Categories
Library Library Navagraha temples Navagraha temples

சனீஸ்வரர்

சனீஸ்வரபகவான்

நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார்.சனிஸ்வர பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. சனி பகவானைப் போல் கெடுப்பவரும் இல்லை.. கொடுப்பவரும் இல்லை’ என்ற சான்றோர் வாக்கை சரியாக புரிந்து கொண்டவர்கள் எவரும் அச்சம் கொள்ள மாட்டார்கள்.தனக்கு சிவபெருமான் இட்டக் கட்டளையின்படி, தன்னுடைய பணியை நீதிநிலை தவறாமல் வழங்கி வருபவர்தான் சனி பகவான்.சாயாபுத்ரன் – சாயையின் மகன் (சாயபுத்ரா)இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் பெற்றார்.

சாயாபுத்ரன்,மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.சூரியனுக்கு் உஷாதேவி மனைவி. எமன், யமுனை வைவஸ்தமனு என மூன்று குழந்தைகள் பிறந்தன.உஷாதேவி விஸ்வகர்மா மகளாவாள்.

உஷாதேவிக்கு சிவன் என்றால் உயிர். சிவனை காட்டிற்குள் போய் தவம் செய்ய விரும்பி தன் நிழலுக்கு உயிர் கொடுத்து வீட்டில் இருக்கச் செய்துவிட்டு தவம் செய்ய கிளம்பினாள். அவளின் ( நிழலின்) பெயர் சாயாதேவி.சாயாதேவிக்கு
தப்தி (பத்திரை), சாவர்ணிக மனு, சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள்சூரியனுக்கும் அவளுக்கும் பிறந்தவா்களில் ஒருவா் சிருதகர்மா எனும் சனீஸ்வரர்.

சூர்ய பகவான் ஒரு நாள் பழைய நினைவுகளை பற்றி பேசும் போது சாயாதேவி புரியாது பேச சூரியன் நீ யார் என்று கேட்டு கடும் கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டிவிட்டாா்.அதற்குள் சூரியன் சாயாதேவி சண்டை பற்றி சிவன் உஷாதேவியிடம் சொல்லிவிடுகிறார்.உஷாதேவி சூரியனிடம் நடந்ததை சொல்லி சமாதானம் செய்வித்தாா்.

சனீஸ்வரர் தாயை திட்டியது பொறுக்காமல் வீட்டை விட்டு வெளியேறி உங்களை விட பெரிய ஆளாக வந்து காட்டுகிறேன் என்று சூரியனிடம் சொல்கிறார்.சனீஸ்வரர் பிறந்ததில் இருந்தே அவர் கண்களால் யாரை பாா்கிறாரோ அவர்களுக்கு கெட்டது நடக்கும் ஆகையால் அவரது தாயாா் அவரை தனி அறையில் வைத்து வளர்க்கிறாா். சாயாதேவி அவளுக்கு தெரிந்த கதைகளை சொல்லிக்கொடுத்து வளர்த்தாள். சனீஸ்வரர் அம்மா பிள்ளை. சூரியனை விட பெரிய கிரகப்பதவி வேண்டும் என்று காசிக்கு சென்று சிவனை நினைத்து கடும் தவம் செய்தார் சிவன் பைரவராக வந்து அவருக்கு ஆசானாய் தகப்பனாய் இருந்து அனைத்து கலைகளையும், வேதங்களையும் கற்று கிரகப்பதவி கொடுத்தார்.முதலில் அவர் வேலை முன் ஜென்ம பாவங்களுக்கும், அவரின் கிரகத்தின் பார்வை வரும் வரை செய்த பாவங்களுக்கும் தண்டனை மட்டும் தர வேண்டிய வேலை தரப்பட்டது.யாரும் அவரை மதிக்கவில்லை. மற்ற கிரகங்களை வணங்கியவா்கள் சனீஸ்வரை வணங்காமல் சென்றனர்.தன்னை யாரும் மதிக்கவில்லை என்ற கோபத்தோடு திருகொள்ளிகாடு வந்து கடும் தவம் செய்தார்.

இவரது தவத்தால் வந்த வெப்பம் சுற்றி இருந்த காடுகளை எரித்தது. சிவனும், பாா்வதிதேவியும் வந்து அவரை சாந்தப்படுத்தி இன்று முதல் இந்த பூமி உன்னுடையது என்று கூறி சிவனின் தலையில் இருந்த கீரிடத்தை எடுத்து சனீஸ்வரர் தலையில் வைத்து ஈஸ்வர பட்டம் அளித்தார்.நீ கொடுக்க நினைப்பதை யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதனை யாரும் என்றும் அழிக்க முடியாது என்று வரம் பெற்றார். திருகொள்ளிகாடு திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கூட்டுரோடு என்ற இடத்தில் இருந்து 10 கி. மீ தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டும் சனீஸ்வரர் எதிரில் நின்று அவரை பாா்த்தவண்ணம் தரிசிக்கலாம்.பைரவாின் கண்ணும் சனீஸ்வரர் கண்ணும் நேருக்கு நேர் பாா்த்தவண்ணம் எதிரெதிரே நின்றவண்ணம் அருள்பாலிக்கின்றனா்.
அருகிலேயே ஸ்ரீ மகாலெட்சுமி தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.

திருவானைக்கோவில்

திருவானைகோவிலில் சனீஸ்வரர் அவரது தாய் சாயாதேவியோடு அருள்பாலிக்கிறார். மனைவி நீலாதேவியுடன் மகன்கள் மாந்தி, குந்தனுடன்

திருநரையூர்

நாச்சியார் கோவில் அருகே உள்ள திருநரையூரில் தசரதனுக்கு அருள் கொடுத்தவண்ணம் குடும்பத்துடன் காக வாகனம் கொண்டு தனி இரும்பு கொடி மரம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

குச்சனூர்

தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.

திருநள்ளாறு

திருநள்ளாறு கோவிலில்சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருபாலிக்கிறார்.நவகிரக கோவில்களில் ஒன்றிது.திருநள்ளாறு கோவில் கோபுரத்திற்கும் சனி கிரகத்திற்கும் இடையே நீல வண்ண ஒளிகதிா் எப்போதும் பாய்ந்து கொண்டு உள்ளது. செயற்கைக்கைகோள் ஒவ்வொரு முறையும் நீல வண்ண ஒளிக் கதிரை கடக்கும் போது அது அதன் வேகத்தையும் செயல்பாட்டையும் சிறிது நேரம் இழக்கிறது. பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது.

பார்வதியின் ஆசை

பார்வதிக்கு பூமியில் பொிய மாளிகை கட்ட ஆசை
சிவனிடம் கேட்டவுடன் நாமோ சனீஸ்வரரை அதிபதியாக்கிவிட்டோம்
நான் போய் அவரிடம் சொல்லிவிட்டு
வந்தவுடன் கட்டிடம் கட்டலாம் என்று சொல்லி உடுக்கை ஒலி கேட்டால் அனுமதி இல்லை என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டாா். தேவதச்சனுடன் பார்வதி கயிலையில் காத்து இருக்க சனீஸ்வரரை சிவன் சந்தித்து மாளிகை கட்ட அனுமதி கேட்கிறார் சனீஸ்வரரோ பதறிப்போய் சிவனின் காலில் விழுந்து சிவனே என்று கால்தொட்டு கும்பிட்டு நான் உங்கள் சிவ தாண்டவத்தை கண்டதே இல்லை எல்லோரும் உள்ள சபையில் என் கண்ணை கட்டிவிடுகிறாா்கள் நீங்களோ தனியாக வந்துள்ளீா்கள் எனக்காக ஒரே ஒரு முறை ஆடிக்காட்டுங்கள் என்று கேட்க சிவனும் அழகாக ஆக்ரோசமாக சிவதாண்டவம் ஆடினார். சிவதாண்டவம் ஆடும்போது உடுக்கை தானாக வேகமாக அடிக்க பாா்வதிதேவி கோபித்துக்கொண்டு தேவதச்சனுடன்
புறப்பட்டார்.மாளிகை கட்டும் ஆசை இப்படி ஆகிவிட்டதே என்று கோபமாக இருந்தவரை சமாதானபடுத்தி நடந்ததை சொல்கிறார் சிவன்.

மறு முறை போய் கட்டிக்கொள்ளலாம்
தேவதச்சனை அழைக்கிறேன் என்று சொன்னதற்கு வேண்டாம் இனி எனக்கு பூமியில் மாளிகை கட்டும் ஆசையில்லை என்று சொல்லிவிடுகிறார்.பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்.ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது. சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம். நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு. பகை கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார்.

சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.சனிஸ்வர பகவானின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது, அண்டங்காகம் இவரது வாகனம். நிறம் கருமை, திசை மேற்கு, தேவதை யமன், சாஸ்தா, சமித்து வன்னி, தானியம் எள்ளு, புஷ்பம் கருங்குவளை, சுவை கசப்பு ஆகும்.சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம்.

முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.கருத்த உடலைக் கொண்ட இவர், துணிவு மிகுந்தவர். நீல நிற உடை, நீல மலர் மாலை, நீல மணி ஆகியவற்றை தரித்தவர். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி. எள் கலந்து உணவும், நல்லெண்ணெய் தீபமும் இவரது விருப்பமாகும். இவர் வழங்கும் பலன்களைப் பார்த்து பலரும் இவரை, ‘கெடுதல் தரும் கிரகம்’ என்றும் குறிப்பிடுவதுண்டு.ஆனால் உண்மையில், முற்பிறவியில் ஒருவர் செய்த நன்மை, தீமைகளுக்குத் தகுந்தாற்போலவே, சனி பகவான் தன்னுடைய பலன்களை வழங்கி வருகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்து, சுப கிரக சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று, சுய ஆதிபத்தியம் அடைந்து, சுப வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்வில் இமாலய வளர்ச்சியை அடைவார். சனி பகவான் மேற்கு திசைக்குரியவர். பாவக் கிரக வரிசையில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. நால்வகை உபாயங்களில், பேத உபாயத்திற்கு உரியவர். ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களை வழிபடும் பொழுது, சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சாலச் சிறந்தது.

சனி பகவான் கிரகஸ்துதி

நீலாஞ்சன ஸமா பாஸம் ரவி புத்ரம், யமா க்ரஜம் ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்

சனி காயத்ரி மந்திரம்

‘ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்

Categories
Library Library Navagraha temples Navagraha temples

கேது

.

கேது என்றால் நிழல் கேது சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் ஆகிறது.

கேதுவுக்கு சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்வார்.ராகுக்கு உள்ள பண்புகள் அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். இவருக்கு ஞானகாரகன், மோட்சகாரகன் என்றும் பெயர்கள் உண்டு.

வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்கும், எந்த ஓரு பிரச்சனையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளவர்.எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே.

வியாதியில் இருந்து நிவாரணம் தருவதும், பகைவரை முறியடிக்க செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கு கேதுவே காரணம்.கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி. விபத்துகளையும். தாகாத சகவாசத்தையும் வழங்குவார்.

சுவா்பானு அரக்கா்களின் ராஜா குரு தன்வந்திரி மேரு மலையை தேவர்களும் அசுரர்களும் கடைய
தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளியே வந்தவுடன் தேவா்க்கும் அசுரர்களுக்கும் சண்டை வரவே
பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து வந்து இருவரிடமும் சமாதானம் பேசி வரிசையாக உட்காருங்கள் நான் பருமாருகிறேன் என்று சொல்லி தேவர்கள் உள்ள பகுதியில் இருந்து பாிமாற ஆரம்பிக்கிறார்.

தேவர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் பாிமாருவதை கண்ட சுக்கிராசாாியா் அசுரா் தலைவன் சுவா்பானுவை தேவா்களோடு உட்கார வைத்து விடுகிறாா்.அமிா்தத்தை சாப்பிட்டு முடிக்கையில் சூரியனும் சந்திரனும் அதோ அசுரா் இதில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார் என மோகினியாகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் காட்ட அவர் மோகினி அவதாரம் கலைந்து விஷ்ணு சக்கரத்தை ஏவி தலையை வெட்டுகிறாா்.

சுவா்பானுவின் தலை தனியாகவும் முண்டம் தனியாகவும் போகிறது. ஆனால் இரண்டும் அமிர்தம் சாப்பிட்டதால் தலை தனியே உடல் தனியே உயிருடன் கிடந்தது.முண்டம் மினி என்பவருக்கு கிடைத்து அதனை மகன் போல் வளர்க்கிறாா்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவை வேண்டி தவம் செய்ய விஷ்ணு முண்டத்திற்கு பாம்பின் தலை பொருத்தி கேதுவாக ஆக்கி கிரகங்களில் சோ்த்தாா்.மேலும் கிரகங்களின் அமைப்பில் இருந்து வித்தியாசத்தை பெற வானவெளியில் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்ய இறைவன் கட்டளை இடுகிறார், இதை ஏற்று ராகு கேது இருவரும் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்கின்றனர்.

நட்சத்திரம் – அஸ்வினி மகம் மூலம்
தானியம் – கொள்ளு
மலர் – செவ்வரளி
நவரத்தினம் – வைடூரியம்
எண் – 7
நிறம் – சிவப்பு
உயரம் – மத்திமம்
நட்பு கிரகம் – சூரியன் சந்திரன் செவ்வாய்
பகை கிரகம் – சனி சுக்கிரன்
திசை வருடம் – 7 வருடங்கள்
லிங்கம் – அலி
பாஷை – அன்னிய பாஷை
ஜாதி – கலப்பு ஜாதி
குணம் – கோபமுடையவர்
நோய் – பித்தம்
திசை – வடமேற்கு
சமித்து – தர்ப்பை
வாகனம் – சிங்கம்
சுவை – புளிப்பு
உலோகம் – துருக்கல்
ராசியில் சஞ்சரிக்கும் காலம் – 11 வருடங்கள்
தேவதை – இந்திரன்
வஸ்திரம் – பலவண்ணம்

கேது மூல மந்திர ஜபம்:

“ஓம் ச்ரம் ச்ரீம் ச்ரௌம் ஷக் கேதவே நமஹ”,

கேது ஸ்தோத்திரம்

பலாச புஸ்பஸ்ஙகாசம்
தாராகாக்ரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!!

கேது காயத்ரி மந்திரம்

அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி|
தந்நோ கேது: ப்ரசோதயாத்||

கீழப்பெரும்பள்ளம்

இவ்வூரில் தனி சன்னதியில்
கேதுபகவான் நவகிரக மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார்.

திருப்பாம்புறம்

ராகு ,கேது இவர்களை
திருப்பாம்புறம்.
கோவிலில் ஒன்றாக தரிசிக்கலாம்.

திருப்பாம்புறத்தில் இருவரும் நெஞ்சில் ஸ்ரீ சிவனை தாங்கி் தவம் இருக்கும் காட்சி காண கிடைக்காத ஒன்று.

நவகிரகங்களான் நிறம்.

நம் கண்ணுக்கு தெரியும் கோள்கள் டெலஸ்கோப் மூலமாக பார்ப்பதை சேர்த்து சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி இவர்கள் அந்தரத்தில் சுற்றினாலும் வழி மாறாமல் இருக்க எதிர்விசையாக கண்ணுக்கு புவபடாமல் ராகு கேது

நவகிரகங்கள் ஓன்பது இந்த ஒன்பது கோள்களின் நிறம்

சிகப்பு சூரியன்
வெள்ளை சந்திரன்
சிகப்பு செவ்வாய்
பச்சை புதன்
மஞ்சள் வியாழன்
வெள்ளை வெள்ளி
கரு நீலம் சனி
அனைத்து நிறமும் சேர்ந்தவை
ராகு கேது

இப்போது கோள்களின் நிறம் பல உபகரணங்கள் கொண்டு கண்டுபடிக்கப்பட்டதை பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நம் மக்கள் நவகிரகத்திற்கு ஆடையாக இதே நிறம் கொண்ட துணியை அணிவித்தார்கள்அந்த நவகிரகங்களின் சக்தி கொண்டு நாம் இயங்குகிறோம். நம் உடலை இயக்கும் சக்தி பெற்றிருந்தாலும் நவகிரகங்களுக்கு கோவிலில் நம் முன்னோர் கொடுத்து இருக்ககூடிய இடத்தை பாருங்கள். உள்சுற்று நிலைக்கு வெளியே….

Categories
Library Library Navagraha temples Navagraha temples

குரு


வியாழன்
பிரகஸ்பதி

சூர்ய மண்டலத்தில் ஐந்தாவது கோள்.குரு நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர்.நவகிரகங்களில் வியாழன் கிரகம் ராஜகிரகம் ஆகும்.நம்முடைய வழிபாட்டின் மூலமாக இறைசக்தியை நம்மனத்துள் நிரப்புபவராகவும் உள்ளவர் இவர். இதனாலேயே இவரைத் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும் மூலப்பொருளான காரகன் என்பார்கள்.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு.ஒன்று பொருட்செல்வம், மற்றொன்று புத்திர யோகம். இந்த இரண்டிற்கும் காரகன் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குருபகவான். வியாழனுக்கு “குரு” என்றும் “பிரகஸ்பதி” என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றாலே, அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் . கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு.குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது.

குருவிற்கு தேவகுரு, சுநாசார்யர், வாசீகர், பீதாம்பரம், யுவர், திரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிஞ்ஞர், நீதிகாரர், தாராபதி, கிரகபீடாபகாரர், சவும்யமூர்த்தி போன்ற பல பெயர்கள் உள்ளன.தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் மூண்ட போதெல்லாம் போரில் பல தேவர்கள் மாண்டனர்.இறந்தவர்களை சிறந்த மூலிகைகளின் மூலமாக, மீண்டும் மீண்டும் உயிர்பெறச் செய்தார் பிரகஸ்பதி. எனவே குருவுக்கு ‘ஜீவன்’ என்ற பெயரும் உண்டு.நவகிரகங்களில் தலை சிறந்தவராக குரு கருதப்படுகிறார்.

பிரகஸ்பதி, தேவர்களுக்கு தலைவராகவும், குருவாகவும் இருப்பவர். பிரம்மாவுக்கும் பிடித்தமானவர்.இவா் தந்தை ஆங்கீரஸா் இவர் சப்தரிஷிகளில் ஒருவர். தாய் சுரூபா. ஆங்கீரஸா் பிரம்மாவின் புத்திரன், பிரகஸ்பதி பிரம்மாவின் பேரன் ஆவார். இவருக்கு மூன்று மனைவிகள் முதலாமவா் சுபா இவருக்கு ஏழு பெண் குழந்தைகள். பானுமதி, ராக்கா, அா்ச்சிஸ்மதி, மகாமதி, மகிஸ்மதி, சினிவாலி, ஹவிஸ்மதி ஆகியோா்.தாரா இரண்டாவது மனைவி ஆவார். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள், ஒரு மகள். மூன்றாவது மனைவி மமதாவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள் கச்சா, பரத்வாஜ் ஆகியோா் பிறந்தனா் . ருக் வேதத்தில் அவரது வயது 3000 என்று குறிப்பிட்ட போது பூமியின் வயது சுமார் 5000 ஏசு பிறப்பதற்கு முன். இவா் கடவுளுக்கும், உலகில் உள்ள அனைத்து ஜூவராசிகளுக்கும் குரு ஆவார்.

பிரகஸ்பதி குருவாகிய கதை

பிரகஸ்பதி அன்றைக்கு உலவி வந்த நட்சத்திரங்களை வைத்து ஜாதகம் ஜோசியம் எழுதி வைத்து இருந்தாா். பிரகஸ்பதியின் மகள் ஒருவரின் ஜாதகத்தை கணித்த போது சுமங்கல பிராப்தி இல்லாமல் இருப்பது தெரியவந்தது.முதலிரவின் போது மாப்பிள்ளை
இறந்துவிடுவது போல கணக்கு வந்தது இருந்தும் பெண்ணிற்கு திருமணம் நடத்தி முதலிரவிற்கும் ஏற்பாடு செய்தார். மாப்பிள்ளை பெண்ணை தவிர பிரகஸ்பதி மட்டும் வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களை வெளியே போகச் செய்துவிட்டாா். இவா் குறித்த நேரமும் வந்தது கதவு இடுக்கின் வழியாக மாப்பிள்ளையை பார்த்த வண்ணம் கண்களைக் கூட இமைக்காமல் நின்று இருந்தாா்.மாப்பிள்ளை இறக்கவே இல்லை. பொழுதும் புலா்ந்தது

பிரகஸ்பதி குற்ற உணர்வில் ஒரு தந்தையாக பாா்க்க கூடாததையெல்லாம் பாா்த்துக்கொண்டு இருந்து விட்டோமே என்று எண்ணி அவர் குறித்து வைத்த ஜாதகம் மற்றும் நட்சத்திர குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என ஆற்றை நோக்கி போய் கொண்டு இருந்தவரை முதிய வயது முதிர்ந்த பெரியவர் ஒருவா் தடுத்து ஏன் முக வாட்டத்துடன் வேகவேகமாக எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டவுடன் அழுதவண்ணம் நடந்தவற்றை சொல்கிறார். பெரியவர் நீ குருவாக ஆகவேண்டும் என்று படைக்கப்பட்டவன்
நீ பார்த்தால் நீ யாரை பாா்க்கிறாயோ அவருக்கு மரணம் வராது என்று சொல்லி பிரபஸ்தீா்த்தராவுக்கு சென்று ஆற்றின் கரையோரம் தவம் செய் என்று சொல்லி முதியவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்தாா்,. பிரகஸ்பதி கடும் தவம் செய்தார்.

சிவன் மனமுருகி காட்சி கொடுத்து அவருக்கு குரு பட்டம் அளித்து தேவா்க்கும் நமக்கும் குருவாக்கினாா்.இவா் மஞ்சள் நிறம் உடையவர். கையில் பிரம்புடன் இருப்பார்.
யானை இவரது வாகனம். குரு பாா்க்க கோடி நன்மை. குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பதோடு தம்மால் ஏற்படக்கூடிய கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு தாமே மருந்தாக அருள்புரிகிறார்.

வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும்.தீர்க்க ஆயுள், வாக்குவன்மை, கல்வியில் மேன்மை, மனதுக்கு உகந்த உத்தியோகம் மற்றும் தொழில், திருமண யோகம் ஆகிய பேறுகளுக்கு குருவின் திருவருள் அவசியம் தேவை.தனுசு, மீனம் ஆகிய உபயராசிகளின் அதிபதி இவர். சூரியனை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே!

இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறார்.பிரகஸ்பதி இருக்கும் மண்டலம் பொன்மயமான மண்டலமாம். இந்த மண்டலத்தில் வேறுவகையான மனிதர்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த பிரகஸ்பதி மண்டலத்தில் இருக்கும் மனிதர்கள் மிகச் சிறந்த அறிவு உடையவர்களாம்.

பிரகஸ்பதியும் மிகுந்த அறிவாளியே. விஞ்ஞானிகளும் அவர்களின் இடைவிடாத ஆராய்ச்சியில், இந்த பிரகஸ்பதி மண்டலத்தில் அறிவுடைய மானிடர்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கருதுகிறார்களாம். இந்த பிரகஸ்பதி மண்டலம் பூமியைவிட பல மடங்கு பெரியதாக இருந்தாலும், மிக மிக லேசானதாம். அங்கு வசிப்பர்களும் லேசாகவே இருப்பார்களாம். இவர்களைத்தான் புராணங்கள் “தேவகணத்தினர்” என்று கூறியுள்ளனர். குரு பிரகஸ்பதியை சிவனாகிய தெட்சிணாமூர்த்தி தென்முக கடவுளாகவும் வழிபடுகின்றனர்.குருவை உங்கள் உருவம் வைத்து வழிபடலாமா என அவரை கேட்டதற்கு
தெட்சிணாமூர்த்தியுள் புகுந்து உருவம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

சொந்த வீடு – தனுசு, மீனம்
உச்சராசி – கடகம்
நீச்சராசி – மகரம்
திசை – வடக்கு
அதிதேவதை – பிரம்மா
நிறம் – மஞ்சள்
வாகனம் – யானை
தானியம் – கொண்டைக்கடலை
மலர் – வெண்முல்லை
வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் – புஷ்பராகம்
நிவேதனம் – கடலைப்பொடி சாதம்
உலோகம் – தங்கம்
இனம் – ஆண்
உறுப்பு – தசை
நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் – புதன், சுக்கிரன்
மனைவி – தாரை
பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள்
கும்பகோணத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவில்.
திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில்
ஆலங்குடி
திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

குரு பகவான் காயத்ரி :

வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

Categories
Library Library Navagraha temples Navagraha temples

ராகு

ராகு பகவான்

ராகு என்றால் இருட்டு நிழல் கிரகம் ஆகும்.ராகு பார்வதியின் சக்தி அம்சமாக இருக்கிறார். மனிதத் தலையும் பாம்பு உடம்பும் கொண்டவர் ராகு பகவான். நவக்கிரகங்களில் ஆற்றல் மிக்கவர், அதிர்ஷ்டக்காரர் என்ற பெயர் பெற்றவர் ராகு. இவருக்கு எந்த வீடும் சொந்தம் இல்லை. சூரிய சந்திரரையும் பலம் இழக்கச்செய்து கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகுக்கு உண்டு.

எந்த ராசியில் இருக்கிறாரோ, எந்த கிரகத்தால் பார்க்கப்படுகிறாரோ, எந்த இடத்தில் சேர்கிறாரோ அந்த இடத்தில் முழு பலன்களையும் தரும் அதிர்ஷ்டகாரர் ராகு. ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச்செல்லும் ஆற்றல் ராகுவுக்கு உள்ளது. யோகக்காரகன்’ என்று போற்றப்படும் ராகு பகவான் செல்வத்தைக் கண்மூடித்தனமாக அள்ளித்தரும் அற்புத வள்ளல். அதேசமயம், ராகு தோஷம் உள்ளவர்களுக்கு பாதகமான பலன்கள் ஏற்படும்.இவரின் அதிதேவதைகள் காளி, துர்கை, கருமாரியம்மன். குணங்களில் ‘தாமஸ குணம்’ கொண்டவராகவும், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.

ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார். இவரது தசாபுக்தி 18 ஆண்டுகளாகும். ‘ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை… ராகுவைப் போல் கெடுப்பவரும் இல்லை’ என்று இவ்வுலகம் புகழ்ந்து போற்றும்படியாகச் செயல்படுபவர் ராகு மட்டுமே.

சுவா்பானு அரக்கா்களின் ராஜாகுரு சுக்கிராசாாியா். தேவா்க்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்தது அதில் அசுரர்கள் அதிகமுறை ஜெயித்து சில தேவர்களின் உயிர்களையும் பறித்தாா்கள். தேவர்கள்
ஸ்ரீ பிரம்மாவிடம் உயிர் பலி தடுக்க வீரம் உண்டாக வழி கேட்டார்கள். அவர் பாற்கடலை கடையச் சொன்னாா்.பாற்கடலை கடைய மேருமலை மத்தாகவும், வாசுகி எனும் ஐந்து தலை நாகம் கயிறு ஆகவும் இருக்க சம்மதித்தது.

அசுரர்களுக்கும் தேவா்க்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு பாம்பின் தலை பகுதியை அசுரர்கள் பிடித்தும் வால் பகுதியை தேவர்கள் பிடித்து பாற்கடலை கடைய முடிவாகிறது. பாற்கடலை கடையும் போது பாம்பின் வாயிலிருந்து ஆல கால விஷம் வருவதை பாா்த்த சிவன் அந்த விஷத்தை பிடித்து வாயில் போட்டுக்கொண்டாா். அதனை பாா்த்த வண்ணம் இருந்த பாா்வதி சிவனின் கழுத்தை இறுக்கி பிடித்து விஷம் உள் இறங்காவண்ணம் செய்து விட்டார். ஆல கால விஷம் உலகத்தை அழிக்கவல்லது. அதனை உண்ட சிவன் நீலகண்டன் ஆனாா்.

தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளியே வந்தவுடன் தேவா்க்கும் அசுரர்களுக்கும் சண்டை வரவே பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து வந்து இருவரிடமும் சமாதானம் பேசி வரிசையாக உட்காருங்கள் நான் பருமாருகிறேன் என்று சொல்லி தேவர்கள் உள்ள பகுதியில் இருந்து பாிமாற ஆரம்பிக்கிறார். தேவர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் பாிமாருவதை கண்ட சுக்கிராசாாியா் அசுரா் தலைவன் சுவா்பானுவை தேவா்களோடு உட்கார வைத்து விடுகிறாா்.அமிா்தத்தை சாப்பிட்டு முடிக்கையில் சூரியனும் சந்திரனும் அதோ அசுரா் இதில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார் என மோகினியாகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் காட்ட அவர் மோகினி அவதாரம் கலைந்து விஷ்ணு சக்கரத்தை ஏவி தலையை வெட்டுகிறாா். சுவா்பானுவின் தலை தனியாகவும் முண்டம் தனியாகவும் போகிறது. துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான்.

இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார்.இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம்

ஸ்ரீ மகாவிஷ்ணு கிரகங்களின் அமைப்பில் இருந்து வித்தியாசத்தை பெற வானவெளியில் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்ய கட்டளை இடுகிறார், இதை ஏற்று ராகு கேது இருவரும் அப்ரதட்சனமாக சஞ்சாரம் செய்கின்றனர்.மங்கள ராகுவாக திருநாகேஸ்வரத்தில் …நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலம் என்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் ராகுவுக்கு இங்கு தனி சன்னதி எழுப்பப்பட்டது.

இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் “மங்கள ராகு”வாக அருளுவது விசேஷம். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, ராஜயோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.

இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற லாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். தினமும் ராகு காலத்தில் பால் அபிசேகம் மற்றும் இராகு தோஷ பரிகார பூஜை செய்யப்படுகிறது.இவருக்கு உகந்த மலர் மந்தாரை.

1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.

உகந்த கிழமை – சனிக்கிழமை

உகந்த நட்சத்திரம் – திருவாதிரை, சுவாதி, சதயம்

நட்பு கிரகம் – புதன், சுக்ரன், சனி

பிடித்தமான மலர் – மந்தாரை

விரும்பும் சமித்து – அருகு

உரிய ரத்தினம் – கோமேதகம்

அதிதேவதை -பத்திரகாளி, துர்க்கை

உச்ச வீடு – விருச்சிகம்

நீச்ச வீடு – ரிஷபம்

காரக அம்சம் – யோகம்

விரும்பும் தான்யம் – உளுந்து

பிடித்த உலோகம் – கருங்கல்

விரும்பும் வாகனம் – ஆடு

மனைவியின் பெயர் – கிம்ஹிசை

உரிய திசை – தென்மேற்கு

பிடித்த சுவை – புளிப்பு

காலம் – ராகு காலம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு ராசியில் தங்குவார், 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார்.

ராகு மூல மந்திரம் :

ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே
ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா

ராகு காயத்ரி:

நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

Categories
Library Library Navagraha temples Navagraha temples

வெள்ளி

சுக்கிரன்
சுக்கிராச்சாரியார்

ஒன்பது கிரகங்களிலும் மிகமிகத் தனித்தன்மை வாய்ந்தவர் சுக்கிரன் ஆவார்.நல்ல மனைவி, வீடு, வாகனம், மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே. அதனால் லௌகீக வாழ்க்கைச் சுகங்களுக்கு சுக்கிரனே அதிபதி.வம்ச விருத்திக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். ஆகவே`களத்திரகாரகன்’ என்றும் அழைக்கின்றனர். கலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்துக்கும் அடிப்படை இவர்தான் நவக்கிரகங்களில் ஒருவர்.

சூரியனை சுற்றும் கோள்களில்
இரண்டாமவர்.நவகிரகங்களில் ஆறாவது கோள்.இவா் பிருகு முனிவர்க்கும் உஷானாவுக்கும் பிறந்தவா்.இவரது வாகனம் முதலை, ஒட்டகம், குதிரை. சுக்கிராச்சாரியாரும், பிரகஸ்பதியும் ஆங்கீரஸமுனிவாிடம் கல்வி பயின்றனா். ஆங்கீரஸா் பிரகஸ்பதி தந்தையாவாா். கற்றுகொடுப்பதில் ஏற்ற இறக்கம் இருப்பதாக கருதி கௌதமாிடம் சென்று வேதம் பயின்றாா். நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.

பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், க்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர். இந்நிலையில் அசுரர்களின் எண்ணிக்கை குறையவில்லையே என தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார்.

பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் ‘சுக்கிரன்’ என்றும் தூய வெண்மையாக வந்ததனால் ‘வெள்ளி’ என்றும் பெயர் ஏற்பட்டது. குடும்பம் இவருக்கு இரண்டு மனைவிகள். உா்ஜஸ்வதி, ஜெயந்தி ஆவா்.சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி.பிரகஸ்பதி தேவகுரு ஆன பின்பு
இவா் கோபம்கொண்டு அசுரர்களுக்கு குருவாகிறாா்.

ஜெயந்தி

அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை
அடைந்தே தீர வேண்டும் என வைராக்கியம் கொண்ட சுக்கிராச்சாரியார் தனி ஆஸ்ரமம் அமைத்து கடுந்தவம் சிவபெருமானை நோக்கி இருந்த நேரம்அவரின் தவத்தை கலைக்க தேவகுரு ஆலோசித்தபோது இந்திரன் தன் மகள் ஜெயந்தியை அனுப்பி அவர் தவத்தை கலைக்கலாம் என கூறிஜெ யந்தியை அசுரகுரு ஆஸ்ரமம் அனுப்பி வைத்தனர்.ஜெயந்தி தன்னை ஆஸ்ரமத்தில் பணிவிடை செய்ய அனுமதிக்குமாறு கேட்டவுடன் சம்மதம் தெரிவிக்கிறார்.

சுக்கிராச்சாரியார் கடுந்தவம் செய்தபோதும் ஜெயந்தியை கண்டுகொள்ளவில்லை.அவரின் நடத்தை ஜெயந்திக்கு பிடித்ததால் ஜெயந்தியும் தான் வந்த வேலை மறந்து
சேவகம் செய்வதிலேயே கவனமாக இருந்தாள்.

சிவபெருமான் நேரில் காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என கேட்க அமிர்த சஞ்சீவினி மந்திர உபதேசம் வேண்டும் என்கிறார்.சிவன் முதலில் மறுத்தாலும் பின்னர் மந்திர உபதேசம் செய்வித்தார்.சுக்கிராச்சாரியாரிடம் ஜெயந்தி
பல வருடங்களுக்கு பிறகு எனக்கோ வயதாகிவிட்டது என்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி திருமணம் செய்து அங்கேயே இருந்து விடுகிறாள் ஜெயந்தி.

மகாபலி

மகாபலி கேரளாவை ஆட்சி செய்த அரக்க மகாராஜா. இவரின் குரு சுக்கிராசாாியா்.மகாபலி சக்ரவர்த்தி அசுவ மேதை யாகம் செய்யும் போது மூன்று பிராமணர்கள் தேவைபட்டனா் இரண்டு பேர் கிடைக்கப்பெற்ற நிலையில் மூன்றாவதுவாக ஸ்ரீ மகாவிஷ்ணுவே வாமணனாக வந்தாா். குள்ளமான உருவம் சிறிய குடையுடன் யாகத்தில் யாசகம் கேட்க வந்தான் பரமாத்மா. வந்திருப்பது ஸ்ரீ மகாவிஷ்ணு என்பதை சுக்கிராசாாியா் கண்டுபிடித்து விடுகிறாா். யாசகம் தரும் போது கமண்டலத்தின் வாயை வண்டாய் போய் தண்ணீர் வெளியே வராமல் அடைத்தார்.

ஸ்ரீ மகாவிஷ்ணு நாணல் கொண்டு தண்ணீர் வராமல் இருந்த கமண்டலத்தின் வாயில் குத்தினார் அது வண்டின் கண்ணில் பட்டு கண் குருடாகி வெளியே வந்து சுக்கிராசாாியா் ஆனது. ஒரு கண் குருடாகி நின்றிருந்தார். வாமணா் மகாபலியிடம்
வரம் மூன்று அடி கொடு என்று கேட்டார். மூன்று அடி எடுத்து வைத்து என்ன கேட்கப்போகிறாா் என்று நினைத்த மகாபலி சரி என்கிறார். முதல் அடி பூமியை அளந்தாா் இரண்டாம் அடி வாணத்தை அளந்தாா் மூன்றாம் அடி என்ன செய்ய என்று பெருமான் கேட்க எனது தலையில் வையுங்கள் என்று சொல்லி சரணடைந்தார் மகாபலி.

தலையில் கால் வைத்து அழுத்த பாதாளலோகம் சென்றான் மகாபலி. இழந்த கண்ணை பெற சுக்கிராச்சாரியார் திருவள்ளியங்குடி (திருப்பனந்தாள் அருகில் உள்ளது)
வந்து சுக்கிராச்சாாியாா் இழந்த கண்ணை நல்ல கண்ணாக கொடு என்று வேண்டிக்கொண்டார்
ஸ்ரீ மகாவிஷ்ணு குருடான கண்ணை நல்லதாக மாற்றினார். இன்றும் கோவிலில் சன்னதியில் விளக்காய் ஒளியாய் இருக்கிறார் சுக்கிராச்சாரியார்.

கசன்

அமிர்த சஞ்சீவினி மந்திரம் கற்று கொள்ள விரும்பிய தேவர்கள் வியாழ பகவானின் (குரு) மகன் கசனை அழைத்து உனது தியாகத்தால் தான் அசுரர்களை வெல்ல முடியும். எனவே நீ அசுர குரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று குருகுல வாசம் செய்து மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வர வேண்டும் என்றார்கள். தேவர்கள் கூறியது போலவே கசனும் தன் தந்தை வியாழபகவானிடம் நான் திரும்பி வரும் போது பிரம்மச்சாரியாகத்தான் வருவேன் என்று சபதம் செய்து விட்டு அவரது ஆசியுடன் அசுரகுருவிடம் சென்றான்.

கசன் சுக்கிராச்சாரியாரிடம் தன்னை சீடனாக ஏற்கும் படி கோரிக்கை வைத்ததை சுக்கிராச்சாரியார் சீடனாக ஏற்றார்.கசன் குருவிற்கும், தேவயானிக்கும் பயபக்தியுடன் பணிவிடைகள் செய்துவந்தான். தேவயானி கசனின் பேரழகில் மயங்கினாள். அவன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள். ஆனால் கசன் தேவயானியை சகோதரியாகவே நினைத்துப் பணிவிடைகள் செய்து வந்தான். சுக்கிராச்சாரியாரும் கசனுக்குப் பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார்.அசுரர்கள்
கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து கசனை கொன்று விட தீர்மானித்தார்கள். ஒருநாள் கசன் காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அசுரர்கள் கசனைக் கொன்றுவிட்டனர். அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒநாய்களுக்கு உணவாகப் போட்டனர்.மாலையில் மாடுகள் மட்டும் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தன. கசன் வரவில்லை.

தேவயானி தந்தையிடம் சென்று, “தந்தையே! கசன் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது. கட்டாயம் அவனைக் கண்டுபிடித்துத் திரும்பக் கொண்டு வரவேண்டும்” என்று வேண்டினாள்

தேவயானி கசன் மீது வைத்திருந்த அன்பை அவள் தந்தை புரிந்துகொண்டார். தன் ஞானதிருஷ்டியால் கசன் இறந்து போனதைக் கண்டறிந்தார். உடனே சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தார். “கசனே நீ எங்கிருந்தாலும் உயிர் பிழைத்து வா” என்று கூப்பிட்டார். கசன் உயிர்பிழைத்து, ஓநாயின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே, வந்தான். காட்டிலிருந்து ஆசிரமத்திற்கு வந்து குருவைப் பணிந்தான்.மறுபடியும் இரண்டாவது முறையாக அவனை மீண்டும் கொல்லத் திட்டம் போட்டார்கள். இந்த முறை கசன் தப்பிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

தேவயானிக்காகப் பூப்பறித்துவர கசன் நந்தவனத்துக்குப் போனான். அவனைப் பின்தொடர்ந்து வந்த அசுரர்கள் அவனை மீண்டும் கொன்றுவிட்டனர். அவனது உடலைப் பொடிப்பொடியாக அரைத்துக் கூழாக்கிக் கடலில் கரைத்து விட்டனர். நந்தவனத்திற்குப் போன கசன், ஆசிரமம் திரும்பாததை அறிந்த தேவயானி மிகவும் கவலைப்பட்டாள். மீண்டும் தன் தந்தையிடம் அழுது மன்றாடினாள். மனமிரங்கிய சுக்கிராச்சாரியார், இரண்டாம் முறையாகச் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தார். கசனை உயிர் பிழைக்க வைத்துக் கடலில் இருந்து எழுந்து வரச்செய்தார். கசனும் ஆசிரமம் திரும்பினான்.

மூன்றாவது முறை

மூன்றாம் முறையாகக் கசனை அரக்கர்கள் கொன்று இறந்த அவன் உடலைச் சுட்டுச் சாம்பலாகவும் ஆக்கிவிட்டார்கள்.சாம்பலை சோமபானத்தில் கலந்து எடுத்துக்கொண்டு சென்று சுக்கிராச்சாரியாரைப் பார்த்து அந்தப் பானத்தைக் குடிக்கக் கொடுத்தனர்.சோமபானத்தின்மேல் இருந்த மோகத்தால் சுக்கிராச்சாரியாரும் ஒரு சொட்டு மீதம் வைக்காமல் குடித்துவிட்டார்.வழக்கம்போல மூன்றாவது முறையாகக் கசனைக் காணமல் தேவயானி மிகவும் துன்பப்பட்டாள்.“கசன் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை” என்று தன் தந்தையிடம் அழுது புலம்பினாள்.சுக்கிராச்சாரியாரும் அசுரர்கள் மூலமாகத்தான் கசனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதினார்.

அசுரர்கள் மீது கோபமும் கொண்டார். அசுரர்களைப் பிறகு கண்டித்துக்கொள்ளலாம் என்று நினைத்துத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டார். காலம் தாழ்த்தாமல் கசனைப் பிழைக்க வைக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டார்.

சஞ்சீவினி மந்திரத்தை மூன்றாவது முறை உச்சரிக்கத் தொடங்கினார்.சுக்கிராச்சாரியாரின் வயிற்றுக்குள், சோமபானத்தில் சாம்பலாகக் கலந்து, இருந்த கசன் பேசினான். “குருவே! என் மீது கருணை காட்டுங்கள்.” என்று வேண்டினான்.

கசன் தன் வயிற்றிற்குள் இருப்பது தெரிந்து வியந்தார்.கசனுக்குச் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பது ஒன்றுதான் அவர் முன்னால் இருந்த ஒரே வழி. தேவாயானிக்காகச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். “கசனே! நீ கொடுத்துவைத்தவன்!! நீ விரும்பிய மந்திரத்தைக் கற்றுக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது!!!

சஞ்சீவினி மந்திரத்தை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அதனைக் கவனமாகக் கற்றுக்கொள். அதன் பின்னர் நான் சஞ்சீவினி மந்திரத்தை மூன்றாம் முறையாக உச்சரித்து நான் உன்னைப் பிழைக்க வைக்கிறேன். ஆனால் நீ என் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும்போது நான் இறந்துவிடுவேன், கசனே! கவலைப் படாதே! நீ வெளியே வந்து சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து என்னைப் பிழைக்க வைத்துவிடு. சரி தானே..” என்று கசனிடம் சொன்னார்.சஞ்சீவினி மந்திரத்தைக் கசனும் கற்றுக்கொண்டான். உயிர் பிழைத்து எழுந்து, சுக்கிராச்சாரியாரின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான்.

இதனால் சுக்கிராச்சாரியார் உடனே இறந்து போனார். வெளியே வந்த கசன் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்துச் சுக்கிரச்சரியாரை உயிர் பிழைக்க வைத்தான்.குருவே நான் வந்த காரியம் முடிந்து விட்டது எனக்கு விடை தாருங்கள். நான் செல்ல வேண்டும் என்று கூறினான். சுக்கிராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற அதற்கு கசன் தன் தந்தையிடம் பிரம்மசாரியாக திரும்பி வருவதாக சத்தியம் செய்திருப்பதாகவும் மேலும் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் தேவயாணி எனக்கு சகோதரி முறை வேண்டும் என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். தேவயாணி எவ்வளவு தடுத்தும் பயனில்லாமல் போகவே கடும் கோபம் கொண்ட அவள் தன் இஷ்ட தேவதைகளை பிரார்த்தித்து என்னை மணந்து ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று மறுக்கும் நீ பெரும் குருத் துரோகி ஆகிவிட்டாய். இதனால் என் தந்தையும், நீ உன் குருவுமாகிய சுக்கிராச்சாரியாரிடம் கற்றுக்கொண்ட சஞ்சீவினி மந்திரம் உனக்குப் பலனளிக்காமல் போகட்டும்” என்று சாபமிட்டாள்.

“தேவயானி! உன் சாபத்தினால் நான் கற்றுக்கொண்ட மந்திரம் எனக்குத் தக்க சமயத்தில் பலனளிக்காமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் நான் தேவர்களுக்கு முறையாகச் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொடுப்பேன். அது எனக்குப் போதும்” என்றான்.வெள்ளிக்கிழமை சுக்கிராச்சாரியாரின் தந்தை பிருகு மஹரிஷி.

பிருகு மஹரிஷி பிரம்ம தேவரின் பிள்ளைகளில் ஒருவர். இவர் லக்ஷ்மீதேவியின் தந்தையும் கூட. அதனால்தான் லக்ஷ்மீதேவிக்கு பார்கவி என்று பெயர். இந்த வகையில் லட்சுமிதேவிக்கு சுக்கிராச்சாரியார் சகோதரர்.அதனால்தான் லட்சுமிதேவிக்கு வெள்ளிக்கிழமை என்றால் பிடித்தமான நாள் ஆகிற்று.லட்சுமிதேவி அனுக்கிரகமில்லாமல் விஷ்ணு மூர்த்தியின் அனுக்கிரகம் பெற முடியாது. லட்சுமிதேவிியின் அனுக்கிரக பார்வை இல்லாமல் விஷ்ணு பகவான் பக்தர்களுக்கு அருளமாட்டார்..

நாம் அறிந்து இருக்க வேண்டிய தர்மங்களும் ஆசாரங்களும், நன்னடத்தையும்
லட்சுமிதேவி துதி. இந்த இரண்டும் இருந்தால் முதலில் லட்சுமிதேவியின் அனுக்கிரகம், பிறகு விஷ்ணு மூர்த்தியின் அனுக்கிரகம் கூட அடையலாம்.

கஞ்சனூர்

சிவனை நோக்கி கடும் தவம் கஞ்சனூரில்
இருந்து சுக்கிராச்சாாியாா் நவக்கிரக பதவி பெற்றார்.எப்படி உரு கொண்டு வணங்க வேண்டும் என சுக்கிராச்சாரியாரிடம் கேட்ட போது
தன் உருவத்தை சிவலிங்கத்திடம் கரைத்து சிவமாக காட்சி தந்தார். சுக்கிராச்சாரியாருக்கு
தனி சன்னதி கிடையாது.

வணங்கவேண்டிய கோவில்கள்

கஞ்சனூர்
திருவள்ளியங்குடி

சுக்கிராச்சாரியாரின் நிறம் வெள்ளை.
கிழமை – வெள்ளி
தேதிகள் – 6, 15, 24
நட்சத்திரம் -பரணி, பூரம், பூராடம்
ஆட்சி வீடு -ரிஷபம், துலாம்
உச்சம் -மீனம்
நீச்சம் – கன்னி
ரத்தினம் -வைரம்
உலோகம் – வெள்ளி
தானியம் -மொச்சை
நிறம் -வெண்மை
ஆடை – வெண்பட்டு
தசா காலம் – 20 ஆண்டுகள்
கிரக அமைப்பு – பெண்
வாகனம் – கருடன்
புஷ்பம் -வெள்ளை தாமரை
சுவை -இனிப்பு.

சுக்ர காயத்ரி :

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

Categories
Library Library Navagraha temples Navagraha temples

புதன்

புதன் பகவான்

நவகிரகங்களில் ஒருவர்.சூரிய பகவானை சுற்றும் முதல் கோள்.ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமானவர் ,அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி, சொல், வாக்கு ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். ‘வித்யாகாரகன்’ என புதன்
அழைக்கப்படுகிறார்.சௌம்யன், புத்திதாதா, தனப்பிரதன் என்று வேறு பெயர்களும் உண்டு. வாணிகம்,விவசாயம்,
பொருளாதரம்,கனிணி அறிவியல்,கணக்கு,
புள்ளியியல் போன்ற துறைகளில் கொடிகட்டி விளங்க புதன் பகவானே காரணம் ஆகும்.புதன் மிகவும் நல்லவர். ஆனால் மிக மிக கெட்டவர்.

சுப கிரகத்துடன் சேர்ந்த புதன் சுப பலன்களையும், அசுபர்களுடன் சேரும் புதன் அசுப பலன்களையும் தயங்காமல் செய்வார். அதனால் தான் புதனை ‘இரட்டை தன்மையுள்ள கிரகம்’ என ஜோதிடம் கூறுகிறது.இவா் சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவா். புதன் ரோகிணி, ரேவதி நட்சத்திரங்களால் வளா்க்கப்பட்டவா். ரோகிணி நட்சத்திரத்தின் மீது அதீத அன்பு கொண்டவர் புதன்.

சந்திரன் தனது புகழ் கீர்த்தி ,மரியாதையை நிருபிக்க சந்திரன் ராஜசூயை யாகம் நடத்தினாா். யாகத்தை நடத்தியதால் மமதை தலைக்கேறியது. ஆணவம் கண்களை மறைத்தது. குல குருவான பிரகஸ்பதி மனைவி தாரை சந்திரனின் அழகில் மயங்கி சந்திரனுடன் வாழ்க்கை நடத்தி கருவுற்றாள், அவளைக் கடவுளர்களும் குருவும் கேட்டுக் கொண்ட. பிறகும் சந்திரன் தாரையை அனுப்ப முடியாது
அவர்கள் வந்தால் அழைத்து செல்லுங்கள் என கூற தேவர்கள் சந்திரனின் மீது படையெடுத்தனர்.

தேவர்கள் சார்பில் சிவனும் குரு பிரகஸ்பதியும் முன்னின்று போரை நடத்தினர். சந்திரனுக்கு உதவியாக அசுரர்களும் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாரும் சேர்ந்து கொண்டனர். .போர் மிகவும் பயங்கரமாக நடந்தது. போருக்கு “தாரகாமய சங்கிராமம்“ என்று பெயரும் வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் பலம் சரிசமமாக இருந்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே பிரம்மன் இருதரப்பினரிடமும் சமாதானம் பேசி தாரையை சந்திரனிடமிருந்து பிரித்து பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். குருவும் சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

பிரகஸ்பதியோ “தாரை கர்ப்பமாக இருக்கிறாள் “ எனவே என்னால் தற்போது தாரையை ஏற்றுக்கொள்ளமுடியாது “என்று கூறி அக்கருவை விட்டுவிட்டு வருமாறு தாரையிடம் கூறினார். தாரையும் அக்கருவை ஒரு மரத்தின் நிழலில் விட அது மிகுந்த பிரகாசத்துடனும் அழகுடனும் ஒரு சிறுவனாக உரு மாறியது. சந்திரன் தனக்கும் தாரைக்கும் பிறந்த குழந்தைக்கு புதன் என்று பெயர் சூட்டினான். இப்படியாக புதன் பிறந்தான்.இளமை பருவத்தில் தனது பிறப்பின் ரகசியம் தெரிந்தவுடன் தந்தையின் மேல் கோபம் கொண்டு
மிகவும் வேதனை பட்டு கடுந்தவம் கடும்தவம் செய்ய புறப்பட்டார்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவை நினைத்து சரவணவானா என்னும் இடத்தில், இது இமயமலையில் உள்ளது. கடுந்தவம் மேற்கொண்டார்.புதனின் தவத்தை கண்டு ஸ்ரீ மகாவிஷ்ணு காட்சி கொடுத்து அவருக்கு குருவாகி வேத சாஸ்திரங்களையும், கலைகளையும் கற்றுக்கொடுத்து நவகிரகங்களில் ஒருவர் ஆக்கினார். நாம் புதன் அன்று பெருமாள் கோவில் போகும் ரகசியம் இதுவே.புதனின் மேல் ஆசைகொண்ட தேவமாதர் ஒருவர் தன்னை ஏற்கும்படி கூற அதற்கு புதன் பகவான் தன்னை போல் ஓர் குழந்தையை உருவாக்க விருப்பம் இல்லாமல் நிராகரித்தார்.ஆத்திரம் அடைந்த தேவமாதர் புதனை அலியாக ஆக சாபம்டுத்தார்.தவறே செய்யாமல் தண்டனையா என நினைத்து ஸ்ரீ மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்ய
ஸ்ரீ மகாவிஷ்ணு சிவபெருமானை நோக்கி தவம் இருக்க சொல்ல தவத்தை மெச்சிய சிவபெருமான் நேரில் வந்து
புதனின் சாபத்தை போக்கினார்.நான்கு கைகளை கொண்டவா் சிங்கத்தின் மேல் அமர்ந்து பவனி வருபவர். கலை கல்விக்கு அதிபதி. பச்சை நிறம் உடையவர்.

புதன் கிரகத்தின் கோவிலாக திருவெண்காடு உள்ளது.
இங்கே தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

வாகனம்– குதிரை;
தானியம் – பச்சைப்பயறு;
மலர் – வெண்காந்தள்;
ஆடை – பசுமை வண்ணஆடை;
மணி – மரகதம்;
உலோகம் – பித்தளை;
அன்னம் – பச்சைப்பயிறு பொடி அன்னம், வெல்ல அன்னம்;
சமித்து – நாயுருவி;
சுவை – உவர்ப்பு;
கோத்திரம் – ஆத்திரேய;
இனம் – வைசியர்;
நாடு – மகதம்;
மனைவி – ஞானதேவி;
மகன் – கர்த்தவாசுரன்;
வடிவம் – நெடியது;
குணம் – சமத்துவம்;
ராசி – மிதுனம், கன்னி;
திசை – வடகிழக்கு;
அதிதேவதை – திருமால்;
பிரத்யதி தேவதை – இரு கரங்கள் கொண்ட நாராயணர்;
தலம் – திருவெண்காடு, மதுரை.

புதன் காயத்ரி மந்திரம் :

ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்

புதன் பகவான் ஸ்லோகம்

இதமுற வாழ இன்னல்கள் நீக்குபுத பகவானே பொன்னடி போற்றிபதந் தத்தாள்வாய் பன்னொலியானேஉதவியே யருளும் உத்தமா போற்றி

Categories
Library Library Navagraha temples Navagraha temples

செவ்வாய்

அங்காரகன்

அங்காரகன் என்று வணங்கப்படும் செவ்வாய், தன்னை வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்.செவ்வாய்க்கிழமைக்கு அதிபதியான இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு உரியவர்.செவ்வாய் கிரகத்துக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியையே பெற்று பிரதிபலிக்கிறார்.இவரின் வேறுபெயர்கள்
சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன்.

ஜோதிட சாஸ்திரத்தில், `பூமிக்காரகன்’ என்று செவ்வாய் அழைக்கப்படுகிறார்.அங்காரகன், தன்னை வழிபடுவோருக்கு நிலம் அருள்பவர்.பூமிக்காரகன் என்பதால் மண்ணில் செய்யக் கூடிய விஷயங்கள் மண்ணால் செய்யக்கூடிய மண் பாண்டங்கள், நெருப்பு சம்பந்தமான வேலைகள், ரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்கள், ஆயுதம் சம்பந்தப்பட்டவை, ராணுவம், பவளம், துவரம் பருப்பு, வீரியம், ராணுவத் தலைமை ஆகியவற்றுக்கு அதிபதிஆகிறார்.உடலை இளமையாக வைத்திருப்பவர் செவ்வாய். ஆரோக்கியமான முறுக்கேறிய உடல், செவ்வாயைக் குறிக்கும். மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை, போர் வீரர்களை உருவாக்குவதும் செவ்வாய்தான். ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெற்று இருப்பதைப் பொறுத்தே சொந்த வீடு, நிலம், மாட்டுப்பண்ணை, பண்ணை வீடுகள் அமைத்துத் தர காரணமாக இருப்பார். செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.

கதை 1

சிவன் ஒரு நாள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு இருந்தாா்அவரின் நெற்றிக்கண் வியர்த்து
ஒரு துளி பூமியில் விழுந்தது விழுந்த துளி ஒரு குழந்தையாய் மாறியது. பூமாதேவி அந்த குழந்தையை அங்காரகன் என பெயர் வைத்து வளர்க்க ஆரம்பித்தாள்.

கதை 2

வசிஷ்ட மகா ரிஷியின் புதல்வர் பரத்துவாசமுனிவர் ஆவார். பரத்துவாஜ் முனிவர் ராமகதையில் இடம் பெற்றவர். அவரிடம்தான் அடங்காத பசிக்கு அறுசுவை உணவளிக்கும் அமுதப்பசு காமதேனு இருந்தது.இவர் நர்மதை ஆற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து தவக்கோலம் பூண்டு தவம் இயற்றியவர். தான் கற்ற சகல சாஸ்திர வேதங்களையும், வில்வித்தை, அஸ்திர பிரயோகம் போன்ற கலைகளையும் அவரை தேடி வந்தவர்களை சீடர்களாக கொண்டு கற்றுக் கொடுத்து வந்தார்.ஒரு நாள் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணிக்கு காலைக்கடன் முடித்து நீராட நர்மதை ஆற்றுக்குச் சென்றார். அங்கே அந்த வேளையில் அழகு மிகுந்த தேவலோக கன்னிகை நீராடி கொண்டிருப்பதைக் கண்டார். கண்கள் வழியே காதல் தலைக்கேற ஐம்புலன்களும் ஆன்மாவுக்கு அடங்காமல் போனது. அந்தப் பெண்ணை அடைய விரும்பி அவள் சம்மதம் கேட்டார். அவளும் இணங்கினாள்.ரிஷிப்பிண்டம் இரவு தங்காது என்பார்கள். எனவே உடனே அந்த தேவ கன்னிகைக்கு அழகிய சிவந்த ஆண் குழந்தை பிறந்தது. அவளோ தேவ கன்னிகை! கையில் குழந்தையுடன் தேவ லோகம் செல்ல முடியாதுஅவள் அக்குழந்தையை பூமாதேவியிடம் விட்டு சென்றாள்.பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும், அதுவே சுருக்கமாக அங்காரகன் என்றும் கூறப்படுகிறது.

கதை 3

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான்.

பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.

ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இருவருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது

செவ்வாய் கிரகத்துக்கு மாலினி, சுசீலின் என்று இரண்டு மனைவிகள் உண்டு.செவ்வாயின் மகன் புரூயவா செவ்வாய் காசிக்கு சென்று சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்தார். அந்த தவத்தின் காரணமாக, அவர் உடம்பில் இருந்து யோகாக்கினி கொழுந்து விட்டு எரிந்தது. அது மட்டுமல்ல! அக்கடுந்தவத்தின் பலனாக செவ்வாய், நவகிரகங்களில் ஒருவராக ஆனார்.சிவன் மனம் மகிழ்ந்து அவரை மங்கள நட்சத்திரமான செவ்வாய் கிரகம் ஆக்கினார். இவா் முருகக் கடவுளுக்கு சிறந்த நண்பர் ஆவார்.நான்கு கைகளை கொண்டவா் துர்க்கையை வழிபட்டு வந்தாலும் செவ்வாயின் அருள் பெறலாம்.

செவ்வாய் என்று நாம் குறிப்பிடும் அங்காரக பகவான் பூசித்த தலங்கள் பல. அவற்றுள் முக்கியமானவை மூன்று. அவை: 1. திருச்சிறுகுடி, 2. வைத்தீஸ்வரன் கோவில், 3. பழனி.

அங்காரகன் பற்றி

நிறம் – சிவப்பு

வாகனம் – ஆட்டுக்கிடா

தானியம் – துவரை

மலர் – செண்பகம், செவ்வரளி

ஆடை – சிவப்பு ஆடை

நவரத்தினம் – பவழம்;

நைவேத்தியம் – துவரம்பருப்புப் பொடி சாதம

சமித்து – நாயுருவி, கருங்காலி

உலோகம் – செம்பு

நட்சத்திரம் – அவிட்டம், சித்திரை, மிருகசீரிடம்

திசை – தெற்கு

ருசி – உவர்ப்பு

கிழமை – செவ்வாய்

குலம் – சத்திரிய குலம்

கோத்திரம் – பரத்வாஜ கோத்திரம்.

அவர் காயத்ரி :
வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய
தீமஹி
தன்னோ பௌம
பரசோத்யாத்

அவர் ஸ்லோகங்கள்:
தரணி கர்ப்ப ஸம்பூதாம்
வித்யுத்காந்தி
ஸமப்ரபாம்
குமாரம் சக்தி ஹஸ்தம்
தம் மங்களம்
ப்ரணமாம்யகம்

பூமிபுத்ரோ மகாதேஜோ
ஜகதாம் பயக்ருதஸதா
வ்ருஷ்டி க்ருத் வ்ருஷ்டி
ஹர்தாஜ ஹரதுமே
குஜ:(ஹ)

Categories
Library Library Navagraha temples Navagraha temples

சந்திரன்

நவகிரகங்களில் ஒருவர்.பராசக்தியின் அம்சம்.மூலிகைக்கு அதிபதி சந்திரன்.செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது. சந்திரனின் வேறு பெயர்கள்
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே, ரஜனிபதி, சுகுபராக, இந்து,மதிஆகியவை.சந்திரன். பரம்பொருளின் மனதிலிருந்து வெளிவந்தவன் என்கிறது வேதம்

சந்திரமா மனஸோஜாத:

பரம்பொருளானது பிரபஞ்சாகாரமாகத் தோற்றம் அளிக்கிறது.திருமால் மார்பிலே தோன்றியவன் என்பதை சந்திரமா மனஸோ ஜாத என்று புருஷ சுத்தம் கூறுகிறது.பிரம்மா ஒரு முறை சகல ஒளஷதங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் பிராமணர்களுக்கம் அரசனாக சந்திரனை மகுடாபிஷேகம செய்தார்.மனித இனத்தை இயக்குபவன் என்று சந்திரனைக் குறிப்பிடுகிறது ஜோதிடம்ஈசனின் சிரசில் சந்திரன் வீற்றிருப்பதால், சந்திரசூடன் என சிவனாருக்குத் திருநாமம் உண்டு. அதேபோல், அம்பாளின் சிரசிலும் ஸ்ரீவிநாயகரின் சிரசிலும்கூட சந்திரன் வீற்றிருக்கிறார்.சந்திரன் நீரைக் குறிக்கும் ‘ஜல கிரகம்’. அவருடைய ராசியான கடகம், ‘நீர் ராசி’.

சூரியனோடு கோச்சார ரீதியாக சேரும் பொழுது அமாவாசை ஆகின்றது. சூரியனும், சந்திரனும் ஓன்றுக்கொன்று பார்வையிடும் பொழுது பௌர்ணமி ஆகின்றது.சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களின் மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன. இதைத்தான் மாணிக்கவாசகர், திருவாசகத்தில் ‘உருத்தெறியா காலத்தே என் உட்புகுந்து உளம் மன்னி’ என்று குறிப்பிடுகிறார். அந்தக் கரு உருவாகும்போதே சந்திரனின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காகவும் இன்னும் பல செல்வங்களுக்காகவும் திருப்பாற்கடலைக் கடைந்தனர், அதிலிருந்து பல அரிய பொருட்கள் தோன்றின. ஆலகாலம், மூதேவி, ஸ்ரீதேவி, காமதேனு, நவநிதி புஷ்பகவிமானம், வெள்ளையானை, வெள்ளைக்குதிரை, நீலமணி பாரிஜாதம், காமதேனு, அமிர்தம் இவைகளுடன் சந்திரன் மிகவும் பிரகாசத்துடன் தோன்றினான். சந்திரனின் பிரகாசம் தேவர்களின் கண்களைக் கூச வைத்தது.அதீத தவத்தின் பலனாக சந்திரனை ஒரு கிரகமாக அறிவித்து அவரை சிவன் தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரானார் .சந்திரன் மிகவும் இளமையானவன் அழகானவன். சந்திரனுக்கு 27 மனைவிகள் 27 நட்சத்திரமும் அவர் மனைவிகளாவா்.

ஸ்ரீ விஷ்ணுவின் கண்ணாக கருதப்படுகிறாா். சிவபெருமானது இடது கண்ணாகவும் இருப்பவர்.சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி’ என்று கூறப்படுகிறது.

தட்சணின் சாபம்

பிரஜாபதி தட்சனுக்கு மொத்தம் அறுபது பெண்கள். அவர்களில் பத்துபேரை தருமனுக்கும் பதின்மூன்று பேரை காசிபருக்கும் இருபத்தேழு நட்சத்திரப்பென்களை சந்திரனுக்கும் ,மீதிப் பெண்களை ஆங்கீசர் ,அரிஷ்டநேமி ,
கிரிஷஷ்வர் வாஹுபுத்திரர்க்கு திருமணம் செய்துகொடுத்தாா். இருபத்தியேழு நட்சத்திரப் பெண்களை (அஷ்வினி முதல் ரேவதி வரை )சந்திரனுக்கு திருமணம் செய்கையில் சந்திரனைப் பார்த்து தன் இருபத்தியேழு பெண்களையும் சமமாக அன்பு செலுத்தி குறையில்லாமல் பார்த்துக்கொள்ளச் சொன்னாா். திருமணம் ஆன புதிதில் சமமாக நடத்தியவர் பின்னர் ரோகிணியிடம் மட்டும் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கினாா்.

26 பெண்களும் தந்தையிடம் முறையிட கோபம் கொண்ட தட்சன், சந்திரனுடைய கலைகள் படிப்படியாய் தேய்ந்து போகும் என்று சாபம் இட்டான் சந்திரன் தனது தவறுகள் காரணமாகவும்,தனது வாக்குறுதியை மீறியதனாலும்,
தனது மகள்களை சமமாக நடத்தாதமையினால் சந்திரன் அழகு நாளொன்றுக்கு ஒன்று என அழிந்து மறைந்து போகும்படி தட்சன் சாபமிட்டார்.சந்திரன் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கிய சந்திரன் பிரம்மாவிடம் கேட்டவுடன் பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறினாா் . சந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஸ்டை செய்து மிருத்யுஞ்ச மந்திரத்தை சொல்லி பூஜைகள் செய்தார், சிவபெருமான் சந்திரனுக்கு காட்சி தந்து ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து(தட்சனின் சாபப்படி ) மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்தார்.

குரு சாபம்

யாராக இருந்தாலும் தவறு செய்யும் பட்சத்தில் தண்டனை உண்டு அது கடவுளானாலும் மனிதரானாலும்……..ஒரு பெரும் யாகம் செய்ய சந்திரன் விரும்பி குருவை அழைத்து இருந்தாா். குரு வரமுடியாமல் போகவே அவரின் மனைவி தாரையை அனுப்பி வைத்து இருந்தாா். யாகம் நல்லபடியாக முடிந்ததும் தாரை ஊா் செல்ல மறுத்து சந்திரனுடன் அவன் அழகில் மயங்கி இருந்துவிட்டாள். சந்திரனுடன் ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டால, ் குரு பிரகஸ்பதி வந்து
கூப்பிட்டும் போகாமல் இருந்து விடுகிறாள். சந்திரன் குருவை அலட்சியம் செய்து தாரையை போகக்கூட சொல்லாமல் இருக்கிறாா். குரு உன் சக்தி உன் அழகு அனைத்தும் அழியப்பட்டும் என்று சாபம்இடுகிறார்.சந்திரன் நடக்க கூட திரானியில்லாமல் வியாதி வந்து 27 மனைவிகளை அழைத்துக் கொண்டு ஊா் ஊராக கோவில் அனைத்திற்கும் செல்கிறார். குருவின் சாபத்திற்கு
பயந்து எந்த தெய்வமும் அவரை மன்னிப்பதாய் இல்லை.
நம் கும்பகோணத்தில் சோமேச்வரரை சந்திரபுஷ்கரனி
வெட்டி தொழுதும் பயன் இல்லை. சந்திரசேகரபுரத்தில் சந்திரசேகரரை பூஜை செய்தும் பயன் இல்லை
வாடி வதங்கிய சந்திரனை விசுவாமித்திரா் பார்த்து திருவிடைமருதூர் சென்று இறைவனை் பாா் என்று சொல்கிறார்.

மேலும் உமாதேவி ஒரு முறை சிவனின் கண்ணை மூடும் போது உலகமே இருட்டாக ஆனபோது திருவிடைமருதூர் ஸ்ரீ ஜோதி மகாலிங்கம் மட்டும் ஜோதி ருூபமாய் காட்சி தந்து அந்த ஊா் மட்டும் இருட்டு இல்லாமல் செய்தார். ஆகையால் அங்கு சென்று இறைவனை வழிபட சொன்னார்.27 நட்சத்திரமும் சந்திரனும் திருவிடைமருதூர் வந்து சந்திர புஷ்கரனி வெட்டி 27 நட்சத்திரமும் 27 சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனா் சந்திரன் தனது ஆத்மாவை ஆத்மலிங்கமாக ஆக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட சிவன் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு இழந்த சக்தியை கொடுத்து மீண்டும் நவகிரகங்களில் ஒருவர் ஆக்கினார். தாரைமேல் தவறு இருப்பதால் சந்திரனை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை என குரு பிரகஸ்பதி சந்திரனை மன்னித்தார்

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலில்் நவகிரகங்களில் சந்திரன் மட்டும் உயரம் கூடுதலாகவும் மற்றவர்கள் உயரம் குறைவாகவும் காணலாம்.

திருப்பதியும் சந்திரனும்

இன்றும் திருப்பதி வெங்கடாஜலபதி காலடியில் சந்திரன் குடி கொண்டுள்ளதாக ஐதீகம்.உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்துள்ளது.விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும்.

சந்திரனால்….சூரியனிடம் இருந்து சூடான கிரணத்தைப் பெற்று, தன்னிடம் இருக்கிற தண்ணீருடன் இணைத்துக் குளிரச் செய்து, வெப்பத்தால் வாடும் உலகைக் குளிர்வித்து மகிழச் செய்கிறான்.சந்திர கிரகம் இரவினை ஏற்படுத்துதின்றது. மனத்தை வலுவடையச் செய்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அமிர்தத்தை பரப்பும் தாயென கருதப்படுகிறது.எல்லா கவலைகளிலும் இருந்து விடுபட இந்த கிரகத்தை வழிபட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. மனநல பாதிப்புகளையும் குணப்படுத்தும். க்ஷயரோகம் போன்ற கொடிய வியாதியையும் குணப்படுத்தும். இவரின் குளிர்ந்த கிரணங்கள் சுற்றிலும் மகிழ்ச்சியை பரப்பும்.

திங்கட்கிழமைகளில் சந்திரனை வழிபடுவது அவரவர் விருப்பங்களையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் என கருதப்படுகிறது.ராசி மண்டலத்தில் இவர் கர்கட ராசிக்கு அதிபதி. இவர் ஒரு ராசியில் 2 1/4 நாட்கள் தங்கி 12 ராசிகளையும் கடந்து வர 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

உரிய மலர்: வெள்ளரளி
உரிய மரம்: வேப்ப மரம்
தானியம்: பச்சரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
ரத்தினம்: முத்து
கிழமை: திங்கள் கிழமை
திசை: தென்கிழக்கு
உலோகம்: ஈயம்
நிறம்: வெள்ளை
சமித்து: முருங்கை
வழிபடும் பலன்கள்: தடங்கள்கள் நீங்கி முன்னேற்றம்சந்திர

பகவானுக்கு காயத்ரி

ஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்

Categories
Library Library Navagraha temples Navagraha temples

சூரியன்

சூரிய பகவான்

கண்ணால் பாா்க்கக்கூடிய தெய்வமாய் விளங்குபவர்.சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்க வேண்டும்.நாம் உண்மையாக அன்பு கொண்டு
வேண்டினால் நேரில் வரக்கூடியவர்
இவரே.மனிதகுலத்தின் ஆதி தெய்வமாகவும், பிரத்யட்ச தெய்வமாகவும் போற்றி வழிபடப்பெறுபவர் சூரிய பகவான்.

வேத காலகட்டத்தில் சூரியவழிபாடு ஏற்பட்டதாய் கூறும் வேதநூல்களையே சூரியன் வடிவமாக சூரிய அஷ்டகம் கூறுகிறது.அதாவது காலையில் ரிக்வேதமாகவும், மதியம் யஜீர்வேதமாகவும், மாலை நேரத்தில் சாமவேதமாகவும் சூரியன் திகழ்கிறான் என கூறுகிறது.வேதங்கள் சூரியனை ‘ஆயுளை வளர்க்கும் அன்ன ரூபம்’ என்று போற்றுகின்றன

அதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக்கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும் என்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எகிப்தியர்கள் ஆமன்ரா என்றும்,கிரேக்கர்கள் போபஸ்-அப்போல்லோ என்றும், ஈரானியர்கள் மித்ரா என்றும் சூரியனை போற்றி வழிபடுகின்றனர்.

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு உலகெங்கும் இருந்தது என்பதை எகிப்திய, கிரேக்க, சுமேரிய, ஐரோப்பிய, மெசபடோமிய நாகரிகங்கள் எடுத்துச் சொல்கின்றன.

நம்முடைய பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் தமிழகத்தில் ‘உச்சிகிழான் கோட்டம்’ என்ற பெயரில் சூரியபகவானுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.சூரியனை வழிபட தை மாதம் முதல் நாள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதிலும் தை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ‘பானுவார விரதம்’ இருந்தால், சூரியனின் அருளினைச் சிறப்பாகப் பெறலாம் என்பது ஆன்மிக நூல்கள் சொல்லும் நம்பிக்கை.

இன்று சூரியனிலுள்ள பௌதீக சக்தியை அறிவியல் ஆராய்ச்சியினர். ஆய்ந்து பார்க்க முயலுகையில், அந்த மகா ஜோதியிலிருக்கும் திவ்ய சக்திகளை நம் வேத கலாசாரம் பல யுகங்களுக்கு முன்பாகவே கண்டு பிடித்துவிட்டது.ஆதித்யன், சூரியன், ரவி, மித்ரன், பானு, பகன், பூஷா, அர்யமன், மரீசி, அர்கன், பாஸ்கரன், பிரபாகரன், மார்த்தாண்டன். . . இப்படி 21 பெயர்கள், மந்திரங்களாக உபாசனை செய்யப்படுகின்றன.
மேலும் 1000 பெயர்கள் கொண்டவர் இவர்.

நம் உடலில் தோல், எலும்பு, சதை, மஞ்ஞை, ரக்தம், மேதஸ், சுக்ரம்… என்ற ஏழு தாதுக்கள் உள்ளை. இவற்றோடு சஞ்சரிக்கும் ரதமே இந்த தேகம். இவற்றை இயக்கும் அந்தர்யாமி வடிவமான சைதன்யமே ஆதித்தியனாகிய பரமாத்மா.

நம் முகத்தில் கண்கள் இரண்டு, நாசி துவாரங்களிரண்டு காதுகளிரண்டு, வாய் ஒன்று, இந்த ஏழு ஞானேந்திரியங்களை வழி நடத்தும் புத்தி ரூபமான சைதன்யம் இவனே !

மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை நகரும் குண்டலினீ ஸ்வரூபமே அர்க்கன். இந்த மார்கத்திலுள் ஏழு சக்கரங்களின் ஸ்தானங்களே ஏழு குதிரைகள்.

இந்த ஏழு குதிரைகளோடு பயணிக்கும் சூரிய ஒளியின் விஸ்தரிப்பையே ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் சலனமாக வேத சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

ஒவ்வொரு தெய்வத்தின் உருவமும் ஒவ்வொரு தத்துவத்தின் அடையாளம். வேதங்கள் புகழும் சூரிய சக்திக்கு சகுண உருவமே ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் உலா வரும் ஹிரண்மய ஸ்வரூபம்.ஜகத்தினை மலரச்செய்து, துயிலெழுப்பி, நகரும் சக்தியே ‘பத்மினி’. ரோக நிவாரண விடியற்காலை சக்தியே ‘உஷாதேவி’.

சூரிய ஒளியினால் தான் பொருட்களை அடையாளம் கண்டு கொள்கிறோம். அதுவே ‘சம்ஞா சக்தி, வெளிச்சமிருந்தால் தான் நிழலுக்கு இருப்பு. நிழலைத் தரும் வெளிச்சமே ‘சாயாதேவி’.இந்நான்கும் சூரியனின் ஒரே கிரணத்தின் வெவ்வேறு சொரூபங்கள். சூரியனை விட்டுப் பிரியாத சக்திகள். இவற்றையே சங்கேதமாக சூரியனின் மனைவிகள் என்கிறோம்.சிவப்பு உருவம். மூன்று கண் உடையவர். நான்கு கைகளை கொண்டவா்.

ஏழு வெவ்வேறு நிறம் உடைய குதிரைகளில் வளம் வருபவர்.
ஏழு வெவ்வேறு நிறங்களை சேர்த்தால் வெள்ளை இப்போதைய விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. சிவசூாியநாராயணபெருமாள் இவர்.சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.பெருமாளின் இடது கண்ணாகவும் கருதப்படுகிறாா்.பிறப்பு பற்றி கதை 1மகாவிஷ்ணு தமது உந்திக் கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார்.திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு.அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார்

பிறப்பு பற்றி கதை 2

பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை (ஏழு பேர்) உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவி அதிதி .தட்சனின் மகள் அதிதிக்கும் காசிபமுனிவருக்கும் பிறந்தவர் சூரிய பகவான் கடுமையான தவம் மேற்கொண்டு சிவன், விஷ்ணுவின் மனதிலும் இடம் பிடித்தார். ‘கிரகபதம்’ என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். நவகிரகங்களில் முதல்வர். சூரியனுக்கு் உஷாதேவி மனைவி. எமன், யமுனை (நதி) என இரு குழந்தை பிறந்தன. உஷாதேவி விஸ்வகர்மா மகளாவாள்.உஷாதேவிக்கு சிவன் என்றால் உயிர். சிவனை காட்டிற்குள் போய் தவம் செய்ய விரும்பி தன் நிழலுக்கு உயிர் கொடுத்து வீட்டில் இருக்கச் செய்துவிட்டு தவம் செய்ய கிளம்பினாள். அவளின் ( நிழலின்) பெயர் சாயாதேவி.
சூரியனுக்கும் அவளுக்கும் பிறந்தவா்களில் ஒருவா் சனீஸ்வரர். கிரகங்களில் முதன்மையானவர் சூரியன். சூரியனை மையமாக வைத்துக் கொண்டு அனைத்துக் கிரங்களும் சுற்றுகிறது. சூரியன் தலைமை தாங்கும் தகுதியைத் தருகிறார். ஆண்மையைத் தருகிறார். நிர்வாகத் திறமை அளிக்கிறார்.

சூரிய ஒளி அனைவருக்கும் பாகுபாடு இன்றி அளிப்பது போல் எல்லோரையும் சமமாக நினைப்பவர், தயாள தன்மை உடையவர். பேதம் கிடையாது, சாதி பாகுபாடு கிடையாது. எல்லோரையும் சரி சமமாக நடத்துவர். இரகசியம் கிடையாது. வெளிப்படையாக பேசுவர். வள்ளல் தன்மை உடையவர். இல்லை என்று சொல்லாத தன்மை பேரும் புகழும் உடையவர்.சூரியனின் கதிர்களால் தழுவாத உயிர் இனங்கள் இல்லை. சூரியன் ஒளிக்கு அதிபதி, சூரியனிடமிருந்து வெளிப்படும் கிரணங்களும், குருவிடமிருந்து வெளிப்படும் மீத்தேன் என்ற ஒளியும் கலந்து உலகில் ஜீவ ராசிகளின் உற்பத்திக்குக் காரணமாகின்றன.

சூரிய ஒளியின்றி எந்த கரு [ உயிர்] தோன்ற முடியாது, உயிர் வாழ முடியாது. அதனால் சூரியனை பித்ரு காரகன் என்று பெயர் பெறுகிறார்.சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால் மற்ற கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் காப்பாற்றுகிறது. சூரியன் உஷ்ணத்திற்கு அதிபதி, உஷ்ணம் இல்லையேல் உயிர் தத்துவம் இல்லை. சூரியன் பிராணனைக் கொடுக்கக் கூடியவன். அதனால் தான் சூரியன் ஆத்மாகரகன் என்று அழைக்கப்படுகிறார்

காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

உலகில் சூரியனுக்குப் பல இடங்களில் கோவில்கள் உண்டு ஆனால் ஒரிஸ்ஸாவில் கொனாரக், காஷ்மீரில் மார்த்தாண்ட், குஜராத்தில் மதெரா முதலிய 13 சூரியன் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. இவைகளில் பல முஸ்லீம் மன்னர்களின் தாக்குதலால் அழிந்தன; பூஜைகள் நின்றன. ஆயினும் இந்துக்களின் சூரிய வழிபாடு நிற்கவில்லை.

1.பிராமணர்கள் நாள்தோறும் மூன்று முறை வேத மந்திரங்களைச் சொல்லி சூரியனை வழிபடுகின்றனர். அதற்கு த்ரி கால சந்தியா வந்தனம் என்று பெயர்.

2.சூரியனார் கோவில் முதலிய கோவில்களில் இன்றும் வழிபாடு நடக்கிறது. எல்லா தென்னிந்திய கோவில்களிலும் சூரிய, சந்திரர், நவக் கிரஹ சந்நிதிகள் உண்டு.

3.சூரிய சஞ்சாரம்:

இது அனைவருக்கும் முக்கியமானது. சூரியனின் வடதிசைப் பயணத்தை (உத்தராயண புண்ய காலம்/மகர சங்கராந்தி/ பொங்கல்) எல்லோரும் கொண்டாடுகிறோம். சூரியனின் தென் திசைப் பயணத்தையும் (தட்சிணாயன புண்ய காலம்) எல்லோரும் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு நேரங்களில் தை, ஆடி அமாவசைகளில் அனைவரும் புனித நதி, கடற்கரைகளில் நீத்தாரை நினைந்து நீர்க்கடன் செலுத்துவர். தமிழர்கள் இன்று வரை இதைச் செய்துவருகின்றனர்.சூரியனைக் சுற்றித்தான் கிரகங்கள் வலம் வருகின்றன. குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் சூரியனை வலப்புறமாகச் சுற்றிவருகின்றன. ஆனால் ராகு, கேதுக்கள் இடப்புறமாகச் சுற்றி வருகின்றன. சந்திரன் சூரியனைச் சுற்றுவதோடு பூமியையும் சுற்றி வருகிறது.

ஸ்ரீமன் நாராயணன் மானிட வடிவெடுத்து ஸ்ரீராமனாக வந்தபோது, அவர் ராவணனைப் போரில் வெல்வதற்குத் துணைபுரிந்ததும் சூரிய பகவான்தான். ஆம், சூரிய வம்சத்தில் தோன்றிய ஸ்ரீராமரை ‘ஆதித்ய ஹிருதயம்’ எனும் சூரிய ஸ்தோத்திரம்தான் ராவணனை வெற்றிகொள்ளச் செய்தது என்று ராமாயணம் சொல்கிறது. ராவணனுடனான யுத்தத்தில் ஸ்ரீராமர் களைப்புற்றபோது, அகத்திய முனிவர் ஸ்ரீராமருக்கு அருளிய `ஆதித்ய ஹிருதயம்’ எனும் மந்திரம்தான் சோர்வை நீக்கி வெற்றியைத் தந்ததாக வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது. அதிகாலையில் தொடர்ந்து ஒன்பது முறை ஆதித்ய ஹிருதய மந்திரத்தை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தொடர்ந்து வெற்றிகள் கிட்டும்.மாதங்கள்தோறும் சூரியன்…

சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரிய பகவான் ஒவ்வொரு திருநாமம் கொண்டு நம்மைக் காத்துவருகிறார் என்று வேதங்கள் சொல்கின்றன. சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் திருநாமம் கொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார். வைகாசியில் அர்யமான் என்னும் திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார். ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களை வீசுகிறார். ஆடி மாதம் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார். ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து நானூறு கதிர்களும்; புரட்டாசியில் வருணன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருகிறார். ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஜொலிக்கிறார்.

கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு ஆயிரத்து நூறு கதிர்களை வீசுகிறார். மார்கழி மாதத்தில் சூரியநாராயணனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டுள்ளார். தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்தில் ஆயிரம் கதிர்களைக் கொண்டுள்ளார், மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார். பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்களை அனுப்பி உலகைக் காக்கிறார் என்று வேதங்கள் சொல்கின்றன.சூரியன் பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார்.

சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடையதேரில் 4 பட்டணங்களைசுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

இவர் சிம்ம ராசியின் அதிபதி
விருட்சம்;எருக்கு நிறம் : சிவப்பு வச்திரம்: சிவப்புத்துணி மலர்: தாமரை மற்றும் எருக்கு இரத்தினம்: ரூபி
தான்யம் : கோதுமை
வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை

Categories
Devara Sthalam Navagraha temples Pancha Aranya Sthalam Southern

Thirunallar – Sri Dharbaranyeswara Temple

Name of the Temple 

Sri Dharbaranyeswara Temple

Period of Origin

Before 7th Century

Name of Deity

Moolavar: Dharbaranyeswara

Ambal: Pranambika

SthalaTheertham: Nala Theertham

Sthalavriksham: Kusa Grass (Dharbai)

Dhevaram: Gnanasambandhar, Appar, Sundarar.

Sthalapuranam:

Though Saneeswaran here is very famous, the presiding deity is Dharbaranyeswarar. His Consort is Bogamartha Poon Mulayal or Praanaambikai. The lingam here is a self manifested Lingam or Swayambhu. The Sthala vruksham is Dharba or grass. This place was a forest of Dharba.  Dharba is a type of grass and aranyam means forest and hence the name Dharbaranyeswaraswamy or Dharbaranyeswarar for the Lord. Even today you can see the impression of grass on the lingam here. Thirunallar is one of the “Saptha Vidanga Sthalam”. The idols in these temples depict Lord Shiva performing one of His seven dance forms. It is believed that Lord Shiva imparted the knowledge of the Vedas & Shastras to Brahma here.  People pray to Swarna Ganapathy here to overcome financial problems.

Lord Surya was married to Usha or Light. Usha Devi was unable to bear the heat radiated from Surya and left her shadow or Chaya with Suryan while she herself stayed away. Saneeswaran is the son of Chaya Devi and Suryan. The very sigh tof Saneeswaran is dreaded and believed to be destructive. Suryan’s chariot is believed to have been destroyed when Saneeswaran as a baby first opened his eyes and looked at Suryan. Saneeswaran after intense penance on Lord Shiva attained the status of a celestial planet.

It is believed that Saneeswaran became lame when he was kicked by Lord Yama (Sani’s step brother – son of Surya & Usha) in a fit of anger. It is because of this that he is a slow moving planet, taking approximately two and a half years to move from one Zodiac Sign to another. Such a transit known as Sani peyarchi is very important and devotees from all over throng the temple to offer their prayers. Saneeswaran is believed to have a major influence on the course of ones life and also the most feared planet. The unique aspect here is that Saneeswaran is in standing posture with abhayahastha ie hand bestowing blessing.

Everyone experiences sade sati or ezharai sani in their life time. It occurs 2 to 3 three times in a life span as it recurs after approximately 30 years. Even the Lord himself is not exempt from the effect of ezharai sani. Once, Shiva hid himself in a remote cave to meditate and escape the effect of Sani. On his return he was informed by Sani that the Lord had went into hiding in the first place because of the influence of ezharai Sani. An astonished but pleased Shiva, declared to him to be Saneeswaran.  No other planet has the tag eswaran to the name.

There is a saying in Tamil “Saniyaipol Koduppavanum illai, saniyaipol keduppavanum illai” which translates to “There is none like Saneeswaran who can give a good life or ruin a life”. Actually, even at the worst of times Saneeswaran only delays but never denies.  The experience of going through the ezharai sani makes one mentally very strong.   He does not test us more than we can handle.  He affects a person based on his past deeds.  He is supposed to be Just. Interestingly, the two sons of Suryan, judge us and give us the palan or results based on our karma or deeds.  Saneeswaran does this during our lifetime and Yama does that after ones death.

According to a Legend, King Nala had not washed his feet properly while doing puja. Saneeswaran who was waiting for such an opportunity for about 12 years, immediately caught hold of him. This has probably prompted the tradition to wash our feet before entering the house. Getting back to the story of King Nala, under the influence of ezharai sani, he lost his kingdom, separated from his wife and children, had health problems and wandered around like a beggar. As per the advice of Bharadwaja muni he worshipped Dharbaranyeswarar at Thirunallar, after a dip in the holy tank here. It was then he was relieved of the effects of Sani. After this, Shiva asked Saneeswaran to be here and bless all his devotees.

Musukunda chakravarthi brought Emarald Linga from Indra and kept in this place as a Last linga among the Seven called as NAGAVIDANGAR.

Temple Timings:

6 am and 1 pm and 4 pm to 8 pm.

Temple telephone Number:

04368-236530 or 236504

Temple Address:
Sri Dharbaranyeswara Temple
Thirunallar
TamilNadu
India

Route
(1) 39 kms from Myladuthurai via Peralam
(2) 6 kms from Karaikal

Economical hotels and lodges:

1.Thirunallar Devasthanam Tourist Home,Thirunallar,
Karaikal.
PH:+ 91 4368 236530

2.Hotel City Plaza,Bharathiar Road,Karaikal.
PH:+ 91 – 4368 -220361

3.Paris International Bharathiyar Road,Karaikal.
PH: +91 – 4368 – 220306

Luxury Hotels:

1.Hotel Nanda, Kamaraj Salai,Karaikal.
PH: + 91 – 4368 -220533

2.Holiday Farms & Resorts(3 star)Main Road, Akkaraivattam, Karaikal.
PH: +91 4368 228330(4 Lines) golden goose saldi