் போன்ற இன்னும் பிற நூல்களையும் இயற்றி உள்ளார். தன்னுடைய முப்பத்து இரண்டு அகவைக்குள், ஸ்ரீமத் ஆதி சங்கரர், பாரத தேசம் முழுவதும் பயணித்து,
திருவிடைமருதூர்
ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவிலில்
ஸ்ரீ மூகாம்பாள் பிரதிஷ்டை
ஸ்ரீ சக்கரம் மற்றும்
திருவானைகோவிலில் ஸ்ரீ சக்கரம்
மாங்காடு அம்மன் கோவிலில்
ஸ்ரீ சக்கரம்
திருச்செந்தூர் முருகன் தரிசனம்
விபூதி பிரசாதம்
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். போகாத கோவில் இல்லை.

கிழக்கில், புரியில்,
ஸ்ரீ கோவர்த்தன பீடத்தினையும், மேற்கில், துவாரகையில்,
ஸ்ரீ துவாரகா பீடத்தினையும், தெற்கில், சிருங்கேரியில்,
ஸ்ரீ சாரதா பீடத்தினையும், வடக்கில் ஸ்ரீ ஜோஷி மடத்தினையும் நிறுவினார்,
தன் சீடர்களான ஹஸ்தமாலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.

காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார். ஸ்ரீமத் ஆதி சங்கரரின் சரிதத்தினை, மாதவீய சங்கர விஜயம், கேரளீய சங்கர விஜயம், சங்கர விஜய விலாசம் , குரு ரத்ன மாலிகை, மார்க்கண்டேய சம்ஹிதை போன்ற கிரந்தங்கள், விவரிக்கின்றன. எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும், அவரால் போதிக்கப் பட்ட அத்வைத சித்தாந்தம் இன்னும் மங்காத பொலிவோடு திகழ்கின்றது.

தத்துவம்

பொதுவாக ஆத்மாவைப் பற்றிக் கூறியது. அது பிரம்மம் என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும், ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இவரது தத்துவம் அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது.பிரம்மத்தின் கனவாக, நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் விளங்குகிறது. நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவமாகும். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக இருக்கிறது.

நிரந்தரமான பிரம்மம் முன்னால் இருக்கிறது. பின்னால் இருக்கிறது, வலப்புறத்திலும், இடப்புறத்திலும் மேலும் கீழும் பரவியிருக்கிறது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது.உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றியுள்ளன. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது. தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மம் ஆகும். நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம்.

ஆதிசங்கரர் முக்தி

ஆதி சங்கரர் காஞ்சிக்கு வந்திருந்து சர்வக்ஞா பீடம் என்று மடம் நிறுவியதாகவும் இங்கு மரணமடைந்ததாகவும் அறியப்படுகிறது. பிற மூலங்கள் சங்கரரின் இறப்பு இமாலயத்தில் கேதார்நாத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.ஆதிசங்கரர் ஜெயந்தியானது வைசாக மாதம் சுக்ல பட்ச பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அவருடைய ஜெயந்தி அன்று கூற வேண்டிய ஸ்லோகம்,

‘ஸ்ருதி, ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்’

காஞ்சி மகாபெரியவா ஆதிசங்கரர்
சொன்னவையாக சொன்னது

ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் ..

  1. முதலில் சொன்னது: பகவானுடைய நாமத்தை ஜபி.பகவத் கீதையைப் படி,
  2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய், வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே.
  3. மூன்றாவது விஷயம்: நீ சகவாசம் செய்வதாயிருந்தால் நல்ல மனிதர்கள் சகவாசத்தில் இரு
  4. முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். முடிந்த அளவு, நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நீ இப்படி செய்யவேண்டும், அப்படி செய்யவேண்டும் என்று, நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். உபகாரம் செய்ய வேண்டும்
Categories
Library Library

சிகண்டி முனிவர்

சிகண்டி முனிவர் தேவ ரிஷி என்று புகழப்பட்டவர் ஆவார்.அகத்தியரின் சீடர் இவர்.

தமிழில் புலமை பெற விரும்பி முருகப் பெருமானை வேண்டி நின்றார். முருகனின் அறிவுரைப்படி, அகத்தியரிடம் தமிழைக் கற்றுணர்ந்தார்.ஓர் நாள் தன் சீடர்களுடன் இலங்கையில் உள்ள கதிர்காமத்து முருகனை வழிபட விரும்பி அங்கே சென்றார்.

ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வரும் இக் கோவில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே
தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ளது.

ஆலயத்தை நெருங்கும் வேளையில், ஒரு மதம் பிடித்த யானை அவரைக் கொல்ல வந்தது.ஆனால் கொஞ்சமும் பயம் அற்ற அந்த முருக பக்தரான சிகண்டி முனிவர் சற்றும் பயம் கொள்ளாது, கதிர்காமக்கந்தப் பெருமானை மனத்தில் தியானித்துக் கொண்டு’சடாச்சர’ மந்திரத்தை உச்சரித்து

அங்கிருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஒரு இலையைப் பறித்து, முருகப்பெருமானை தியானித்து, யானையின் மீது வீசினார். (சில கட்டுரையில் வெற்றிலையின் காம்பு என்றும் வருகிறது) அந்த வெற்றிலையானது, வேலாக மாறி யானையை இரண்டாகக் கிழித்தது. அதில் இருந்து தேவலாகத்தைச் சேர்ந்த ஒருவன் வெளிப்பட்டான். அவன் சிகண்டி முனிவரை வணங்கி, “அடியேன் பெயர் ஐராவசு. வியாழ பகவானின் சாபத்தினால் இந்த நிலையை அடைந்தேன். தாங்கள் வீசிய வெற்றிலையாலும், கதிர்காமத்தானின் அருளாலும் என் சாபம் நீங்கி, பழைய வடிவம் கிடைத்தது, நன்றி” என்று கூறி தேவலோகம் சென்றான்.

இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் விதமாக வெற்றிலையை வைத்து ‘பக்திரசக்தி வழிபாடு’ இன்றளவும் இந்த ஆலயத்தில் நடைபெற்று வருகிறது. கோவில் விழாவில் வேலின் நடுவில் முக்கோண பொட்டுடன் வெற்றிலையை வைத்து வீதியுலா வருவார்கள்.வெற்றிலை வேலாக மாறி யானையைத் தாக்கியதை எடுத்துக் காட்டுமுகமாக வெற்றிலையின் நுனி
வேலில் பதிக்கப்பட்டு இருக்கிறது.

மகேந்திர மலை உச்சியில் அந்திப் பொழுதில் கூத்த பிரானாகிய சிவபெருமானும், உமையும் ஆடிய ஆடலை அகத்திய முனிவர் கண்டார். இதனைத் தன் மாணவர்கட்கு உணர்த்தினார். இறைவன் உணர்த்திய கூத்தியலின் இலக்கணத்தைப் பிற்காலத்தவரும் அறிந்திடும் வகையில் சாத்தனார் கூத்தநூல் இயற்றினார்.சிகண்டி முனிவர் எழுதிய இசை நுணுக்கம் சார்பு நூலாக விளங்குகிறது. இலங்கையில் சித்தாண்டி கிராமத்தை உருவாக்கியது சிகண்டி முனிவர் அவரின் சிலையை அங்கே வைத்துள்ளனர்.

Categories
Library Library

நக்கீரர்


“நெற்றிக் கண்ணை திறப்பினும்
குற்றம் குற்றமே”

சங்ககால தமிழ் புலவர் நக்கீரர் பிறந்த ஊர்
திருமங்கலம் ஆலம்பட்டிக்கு அருகில் உள்ள திரளி கிராமம் ஆகும்.கீரம் என்றால் சொல் என்று பொருள்!
நக்கீரர் என்றால் நல்ல இனிய சொற்களையுடையவர் என்று பொருள்.நக்கீரர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.இவர் தன் நாட்டை நன்கு ஆண்டதோடு, தமிழ்க்கவிதைகளைப் புலவர்கள் வழி செவிகுளிரக் கேட்பவர். கந்தவேள் அடியார்க்கு வேண்டுவன செய்யும் பண்பாளர். இவன் தலையாலங்கானத்துப் போரில் பகைவரை வென்றவன்.இவர்,தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர ஆவன செய்தார். இச்சங்கத்தின் தலைமைப் புலவராக புலவர் திலகமான நக்கீரரை இவர் தமிழவையின் தலைமைப் புலவராக்கினார். பல விருதுகள், பல வரிசைகள் தந்து பாண்டியர் இப்பதவியை நக்கீரருக்கு அளித்தார்.

தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இவர் அமர்ந்த நாள் முதல் தமிழுக்கு இழுக்கு நேரும் போதெல்லாம் அதனைத் தடுத்துத் தமிழை இவர் தலைநிமிர வைத்தார்.ஓர் நாள் விறகு வெட்டும் தொழில் செய்யும் ஒருவர் மதுரைத் தமிழ்ச்சங்கம் நாடி வந்தார்.“தமிழறி பெருமாள்”என்ற பெண்மணி தமிழை இகழ்கிறாள். அதுமட்டும் இல்லாமல் தமிழன்றி வேறு மொழி அறியாத என்னைப் பார்த்து “உன்னை எல்லாம் மணக்க ஒரு பெண் தேவையா?”என்றும் கேட்கிறாள்

இதனைக்கேட்ட நக்கீரர் முருகனருள் கொண்டுத் தேர் ஏறினார். உறையூரை அடைந்தார். விறகு வெட்டும் தொழிலில் வல்லவனான அவன் காட்டிய தமிழறிபெருமாள் இல்லத்திற்குச் சென்றார். அங்கு தமிழறிபெருமாள் என்ற பெண்ணுடன் வாதம் புரிந்தார். வெற்றி பெற்றார். பின்பு அவளை விறகு வெட்டும் தொழில் செய்யும் தலைவனுக்கு மணம் முடித்துவைக்கிறார்.

சோழ மண்டல சதகத்தில் நக்கீரரை வென்றவள் தமிழறிபெருமாள் என்ற பெண் என்று குறிக்கப்பெறுகிறது. சோழ மண்டல சதகம் சோழச் சார்புடையது என்பதால் இவ்வாறு புனையப்பெற்றிருக்கலாம்.உறையூருக்கு வந்த நக்கீரர் அப்படியே காவிரியில் நீராடி திருஈங்கோய் மலைக்குச் செல்கிறார்.அம்மலைமீதுள்ள கோயிலுக்குச் சென்று ஈங்கோய் மலை எழுபது என்ற நூலைப் பாடித் தொழுகிறார். இதன் பின்பு அவர் மதுரை மாநகருக்குத் திரும்புகிறார்.திருவள்ளுவர் திருக்குறளை இயற்றித் தமிழ்ச் சங்கத்திற்குக் கொண்டுவந்தார். அவரின் குறளுக்கு ஒரு பாடல் செய்கிறார் நக்கீரர்.

தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால் ஆனா அறம்முதலா அந்நான்கும் – ஏனோர்க்கு ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று

என்பது அப்பாடலாகும்.

இதன் காரணமாக திருவள்ளுவமாலை பாடித் திருக்குறளுக்கு மதிப்பு நல்கியவர் நக்கீரர் என்பது தெரியவருகிறது.

ஒருமுறை நக்கீரர் மதுரையில் பட்டி மண்டபத்தில் புலவர்களுடன் வீற்றிருந்த போது அந்த அவையில் குயக்கொண்டான் என்பான் ஒருவன் இருந்தான். அவன் எழுந்து ‘வடமொழியே உயர்ந்தது என்றும் தமிழ் தாழ்ந்தது என்றும் கூறினான். உடனே கோபம் வந்து விட்டது நக்கீரருக்கு. தமிழ் மொழியைத் தம் உயிரினும் மேலாகக் கருதியவர்

“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி

பரண கபிலரும் வாழி – அரணிய

ஆநந்த வேட்கையான் வேட்கோ குயக்கொண்டான்

ஆநந்தம் சேர்க சிவா ”

என்று பாடினார்.

உடனே அந்தக் குயக்கொண்டான் வீழ்ந்து இறந்து போனான். அவையே அதிர்ந்து போயிற்று.அவை நிதானம் அடைவதற்குச் சற்று நேரம் ஆயிற்று. பின்னர் அவையில் உள்ள ஆன்றோர்கள் நக்கீரரைச் சமாதானப்படுத்தினார்கள்.

“அவன் தமிழை அறிந்தது அவ்வளவுதான். ஏதோ அவனது அறிவின்மையால் உளறிவிட்டான். அதற்காக அவன் இறக்கும்படி பாடியது எங்கள் மனத்தை எல்லாம் பிசைகிறது. எனவே இறக்கும்படி பாடிய நீங்களே அவனை எழுப்பும்படி பாடியருள வேண்டும்.” என்று வேண்டினார்கள்.அமைதியடைந்த நக்கீரர் உடனே

“ ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த

காரியத்தால் காலக்கோள் பட்டானை – சீரிய

அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினால்

செந்தமிழே தீர்க சிவா “

என்று பாடினார். தூங்கியவன் விழித்தெழுந்ததுபோல அவன் எழுந்து கொண்டான்.கீர்த்தியோடு வாழ்ந்த வமிச சேகரனுக்குப் பின் அவன் புதல்வன் வமிச சூடாமணி ஆட்சிப் பொறுப்பேற்றான். முந்தைய மன்னர்களுக்கு அவன் சற்றும் சளைத்தவனல்ல. அவன் தினந்தோறும் செண்பக மலர்களால் இறைவனை பூஜித்ததால் செண்பகப் பாண்டியன் என்ற சிறப்புப் பெயரும் பெற்றான்.

செண்பக பாண்டியனுக்கு ஓர் சந்தேகம்
பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மணம் உண்டா என பல புலவர்களை கேட்டார் சந்தேகம் தீரவில்லை சந்தேகம் தீர்பவர்க்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசரிவித்தார்.தருமி என்ற புலவன் இறைவன் எழுதிக்கொடுத்த பாடலாகிய “கொங்குதேர் வாழ்க்கை”என்ற தொடக்கமுடைய ஒரு பாடலை சங்க மண்டபத்திற்கு எடுத்து வந்தார். வந்தவர் தன் பாடலுக்குப் பொற்கிழி தாருங்கள் என்றார்.

கடைச்சங்கத்தில் இருந்த தமிழ்ப் புலவர்கள் நாற்பத்தொன்பது பேர்களும் பெரும் புலமை பெற்றவர்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கியவர் நக்கீரர்

இப்பாடலை ஆராய்ந்த சங்கப்புலவர்கள் நாற்பத்தொன்பதுபேர், இதனில் பொருள் குற்றம் உள்ளது என்றனர். இதன் காரணமாக வருத்தமுற்ற தருமி மதுரையில் உள்ள சொக்கநாதர் கோயிலில் கிடந்தார். இவரின் வருத்தநிலை கண்டு, சிவபெருமான் வலவராய்த் தோன்றிச் சங்கத்திற்கு எழுந்தருளினார்.வந்தவர் கோபம் தீராமல் யார் எம் பாடலில் குறைகண்டது என்று வினவினார்.நாய்போன்ற யானே பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்றேன் என்றார் நக்கீரர். பெண்கள் தலைமுடிக்கு இயற்கையில் மணம் உள்ளதாக இப்பாடல் குறிப்பது தவறு என்று உரைத்தார் நக்கீரர். இதனைக் கேட்ட வலவர் வானவப் பெண்களின் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையா என்றார்.

அதற்கும் இயற்கையில் மணம் வராது என்றார் நக்கீரர்.மேலும் உலகாளும் நாயகியாம் உமையவள் கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையா என்றார். நக்கீரர் இல்லை என்றார். இதன் காரணமாக வலவர் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர்.நெற்றிக்கண்ணின் சூடு தாங்காமல் அவர் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தார். மயக்கம் தெளிந்து எழுந்தவர் வலவராக வந்த இறைவனைத் துதித்தார்.கோபப்பிரசாதம் என்ற நூலைப்பாடினார். இது கேட்டுக் கோபம் தணிந்தார் சிவபெருமாள். மேலும் அவர் “முன்பு ஒருமுறை இறைவியைப் பழித்தமையால் நான் இந்த விளையாட்டினை நிகழ்த்தினேன். இனி முருகனைத் துதித்து நல்அருள் பெறுவாய்”என்றார்.

இறைவனின் இச்சொல் கேட்டது முதல் முருகனின் அடியவராகி அப்பெருமான் மீது பல அலங்கல்களை நக்கீரர் பாடத் தொடங்கினார். திருவலஞ்சுழியில் மும்மணிக்கோவையைப் பாடினார். திருவேரகம், நடுநாடு, காஞ்சிபுரம் திருத்தணிகை, வடவேங்கடம், கங்கை, காசி, கேதாரம் போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள குமரக்கடவுளைக் கண்டு வணங்கினார். கயிலைக்குச் செல்லவேண்டும் என்பது அவரின் விருப்பம்.

நக்கீரர் தனது புகழ்பெற்ற “திருமுருகாற்றுப்படை’ நூலைப் படைத்ததற்கு ஒரு வரலாறு உண்டு.கற்கிமுகி’ என்று ஒரு பெண்பூதம். சிவபெருமானிடம் அளவற்ற பக்தி உண்டு அந்த பூதத்திற்கு. என்னமாதிரி பக்தி தெரியுமா? சிவபூஜை செய்பவர்கள் அதைச் சரியாகக் கவனத்துடன் செய்யாமல் முறை வழுவிச் செய்தால் உடனே அது அவர்களைத் தூரத்தில் கொண்டுபோய் ஒரு குகைக்குள் அடைத்துப் போட்டு விடும்!

ஆனால் அவர்களுக்கு வேளா வேளைக்கு நல்ல சத்துள்ள சாப்பாடு போட்டு விடும்! அதனால் குகைக்குள் அடைபட்டு கிடக்கும் ஆசாமிகளுக்கு பெரும் மகிழ்ச்சி! எந்த வேலையும் செய்யாமல் சும்மா கிடப்பவர்களுக்கு யார் நேரம் தவறாமல் நல்ல அருமையான சாப்பாடு போட்டு வளர்ப்பார்கள்? ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இந்தப் பூதம் இவர்களுக்குச் சத்தான சாப்பாடு போட்டு இவர்களைக் கொழுக்க வைப்பது எதற்குத் தெரியுமா? சரியாக 1000 பேர் குகைக்குள் கைதிகளாய் வந்து விட்டால் ஒரு சுபயோக சுப தினத்தில் அந்த ஆயிரம் பேரையும் ஒரேயடியாய் விழுங்கித் தன் பசியைத் தீர்த்துக் கொள்ளும்!

அப்போது குகைக் கைதிகளாய் இருந்தவர்கள் 999 பேர். இன்னும் ஒரு நபர் கிடைத்து விட்டால் 1000 பேராகி விடும். அந்த ஒருவருக்காக அந்தப் பூதம் எங்கும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்தது.ஒரு நாள் நக்கீரர் ஓர் ஊரின் குளத்தில் நீராடித் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு குளக்கரையில் அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் “கற்கிமுகி’ என்ற அந்த பூதம் குளக்கரைக்கு அருகில் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் மீது வந்து அமர்ந்து நக்கீரரை பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கிளையை அசைத்து ஓர் இலையை உதிர்த்தது.மரத்திலிருந்து உதிர்ந்த இலை பாதி நீரிலும் பிரதி நிலத்திலுமாய் விழுந்தது. நக்கீரர் இதைப் பார்க்க நேரிட்டது. அதேநேரத்தில் நீரில் விழுந்த பாதி இலை மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி பறவையாகவும் மாறியது! மீன் பறவையை நீரினுள் இழுக்கிறது. பறவை மீனை நிலத்துக்கு இழுக்கிறது! இந்த அதிசயப் போராட்டத்தைப் பார்த்த வியப்பில் நக்கீரர் மனம் சிவபூஜையில் பதியவில்லை! இதைத்தானே பூதம் எதிர்ப்பார்த்தது.ஆயிரமாவது ஆள் அகப்பட்டு விட்டான் என்று அகமகிழ்ந்து

நக்கீரரைத் தூக்கிக் கொண்டு போய் தனது குகையில் அடைத்து விட்டது!சிவபூஜை வழுவியவர்கள் எண்ணிக்கை இந்த நபரோடு ஆயிரம் ஆகிவிட்டது. எல்லோரும் எனக்கு விருந்து படைக்கத் தயாராய் இருங்கள். நான் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்!” என்று அந்தப்பூதம்குளித்து வரக் கிளம்பிற்று!

குகையில் ஏற்கெனவே அடைபட்டுக் கிடந்தவர்கள் எல்லாம் புதிதாய் உள்ளே வந்த நக்கீரரைப் பார்த்து கண்டபடி திட்டினார்கள்! “”மகாபாவி! நீதான் எங்களுக்கு எமனாக வந்து சேர்ந்தாய். நீ மட்டும் வராமல் இருந்தால் அந்தப் பூதம் இன்னும் எத்தனையோ காலம் எங்களுக்கு அருமையாய் சாப்பாடு போட்டு வளர்த்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டாயே! நீ வந்ததால் எண்ணிக்கை ஆயிரம் ஆகிவிட்டது. இப்போது அந்தப் பூதம் நம் எல்லோரையும் ஒரேயடியாய் விழுங்கப் போகிறதே… அய்யோ… அய்யோ!” என்று நக்கீரரைத் திட்டியும் தங்களுக்குள் புலம்பியும் அழுது தீர்த்தார்கள்!

நக்கீரருக்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. அதனால் அவர்களைப் பார்த்து, “”நீங்கள் எவரும் இப்படி பயந்து சாகவேண்டாம். என் அப்பன் முருகப்பெருமான் இருக்கிறான். அவனை மனதார நினைத்து உருகி வேண்டினால் ஒரு கணத்தில் நம் துயரைத் தீர்த்தருள்வான். என்றார்.அந்நேரத்தில் திருமுருகாற்றப்படை என்ற பாடலைப் பாடினார் நக்கீரர். இப்பாடலால் திருமுருகன் எழுந்து வந்தார். தன் கதை ஆயுத்தினால் அப்பூதத்தினைக் கொன்றார் முருகப்பெருமான்.அப்பெருமாளைத் தன் சொற்களால் போற்றியதாகச் சேய்த்தொண்டர் புராணம் பின்வரும் பாடலை அமைக்கிறது.

“ஐய சரணம் சரணம் அமல சரணம் சரணம்
அறுமுக விநோத சரணம்,
பையரவணிந்த சிவ சங்கரன் இடங்குலவு
பரைமகிழும் இளைஞ சரணம்
மையனைய சூழலிகுற வள்ளிகுஞ் சரிதழுவி
மகிழுமணவாள சரணம்
வெய்யப த்ரதத்ன இருந்த எளியோங்கள் எமை
விடுவித்த விமல சரணம்

என்ற பாடல் நக்கீரர் முருகனைப் போற்றிய நிலையைக் காட்டுகிறது.

நல்லார் ஒருவர் உளரேல் பல்லோருக்கும் மழை பெய்து பயன் தருவதைப் போல, நக்கீரரால் மற்ற சிவபக்தர்களின் உயிர்களும் காப்பற்றப்பெற்றது.முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, “திருமுருகாற்றுப்படை’ (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, “ஆறுபடை’ என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

இதன் பிறகு காளத்தி என்ற இடத்திற்குச் சென்று அங்குள்ள பொன்முகரி ஆற்றில் நக்கீரர் நீராடினார். நீராடி அவர் கங்கையின் மேற்கில் உள்ள மலையான கைலாய மலையில் எழுந்தார். அவரின் கைலாய எண்ணம் இதன்வழி நிறைவேறியது.இதன் தொடர்வாக கயிலை பாதி காளாத்தி பாதி, அந்தாதி, காரெட்டு, கண்ணப்பர் தம்மறம், எழுக் கூற்றிருக்கை, தேவநற்பாணி போன்ற நூல்களை அவர் படைத்தளித்தார்.இவ்வாறு இறைத்தொண்டு, தமிழ்த்தொண்டாற்றிய நக்கீரர் தன் வாழ்நாளின் நிறைவில் சோதியுள் கலந்தார்.

Categories
Library Library

புருசுண்டி முனிவர்

விநாயகரின் பக்தர்களுள் தலைசிறந்தவர் இவர்.த்ரேதா யுகத்தின் ஆரம்ப காலம் அது. தண்டகாரண்யம் இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது.

சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி.தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில், விப்ரதன் என்று ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். மிருகங்களை வேட்டையாடி, தன்னையும் தன் கூட்டத்தினரையும் பசியின்றிப் பாதுகாத்து வந்தான். திடீரென மழை பொய்க்கவே, வனம் வறண்டது. பறவைகளும் மிருகங்களும் புகலிடம் தேடி, வனத்தை விட்டு அகன்றன. விப்ரதன் தன் கூட்டத்தாருடன் உணவும் தண்ணீருமின்றித் தவித்தான். வேறு வழியின்றி, வழிப்பறிக் கொள்ளையில் இறங்கினான். ஒருநாள் அந்த காட்டு பக்கம் வந்த முனிவரிடம் கொள்ளை அடிக்க முடிவு செய்தான்.

அவர் தன்னை மறந்த நிலையில் கணபதி நாமத்தினை உச்சரித்தபடியே சென்றுக்கொண்டிருந்தார். முனிவரை கண்டதும் அவரிடம் கொள்ளையடிக்கலாம் என எண்ணியவாறு அவர்முன் கத்தியுடன் போய் விப்ரதன் நின்றான். இவனை கண்டு முனிவர் அதிர்ச்சயடையாமல் அமைதியாய் நின்றார். முனிவரின் போக்கு விப்ரதனை ஆச்சர்யப்படுத்தியது. தன்னைக்கண்டு மிருகங்களே பயப்படும், கத்தியுடன் நின்றும் இந்த மனிதர் தன்னைக்கண்டு பயப்படாததை கண்டு மலைத்து கத்தியை கீழே தவறவிட்டு நின்றான். அவன் மனதிலிருந்த குரூரம் மறைந்தது. அந்த முனிவரை வணங்கி தாங்களை கண்டதும் எனது மனதில் உள்ள தீய எண்ணங்கள் தொலைந்து போனது
எனக்கு இனி தீய வழி வேண்டாம் இனி நல்வழியில் நடக்க தங்கள் ஆசிர்வாதம் வேண்டும் என்றார்.

விப்ரதன் தலையில் கை வைத்து, ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், க்லீம், க்லௌம், கம், கணபதயே நமஹ!’ என முனிவர் வாழ்த்தினார். தன் கையில் வைத்திருந்த ஊன்றுக்கோலை அவனிடம் தந்து, இதை நீரூற்றி, நான் சொன்ன மந்திரத்தை ஜெபித்து வளர்த்து வா! அது துளிர்க்கும்வரை முயற்சியை கைவிடாதே! உனக்கு தெய்வீக சக்திகள் கிட்டும் என சொல்லி தனது பயணத்தை தொடர்ந்தார். ஊன்றுக்கோலை நட சிறந்த இடம் தேடி அலைந்தபோது, ஒரு கணபதி கோயிலும், அருகில் இருந்த தெய்வீகப் பொய்கையும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன. அதனால், அவன் அங்கேயே தங்கி உணவின்றி உபவாசமாக இருந்து, தடாகத்தில் நீராடி, முனிவர் சொன்னபடி ஜபத்தில் ஈடுபட்டான் விப்ரதன். காலங்கள் ஓடின.

அன்ன ஆகாரம் இன்றி, அவன் செய்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. காய்ந்த அந்த மரக்கிளை, துளிர்க்கத் துவங்கியது.நம்பிக்கையுடன் கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு, கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது. அவன்முன் தோன்றிய விநாயகர், ”விப்ரதா! பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்ததால், நீயும் என் போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால், நீ ‘புருசுண்டி’ என அழைக்கப்படுவாய்.

உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம், கற்பக விருட்சமாகிவிட்டது. எந்தச் செல்வத்தைக் கேட்டாலும், அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு. வேறு என்ன வரம் வேண்டும், கேள்!” என அருளினார். இதில் சிலிர்த்தவன், ”தங்களின் தரிசனமே கிடைத்து விட்டது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும், சுவாமி! தங்களின் திருவடியைச் சரணடைந்து தொண்டாற்றுகிற பாக்கியம் கிடைத்தால் போதும்!” என்றான்.சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கினைக் கடைப்பிடித்து, விரைவில் எம்மை அடைவாயாக!” என்று அருளி மறைந்தார் மகா கணபதி. அப்படியே செய்யத் துவங்கினார்கணேச மந்திரத்தையும், விரதத்தையும் தொடர்ந்து கடைபிடித்தார் புருசுண்டி என்ற முனிவராக ஆனார். புருசுண்டி முனிவர் பூலோகத்தில் எல்லாரும் சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழ சங்கடஹர சதுர்த்தியை தோற்றுவித்தார்.நம் சங்கடங்களை களைவதற்காகவே நாம் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஐதீகம்.

இராமயண காலத்திலேயே தண்டகாரண்யம் அந்த காலத்தில் குற்றங்கள் செய்தவர்களை விடும் இடமாக இருந்தது. புருசுண்டி முனிவர் குற்றசெயலில் ஈடுபட்டதால்
நரகத்தில் தவித்த தன் முன்னோர்களுக்கு விடுதலை கிடைக்கவும் பெற்றார்.ஓளரவ முனிவர்-சுமேதை தம்பதியின் மகள் சமி. தெளமிய முனிவர் என்பவரின் மகன் மந்தாரன். இவன் செளனக முனிவரின் சீடனும்கூட. பெற்றோர் விருப்பப் படி சமிக்கும், மந்தாரனுக்கும் திருமணம் நடந்தேறியது.ஒருமுறை சமியும், மந்தாரனும் தங்களின் உறைவிடத்துக்குப் போகும் வழியில், விநாயகரின் அருள்பெற்ற புருசுண்டி முனிவர் எதிர்ப்பட்டார். இவர்கள் இருவரும் அவரை வணங்கவில்லை. மாறாக, அவரின் உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடினர்.

புருசுண்டி முனிவர், விநாயகரைப் போன்றே யானை முகம் கொண்டவர். அவர், தன்னை சமி-மந்தாரன் தம்பதி ஏளனம் செய்வதைக் கண்டு கோபம் கொண்டு, மரங்களாக மாறும்படி அவர்களை சபித்தார்.தங்கள் தவறை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் சாப விமோசனம் அருளும்படி முனிவரிடம் வேண்டினர். “விருட்சங்களாகத் திகழும் உங்கள் நிழலில் விநாயகர் குடிகொள்ளும்போது விமோசனம் கிடைக்கும்” என்று கூறிச் சென்றார் முனிவர்.

சாபத்தின்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறினர். இந்த நிலையில் தங்களின் பிள்ளை களைக் காணாமல் தவித்த பெற்றோரும், மந்தாரனின் குருவான செளனகரும் அவர்களை எங்கெங்கோ தேடி அலைந்தனர். இறுதியில் ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிந்து வருந்தினர்.செளனகர் அந்த மரங்களைக் கண்டடைந்தார். அவற்றின் கீழ் அமர்ந்து விநாயகரை எண்ணி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்தார். அதன் பலனாக விநாயகப் பெருமான் காட்சி தந்தார். அவரிடம், தன் மாணாக்கனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் அருளும்படி வேண்டினார் செளனகர்.

உடனே விநாயகர், ‘‘முனிவரே! அடியவர்கள் இட்ட சாபத்தை எவராலும் போக்க இயலாது. எனவே, இவ்விருவரும் விருட்சங்களாக இருந்தபடியே முக்தியை பெறுவார்கள். நாம் இம்மரங்களின் நிழலில் எழுந்தருள்வோம். வன்னி மற்றும் மந்தாரை மரங்களையும் அவற்றின் கீழ் இருக்கும் என்னையும் வழிபடுபவர்களுக்கு சகல இடர்களும் நீங்கும். அவர்களது விருப்பங்கள் யாவும் ஈடேறும். வன்னி இலையாலும் மந்தார மலர்களாலும் என்னை அர்ச்சித்து வழிபடுவோரும் இன்னல்கள் நீங்கி இன்பம் அடைவர்’’ என்று அருள்பாலித்தார். புருசுண்டி முனிவரின் பெருமையை நாரதர் மூலம் அறிந்த தேவேந்திரன், புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான். தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக, யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன். எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டியிடம், கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான். அதன்படி, கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் தந்தருளினார் புருசுண்டி. விநாயகர் தந்ததையே மனமுவந்து தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில், அங்கு தோன்றிய மகா கணபதி, புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக்கொண்டு, அவருக்குப் பிறவா நிலையை அருளினார். கற்பக விருட்சமும் தேவலோகம் சென்றடைந்தது.

Categories
Library Library

உரோமரிஷி

உரோமரிஷி ஞானம்‌ முதல்‌ பாடலில்‌ மதி அமுதப்‌ பாலினை உண்டு கள்ளமற்ற மனத்துடன்‌
உலகில்‌ சித்து புரிகின்ற பெரியோர்களின்‌ பாதங்களை நம்பியதால்‌ உரோமன்‌ என்ற பெயர்‌ பெற்றேன்‌ என்று அவரே பாடி இருக்கிறார்.அவர் இயற்பெயர் சூதர் அவர் கதைகள் சொல்வதால் புராணிகர்சேர்த்து சூதபௌராணிகர் னு அழைப்பார்கள் இந்த மஹரிஷியை அழைப்பார்கள்

அதோடு அல்லாமல் பல யுகங்களில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்து சொல்ல அதை உணருவோர்களின் மயிர் கூஞ்சொறியும் அதனால் அவரை அனைவரும் அன்போடு ரோமஹர்ஷனர் னு அழைக்கப்பட்டார்.உரோமம் உடல் முழுவதும் இருந்ததால் உரோமமகரிஷி என பெயர் பெற்றார்.ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். 100 பிரம்மா காலம் முடிந்தால் 8 கோணத்தில் ஒருகோணம் எட்டு மடங்கிய இப்படி 100 8 கோணம் ரிஷி காலம்

இப்படி 1 நூறு முடிந்தால் 9 கோண ரிஷி க்கு 1 கோணம் நிமிரும் இப்படி 9 மடங்கி இப்படி நூறு மடங்கினால் ரோமரிஷியின் 1 மயிர் உதிரும் இந்த கதையை என் குரு ராமையா சித்தர் சொல்லி கேட்டது பிரம்மாவிற்கு தான் தான் நீண்ட ஆயுள் வாழ்வதாக கர்வம் ஏற்பட்டது

இதை உணர்த்த மஹாவிஷ்ணு பிரம்மாவை அழைத்துக்கொண்டுமுறையே 8 கோண ரிஷி9 கோண ரிஷி ரோமரிஷி னு அழைத்துச்சென்று உண்மையை உணர்த்தினார் செம்படவனுக்கும்‌ குறத்திக்கும் மகனாகப்‌ பிறந்தவர்‌. ஆனி மாதம்‌ கார்த்திகை நட்சத்திரம்‌ இரண்டாம்‌ பாதத்தில்‌ ரிஷப ராசியில்‌ பிறந்தவர்‌.காகபுசுண்டரது சீடர் இவர்.சட்டைமுனி சித்தர்கள் மறைபொருளாக கூறியதை இவர் மிக எளிய முறையில் கூறியதால் சட்டைமுனிக்கும் இவருக்கும் கொஞ்சம் சண்டை.

ஒரு சமயம்‌ சட்டைமுனி இவருடைய நூல்களை கிழித்தெறிந்து விடுவார்‌ என்ற பயம்‌ இவருக்கு வந்துவிட்டது. அதனால்‌ இவர்‌ தம்‌ நூல்கள்‌ அனைத்தையும்‌ தமது குருநாதர்‌ புசுண்டரிடம்‌ கொடுக்க, காக்கை வடிவில்‌ இருந்த புசுண்டர்‌ அவற்றைத்‌ தம்‌ இறக்கைக்குள்‌ மறைத்து வைத்து எடுத்துச்‌ சென்று அகத்தியரிடம்‌ கொடுத்தார்‌. அகத்தியர்‌ அவற்றைப்‌ பொதிகை மலையில்‌ உள்ள குகைக்குள்‌ நீண்டகாலம்‌ ஒளித்து வைத்திருந்து இவரிடம்‌ திருப்பிக்‌ கொடுத்தார்‌ என்று உரோம ரிஷி 500 என்ற நூலில்‌ அவர் கூறியுள்ளார்‌. இவர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த உரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதைக் கண்ட சித்தர் கோவில் வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலின் வெளியிலேயே இறைவன் தரிசனம் தந்ததாக கூறுவர். சீர்காழியும்‌, சேரன்மகாதேவியும்‌ உரோமமகரிஷி அதிக நாள் தங்கி இருந்த தலம்.மன்னன்‌ நீண்டகாலம்‌ தனக்குக்‌ குழந்தை இல்லாதிருந்த குறையை உரோம ரிஷியிடம்‌ கூறினான்‌.

உரோமரிஷி சீர்காழியில்‌ கைலாயநாதரை நோக்கித்‌ தவமிருந்தார்‌. அவர்‌ மூலம் கைலாச நாதர்‌ ஆதி சேடனுக்கும்‌ வாயுதேவனுக்கும்‌ இடையே போர்‌ நடந்த பிறகு உன்‌ எண்ணம்‌ ஈடேறும்‌! என்று காலவத்து மன்னனுக்குக்‌ கூறினார்‌. ஆதிசேடன்‌ – வாயுபகவான்‌ போர்‌ முடிந்தவுடன்‌ கடல்‌ கொந்தளித்து பெருகி வந்தது. அப்போது கயிலாய நாதர்‌ தோணியப்‌ பராக சீர்காழியில் தோன்றி காலவத்து மன்னனுக்குக்‌ காட்சியளித்து மகப்பேறு பெற வரமளித்தார்‌.

சீர்காழியில்‌ உரோமரிஷி தவமியற்றியதும்‌ கயிலாய நாதர்‌ தோணியப்‌பராகத்‌ தோன்றியதும்‌ சீர்காழி தோணியப்பர்‌ திருக்கோவிலில்‌ இன்றும்‌ புடைப்புச்‌ சிற்பங்களாக உள்ளன.அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி. இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார். அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார். அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது.

உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார். இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன

தாமிரபரணி ஆற்றங்கரையில்‌ எழுந்தருளியுள்ள ஆவுடை நாயகி உடனுறை அம்மநாத சுவாமி சுயம்புலிங்கம்‌. இங்கு வந்த உரோமரிசி முனிவர்‌ ஒரு ஆலமரத்தடியில்‌ லிங்க வடிவில்‌ இருந்து இறைவனை வழிபட்டு மறு பிறப்பில்லாத உயர்நிலையை அடைந்தார்‌. அவர்‌ காலத்திலேயே அம்மநாத சுவாமி திருக்‌கோவிலும்‌ எழுப்பப்பட்டது. இவ்வாறே பல தலங்களும்‌ சென்று தவ வாழ்க்கையுடன்‌ சிவத்தொண்டும்‌ செய்து வந்தார்‌.உரோமரிஷி ஞானம்‌ என்னும்‌ 13 பாடல்களில்‌ அவர்‌ நமக்கு பல நல்வழிகளைக்‌ காண்பிக்கிறார்‌. பெண்ணாசையை விட்டு மெளன யோகத்தைக்‌ கடை பிடித்தால் தான்‌ முக்தி கிட்டும்‌.அதற்கு முதற்‌படியாக பிராணாயாமம்‌ செய்ய வேண்டும்‌.புருவமையத்தில்‌ கருத்தை வைத்து ஆறாதாரத்தவம்‌ புரிய வேண்டும்‌.காய்‌, சருகு கிழங்குகளைத் தின்று கொண்டு நதிகளிலே குளித்து காடுமலைகளில்‌ சுற்றித்‌ திரிவதால்‌ எந்த பயனும்‌ இல்லை.

ஒருகுருவின்‌ மூலமாகத்தான்‌ தவயோகம்‌ பயில வேண்டும்‌.ஏதாவது ஒரு மந்திரத்தைச்‌ சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு காடு மலைகளில்‌ அலைந்து திரிவதால்‌ எந்த பயனும்‌ இல்லை.உத்தமமான ஒரு குருவைப்‌ பெற்று அவரையே தெய்வமாகவும்‌ வழிகாட்டியாகவும்‌ கொண்டு அவர்‌ வழியில்‌ தவ வாழ்வு வாழ வேண்டும்‌.”உரோம ரிஷி ஞானம் ” என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன.

வகார சூதிரம் நாகாரூடம் சிங்கி வைப்பு
உரோம ரிஷி வைத்தியம் 1000
உரோம ரிஷி சோதிட விளாக்கம்
உரோம ரிஷி காவியம் 500
உரோம ரிஷி குறுநூல் 50
உரோம ரிஷி முப்பு சூத்திரம் 30
உரோம ரிஷி இரண்டடி 500
உரோம ரிஷி பெரு நூல் 500
உரோம ரிஷி ஞானம்
உரோம ரிஷி பூஜா விதி
உரோம ரிஷி வைத்திய சூத்திரம்
உரோமரிஷி பஞ்சபட்சி சாத்திரம்

ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

பல்வேறு தலங்களிலும்‌ தவ வாழ்க்கை வாழ்ந்ததுடன்‌ மக்கள்‌ தொண்டும்‌ செய்து முடித்த பிறகு தாம்‌ சமாதி கூடும்‌ காலம்‌ நெருங்கிவிட்டதை உணர்ந்து உரோமரிஷி சதுரகிரிக்கு சென்றார்‌. அங்கு ஆறு மலைகளுக்கும்‌ மூன்று குகைகளுக்கும்‌ நடுவில்‌ உள்ள குகையில்‌ தவக்குடில்‌ அழைத்துக்கொண்டார்‌.

அவரது தவக்குடிலுக்கு கரடி, சிங்கம்‌, செந்நாய்‌, கருவாய்‌, புலி, அரக்கர்‌, காளி, குறலி, குட்டிச்சாத்தான்‌, சுடலை மாடன்‌, இருளன்‌, வீரபத்திரன்‌, முனி, கருப்பன்‌ ஆகியோர்‌ காவல்‌ புரிகின்றனர்‌. நாட்டில்‌ உள்ளவர்கள்‌ அவரை நினைத்து தியானம்‌ செய்தால்‌ சயம்‌ வந்து அவர்‌ திருவருள்‌ புரிவார்‌.இந்த செய்திகள்‌ யாக்கோபு வைத்திய வாத சூத்திரம்‌ 400 என்ற நூலில்‌ இடம் பெற்றுள்ளன.இவரை திங்களன்று வழிபட்டால் நல்லவை நடக்கும்.

விருதாசலத்தில் பழமலைநாதர் கோவிலில் வன்னி மரத்தடியில் உள்ளார்.அவர் இன்றும் திருவொற்றியூரில் உள்ள வடியுடை அம்மன் கோவில் உள்ள வட்டப்பாறை அம்மன் சன்னிதியில் எதிர் உள்ள பீடத்தில் தவத்தில் உள்ளதாக காஞ்சி பெரியவர் சொல்லியிருக்கிறார்

Categories
Library Library

காகபுசுண்டர்‌

காகபுசுண்டர்‌ தமிழ்‌ இனத்தைச்‌ சேர்ந்தவர்‌. பல யுகங்கள்‌ வாழ்ந்தவர்‌. சோதிடம்‌ மருத்துவம்‌, யோகம்‌, ஞானம்‌, ஆகிய துறைகளில்‌ நற்றமிழில்‌ எட்டு நூல்கள்‌ இயற்றியுள்ளார்‌. மரணமிலாப்‌ பெருவாழ்வு வாழ்பவர்‌. பிரளயகாலத்தில்‌ அவிட்ட நட்சத்திரப்பதவியில்‌ வாழ்பவர்‌. பிரளயகாலம்‌ முடிந்தவுடன்‌ பூமிக்கு வந்து பிற சித்தர்களுடன்‌ வாழ்பவர்‌.

”மாசிலா மனமே மகேசனின்‌ மாளிகை” என்று ஞானப்‌ பாடல்‌ பாடியவர்‌. இவர்‌ உரோமரிஷியின்‌ குருநாதர்‌.ராம பிரானின் குரு வசிஷ்ட முனிவர் வசிஷ்ட முனிவரின் குரு
காகபுசுண்டர் ஆவார்.வசிஷ்ட மகரிஷிக்கு. ஞானோபதேசம்செய்தவர்‌.நான் யார்? என்ற கேள்வியை எழுப்பி தங்களைத் தானே நான் யார் என்று கேட்டுக் கொண்டு ஞானம் அடையக் கூடிய வழிகளைத் தேடிக் கொண்டு இருக்கும் ஏனைய சித்தர்களும்,
வசிட்டருடன் சேர்ந்து காகபுசுண்டரிடம் வழி கேட்டனர்.

கடவுளை அடையக் கூடிய வழிகளை அறிந்து அதன் வழி சென்று அதை அடைய வேண்டும் என்று வசிஷ்டருக்கும் ஏனைய சித்தர்களுக்கும் ஞானத்தை அருளினார் காகபுசுண்டர்.சிவநேசன் என்பவன் ஒரு குருவிடம் சீடனாகச் சேர்ந்தான். சிவபெருமான் மேல் அதிகமான பக்தி கொண்ட அவனுக்கு, ‘ஈசனை விட உயர்ந்த கடவுள் இல்லை’ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அவனுடைய குருவோ, விஷ்ணு மேல் அதிக பக்தி கொண்டவராக இருந்தார். இதனால் குருவின் மீது வெறுப்பு ஏற்பட்டு, நாளடைவில் அவரை மதிக்காமல் இருக்கத் தொடங்கினான்.

இந்த நிலையில் ஒருநாள் சிவநேசன், அங்கிருந்த மகாகாலேஸ்வரர் கோவிலில் அமர்ந்து, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய குரு அங்கு வந்தார். அவனோ, குருவைக் கண்டும் காணாமல் இருந்தான்.சீடனைப் பற்றித் தெரிந்திருந்த குரு, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஆலய இறைவனோ, சீடனின் செய்கையால் கோபமடைந்தார்.

இறைவனே அசரீரியாக ‘ஆணவத்தால் அறிவை இழந்த மூடனே! குருவை மதிக்காமல் இருக்கும் உனது செயல் எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆலயத்தில் அமர்ந்து கொண்டு, என் முன்பே உன் குருவை அலட்சியம் செய்யும் உன்னுடைய வேண்டுதல்கள் எதையும் நான் ஏற்கப் போவதில்லை. குருவை மதிக்காமல், மலைப்பாம்பைப் போல் அமர்ந்திருந்த நீ, மலைப்பாம்பாகவே மாறிப்போவாயாக’ என்று சாபம் கொடுத்தார்.தான் வணங்கி வந்த இறைவனே, தனக்குச் சாபம் கொடுத்ததை நினைத்து சிவநேசன் வருத்தமடைந்தான். சிவநேசனுக்கு சாபம் கிடைக்கத் தானே, காரணமாகிவிட்டதை எண்ணி குரு வருத்தமடைந்தார்.

அவர் மகா காலேஸ்வரிடம், ‘இறைவா! என் சீடன் தங்கள் மேல் கொண்ட அதிக பக்தியால், விஷ்ணுவை வணங்கும் என்னை மதிக்க தவறிவிட்டான். இதை நானே பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், அவனுக்கு தாங்கள் கொடுத்த சாபம் மிகவும் கடுமையானது. எனவே அவன் மீது கருணை கொள்ள வேண்டும்’ என்று வேண்டினார்.குருவின் பாசம் இறைவனை மகிழ்ச்சிப்படுத்தியது. ‘வேதியரே! உங்களது உயர்ந்த எண்ணம் என்னை மகிழ்விக்கிறது. இருப்பினும் அவன் சாபத்தை ஏற்றுதான் ஆக வேண்டும். பாம்பாக மாறும் இவன், அதன் பின்பும் சில பிறப்புகள் எடுப்பான். ஒவ்வொரு பிறப்பிலும், பிறப்பு, இறப்பினால் ஏற்படும் துன்பங்கள் இவனுக்கு இருக்காது. அனைத்துப் பிறவிகளிலும், இவன் பெற்ற தத்துவ ஞானங்கள் அனைத்தும் அவனுடனேயே நிலைத்திருக்கும். இனி அவனுடைய பிறவிகள் அனைத்திலும், அவன் வெறுத்து வந்த விஷ்ணுவின் மேல் இறைபக்தியுடன் இருப்பான்’ என்றார்.

சாபத்தால் மலைப்பாம்பாக மாறிய சீடன், பல ஆண்டுகள் வாழ்ந்து இறந்தான். அதன் பிறகும் பல பிறப்புகளை எடுத்தான். அந்த பிறப்புகளில் எல்லாம் விஷ்ணு பக்தனாக வாழ்ந்தான். இறுதியில் ஒரு உயர்குலத்தைச் சேர்ந்த வீட்டில் மகனாகப் பிறந்தான்.புசுண்டன் என்ற பெயரில் அவன் அழைக்கப்பட்டான். சிறுவனாக இருந்த போது அவனுக்கு விஷ்ணுவை நேரில் காணும் ஆவல் ஏற்பட்டது. பல இடங்கள் அலைந்து திரிந்தான்.இறுதியில் ஒரு லோமச முனிவரைச் சந்தித்தான்.அவரிடம், ‘சுவாமி, நான் விஷ்ணுவை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும். அதற்கான தகுந்த ஆலோசனையைத் தந்தருளுங்கள்’ என்று வேண்டினான்.

அதைக் கேட்ட முனிவர், ‘இறைவன் விஷ்ணுவும், ஆன்மாவும் வேறு வேறல்ல. நீரின்றி பிரியாத அலைகள் போல, பரமாத்வாகிய விஷ்ணு பெருங்கடலாகவும், நாமெல்லாம் அதில் தோன்றும் அலைகளாகவும் இருக்கிறோம். ஆகையால் இறைவனை உன்னிடம் இருந்து பிரித்துப் பார்த்து தேடி அலைய வேண்டியதில்லை’ என்று அறிவுரை வழங்கினார்.அவரது அறிவுரையை ஏற்காத சிறுவன், ‘சுவாமி! விஷ்ணுவைக் காண நல்வழியைக் காட்டச் சொன்னால், அவரும் நாமும் வேறல்ல என்று கூறி, என் எண்ணத்தை திசை திருப்பி விடப் பார்க்கிறீர்களே’ என்று கோபப்பட்டான்.அவனது பேச்சால் கோபமடைந்த முனிவர், ‘முட்டாளே! நான் சொல்லும் எதையும் ஏற்காமல், உன்னுடைய விருப்பத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் உனக்கும், கூவி அழைத்து உணவு தருபவரைப் பார்த்தே அஞ்சி ஓடும் காகத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை. எனவே இன்று முதல் நீ காகமாகவே மாறிப் போவாய்’ என்று சாபமிட்டார்.

காகமாக மாறிய புசுண்டன், முனிவர் மேல் கோபம் கொள்ளாமல், ‘சுவாமி! காகத்தின் உருவிலாவது நான் விஷ்ணுவைக் காண முடியுமா?’ என்று கேட்டான்.விஷ்ணு மேல் அவன் கொண்டிருந்த பக்தியைக் கண்டு மகிழ்ந்த முனிவர், அவனுக்கு சில விஷ்ணு மந்திரங் களைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர், ‘காக உருவில் உள்ள நீ, இனி பிறப்பு, இறப்புகள் இன்றி வாழ்வாய். நீயாக விரும்பி இறப்பை ஏற்கும் வரை, உனக்கு அழிவே இல்லை. நீ வாழும் காலத்தில் விஷ்ணுவை மட்டுமின்றி, சிவபெருமான், பிரம்மா மற்றும் தேவலோகத்தினரையும் கண்டு மகிழ்வாய். காகபுசுண்டர் எனும் பெயரில் சிறப்படையும் உன்னை, அவர்களே அழைத்துச் சிறப்பு செய்வார்கள்’ என்று வாழ்த்தினார்.

முனிவரின் வாழ்த்தால் மகிழ்ச்சியடைந்த புசுண்டன், காக வடிவில் விஷ்ணு மந்திரத்தை உச்சரித்தபடியே வானில் பறந்தான். அதன் பிறகு காக வடிவிலேயே இருந்து உலகில் நிலவும் பல உண்மைகளை கண்டறிந்து, தனது அறிவுத்திறமையை வளர்த்துக் கொண்டே சென்றான். நாளடைவில் நிறைவுபெற்ற மகரிஷியாக மாறிப்போனார்.

உலகம் பல அழிவுகளை சந்தித்து, ஒவ்வொரு அழிவின் போதும் புதிய உலகம் தோன்றிக் கொண்டிருந்தது. உலக அழிவில் உலக உயிர்கள் அனைத்தும் அழிவுற்றாலும், காக வடிவில் இருந்த காகபுசுண்டர் மட்டும் அழிவின்றி, உலக சுழற்சியைக் கண்டு வியந்தபடி இருந்தார். அதனால் அவரது அறிவுத்திறன் பன்மடங்கு அதிகரித்தபடி இருந்தது.உலக அழிவின் போதெல்லாம் காகபுசுண்டர் மட்டும் அழியாமல் இருப்பது கண்டு தேவலோகத்தினர் ஆச்சரிய மடைந்தனர்.

அவர்கள் சிவபெருமானிடம் சென்று, ‘இறைவா! உலகம் அழிந்து, அதில் வசித்த உயிரினங்கள் அனைத்தும், விஷ்ணுவிடம் சென்றடைந்து விட்டன. ஆனால் காக வடிவிலான புசுண்டர் மட்டும் அழியாமல் இருப்பது எப்படி?’ என்று கேட்டனர்.‘காகபுசுண்டர் உலக அழிவில் இருந்து தப்பித்தது பற்றி, நீங்கள் விஷ்ணுவை சென்று கேட்டறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார் சிவபெருமான்.இதையடுத்து தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று இதுபற்றி வினவினர்.

விஷ்ணுவோ, ‘உலகத்திலிருக்கும் அனைத்து உயிர்களும், ஊழி காலத்தில் அழிந்து போயின. அவை அனைத்தும், பள்ளி கொண்டிருந்த என்னிடம் வந்து சேர்ந்தன. அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன். என்னுடைய சுதர்சன சக்கரம் எவராலும் தடுக்க முடியாத வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் காகபுசுண்டர் மட்டும், சக்கரத்தைச் சுழல விடாமல் செய்து, அதிலிருந்து தப்பிச் சென்று விட்டார். அவர் என்னிடமிருக்கும் சக்கரத்தைக் காட்டிலும் வலிமை மிக்கவராக இருக்கிறார். அவர் எப்படி அந்தச் சக்கரத்தின் சுழற்சியில் இருந்து தப்பித்தார் என்பதை, அவரையே அழைத்துக் கேட்டால்தான் தெரியும்’ என்றார்.தேவர்கள் அனைவரும் வசிஷ்ட முனிவரின் வாயிலாக காகபுசுண்டரை கயிலாயம் வரவழைத்தனர்.

கயிலாயத்தில் காகபுசுண்டரின் வரவுக்காக முப்பெரும் தேவர்களும் தங்கள் மனைவியருடனும், தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்டோரும் காத்திருந்தனர்.வசிஷ்ட முனிவரும் காகபுசுண்டரை அழைத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர்ந்தார். தேவர்கள் அனைவரும், ‘காகபுசுண்டரே! பூலோகத்தில் வாழும் தாங்கள், உலக அழிவில் இருந்து எப்படி பிழைத்தீர்கள்?’ என்று கேட்டனர்.

‘நான் இந்த உலக அழிவை மட்டுமல்ல, இதற்கு முன்பாக ஏற்பட்ட பல உலக அழிவுகளையும் நேரில் பார்த்திருக்கிறேன். அழிவுக்குப் பிறகு புதிதாக தோற்றுவிக்கப்படும் உலகத்தையும் நேரில் கண்டிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து, பல அதிசய நிகழ்வுகளை பார்த்து வருகிறேன். இந்த உலகத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக அறிந்து வைத்துள்ளேன். அதற்கும் மேலாக நான் விரும்பும் போதுதான் எனக்கு மரணம் நிகழும் என லோமச முனிவர் எனக்கு வரம் அளித்துள்ளார். இவையெல்லாம் தான் இதற்கு காரணம்’ என்று கூறி முடித்தார்.

சாபங்களைக் கூட மகிழ்வுடன் ஏற்று, அதற்கு விமோசனம் எதுவும் கேட்காமல், சாபம் கொடுத்தவர்களிடமே, சாபத்தைக் காட்டிலும் அதிக பயன் தரும் வரங்களைப் பெற்று உயர்ந்த காகபுசுண்டரை, தேவர்கள் அனைவரும் பாராட்டினர்.காகபுசுண்டரும்‌ அவர்‌ மனைவி பகுளாதேவியும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ தென்பொன்பரப்பி கிராமத்தில்‌ உள்ள சுவர்ணாம்பிகை உடனுறை சுவர்ணபுரீஸ்வரர்‌ ஆலயத்தின்‌ பக்கத்தில்‌, கோவிலின்‌ ஈசான்ய மூலையில்‌ சமாதி கொண்டுள்ளனர்‌.

கயிலைநாதரின்‌ ஆணையின்படி காக புசுண்டர்‌ ஆச்சாள்புரம்‌ வந்து ‘திருவெண்ணீற்று உமையம்மை உடனுறை சிவலோக தியாகராஜர்‌ திருக்கோவிலை அடைந்து அந்தக்கோவிலினுள்‌ நிருதி திக்கில்‌ அமர்ந்து தவமியற்றி வந்தார்‌. திருஞான சம்பந்தர்‌ திருமண நாளான வைகாசி மாதம்மூல நட்சத்திரத்தன்று வெளிப்பட்ட சிவ ஜோதியில்‌ திருமணத்திற்கு வந்திருந்த எல்லா சிவ பக்தர்களுடனும்‌ சேர்ந்த காகபுசுண்டரும்‌ முக்தி அடைந்தார்‌.

காகபுசுண்டர் அருளிய நூல்கள்

காகபுசுண்டர் வைத்தியப்பெருங்குறள்
காகபுசுண்டர் நாடிசோதிடம்
காகபுசுண்டர் ஞானம் 80
காகபுசுண்டர் உபரிடதம் 31
காகபுசுண்டர் காவியம் 33
காகபுசுண்டர் குறள் 16
காகபுசுண்டர் பெரு நூல் 1000

காக புசுண்டர் பெயரில் வைத்திய நூல்கள் பல உண்டு. அவைகளில் கிடைத்தவை:

  1. புசுண்டர் நாடி,
  2. காகபுசுண்டர் ஞானம் – 80
  3. காக புசுண்டர் உபநிடதம் – 31
  4. காக புசுண்டர் காவியம் – 33
  5. காக புசுண்டர் குறள் – 16

இவை இவருடைய வேதாந்தக் கருத்துக்களைக் கூறுகின்றன. காணாத காட்சியெல்லாம் கண்ணிற்கண்ட காக புசுண்டர் யோகஞானம், சமாதிமுறை, காரிய சித்தி பெறும் வழி, இரசவாதம், நோய்தீர்க்கும் மருந்து வகை, வேதியரை மயக்கும் மருந்து முறை, பிறர் கண்ணில் படாமல் மறைந்திருக்க மருந்து, பகைவரை அழிக்க வழி போன்றவைகள் இவருடைய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

Categories
Library Library

ஞானேஸ்வரர்

சாங்கதேவ சித்தருக்கு ஞானம் வழங்கியவர் இந்த ஞானேஸ்வரர்.

ஸ்ரீ நாமதேவருக்கும் ஞானம் வழங்கியவர் இந்த ஞானேஸ்வரர்.கோதாவரி நதிக்கரையில் ஆபேகாம் எனும் சிற்றூரில் வாழ்ந்த அந்தண குலத்தவரான கோவிந்த பண்டிதர்-நிருபமாதேவி தம்பதிக்கு 13-ம் நூற்றாண்டில் மகனாகப் பிறந்தான், விடோபா. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் லயித்த விடோபா, புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டான். அப்படி, ஆலந்தி நகருக்கு வந்தபோது, அவரின் முகத்தில் படர்ந்த தேஜஸ் மற்றும் அவரது இறை சிந்தனை ஆகியவற்றால் அதிசயித்த சித்தோபந்த் எனும் அந்தணர், தன் மகள் ருக்மிணியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், மனைவியின் சம்மதத்துடன்
தன் தாய் தந்தையரின் அஸ்தியை கரைக்க காசிக்குச் சென்றார் விடோபா. அங்கே, சுவாமி ராமானந்தரைச் சந்தித்தவருக்குத் துறவறம் மேற்கொள்ளும் எண்ணம் எழுந்தது. தான் திருமணமானவன் என்பதை மறைத்து, ராமானந்தரிடம் தீட்சை பெற்று துறவறம் பூண்டார்.

பிறகு காசியிலேயே துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரின் மனைவி ருக்மிணி கணவரைக் காணோமே எனப் பரிதவிப்புடன் காத்திருந்தாள். இந்த நிலையில், சுவாமி ராமானந்தர் யாத்திரை புறப்பட்டார். வழியில் ஆலந்தியை அடைந்தார். அவரைச் சந்தித்து தனது குறையைச் சொன்னாள் ருக்மிணி. அதைக் கேட்ட சுவாமி, விடோபா தான் இவளின் கணவன் என அறிந்து வேதனைப்பட்டார். பிறகு காசிக்குத் திரும்பியவர், விடோபாவைக் கண்டித்து கொண்டதுடன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் அதுதான் உன் கடமை என்றார். அவரின் கட்டளைப்படி, ஆலந்திக்கு திரும்பிய விடோபாவை அன்புடன் வரவேற்றாள் ருக்மிணி. காலங்கள் ஓடின.

குருவின் வாக்கை மதித்து விட்டோபா ருக்மாபாயுடன் குடும்பம் நடத்தினார். ஒரு இல்லறவாசி துறவியைபோல இருந்துவிடலாம். ஆனால் ஒரு துறவி இல்லறம் நடத்துவது என்பது சிக்கலான விஷயம்தான். விட்டோபா திரும்பி வந்து குடும்பம் நடத்துவது பற்றி ஊர் மக்கள் கேலியாகப் பேசினர்.

சந்நியாசிக்கு என்ன குடும்பம் என்று தூற்றினார்கள். இதைப் பொறுக்க முடியாமல் ஊரைவிட்டுக் கிளம்பி மனித சஞ்சாரமே இல்லாத காட்டில் போய் வசித்தார்கள்அந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களின் இரண்டாவது மகனாக அவதரித்தவரே ஞானேஸ்வரர் விஷ்ணுவின் அம்சம் ஞானேஸ்வரர்.வேதங்களையும் உபநிடதங்களையும் இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார்.விடோபா தம்பதியர்
குழந்தைகளுக்கு நல்ல உணவு, நல்ல உடைகள் கொடுக்க முடியாமல் தவித்தார்கள். காட்டில் இவற்றுக்கு எங்கே போவது?குழந்தைகள் விளையாடும் போதும் அந்த நால்வரும் இறைவனை வைத்தே விளையாடுவார்கள்.
அந்தளவு கடவுள் பக்தியில் திளைத்தனர்.குழந்தைகள் வளர்ந்தனர்.ஞானேஸ்வரர் அசாத்தியமான அறிவும், நல்ல குரல் வளமும் பெற்றிருந்தார்.

குழந்தைகள் பசியும் பட்டினி யுமாக எத்தனை நாட்கள் இருப்பார்கள். ஞானேஸ்வரர் பிச்சை எடுத்தாவது சகோதரர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கலாம் என்று நினைத்து அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்றார். தன் இனிமையான குரலில் கிருஷ்ண துதிப் பாடல்களைப் பாடிக் கொண்டே யாசித்தார். அந்த ஊரில் இருந்த வேதியர்கள் அவருக்குப் பிச்சையிட மறுத்ததோடு கேவலமாகவும் பேசினார்கள்.ஞானமும் அறிவும் இறைபக்தியும் நிரம்பப் பெற்ற ஞானேஸ்வரர் அவர்களைப் பார்த்து, “”ஏன் எங்களை இப்படி வெறுத்து ஒதுக்கு கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “”நீ சந்நியாசிக்குப் பிறந்த பிள்ளை” என்றனர்.தன் தாய் தந்தையரிடம் நடந்தவைகளை சொன்னவுடன்
விடோபா வேதியர்களிடம் சென்று நான் தவறு செய்திருந்தால் அந்த தவறுக்கு பிராயசித்தம்தான்
என்ன என கேட்கநீங்கள் இருவரும் மரணத்தை தழுவுங்க என்றனர்.மனம் நொந்த விட்டோபாவும் ருக்மாபாயும் அங்கிருந்து புறப்பட்டு பிரயாகை சென்றனர். அங்கு புனிதமான கங்கையில் குதித்து உயிர் தியாகம் செய்தனர்.

பெற்றோரை இழந்த பிள்ளைகளை அந்த வேதியர்கள் அதோடு விடவில்லை. “”நீங்கள் சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அருகிலுள்ள “பைதன்’ நகரில் உள்ள பண்டிதர்களிடம் சென்று நீங்கள் புனிதமானவர்கள் என்று நற்சான்று வாங்கி வரவேண்டும்” என்றார்கள். வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் பைதன் நகரத்தவர்கள்.. அவர்களிடம் மூன்று புதல்வர்களும் தங்களுக்கு உபநயனம் செய்விக்க அனுமதி கோரி நின்றனர்.அங்குள்ள பண்டிதர்களோ தெய்வீக களையும், பக்தியும் கொண்ட பாலகர்களிடம் துவேஷம் கொண்டு அவமதித்தார்கள். ஞானேஸ்வரர் அவர்களிடம் வாதம் செய்தார். பல சித்தாந்தங்களை மேற்கோள் காட்டினார்.சிறுவனான ஞானேஸ்வரரின் வாதத்திற்கு எதிர்பேச்சு பேச முடியாமல் அவர்கள் திகைத்தனர்.

இறுதியாக ஞானேஸ்வரர், “”பண்டிதர்களே! உங்களோடு பேசுவதைவிட இதோ வருகிறதே எருமை… இதனோடு பேசலாம்” என்றார். அதைக் கேட்ட அந்தணர்கள் கோபம் கொண்டு, “”அடே சிறுவா! இந்த எருமையோடு பேசலாம் என்றாயே. எருமை வேதம் படித்துள்ளதா?” என்றனர். எங்கும் எதிலும் கண்ணனையே காணும் ஞானேஸ்வரர் எருமையைப் பார்த்து, “”ஹே கிருஷ்ணா… பாண்டுரங்கா! நீ இப்போது வேதம் சொல்ல வேண்டும்” என்றார். என்ன ஆச்சரியம்! அந்த எருமை மாடு கணீரென வேத கோஷம் செய்தது. அதைக் கண்ட அந்தணர்கள் திகைத்துப் போய் ஞானேஸ்வரரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள்.

தனது மூத்த சகோதரரான நிவ்ருத்திநாத்தையே குருவாக ஏற்று அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். நிவ்ருத்திநாத் கேட்டுக்கொண்டபடி ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தை மராட்டியில் பாமரனும் எளிதில் புரியும் வண்ணம் எழுதினார். அந்நூல் “பாவார்த்த தீபிகா” என்றும் “ஞானேஸ்வரி” என்றும் அழைக்கப்பெறுகிறது. ஞானேஸ்வரர் தனது பதினைந்து வயதிலேயே பல நூல்களையும் அபங்கங்களையும் பாடினார். “ஹரிபாட்’ என்ற நூலையும், “அம்ருதானுபவம்’ என்ற அத்வைத சைவ வேதாந்த காவியத்தையும் இயற்றினார்.ஞானேஸ்வரர் எல்லா மக்கள் மனதிலும் பக்தியை விதைத்தார். அவரவர் மன ஈடுபாட்டிற்குத் தகுந்தபடி பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் ஆகியவற்றை முறைப்படி போதித்தார்.

அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். ஒரு முறை தன் சகோதரி முக்தபாய் மாண்டே எனப்படும் போளி செய்வதற்காக பாத்திரம் தேவைப்பட்டது. அதை வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றபோது விசோபா சாடி என்பவன் அங்குள்ள கடைக்காரர்களிடம் “ஊரை விட்டு ஒதுக்கப் பட்டவர்களுக்கு யாரும் எதுவும் கொடுக்கக் கூடாது” என்றான். அழுதுகொண்டே வீடு திரும்பிய முக்தாபாய் நடந்தவற்றை ஞானேஸ்வரனிடம் கூறினாள். ஞானேஸ்வரன் அவளிடம் கவலைப்படாதே என் முதுகிலேயே போளி செய்யலாம் எனக் கூறி யோக சக்தியால் தன் உடலை அனல் போல் செய்து தன் முதுகில் போளியை சுட்டுப் பொறித்தார். இதைக் கண்ட விசோபா சாடி வெட்கி தலை குனிந்து மன்னிப்பு கோரினான்.

சகோதர, சகோதரி மற்றும் நாமதேவருடன் இணைந்து பண்டரிபுரம், துவாரகை, அயோத்தி, மதுரா, காசி, மதுரை, ராமேஸ்வரம் முதலான தலங்களுக்குச் சென்று உபதேசங்கள் செய்து, பக்தர்களை நெறிப்படுத்தினார்.1296-ஆம் வருடம், தனது 22 – வது வயதில், பிறவியெடுத்ததன் நோக்கம் நிறைவேறியதாக உணர்ந்த ஞானேஸ்வர், பூனாவிற்கு 18 கல் தொலைவிலுள்ள “ஆலந்தி’ என்ற ஊரை அடைந்தார்.கார்த்திகை மாதம், கிருஷ்ண பட்சத்தில்
பக்தர்களிடம் தான் “ஜீவ சமாதி’ அடைய விரும்புவதாகச் சொன்னார். நாமதேவர் போன்ற மகானுபாவர்கள் நாம சங்கீர்த்தனங்களை விடிய விடியப் பாடினர். ஸ்ரீஞானேஸ்வரர் அப்படியே சமாதியில் ஆழ்ந்தார். சுற்றிலும் செங்கற்களை அடுக்கி சமாதி அமைத்தார்கள். ஜோதியோடு ஜோதியாக ஞானேஸ்வரர் ஐக்கியமானார்.

ஞானேஸ்வரர் எல்லா மக்கள் மனதிலும் பக்தியை விதைத்தார். வார்கரி பக்தி சம்பிரதாயத்தின் ஆத்மாவாக இருப்பது ஸந்த் ஸ்ரீ ஞானேஸ்வர் அருளிய ஹரிபாட் அபங்கங்கள். ஸ்ம்ருதி ஸ்ருதி புராணங்களின் சாரத்தை எளிய நடையில் தகுந்த உதாரணங்களுடன் பாமர ஜனங்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இந்த அபங்கங்கள் அனைத்தும் ரத்தினங்கள். அவர் பாடிய “அபங்கங்களை’ எல்லாரும் பாடி வருகிறார்கள். (குறையே இல்லாத பாடல்களை அ+பங்கம்=அபங்கம் என்பர்.) .

தனது ஞானம் மற்றும் உபதேசத்தால் “பகவன் நாம சங்கீர்த்தனமே சிறந்தது. அதைத் தவிர வேறு தத்துவமில்லை. ஹரி கீர்த்தனம் செய்யுங்கள். எங்கும் எல்லா உயிரிலும் பகவான் இருக்கிறார். ஜாதி, இன, குல, கோத்திர, பண, சமூஹ அந்தஸ்து பாராமல் யாவரும் ஹரிகீர்தனம் செய்து நற்கதி அடையுங்கள். நாம பக்தி நமக்கு பேதபுத்தியை நீக்கி சமத்வ புத்தியை கொடுக்கும்.“ என்று மக்களுக்கு இறையுணர்வூட்டி, மராட்டிய மண்ணில் பக்தி சம்பிரதாயத்துக்கு வித்திட்ட ஞானேஸ்வர் இன்றளவும் போற்றி வணங்கப்படுகிறார்.

Categories
Library Library Navagraha temples Navagraha temples

சனீஸ்வரர்

சனீஸ்வரபகவான்

நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார்.சனிஸ்வர பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. சனி பகவானைப் போல் கெடுப்பவரும் இல்லை.. கொடுப்பவரும் இல்லை’ என்ற சான்றோர் வாக்கை சரியாக புரிந்து கொண்டவர்கள் எவரும் அச்சம் கொள்ள மாட்டார்கள்.தனக்கு சிவபெருமான் இட்டக் கட்டளையின்படி, தன்னுடைய பணியை நீதிநிலை தவறாமல் வழங்கி வருபவர்தான் சனி பகவான்.சாயாபுத்ரன் – சாயையின் மகன் (சாயபுத்ரா)இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் பெற்றார்.

சாயாபுத்ரன்,மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.சூரியனுக்கு் உஷாதேவி மனைவி. எமன், யமுனை வைவஸ்தமனு என மூன்று குழந்தைகள் பிறந்தன.உஷாதேவி விஸ்வகர்மா மகளாவாள்.

உஷாதேவிக்கு சிவன் என்றால் உயிர். சிவனை காட்டிற்குள் போய் தவம் செய்ய விரும்பி தன் நிழலுக்கு உயிர் கொடுத்து வீட்டில் இருக்கச் செய்துவிட்டு தவம் செய்ய கிளம்பினாள். அவளின் ( நிழலின்) பெயர் சாயாதேவி.சாயாதேவிக்கு
தப்தி (பத்திரை), சாவர்ணிக மனு, சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள்சூரியனுக்கும் அவளுக்கும் பிறந்தவா்களில் ஒருவா் சிருதகர்மா எனும் சனீஸ்வரர்.

சூர்ய பகவான் ஒரு நாள் பழைய நினைவுகளை பற்றி பேசும் போது சாயாதேவி புரியாது பேச சூரியன் நீ யார் என்று கேட்டு கடும் கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டிவிட்டாா்.அதற்குள் சூரியன் சாயாதேவி சண்டை பற்றி சிவன் உஷாதேவியிடம் சொல்லிவிடுகிறார்.உஷாதேவி சூரியனிடம் நடந்ததை சொல்லி சமாதானம் செய்வித்தாா்.

சனீஸ்வரர் தாயை திட்டியது பொறுக்காமல் வீட்டை விட்டு வெளியேறி உங்களை விட பெரிய ஆளாக வந்து காட்டுகிறேன் என்று சூரியனிடம் சொல்கிறார்.சனீஸ்வரர் பிறந்ததில் இருந்தே அவர் கண்களால் யாரை பாா்கிறாரோ அவர்களுக்கு கெட்டது நடக்கும் ஆகையால் அவரது தாயாா் அவரை தனி அறையில் வைத்து வளர்க்கிறாா். சாயாதேவி அவளுக்கு தெரிந்த கதைகளை சொல்லிக்கொடுத்து வளர்த்தாள். சனீஸ்வரர் அம்மா பிள்ளை. சூரியனை விட பெரிய கிரகப்பதவி வேண்டும் என்று காசிக்கு சென்று சிவனை நினைத்து கடும் தவம் செய்தார் சிவன் பைரவராக வந்து அவருக்கு ஆசானாய் தகப்பனாய் இருந்து அனைத்து கலைகளையும், வேதங்களையும் கற்று கிரகப்பதவி கொடுத்தார்.முதலில் அவர் வேலை முன் ஜென்ம பாவங்களுக்கும், அவரின் கிரகத்தின் பார்வை வரும் வரை செய்த பாவங்களுக்கும் தண்டனை மட்டும் தர வேண்டிய வேலை தரப்பட்டது.யாரும் அவரை மதிக்கவில்லை. மற்ற கிரகங்களை வணங்கியவா்கள் சனீஸ்வரை வணங்காமல் சென்றனர்.தன்னை யாரும் மதிக்கவில்லை என்ற கோபத்தோடு திருகொள்ளிகாடு வந்து கடும் தவம் செய்தார்.

இவரது தவத்தால் வந்த வெப்பம் சுற்றி இருந்த காடுகளை எரித்தது. சிவனும், பாா்வதிதேவியும் வந்து அவரை சாந்தப்படுத்தி இன்று முதல் இந்த பூமி உன்னுடையது என்று கூறி சிவனின் தலையில் இருந்த கீரிடத்தை எடுத்து சனீஸ்வரர் தலையில் வைத்து ஈஸ்வர பட்டம் அளித்தார்.நீ கொடுக்க நினைப்பதை யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதனை யாரும் என்றும் அழிக்க முடியாது என்று வரம் பெற்றார். திருகொள்ளிகாடு திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கூட்டுரோடு என்ற இடத்தில் இருந்து 10 கி. மீ தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டும் சனீஸ்வரர் எதிரில் நின்று அவரை பாா்த்தவண்ணம் தரிசிக்கலாம்.பைரவாின் கண்ணும் சனீஸ்வரர் கண்ணும் நேருக்கு நேர் பாா்த்தவண்ணம் எதிரெதிரே நின்றவண்ணம் அருள்பாலிக்கின்றனா்.
அருகிலேயே ஸ்ரீ மகாலெட்சுமி தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.

திருவானைக்கோவில்

திருவானைகோவிலில் சனீஸ்வரர் அவரது தாய் சாயாதேவியோடு அருள்பாலிக்கிறார். மனைவி நீலாதேவியுடன் மகன்கள் மாந்தி, குந்தனுடன்

திருநரையூர்

நாச்சியார் கோவில் அருகே உள்ள திருநரையூரில் தசரதனுக்கு அருள் கொடுத்தவண்ணம் குடும்பத்துடன் காக வாகனம் கொண்டு தனி இரும்பு கொடி மரம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

குச்சனூர்

தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.

திருநள்ளாறு

திருநள்ளாறு கோவிலில்சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருபாலிக்கிறார்.நவகிரக கோவில்களில் ஒன்றிது.திருநள்ளாறு கோவில் கோபுரத்திற்கும் சனி கிரகத்திற்கும் இடையே நீல வண்ண ஒளிகதிா் எப்போதும் பாய்ந்து கொண்டு உள்ளது. செயற்கைக்கைகோள் ஒவ்வொரு முறையும் நீல வண்ண ஒளிக் கதிரை கடக்கும் போது அது அதன் வேகத்தையும் செயல்பாட்டையும் சிறிது நேரம் இழக்கிறது. பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது.

பார்வதியின் ஆசை

பார்வதிக்கு பூமியில் பொிய மாளிகை கட்ட ஆசை
சிவனிடம் கேட்டவுடன் நாமோ சனீஸ்வரரை அதிபதியாக்கிவிட்டோம்
நான் போய் அவரிடம் சொல்லிவிட்டு
வந்தவுடன் கட்டிடம் கட்டலாம் என்று சொல்லி உடுக்கை ஒலி கேட்டால் அனுமதி இல்லை என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டாா். தேவதச்சனுடன் பார்வதி கயிலையில் காத்து இருக்க சனீஸ்வரரை சிவன் சந்தித்து மாளிகை கட்ட அனுமதி கேட்கிறார் சனீஸ்வரரோ பதறிப்போய் சிவனின் காலில் விழுந்து சிவனே என்று கால்தொட்டு கும்பிட்டு நான் உங்கள் சிவ தாண்டவத்தை கண்டதே இல்லை எல்லோரும் உள்ள சபையில் என் கண்ணை கட்டிவிடுகிறாா்கள் நீங்களோ தனியாக வந்துள்ளீா்கள் எனக்காக ஒரே ஒரு முறை ஆடிக்காட்டுங்கள் என்று கேட்க சிவனும் அழகாக ஆக்ரோசமாக சிவதாண்டவம் ஆடினார். சிவதாண்டவம் ஆடும்போது உடுக்கை தானாக வேகமாக அடிக்க பாா்வதிதேவி கோபித்துக்கொண்டு தேவதச்சனுடன்
புறப்பட்டார்.மாளிகை கட்டும் ஆசை இப்படி ஆகிவிட்டதே என்று கோபமாக இருந்தவரை சமாதானபடுத்தி நடந்ததை சொல்கிறார் சிவன்.

மறு முறை போய் கட்டிக்கொள்ளலாம்
தேவதச்சனை அழைக்கிறேன் என்று சொன்னதற்கு வேண்டாம் இனி எனக்கு பூமியில் மாளிகை கட்டும் ஆசையில்லை என்று சொல்லிவிடுகிறார்.பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்.ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார்.

சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.சனிஸ்வர பகவானின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, அண்டங்காகம் இவரது வாகனம். நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம்.

முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.கருத்த உடலைக் கொண்ட இவர், துணிவு மிகுந்தவர். நீல நிற உடை, நீல மலர் மாலை, நீல மணி ஆகியவற்றை தரித்தவர். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி. எள் கலந்து உணவும், நல்லெண்ணெய் தீபமும் இவரது விருப்பமாகும். இவர் வழங்கும் பலன்களைப் பார்த்து பலரும் இவரை, ‘கெடுதல் தரும் கிரகம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு.ஆனால் உண்மையில், முற்பிறவியில் ஒருவர் செய்த நன்மை, தீமைகளுக்குத் தகுந்தாற்போலவே, சனி பகவான் தன்னுடைய பலன்களை வழங்கி வருகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்து, சுப கிரக சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று, சுய ஆதிபத்தியம் அடைந்து, சுப வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்வில் இமாலய வளர்ச்சியை அடைவார். சனி பகவான் மேற்கு திசைக்குரியவர். பாவக் கிரக வரிசையில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. நால்வகை உபாயங்களில், பேத உபாயத்திற்கு உரியவர். ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களை வழிபடும் பொழுது, சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சாலச் சிறந்தது.

சனி பகவான் கிரகஸ்துதி

நீலாஞ்சன ஸமா பாஸம் ரவி புத்ரம், யமா க்ரஜம் ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்

சனி காயத்ரி மந்திரம்

‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்